*தமிழ் ஹைக்கூ 1⃣0⃣1⃣ ஆண்டு*
பகுதி - 62
தமிழ் ஹைக்கூக்களில் புனைவுகள் பற்றி பார்த்து வருகிறோம்..
நிலவென்ன மேற்பார்வையோ
வானம் விழாதிருக்க
எத்தனை நட்சத்திர ஆணிகள்.
- அமுதபாரதி
கவிஞர் மித்ராவின் ஹைக்கூக்களில் உள்ள புனைவுகள்,
எப்போதும் மத்தாப்பூ
கொளுத்தி விளையாடுகிறது
மலையருவி
❗
அடடா ! எத்தனை முற்றுப்புள்ளிகள்
வாக்கியங்கள் எங்கே
வான் முழுக்க புள்ளிப்பூக்கள்
❗
வெயிலில் காய்ந்து கொண்டே
தண்ணீர் குடங்களோடு நிற்கும்
தென்னை மரம்
❗
அலையின் உதைப்பிலா
வானில் பறக்குது
சூரியப் பந்து
இப்படி தமிழ் ஹைக்கூக்களில் புனைவு விளையாடுகிறது..
புனைவு நாளையும் தொடரும்..
*பெருநதி 2018 அக்டோபர் 16 வரை உங்களை நனைக்கும்*
ஸ்ரீதர்
🍀 திண்டுக்கல் 🍀
No comments:
Post a Comment