Saturday, 23 August 2025

98


#Reading_Marathon2025
#25RM055

Book No:98/100+
Pages:-288

மனமென்னும் குரங்கை வெல்லுங்கள்
-ஆனந்த் பாட்கர்

மனதெனும் குரங்கை வெல்லுங்கள்" என்பது Masrer the mind monkey என்பதன் மொழிபெயர்ப்பாகும்.

மனம் ஒரு குரங்கு என்பார்கள் ஏனெனில் மனம் ஒரு நிலையில் இருக்காது. அந்த மனதை கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் மிகப்பெரிய ஆற்றலை பெறலாம் என்பதுதான் ஒவ்வொரு சுயமுன்னேற்ற நூலிலும்  குறிக்கோளாகவும் அடிநாதமாகவும் இருக்கிறது. அந்த வகையில் இந்த புத்தகம் ஐந்து பாகங்களையும் 18 அத்தியாயங்களையும் உள்ளடக்கி உள்ளது. ஒவ்வொரு மனிதர்களின் மனநிலை மற்றும் மனப்பகுதியில் உள்ள போராட்டங்களை ஆராயும் ஒரு புத்தகம். 

முதல் அத்தியாயத்தில் வெற்றி பெற்ற மனிதர்களின் மறுபக்கங்களை அலசுகிறது. அதனோடு சமகாலத்தில் வெற்றி பெற்ற ஆளுமைகளின் பின்புலன் எவ்வாறெல்லாம் உள்ளது என்பதனை தக்க எடுத்துக்காட்டுடன் கூறுகிறது.குரங்கை போன்ற மன அழுத்தங்களைத் தாண்டி நீக்குவதற்கான கலையை விவரிக்கிறது. 

ஒரு விமான நிலையத்தில் ஒரு ரயில் நிலையத்தில் ஒரு அறிவிப்பை கேட்கிறீர்கள்.அதுதான் ஒரு 'விஷயம்' எந்த 'செயலும்' அந்த சந்தர்ப்பத்தில் விசயத்துக்கு நாம் அளிக்கும் பதில் ஆகும். ஒவ்வொரு விஷயங்களுக்கு நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதை தீர்மானிப்பது தான் 'கோட்பாடு'. நாம் கற்றவைகளை பயன்படுத்தி அறிவை பயன்படுத்தி அனுபவங்களின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகள் தான் வெற்றி பெறுகின்றன என்பதனை தக்க எடுத்துக்காட்டுக்குடன் கூறுகிறார்.

 கட்டுமான வேலைகள் நடக்கும் இடத்திற்கு செல்லும் போது ஒரு அனுபவத்தை பகிர்கிறார். முதலில் சந்திக்கும் கொத்தனாரிடம் இங்கு என்ன நடக்கிறது என்று கேட்டபோது? என்னை தயவு செய்து தொந்தரவு செய்யாதீர்கள். நான் ஒரு தினக்கூலி ஒரு நாளைக்கு 300 கற்கள் அடுக்கினால் தான் எனக்கு சாப்பாடு என்கிறார். இரண்டாமவர் ஏதோ ஒரு பணி திட்டம் நடக்கிறது. நான் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகிறேன் என்று கூறுகிறார். மூன்றாமவரிடம் இதே கேள்வியை கேட்டபோது, அவர் மிகுந்த உற்சாகத்துடன் நாங்கள் நவீன தாஜ்மஹாலை கட்டிக் கொண்டிருக்கிறோம். இந்த அமைப்பு இந்த ஊருக்கே பெருமை என்று கூறி ஒவ்வொரு விஷயங்களையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். மிகவும் உற்சாகத்துடனும் புத்திசாலித்தனம் செயல்படும் அவரைப் பார்த்து வியந்து போகிறார். குழு உறுப்பினர்கள் நிறுவனத்தின் நோக்கத்தை அறிந்து செயல்பட வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணமாக சொல்லப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் விளையாட்டின் நிகழ்வை ஒன்றை பற்றி குறிப்பிடும் போது கவாஸ்கர் 29 வது சதம் அடித்து பிராட்மனின் சாதனையை சமன் செய்யும் நிகழ்வில் கவாஸ்கர் 97 ரன்கள் இருந்தார். அப்போது கவர் டிரைவ் ஒன்று அடித்தார். ரன்கள் ஓடிக்கொண்டிருந்தார்.ஆனால் பந்து பவுண்டரி சென்றது. எதிரில் இருந்த வெங்சர்க்கார் அவரை பாராட்டினார். ஆனால் கவாஸ்கரோ எதற்கு என்னை பாராட்டுகிறார் என்று குழப்பமாக இருந்தார். அப்போது அவர் திரும்பி ஸ்கோர் போர்டை பார்த்த போது தான் சதம் அடித்ததை நினைவுக்கு வந்தது... தன் பணியில் மட்டுமே கவனம் செலுத்தியதால் இந்த சாதனையை அவரால் நிகழ்த்த முடிந்தது என்கிறார்.

மனதெனும் குரங்கை வெல்லுங்கள்" புத்தகம் மன அழுத்தங்களையும் மனது எதிர்கொள்ளும் சிக்கல்களையும் அலசியும், அவற்றைக் கையாளுவதற்கான உத்திகள் மற்றும் மனநிலையை மேம்படுத்தும் வழிமுறைகளை வழங்கும் ஒரு பயனுள்ள கையேடாகும். மனதை புரிந்து கொள்வதும் மன அமைதியைப் பெறுவதற்கான நடைமுறை பரிந்துரைகளையும் மன அழுத்தத்தை கடக்க உதவும் உள்ளார்ந்த சிந்தனைகளையும் ஈர்க்கக்கூடிய மொழியில் சமர்ப்பித்துள்ளார். இது மனநிலையைப் புதுப்பித்து நலமாக வைத்திருக்கும் ஆர்வமுள்ள வாசகர்களுக்கு சிறந்த வாய்ப்பாகும்

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment