Saturday, 18 October 2025

106


#Reading_Marathon2025

#25RM055

Book No:106/100+

Pages:-216

அன்புடை நெஞ்சம்

-என். சொக்கன்

பண்புடை நெஞ்சத்தைத் தொடர்ந்து என். சொக்கன் அவர்கள் எழுதிய புத்தகத்தை வாசித்தது அன்புடை நெஞ்சம். சங்க இலக்கியத்தில் இடம்பெற்ற அகப்பாடல்களை இக்கால இளைஞர்கள் அறிந்து கொள்ளும் வகையில் வாசிக்கத்தூண்டும் விதத்தில்.அமைந்திருக்கிறது.

யுத்தகாண்டத்தில் ராமன் போருக்குத் தயாராகும் காட்சியை வர்ணிக்கும்போது, ’கவசம் இட்டு இறுக்கி வீக்கினான்’ என்கிறார் கம்பர். அதாவது, போர்க் கவசத்தை இறுக்கிக் கட்டினான். அதற்குக் கம்பர் சொல்லும் காரணம், ‘தேவியைத் திரு மறு மார்பில் தீர்தலால் ‘நோ இலள்’ என்பது நோக்கினான்கொலோ?’என்ற பாடலுக்கு விளக்கம் சொல்லி அதனொடு தொடர்வுடையுதாய் வள்ளிவர் பாடலை கூறி, சமகாலத்தில் வாலி பயன்படுத்திய 

அவரது ஜாலியான ஆங்கில நடையில்: Hot Boxல் வைத்த Food உண்பதில்லை, எனக்கூறி குறிந்தொகை பாடலை நமக்குத்தருகிறார்.

அப்படியே சங்க இலக்கிய பாடலில் ஆரம்பித்து சமகாலத்துக்கு தாவி மீண்டும் சங்க இலக்கியம் சமகால இலக்கியத்திற்கு யூ டர்ன் அடிப்பது போல் வாசிப்பு அனுபவம்.

கணவனும் மனைவியும் தனித்திருக்கும் நேரம். அவள் அவனிடம் சில குறைகளைச் சொல்ல நினைக்கிறாள். தயக்கத்தோடு கேட்கிறாள், ‘சொன்னா கோச்சுக்கமாட்டீங்களே?’ ‘தாராளமாச் சொல்லு’ என்கிறான் அவன். ‘பாகற்காய் கசக்கும்தான். ஆனா, அதுக்குள்ளே ருசியும் இருக்குமே, அதுபோல, நீ என்மேல குறை சொன்னாலும் அதுல ஒரு நல்லது இருக்கும், தயங்காம சொல்லலாம்.’ பாரதிதாசனின் ‘குடும்ப விளக்கு’க் காட்சியை பாடலுடன் பதிவு செய்திருப்பார்.

காதலைப்பற்றி சொல்லும் போது.. யாருக்கும் தெரியாமல் சந்திப்பது சகஜம்.அதற்கு களவுக் காதலிலேயே குடியிருக்கக்கூடாது, ஒருகட்டத்தில் அது கற்புக் காதலாக மாறவேண்டும். குடும்பம் என்கிற பொறுப்பை ஏற்கவேண்டும்.அதைதான் ஊர் வதந்தியாகப் பேசுகிறது. அவர்களுடைய நோக்கம் காதலைப் பிரிப்பது அல்ல, அதைக் கற்பு நெறிக்கு மாற்றுவது என் யதார்த்தவாதத்தை முன் வைக்கிறார்.

அதே போல் மற்றொர சுவாரஸ்ய பாடலாக
குறுந்தொகையில் வெண்பூதன் எழுதிய பாடல் இது: அரும்பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப் பெரும்பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை, தம் இல் தமது உண்டன்ன சினைதொறும் தீம்பழம் தூங்கும் பலவின் ஓங்குமலை நாடனை ’வரும்’ என்றோளே! இந்த மகிழ்ச்சியை ஒரு திரைப்பாடலில் அழகாகப் பதிவு செய்கிறார் தாமரை: இதுதானா, இதுதானா, எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா!..இந்த பாடல் வரிகளை கட்டுரைக்கு ஏற்றாற்போல் அழகாக கனெக்ட் செய்திருப்பார் 

