கறுப்பினத்தவன் -லாங்ஸ்டன் ஹியுக்ஸ்
•
நான் ஒரு கறுப்பினத்தவன்
இரவின் கருமையைப் போலக் கருமையானவன்
ஆப்பிரிக்காவின் ஆழங்களைப் போலக் கருமையானவன்
நான் அடிமையாக இருந்து கொண்டிருக்கிறேன்
சீசர் என்னிடம் தன்னுடைய வாயிற்படிகளைத் தூய்மையாக்கும்படி சொன்னார்
நான் தான் வாசிங்டனின் புதைமிதியடிக்குச் சாயம் பூசினேன்
நான் உழைப்பாளியாக இருந்து கொண்டிருக்கிறேன்
என் கைகளால் தான் பிரமிடு உயர்ந்தது
நான் தான் வூல்வேர்த் கட்டிடத்தின் கட்டுமானக் கலவையை உருவாக்கினேன்
நான் பாடகனாக இருந்து கொண்டிருக்கிறேன்
ஆப்ரிக்காவிலிருந்து ஜார்ஜியாவுக்குச் செல்லும் அத்தனை வழிகளிலும் என்னுடைய துயரப் பாடல்களைச் சுமந்து செல்கிறேன்
நான் தான் கேலிக்கூத்திசையை உருவாக்கினேன்
நான் குற்றவாளியாக இருந்து கொண்டிருக்கிறேன்
பெல்சியர்கள் என் கைகளை காங்கோவில் அறுக்கின்றனர்
அவர்கள் இன்னும் என்னை மிசிசிபியில் விசாரணையின்றிக் கொல்கின்றனர்
நான் ஒரு கறுப்பினத்தவன்
இரவின் கருமையை போலக் கருமையானவன்
ஆப்பிரிக்காவின் ஆழங்களைப் போலக் கருமையானவன்
___________________________
(தமிழில் :வே.நி.சூர்யா )
No comments:
Post a Comment