#Reading_Marathon2025
#25RM055
Book No:116/150+
Pages:-86
மரகதச்சிலை
-வாண்டுமாமா
சித்திரக்கதை என்றாலே மெல்லிய திரில் கலந்த சாகசம் போன்றவை படிக்க படிக்க அடுத்து என்ன விறுவிறுப்பை தூண்டும் வகையில் அமைந்திருக்கும். இந்த தொடர் கல்கி தீபாவளி மலரில் வெளிவந்த கதை சித்திரக் கதைகளுக்கு ஏற்ற ஓவியம் சிறப்பாக அமைந்தால் தன் கதையில் மிகுந்த ஈடுபாட்டுடன் நாம் அதனை பின்தொடர முடியும்.
மகேந்திரபுரி மன்னர் மகன் ஆதித்தன் தான் கதையின் நாயகன்.மந்திரவாதி நீலகேசியின் கொடுமை தாளாமல் அண்டை நாட்டு மன்னர் மகள் நிர்மலா மன்னரிடம் முறையிடுகிறார். அவளுக்கு உதவவும் மந்திரவாதியின் கொடுமையை அடக்கவும் மகன் ஆதித்தனை கையில் ஒரு பெரிய வாளுடன் அனுப்பி வைக்கிறார் மன்னர். அவனக்கு உதவியாக குள்ளனை அனுப்புகிறார். மூவரும் காட்டில் நுழைவதை தன் மந்திரக் கண்ணாடி வழியாக மந்திரவாதி பார்க்கிறார்.
அதற்கு தகுந்தாற்போல் சூழச்சி செய்கிறார். நிர்மலாவை மந்திரத்தின் மூலம்.உருமாற்றி அவனை வெறுக்க வைக்கிறார். பின் ரூபவதி என்பவள் மந்திரவாதியின் ஆளாக இருந்து அவனை ஏமாற்ற நினைக்கிறாள். ஆனால் குள்ளன் தக்க ஆலோசனை சொல்லி கண்டுபிடிக்கிறான். மந்திரவாதியின் சூழ்ச்சி எதுவும் பலிக்கவில்லை.
நாகநந்தினி, மந்திரவாதியின் ஆள் ஆகியோர் ஆதித்தனை சிறைபிடிக்க முயன்றும் முடியவில்லை. உண்மையான நிர்மலா மீண்டு வருகிறாள். அவளுக்கு துணையாக சிங்கமும் வித்தியாசமான பிராணியும் உதவுகின்றனர்.
இறுதியில் ஆதித்தன் மந்திரவாதியின் மந்திர செயல்களை முறியடித்து நிர்மலாவுக்கு வந்த சோதனைகளை தடுத்தானா அல்லது மந்திரவாதியின் சூழ்ச்சிகளுக்கு இரையானானா என்பது தான் மீதிக்கதை. கதையின் இடையில் நாயகனின் சாகசங்களுக்கு சவால் விடும் வகையில் இடையில் எதிர்வரும் கதாபாத்திரங்களும் இயற்கை பேரிடர்களும் மந்திரவாதியின் மந்திரங்களும் எவ்வாறெல்லாம் தான் ஒரு சிறந்த வீரன் என்பதை கதையின் இறுதி வரை ஆதித்தன் உடன் சேர்ந்து நாமும் நம்மை ஆதித்தனாக உணர்கிறோம்.
இன்றைய கார்ட்டூன் கதைகளை பார்த்த குழந்தைகளுக்கு இது ஒரு சாதாரண விஷயமாக தோன்றலாம். ஆனால் அப்போது இந்த சித்திரக் கதைகளை படிக்கும் ஒவ்வொருவரின் மனதிலும் கதைகள் ஏற்படுத்திய தாக்கம் அந்தக் கதைகள் நடைபெறும் இடம், அது எந்த வகையான சூழலில் எவ்வாறு எதிர்கொள்கிறார் ..என்பதை பற்றிய ஒரு தன்னம்பிக்கை மிளிரும் வண்ணம் கதைகள் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இடம்பெற்றிருக்கும். இறுதியில் நீதி வெல்லும் என்பதுதான் ஒவ்வொரு கதையின் மையமான கருத்தாக இருப்பதால் சிறுவயதிலிருந்தே கதைகள் படிப்பதன் மூலம் அறம் சார்ந்த செயல்களை செய்ய அன்றே மனதில் குழந்தைகள் விதைத்து விடுவர். அதற்கு இந்த சித்திரக் கதைகள் மிகவும் துணை புரிந்தது எனலாம்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment