#கற்கை_நன்றே_182
பேசிக்கொண்டிருக்கையிலேயே, ஃபேஸ்புக் பார்ப்பது டுவிட்டர் எழுதுவது,எந்த உரையாடலையும் தொடர்ச்சியாகக் கவனிக்காமல் ஐந்தாறு நிமிடங்களுக்கே விஷயத்திலிருந்து தாவிச்செல்வது போன்றவை இன்றையத்தலைமுறையில் பொதுவாக மிக அதிகம்.இன்றைய ஊடகப்பெருக்கத்தின் விளைவு இது.இது பொதுவாக ஒற்றைவரிகளை மட்டுமே அறிந்தவர்களாக,எதையும் தர்க்கபூர்வமாக விரிவாகத் தெரிந்து கொள்ள முடியாதவர்களாக ஆக்கிவிடுகிறது
-ஜெயமோகன்
இன்றைய உலகில் அதிகம் பேரால் கடைபிடிக்காத ஒன்று காத்திருப்பதும் பொறுமையாய் இருப்பதும் தான்.
மற்றவர்கள் கூறுவதை நாம் காது கொடுத்து கேட்பதில்லை சிந்திப்பதுமில்லை,
பின்பற்றுவதுமில்லை.மற்றவர் அனைவரும் நம் அறிவை மட்டுப்படுத்துகின்றனர்,ஏளனம் செய்கின்றனர் என்ற மனம் தான் மூத்தோர் சொல்லும் அறிவுரைகளை இடது கையால் தள்ளிவிடுகின்றனர். இதனை அவர்கள் பெருமையாகவும் கருதுகின்றனர்.
ஓஷோ சொல்வது இதைத்தான்
யாரும் யாரையும் மாற்ற முடியாது.இது ஒரு மிகப்பெரிய அனுபவம். மிகப்பெரிய புரிந்து கொள்தலாகும்
ஆகவேதான்,வயதானவர்கள் மிகவும் பொறுமையாகவும், சகித்துக்கொண்டும் போகிறார்கள்.ஆனால் இளமையில் அவர்கள் இருவரும் மிகவும் தீவிரமாக இருந்தார்கள். ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்வதும் இல்லை.அவர்கள் தனக்கு பிடிக்காத எல்லாவற்றையும் மாற்ற முனைகிறார்கள். அவர்களது விருப்பப்படி, இந்த உலகம் அமையவேண்டும் என நினைக்கிறார்கள். கடுமையாகப் போராடுகிறார்கள்.ஆனால் நினைத்தது நடக்காது.ஏனெனில் இயற்கையே அப்படித்தான்
இளஞ்செடியை சுற்றி வேலிக்கூண்டு ஒன்றை அமைத்தான் தோட்டக்காரன். இது நம் சுதந்திரத்தை கட்டுப்படுத்துகிறது என்று செடி நினைத்தது. மனம் நொந்தது. வெளியே சுதந்திரமாக தெரியும் பறவைகளையும் விலங்குகளையும் பார்த்து பெருமூச்சு விட்டது. ஒரு கட்டத்தில் அதற்கு கோபம் வந்து. தன் ஒரு கிளையை வளைத்து
வெளிக்கூண்டுக்கு வெளியே நீட்டியது.. ஆகா இதுவல்லவோ சுதந்திரம் என எண்ணியது.
ஆனால் அங்கு வந்த மேய்ச்சல் மாடு ஒன்று தன் நாவினால் வெளியே இருந்த இலைகளை தாவி இழுத்து சுவைத்தது. பின்பு இளஞ்செடியை வேரோடு கீழே சாய்த்தது. மரமாக நிமிர்ந்து நிற்கும் வரை பொறுமையோடு இருந்திருந்தால் வேலிக்
கூண்டு இல்லாமல் போயிருக்கும், சுதந்திரமும் கிடைத்திருக்கும்.
' ஏன் போடப்பட்டுள்ளது என்பதை அறியாத வரை எந்த வேலியையும் தகர்க்காதே" என்கிறார்
ராபர்ட் ஃப்ராஸ்ட்
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment