#கற்கை_நன்றே_186
உங்களால் எங்கே தொடங்க முடியுமோ அங்கிருந்து தொடங்குங்கள்.உங்கள் கையில் என்ன இருக்கிறதோ அதைக் கொண்டு தொடங்குங்கள்
-ஆண்ட்ரூ மேத்யூஸ்
எல்லாரும் வேண்டுவது எப்போதும் சந்தோசமாக நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதுதான். எப்போதும் என்பதில் இக்கணம் உணடு என்பதை மறந்துவிடுகின்றனர். நேரம் என்பது இக்கணம் மட்டும் தான்.இந்த நேரத்தில் நிம்மதியாகவும்.சந்தோசமாகவும் இருப்பது தான் எப்போதும் சந்தோசமாக இருப்பதற்கான அடிப்படை காரணம்.
படிப்படியாக மலையின் மீது எப்படி ஏறுவீர்களோ, அதே போல் உங்கள் பிரச்சினைகளை கையாளுங்கள் என்கிறார் ஆண்ட்ரூ மாத்யூஸ். பாறைமீது ஏறும்போது ஒரு பாறையில் சிக்கினால் உங்கள் கவனம் முழுவதும் அந்தக் கணத்தில் தான் விடுபட எண்ணுவீர்கள். எஞ்சி இருக்கும் பாறைமீது கால் சிக்கும் என எண்ண மாட்டீர்கள் அல்லவா..
எப்போதெல்லாம் 24 மணி நேரம் கடினமாக இருக்கிறதோ, அப்போதெல்லாம் ஒரு ஐந்து நிமிடங்கள் கவனம் செலுத்துங்கள்.பின் அடுத்த ஐந்து நிமிடங்கள் என மகிழ்ச்சியாக் இருக்க எண்ணுங்கள்.
எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் வட அமெரிக்கப் பெண்மணியான ஷேரன் உட், தன்னுடைய அனுபவத்தைப் பற்றி இப்படிக் கூறினார்:
“அது உடல் வலிமையைப் பற்றிய விஷயம் அல்ல, மாறாக மன வலிமையைப் பற்றியது என்பதை நான் கண்டறிந்தேன். உண்மையான போராட்டம் என்னுடைய மனத்தில்தான் நிகழ்ந்தது. நானே சுயமாக உருவாக்கிக் கொண்ட தடைகளைக் கடந்து, ஆற்றல் எனும் பொக்கிஷத்தை நான் சென்றடைய வேண்டியிருந்தது.
அந்த ஆற்றலின் 90 சதவீதத்தை நாம் அரிதாகவே பயன்படுத்துகிறோம்.” பயன்படுத்தப்படாத அந்த 90 சதவீத ஆற்றலை நீங்கள் வசப்படுத்த விரும்பினால், “அதை நான் எப்படிச் செய்வது?” என்று கேளுங்கள். அப்போது நீங்கள் மாபெரும் சாதனைகளைப் படைப்பீர்கள்
-நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment