"Blessed are the meek for they shall inherit the earth " என மலைபிரசங்கத்தில் ஏசு கூறுகிறார்.
Meek என்பதற்கு ஆங்கில அகராதியில் பொருள்: "quiet, gentle, and easily imposed on; submissive
தமிழ் பைபிள் நூல்களில் "சாந்த குணமுடையவர்கள் பாக்கியசாலிகள். அவர்கள் உலகை சுவிகரிப்பார்கள்" என மொழிபெயர்க்கிறார்கள்
பைபிளின் மூலமொழி கிரேக்கம். கிரேக்கத்தில் இங்கே meek என்பதற்கு பயனான சொல் Praus.
Meek என்பதற்கு பதில் மூலச்சொல்லான Praus என்பதை எடுத்துக்கொண்டால் இந்த வசனத்தின் பொருளே மாறுகிறது.
பிராஸ் என்பதன் பொருள் என்ன? வலிமை பொருந்திய அரசன்..தன் வலிமையை வெளிக்காட்டாமல் கனிவுடன் நடந்துகொள்ளும் தன்மை தான் பிராஸ். ஆக வலிமை பொருந்திய ஒருவன் கனிவுடன், பண்புடன் நடந்துகொள்வதுதான் Praus. அத்தகையோரே பாக்கியசாலிகள். அவர்களே உலகை ஸ்விகரிப்பார்கள்.
-படித்தது
No comments:
Post a Comment