Sunday, 4 December 2016

நல்ல வாசகனின் இலக்கணம்

''நல்ல வாசகரின் இலக்கணம் என்ன?''

''இடைவிடாத தேடுதல் கொண்டவனே/கொண்டவளே நல்ல வாசகர்.

எந்தப் படைப்பாளியிடமும் தேங்கிவிடக் கூடாது. மாலை போட்டு சூடம் காட்டக் கூடாது. தலைவராக, ஒரே படைப்பாளியை பாலபிஷேகம் செய்யக் கூடாது. ஓடிக்கொண்டே இருக்கிற நதி போல ஒரு நல்ல வாசகர் இருப்பார். நல்ல வாசகர்களே, நல்ல எழுத்தாளரையும் உருவாக்க முடியும்.

வாசகர், 'சக இருதயர்’ என்பது, ஓர் அழகிய உண்மை. எழுதுபவரையும்விட ஒரு நல்ல, ஆரோக்கியமான வாசகரே இலக்கியத்தை வளர்ப்பவர்!''

No comments:

Post a Comment