குளிர்காலம் வரும்போதெல்லாம் ஒரு புகைவண்டி ஓட்டியைப்போல் நெருப்பின்பக்கம் நிற்கவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். இப்போது, எந்தக் காலத்திலும் உன் பக்கமே இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.என்று கவிஞர் மீராவின் கவிதையை ஒப்பிட்டு புலமைப்பித்தன் ஒரு திரைப்பாடலில் இதை எழுதுகிறார்: கோடைக் காலங்களில், குளிர் காற்று நீயாகிறாய், வாடை நேரங்களில், ஒரு போர்வை நீயாக வந்தாய்! மீராவுக்கும் புலமைப்பித்தனுக்கும் ஒத்த சிந்தனை வரக் காரணமான பாடல், குறுந்தொகையில் இருக்கிறது. படுமரத்து மோசிக்கொற்றன் எழுதியது என அந்த சங்கப்பாடலையும் குறிப்பிட்டுள்ளார்.

நற்றிணைப் பாடலில் யானை பலாப்பழம் சாப்பிடுகிற காட்சியை ஏன் தோழி காதலனிடம் சொல்லவேண்டும்? அவர்கள் நாட்டை வர்ணிக்க வேறு விஷயமா இல்லை? யானை ஜோடியாகப் பலாப் பழம் தின்ன வருகிறது. அதைப் பார்த்து ஊர் மக்கள் பயந்து ஓடுகிறார்கள். இங்கே ஊர் மக்கள் என்பது, காதலன், காதலியைப்பற்றிப் பலவிதமாகப் பேசுகிறவர்களைக் குறிக்கிறது. அவர்கள் முன்னால் கை கோத்துக்கொண்டு நீங்கள் ஜோடியாக நடக்கவேண்டும், இப்போது கேலி பேசுகிறவர்கள் அப்போது முகத்தை எங்கே வைத்துக்கொள்வார்கள்? அதை நான் பார்க்கவேண்டும் என்று தோழி சொல்லாமல் சொல்கிறாள். குறுந்தொகையில் கபிலர் எழுதிய ஒரு பாடலில், பலாப்பழம் வேறுவிதமான கருத்தைச் சொல்லப் பயன்படுகிறது. அங்கேயும் காதலன் காதலியை இரவில் சந்தித்துவிட்டுக் கிளம்புகிறான். தோழி அவனிடம் பேசுகிறாள்.

வழக்கமாய் நாயகன் மாட்டுவண்டி ஓட்டுவது போல் இருக்கும். ஆனால் நாயகி வண்டி ஓட்டும் காட்சியில் ஜல் ஜல் சலங்கை ஒலி பாடலை கவியரசர் எழுதியிருப்பார். அதற்குபின்னணியாய் அமைந்த பாடலைக்கூறி அதனோடு தொடர்புடைய சங்கப்பாடலை கூறியிருப்பார்

பாரதியாரின் புகழ் பெற்ற பாடல்களில் ஒன்று, ‘மூன்று காதல்’. தலைப்பைப் பார்த்து அவசரப்படவேண்டாம். முழுப் பாடலையும் வாசித்தால் பாரதியார் சொல்லும் மூன்று காதல்கள் எவை என்று புரியுமெனக் கூறி ஒவ்வொரகாதலைக் குறித்தும் விரிவாக பதிவு செய்திருப்பார்.

தமிழில் பெரும்பாலும் காரணப் பெயர்கள்தான். ‘கால்’ என்றால், நான்கில் ஒரு பங்கு என்பது ஒரு பொருள், உடலில் அது நான்கில் ஒரு பங்கு இருப்பதால், நம்முடைய கால்களுக்கும் அதே பெயர் அமைந்ததாகச் சொல்வார்கள். அதேபோல், ’அரை’ என்றால் இடுப்பு. அது உடலை சரிபாதியாகப் பிரிக்கிறதல்லவா? இடுப்புக்கு இன்னொரு பெயர் ‘இடை’. உடலின் இடையில் உள்ளதால் அந்தப் பெயர்.

கவிஞர்கள் பெண்களை வர்ணிகும் போது உவமையை எடுத்துரைப்பது இயல்பு. இவ்வாறு எடுத்துரைத்த உவமைகளை இக்கட்டுரை முழுவதும் விளக்கியிருப்பார்.

Known to unknown போல தெரிந்த ஒரு செய்தியில் ஆரம்பித்து, அது சினிமாவில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைககூறி அதன் மூலம் அல்லது அது தொடர்பாக சங்கப்பாடலில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது என்பதை விளக்கியுள்ளார்.நல்லதொரு வாசிப்பு அனுபவமாக அமைந்தது

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment