Saturday, 10 February 2018

வாசிப்பு

[08/01, 12:49 p.m.] 💥TNPTF MANI💥: அந்திவரை வாழப்போகும்
பூவின் மடியில்
அந்த காலைப்பொழுதிலேயே
மடிந்துவிடப்போகும்
பனித்துளித்தான்
எத்தனை அழகு!
- தேவதேவன்

[08/01, 5:25 p.m.] 💥TNPTF MANI💥: "@urs_priya: சில நேரங்களில் பொய் நம்மை காப்பாற்றுகிறது. நன்றிக் கடனாக நாம் பொய்யைக் காப்பாற்ற வேண்டியதாயிருக்கிறது!!"

[08/01, 5:30 p.m.] 💥TNPTF MANI💥: காதல் திருமணம்! - கமலஹாசன் கவிதை

"முதல் தீண்டலுக்கு உடல் சிலிர்த்து,
வெட்கத்தில் புன்னகைத்து,
கடற்கரையில் காற்று வாங்கி,
கைபிடித்து பரவசமாய் நடந்து,
கன்னத்தில் லேசாய் முத்தமிட்டு,
கைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பி,
கண்களால் பேசிச் சிரித்து,
கால் கடுக்க காத்திருந்து,
காது பிடித்து மெல்லத் திருகி,
கண்ணீரோடு கட்டியணைத்து,
கண்பொத்தி விளையாடி,
இடிக்கு பயந்து தோளில் சாய்ந்து,
செல்லமாய் நெஞ்சில் குத்தி,
பேசாமல் இருந்து தவிக்கவிட்டு,
கோயில் சுற்றி , குளம் சுற்றி,
மழை ரசித்து நனைகையில்,
துப்பட்டாவில் குடை விரித்து,
புத்தகத்தில் கடிதம் மறைத்து,
மணிக்கணக்கில் தொலைபேசி,
அப்பாவின் அதட்டலுக்கு அஞ்சி,
"அவர் ரொம்ப நல்லவர்மா" என
அழுது புலம்பி அம்மாவிடம் சொல்லி,
ஒரு வழியாக வெற்றி கொள்கிற
காதல் திருமணங்கள் போல
இனிப்பதில்லை-இன்டர்நெட்டில் தேடியலைந்து,
பத்துக்கு பத்து பொருத்தம் பார்த்து,
பண்ணுகின்ற திருமணங்கள் !"
- கமலஹாசன்

[08/01, 6:25 p.m.] 💥TNPTF MANI💥: அடிமைத்தனம் இருக்கும்வரை தலைவனுக்கான தேடுதலும் இருக்கும்"

-படித்தது

[08/01, 7:32 p.m.] 💥TNPTF MANI💥: மரணப் படுக்கையில்
வீழ்ந்து கிடக்கும் ஒருவனின்
தொண்டைக்குழியில்
சிக்கிக்கொண்ட கடைசிச் சொல்
அவனின் துயரமல்ல
அது சொல்லின் துயரம்

-தர்மராஜ் பெரியசாமி

[08/01, 8:02 p.m.] 💥TNPTF MANI💥: அவள் பதிலுக்காக
காத்திருந்தேன்
பஸ் ஸ்டிரைக் நாளில்
பஸ்ஸிற்காக காத்திருக்கும்
பயணியைப் போல

[08/01, 9:44 p.m.] 💥TNPTF MANI💥: சிறுவனாகப்
பென்சில் சீவும்போது
கசிந்த ரத்தம்
உண்மையாக இருந்தது.
இப்போது ஜாக்கிரதை உணர்வு
வந்துவிட்டது வயதுடன்.
எஞ்சியது என்ன?
காயம் படாத கை விரல்.
நிஜம் கசியாத கவிதை

-கல்யாண்ஜி

[08/01, 10:05 p.m.] முருகேசன்: பணிவு என்பது ஒரு பண்புதானே தவிர,அது அடிமைச்சின்னத்தின்  அடையாளம் அல்ல.
#கவிபேரரசு_வைரமுத்து

[09/01, 6:27 a.m.] 💥TNPTF MANI💥: வீட்டை வரைந்துவிட்டு சோம்பல் முறிக்கிறது குழந்தை,
அப்பாடா வீடு கட்டியாச்சு என்று

[09/01, 7:05 a.m.] 💥TNPTF MANI💥: "தனியாய் இருப்பதும் தனிமையாய் இருப்பதும் வெவ்வேறு.!""

-மினிமீன்ஸ்

[09/01, 7:47 a.m.] 💥TNPTF MANI💥: நீரின் சொற்களை
தாகம் விழுங்கியது.!!
-கலாப்ரியா

[09/01, 4:44 p.m.] 💥TNPTF MANI💥: "அன்பை நீங்கள் வழிநடத்திச் செல்ல வேண்டாம்..
நீங்கள் அதற்கான தகுதி பெற்றவரானால்,
அன்பு உங்களை வழிநடத்திச் செல்லும்.."

-கலீல் ஜிப்ரான்
[09/01, 5:06 p.m.] 💥TNPTF MANI💥: அ-வுக்கு முந்தி எழுத்துக்கள் இல்லையெனினும்
அ-எழுதப் பழகிய என் கிறுக்கல்கள்
எல்லாம்
அ-வுக்கு முந்திய எழுத்துக்களே
-தபூசங்கர்

No comments:

Post a Comment