Wednesday, 12 April 2017

தீர்வு

தீர்வு

சி மணி



என்ன செய்வ திந்தக் கையை
என்றேன்.  என்ன செய்வ தென்றால்
என்றான் சாமி.  கைக்கு வேலை
என்றி ருந்தால் பிரச்னை இல்லை.
மற்ற நேரம், நடக்கும் போதும்
நிற்கும் போதும் இந்தக் கைகள்
வெறுந்தோள் முனைத்தொங் கல்.தாங் காத
உறுத்தல் வடிவத் தொல்லை
என்றேன்.  கையைக் காலாக் கென்றான்

No comments:

Post a Comment