#Reading_Marathon2025
#25RM055
Book No:107/100+
Pages:-150
Master your mindset
-MJ DeMarco
உங்கள் பார்வையை மாற்ற, உங்கள் சிந்தனைையை மாற்ற வேண்டும்; உங்கள் சிந்தனையை மாற்ற, உங்கள் மனநிலையை மாற்ற வேண்டும்.
எண்ணங்களே செயல்களின் அடிப்படை ஆகின்றன. சிந்தனையில் ஏற்படும் மாற்றம் செயல்களில் எதிரொலிக்கின்றன. அதனால் தான்
You have to think differently you have to act differently. என்கிறார்கள். நமக்கு ஏற்படும் பிரச்சினைகள் 1% என்றால் அதுகுறித்த கவலைகளே 99% ஆக்கிரமித்துள்ளன. அதனை களைவது நம் கைகளிக் தான் இருக்கிறது.
எந்த ஒரு செயலையும் அவசரப்பட்டு செய்யாமல், முடிவெடுக்காமல் நிதானமாக யோசிக்க சொல்கின்றனர். ஒரு செயல் குறித்து பார்வையாளராய் இருக்கும் போது தான் அப்பிரச்சனை குறித்த முடிவு நம்மாலெடுக்க முடியும். வெறுமனே பங்கேற்பாளராகும் போது அதிலேயே கரைந்து விடுகிறோம்.
ஆகவே பார்வையாளராய் இருந்து நன்கு கவனித்து சிந்தனையை சீர்படுத்த வேண்டும்.
கவலைக்கு கருணை காட்டக் கூடாது. அவ்வாறு செய்தால் அது இருப்பிடம் தேடி நம்மிடமே அடைக்கலமாகி
விடும்.“Your emotions are the slaves to your thoughts, and you are the slave to your emotions.” என்கிறார்.Elizabeth Gilbert
கட்டுரையாளர் ஒருகட்டத்தில் துவண்டு நிற்கும்போது அவருக்கு கைகொடுத்தது புதிய விசயங்களை தேடிச்சென்றது, புதுமையை விரும்பியது, ஓய்வு போன்றவற்றை செய்யும்போது மனம் கட்டுக்குள் வருவதை உணர்ந்தார்.அதன் மூலம் நாள்தோறும் இத்தகைய பயிற்சிகள் அவரை வலிமையுள்ளவராய் மாற்றியது.பலரும் செய்யும் தவறான விசயம் புதியனவற்றை பற்றி சிந்திப்பதில்லை செய்வதில்லை என்கிறார்.
"Happiness is not by chance but by choice." மகிழ்ச்சி எப்போதும் பிறர் கொடுப்பதில்லை. அது நம்மிடையே உள்ளதை நாமே மீட்டெடுக்கிறோம்.
நமக்கான நேரத்தை நமக்குக் கொடுக்கும்போதுதான் நம்மை பற்றி நினைக்கும் போதுதான், நம்மை நாமே பாராட்டும் போது தான் உண்மையான மகிழ்ச்சி நமக்குள் சுரக்கிறது.
நமக்குள் ஏற்படும் கவலைக்கு மூலகாரணம் இறந்த கால தவறுகளை நினைத்து நிகழ்காலத்தில் கவலைப்பட்டு எதிர்காலத்தை இழப்பது போன்றதாகும். அதே போல் சுற்றுப்புற நண்பர்களின் வழியேயும் நேர்மறை சிந்தனைகளை உருவாக்குவதன் மூலம் மட்டுமே இதனை களைய முடியும்.
“You don’t have to be great to start, but you have to start to be great.”நல்ல துவக்கமே பகுதி வெற்றி. நல்ல செயல்களை செய்வதன் வழியே மனம் மாற்றமடைகிறது என்பதைத் தாண்டி தொடர்ந்து செய்வதன் வழியே தான் மாற்றத்தை நிகழ்த்த முடியும்.இதற்கு உதாரணமாக
Learning ,Practice ,Apply ,Consistencyஎன நான்கும் இன்றியமையாதது என வலியுறுத்துகிறார்.
நல்ல உரையாடல்கள் சிந்தனையை செம்மைப்படுத்துகிறது. கருத்தியல் ரீதியாக உரையாடுகையில் நாம் கற்றவற்றை நம்பியவற்றை மீளாய்வு செய்யவும், புதியனவறை கற்று மனதை மேம்படுத்தவும் உதவுகிறது.
தோல்விகளை கற்றலுக்கான வாய்ப்பாகக் காணும் மனப்பாங்கு, எதிர்மறை எண்ணங்களை கட்டுப்படுத்து, நம்பிக்கையுடன் முன்னேறுவது,. மனத்தை ஒழுங்குபடுத்தி, சுய கட்டுப்பாட்டை வளர்ப்பது,வாழ்க்கை நோக்கத்தைத் தேடவும், அதில் கவனம் செலுத்தவும் உதவுகிறது. முக்கிய முடிவுகளை தெளிவுடன் எடுக்க வழிகாட்டுகிறது
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment