*தமிழ் ஹைக்கூ 1⃣0⃣1⃣ ஆண்டு*
பகுதி - 190
தமிழில் வெளிவந்த ஹைக்கூக்கள் ..
துடுப்புகள் இல்லை
துணிவிருக்கிறது
தூரமில்லை கரை
🌹
எல்லாம் இழந்தும்
நம்பிக்கை இல்லாத மரத்தை
அலங்கரித்தது வசந்தம்
🌹
நடிகையின் நாட்டியம் கோவிலில்
நாற்பதாயிரம் பேர்
நாலு பேருடன் நடராசன் உலா
🌹
அன்னை வயிற்றில் அரிவாள் குறி
பிறப்பதா வேண்டாமா
பெண் சிசு
🌹
ஆம்ஸ்ட்ராங்கிற்கு முன்
கால் வைத்தது யார்
நிலவில் கறை
- பல்லவன்
( சின்ன நதிகள் 1994 )
தமிழ் ஹைக்கூக்கள் தொடரும்..
*ஹைக்கூ பெருநதி 2018 அக்டோபர் 16 வரை உங்களை நனைக்கும்*
ஸ்ரீதர்
🍀 திண்டுக்கல் 🍀
No comments:
Post a Comment