Saturday, 6 December 2025

114


#Reading_Marathon2025

#25RM055

Book No:114/150+

Pages:-153

மலரும் அறிவியல்

-ப.செங்குட்டுவன்

அறிவியல் குறித்த செய்திகளைத் தேடிச் செல்லும் போது வியப்பளிக்கும் பல்வேறு உண்மைகளை நாம் அறிய முடிகிறது. அவ்வாறு அறியும் போது..நாம் இத்தனை காலம் உன்மையென நம்பிக் கொண்டிருக்கும் நம்பிக்கையில் ஒரு சிறு கல் விழும்.மூட நம்பிக்கைகளை விரட்டி அடிக்கும். இத்தனை காலம் நாம் நம்பும் விஷயங்களை மீள் உருவாக்கம் நம் மனதில் செய்ய வேண்டியிருக்கும் அவ்வாறு எளிமையாக விளக்கும் வகையில் இந்த நூல் பதினொரு கட்டுரைகள் உள்ளன.

பிரபஞ்சம் குறித்த கருத்துகளைமுன்வைத்து ஸ்டீபன் ஹாக்கிங் கட்டுரை முதலாவதாக உள்ளது. பிரபஞசத்தின் வரலாறு குறித்த தகவல்களை ஐன்ஸ்டீன், நியூட்டனின் விதிகளின் படி விளக்கியுள்ளார்.ஒரு பொருள் மிக அதிகவேகத்தில் பயணம்செய்யும் போது அது செல்லும் திசைவழியே அதன் நீளம் குறைகிறது. நீள் வட்டத்தில் பயணித்தால் முன்முனையிலிருந்து நீளம் குறையும், செங்கோண வாட்டத்தில் பயணித்தால் செங்கோன வாட்டத்திலேயே குறையும் என்றார் ஐன்ஸ்டீன். மேலும் அவரின் ஒளி, வேகம்,நேரம் பற்றிய கோட்பாடுகளை எளிமையாக விளக்கியுள்ளார்.

சார்பியல் கோட்பாட்டை ஐன்ஸ்டின் செய்முறை மூலம் கண்டுபிடிக்கவில்லை; விளக்கவில்லை. இயற்கை இப்படித்தான் இருக்கும் என்ற ஆழ்ந்த சிந்தனை மூலமாகவே கண்டுபிடித்தார். கணக்கியல் மூலம் கண்டுபிடித்தார். அவரின் மூளையே, எண்ணங்களே செய்முறை ஆய்வகங்களாயின - Thought Experments - அவரின் மூளை உயர் அறிவியல் எண்ணங்கள், கருத்துக்கள் மலரும் சோலையாகும்.

"ஒரு முறை சிலர் ஐன்ஸ்டிடம் அவரின் ஆய்வகத்தைப் பார்க்கலாமா என்று கேட்டனர். உடனே தன் பவுண்டன் பேனாவை எடுத்து வைத்து இதுதான் என் ஆய்வகம் (There it is) என்றார். வேறொருமுறை எழுதி இனித் தேவையில்லை என்று கசக்கிப் போடும் பேப்பர் கூடையைக் காட்டி waste paper pocket) இதில்தான் என்னுடைய முக்கிய ஆய்வுக் கருவிகள் இருக்கின்றன" என்றார்.

அவர் எழுதிய முக்கிய கருத்துகள், கணக்குகள், தீர்வுகள் ஆகியவற்றை குப்பைக் (வேஸ்ட் பேப்பர்) கூடையில்தான் போடுவார்.அவர் எப்போதும் மாறுபட்டு சிந்திப்பார் 

ஒளிச்சிதறல் பற்றிய கட்டுரையில் தொடர்ந்தாற் போல் மாறி மாறி கருப்பு வெள்ளைக் கோடுகள் ஏற்படுதலில் நியூட்டன் மற்றும் யங் கோட்பாடுகளை விளக்கியிருப்பார்.

