Sunday, 10 December 2017

தங்கம்

*கொசுத் தொல்லை*

டெங்கு கொசு
உருவாகும் நிலையில்
தண்ணீர் தேங்கியதற்கு
அபராதம்.

தலைநகரமே
மழைநீர் தேங்கியுள்ளதே
அரசே
என்ன செய்வாய்?

----------------------------

பிளக்ஸ் பேனருக்கு
தடை
பலூன் பறக்கவிட்டோம்...

இப்போது சட்டம்
காற்றில் பறக்கிறது.

--------------------------------

பள்ளி குழந்தைகளை
அரசு விழாக்களுக்கு
அழைத்துச் செல்லாதே...

கவிதை, கட்டுரை
போட்டி நடத்துவோம்
பரிசு பெற அழைத்துச்செல்கிறோம்

நிவர்த்தி செய்யப்பட்டது
காலி நாற்காலிகளின்
குறை.

-----------------------------

இனிப்புகள்
எடுக்கவும்
பொருளாதாரத்தில்
ஔிர்கிறது இந்தியா

சர்க்கரை மானியம்
ரத்து.

----------------------------------

விளைச்சல் நிலமெல்லாம்
ஹைட்ரோ கார்பன்கள்
மலர்களை தூவுங்கள்
பாசனத்திற்கு மடை
திறக்கப்படுகிறது.

----------------------------------

பூமி பூஜை
நூற்றாண்டு தலைவனை
கொண்டாடுங்கள்.

நினைவில் நிறுத்துங்கள்
கல்லறைத் திருவிழா
உங்களுக்கும் உண்டு.

   -தங்கம்

No comments:

Post a Comment