Tuesday, 29 May 2018

ஹைக்கூ

*தமிழ் ஹைக்கூ 1⃣0⃣1⃣ ஆண்டு*

பகுதி - 189

தமிழில் வெளிவந்த ஹைக்கூக்கள் ..

காற்றே மெல்ல வீசு
வண்ணத்துப்பூச்சி
பூவின் மீது

🌹

சில்லென்ற காற்று
எங்கோ மழை பொழிகிறது
மனதில் ஏக்கம்

🌹

முப்பதாயிரம் ரொக்கம்
இரு கிராம் தங்கம்
நவீன பிச்சைக்காரர்கள்

🌹

தென்றல் வீசுகிறது
அனுபவிக்க இயலவில்லை
நாளை இண்டர்வியூ

🌹

நூறு வயது வாழ்வதெப்படி
எழுதியவர் நாற்பதில் இறந்தார்
மாரடைப்பு

            - ஆர் வி பதி
( ஹைக்கூ கவிதைகள் 1994 )

தமிழ் ஹைக்கூக்கள் தொடரும்..

*ஹைக்கூ பெருநதி 2018 அக்டோபர் 16 வரை உங்களை நனைக்கும்*

               ஸ்ரீதர்
🍀 திண்டுக்கல் 🍀

No comments:

Post a Comment