விண்மீன்கள் தனித்தனியாகத் தோன்றுவதில்லை; கூட்டமாக உண்டாகின்றன.

விண்மீன்களுக்கு இடையேயுள்ள விண்வெளி ஹைட்ரஜன் வாயு தூசி (dust) ஆகிய மேகங்களால் (clouds) நிரம்பியுள்ளது. இந்த வாயு மேகங்கள் தங்களுக்குரிய ஒளியை வெளியிடுகின்றன. வானில் இவை பனிமூட்டங்கள் மேகங்கள் (Mist-clouds) போன்று தோற்றமளிப்பதால் இவற்றை நெபுலாக்கள் (Nebulae) என்றழைக்கின்றனர். நெபுலா என்ற இலத்தீன் சொல்லுக்கு பனிமூட்டம் அல்லது மேகம் என்று பெயர்.

இந்த ஹைட்ரஜன் வாயுவும், தூசியும் தொடக்கக் காலத்தில் உண்டாகிய பழைய விண்மீன்களுக்கு இடையே இருக்கின்றன. இந்த வாயு, தூசி நெபுலாக்கள் ஆகியவற்றிலிருந்து தான் விண்மீன் பிறக்கின்றது. விண்வெளியில் இத்தகைய நெபுலாக்கள் பெருமளவில் இருக்கின்றன. நெபுலாக்கள் என்பவை பெரிய விண்மீன்களிலிருந்து வெளியே தள்ளப்பட்ட - தனியாகித் தள்ளப்பட்ட - வெளிப்பரப்பு களினாலும் நெடுங் காலத்திற்கு முன்னிருந்த பெரிய விண்மீன்களின் அழிவில் எஞ்சிய சிதைவுகளாலும் ஏற்பட்டவையே ஆகும் என்கிறார்

மேலும் ஹீலியம் எவ்வாறு உண்டாகிறது என்பது பற்றியும்,பெருவெடிப்பு, ஸ்டெடி ஸ்டேட் தியரி பற்றுயும் கூறியுள்ளார்.

கோலமிடும்பொழுது புள்ளிகளை வைத்து கோடுகளால் புள்ளிகளை இணைத்து பலவகை உருவங்களை (Shape) அமைக்கின்றனர். கோலங்களில் மான், மயில், வாத்து, மாடு. தேர் போன்றவற்றின் உருவங்களைக் காணலாம்.

அவ்வாறே, விண்வெளியிலுள்ள விண்மீன்களைப் புள்ளிகளாக்கி அவற்றை கோடுகளால் இணைத்து உருவத்தை உண்டாக்கி ஆடு, மாடு. மீன், பெருங்கரடி என்பன போன்றவற்றை உண்டாக்கிப் பெயரிட்டனர் நமது முன்னோர்கள். அவை அனைத்தும் கற்பனை உருவங்களே, கற்பனைப் பெயர்களே.

ஆக. நமது முன்னோர்கள் கற்பனையாக விண்மீன்களைக் கோடுகளால் ஏட்டில் இணைத்து அமைத்த உருவங்களே நமது ராசிகளாகும். கற்பனையில் உருவானவற்றை வைத்துக்கொண்டுதான் நாம் ராசிபலன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கற்பனையாக உருவாக்கப்பட்ட விண்மீன்களின் உருவங்களில் ராசிகளில் நம் வாழ்க்கையில் வலிந்து பிணைந்து விடப்பட்டவை மேஷம்,ரிஷபம் ராசி உள்ளிட்ட பன்னிரண்டு ஆகும்.

மேலும் பிரபஞசத்தில் உள்ள கோள்கள், காற்று மண்டலம்,விண்கல், எரிகல், நட்சத்திரம், கதிர்கள் குறித்த அறிவியல் தகவல்களும் மிக எளிமையாக குறிப்பிடப்பட்டுள்ளன.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment