Thursday, 30 October 2025

109


#Reading_Marathon2025

#25RM055

Book No:109/150+

Pages:-343

#ஒருஎழுத்தாளர்_12மாதங்கள்_12புத்தகங்கள்

கங்கணம்

-பெருமாள்.முருகன்

பெருமாள்.முருகன் அவர்களின் புத்தக்த் தலைப்பே வித்தியாசமாகவும், கதையின் மைய சரடை தொட்டு விளக்கும் படியும்..அந்த வார்த்தையின் பவரையும் உணர்த்தும்.அந்த வகையில் கங்கணத்தை பற்றி விளக்கும் போது..

கங்கணம் என்னும் சொல்லுக்குப் பல பொருள் உண்டு. திருவிழாக் காலத்திலும் திருமணத்தின் போதும் கையில் கட்டும் மஞ்சள் கயிற்றுக்குக் கங்கணம் எனப் பெயர். அது ஆகுபெயராகிக் கைவளையைக் குறிப்பதும் உண்டு. மஞ்சள் துண்டைக் கயிற்றில் இணைத்துக் கையில் கட்டும் சடங்குக்குக் கங்கணம் கட்டுதல் என்று பெயர். கங்கணம் கட்டிவிட்டால் அக்காரியம் முடியும் வரைக்கும் வெளியே செல்லக்கூடாது, வேறு வேலைகளில் ஈடுபடக் கூடாது என்பன நடைமுறைகள். ஏனெனில் திருவிழாவும் திருமணமும் கவனக்குவிப்பு வேண்டும் முக்கியமான காரியங்கள். ஏதோ செயலில் ஈடுபட்டு அச்செயலை முடிப்பதில் தீவிரக் கவனம் கொண்டிருக்கிறான் எனப் பொருள்.

இளமையில் மணப் பெண்களை சலித்து தேடினால்

முப்பதுக்கு மேல் மணப்பெண்ணை தேடி சலிக்கனும் என நறுக்கு ஒன்றை எழுதியிருந்தேன்.அதற்கு முற்றிலும் பொருந்துவது இந்நாவல். மாரிமுத்து அந்த பகுதியின் ஜமீன்போல. ஏகப்பட்ட நில புலன்களுக்கு சொந்தக்காரர். அவரின் தோட்டத்தில் வேலை செய்யும் குப்பனின் பார்வையில் நாவல் துவங்குகிறது.மாரிமுத்துவுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. அவரின் அப்பாவும் அம்மாவும் ஒரு பொருள் வேலை செய்பவர்களுக்கு கொடுக்கமாட்டர்கள். அத்தனை கஞ்சம்.ஆனால் மாரிமித்து அப்படியல்ல..தாமதித்தாலும் செய்வார். மாரிமுத்துவுக்கு வரன் பார்ப்பதெலாம் தட்டிப் போகிறது.

இரு வயது மூத்தவள், பழைய புல்லட் வண்டி வைத்திருப்பதால் பெண் அமையல எனக்கூறி பெண் அமையாமல் இருக்கிறது. ஊருக்கெல்லாம் இலவசமாய் திருமணம்.முடித்து வைக்கும் தானாவதி தாத்தாவாலேயே திருமண நடத்தி முடிக்கமுடியவில்லை.தன் தோட்டத்தில் வேலை பார்க்கும் குப்பன் மகன் ரமேஷ்க்கு திருமணம் செய்ய ஐயாயிரம் கடன் கேட்கிறார் குப்பன்.35 வயது வரை  தான் திருமணம் ஆகாமல் இருக்க 17 வயதில் ஒரு சிறுவனுக்கு கல்யாணமா?இதை அவமானமாய் உணரும் மாரிமுத்து ஆறு மாதம் கெடு சொல்கிறார். அதற்குள் தான் திருமணம் முடிக்க மனதிற்குள். எண்ணிக்கொள்கிறான்.

என்னதான் பணக்காரனாய் இருந்தாலும் திருமணம் அமையாமல் அவமானமாய் இருந்தது. பெண்வீட்டார்க்கு மோர் கொடுக்காதது, மூலநட்சத்திரம், வரதட்சணை போன்றவற்றாலும் தடைபடுகிறது.அப்படியே அமைந்தாலும் யாரேனும் ஒருத்தன் மாப்பிளை குடினு சொல்லி வைக்கிறார்கள். அதனாலேயே மாரி குடித்து ஆறேழு வருடமாகிறது.நரைமுடி, லேசான வழுக்கையும் பீதியடைய வைக்கிறது.ஆறு மாதத்திற்குள் குப்பன் மகனுக்கு முன் திருமணம் நடக்கனும் என்பது டார்கெட்

பரம்பரை நிலம் பிரிக்கப்படாததால் தான் திருமணம் தள்ளிப் போகிறது எனச் சொல்ல அதனை பிரிக்கும் வேலையில் ஈடுபடும் போதுதான் சித்தப்பா மகன் செல்வராசுவுடன் பழக ஆரம்பித்தான்.ஐந்தாறு வயது சின்னவன் ஆனால் அறிவில் முதிர்ச்சியானவன்.அவன் மாற்று சாதி சேர்ந்த பெண்ணை விரும்புவதாக தெரிவித்த போது அதிர்ச்சி ஆகிறான். மாரிமுத்து.அவமானம், சாதி பெருமை எல்லாம் சொன்னாலும் தன் காதல் குறித்த பேச்சினால் அமைதியாகிறான் நாயகன்.ஆனாலும்

திருமணமாகாத குற்ற  உணர்ச்சி அவனிடத்தில் எப்போதும் உண்டு.

இளவயது நண்பராக இருந்த ராமரை சந்தித்தது மாரிமுத்துவுக்கு ஆறுதலாய் இருந்தது.

நாவலின் பல இடங்களில் நாயகனின் பிரச்சனை மட்டும் அலசாமல் அன்றாடம் சந்திக்கும் பொருளாதார பிரச்சனை, கிராமத்து மக்களுக்கு வைத்தியம் பார்க்கும் பாட்டி வைத்திய முறை ஆகியவை குறித்த செய்திகளும் வருகிறது.

அனைத்து பிரச்சினைகளையும் தாண்டி மாரிமுத்து தனக்கான துணையை அடைந்தானா? அவனது நிலம் அவனுக்கானதா? என்பதை கிராமிய மண் வாசனை மாறாமல் பெருமாள் முருகன் "கங்கணமா"க காட்டியுள்ளார்.

  

ஒரு முதிர் கண்ணன் சந்திக்கும் சவால்களும் ஏளனங்களும், சாதிக்குள் பெண் கொடுக்க மறுப்பவர்களும், வேற்று சாதியில் பெண் எடுக்கலாமா என மனதின் ஊசலாட்டமும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. திருமண தடைகள் என்னென்ன ருபத்தில் வருகின்றன என்பதை நகைச்சுவையாகவும், அதே நேரத்தில் தட்டிக்கழிக்க என்னென்ன கார்ணங்கள் வருகின்றன என்பதும் புரிந்து கொள்ள முடிகிறது. மாரிமுத்து-அம்மா, மற்றும் மாரிமுத்து

பாட்டிக்கும் நடைபெறும் உரையாடல்கள் கதையை நகர்த்த உதவுகின்றன.

இடப்பிரச்சனை, கிளைக்கதைகள், தானாவதி தாத்தா ஆகியோர் நாவல் சுவாரஸ்யமாய் செல்ல உதவுகின்றனர்.செல்வராசு வந்தவுடன் வேறு பரிணாமத்தை விதையிடும் மற்றும் ராமன் கதாபாத்திரம் வந்த பின் அந்த விதைகள் வளர ஆரோக்கியமான உரையாடல் மாரிமுத்துவிடம் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

கதையின் இறுதியில் குப்பனின் பேச்சு நல்ல முதிர்ச்சியைக் காட்டுகிறது.

*கழுத்துப்புண்ணு வலி எருதுக்குத்தான் தெரியும்.கொத்துகிற காகாக்கு தெரியுமா?

*பாட்டி சொன்னாள் நா என்ன கொமுறியா? நகைநட்டு போட்டு அலைய. மண்ணுக்குள்ள கெடக்கிற உடம்பு மண்ணுமேல கிடக்குது அவ்வளவுதான்

*பெரிய பெரிய சம்பவங்களை தாங்கிக் கொள்கிற மனதினால் அற்பவார்த்தைகளை தாங்கிக் கொள்ள முடிவதில்லை.

மனித நாக்கு வார்த்தைகளை சுழற்றும் 

 எப்படிகற்றுக் கொண்டதோ?

ஒரே ஒரு ஒன்லைனரை வைத்து நாவல் முழுவதும் சுவாரஸ்யம் கெடாமல் கொடுத்துள்ளார் பெருமாள் முருகன்

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment