#Reading_Marathon2025
#25RM055
Book No:115/150+
Pages:-199
நாம் நார்மலாகத் தான் இருக்கிறோமா?
-சிவபாலன் இளஙகோவன்
மனநலத்துறையில் பேராசிரியராக பணிபுரியும் சிவபாலன் அவர்களின் எழுத்துக்களை முதன் முதலாக உயிர்மையில் ஒரு ஆன்மீக கட்டுரையில் தன் கருத்துக்கு விளக்கம் அளிப்பதை பற்றி எழுதியிருப்பார். அதனை படித்தது முதல் அவரின் அனைத்து புத்தகங்களையும் தேடித் தேடி வாசித்து விடுவேன். அந்த வகையில் இந்த புத்தகமும் வாசிப்பு அனுபவத்துக்கு நெருக்கமானது. பொதிவாக மனம் குறித்து பல புத்தகங்களும் இருந்தாலும் மருத்துவரகள் எழுதும் போது இன்னும் எளிமையாக புரியும்.
சண்டையோ பதட்டமோ இருக்கும் போது நாம் அனைவரும்.கேட்டு உறுதிப்படுத்துவது நார்மல் ஆகிட்டியா என்பது தான். அப்படி நார்மல் ஆவதற்கு ஏதேனும் வ்ரைமுறை உண்டா.. விரைவில் நார்மலாக ஏதேனும் பரிகாரம் இருக்குமா என நான் எப்போதும் எண்ணுவதுண்டு.அந்த வகையில் 45 கட்டுரைகளில் வேறு வேறு வித நார்மல், மனம்,உறவாடல், உணர்ச்சிகள் பற்றியெல்லாம் அலசியுள்ளார்.
இசை எங்கிருந்து வருதுனு கேட்பது போல் தான் மனம் எங்கிருக்கிறது, மனசே இல்லனு பல வசைகளை கேட்டிருப்போம்.இதில் மனம் குறித்தும்,சொல்லி..ஆராய்ச்சி யின் முடிவில் மனித மூளையின் இன்சுலா என்னும் பகுதிதான் மனம். அதுதான் சுய உணர்வுக்கான காரணம் என்கிறார்.
நார்மல் என்பது மாயை என்பதை விளக்க வரும் கட்ட்டுரையில் shutter island திரைப்படத்தை உதாரணமாக கூறியது சிறப்பு.மன ஆரோக்கியம் என்பது உணர்ச்சிகளை கடந்த நிலை அல்ல. இந்த உணர்ச்சிகளை பயன்படுத்தி அதன் மூலம் நம்மை மேம்படுத்திக் கொள்வது என்கிறார்.சுருக்கமாக மன ஆரோக்கியம் என்பது பிரச்சினைகள் கண்டு விலகுவது அல்ல..பிரச்சினைகளுடன் வாழப் பழகுவது.
தன்னைப் பற்றி அறிதலில் மற்றவர்கள் பற்றி யூகிப்பதில் உள்ள ஆபத்தை விளக்குகிறார். முரண்பாடுகளை கலைய வேண்டுமென்றால், அதற்கு.முதலில் ந்ம்மை அறிந்து கொள்ள வேண்டும்.மார்க்கெட்டிங் துறையில் பிறர் மனதை கவரச் செய்யும் "இண்டர்பர்சனல் ஸ்கில்ஸ்" பற்றி இதில் சொல்லியுள்ளார்.
மனதின் உணர்ச்சிகள் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு கணத்திலும் தேவை சார்ந்தும், முடிவு சார்ந்தும் நிகழும்.அப்போது அட்ரினல் சுரக்கிறது. இதுதான் அடுத்து செயல்படத் தேவையான ஆற்றலை உருவாக்குகிறது.உணர்ச்சிகளை முதலில் உணர்ந்து பின் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.எமோசனல் இண்டலிஜென்ஸ் அதாவது உணர்ச்சிகளை அறிவுபூர்வமாக கையாளுவது பற்றி தெரிவிக்கிறது.
உண்மையில் ஸ்ட்ரெஸ் என்பது என்ன?
மனஉளைச்சல் என்பது ஒரு போராட்டம். நிஜ அல்லது கற்பனை எதிர்கொள்ள அல்லது அதிலிருந்து நம்மைக் காப்பாற்ற நமது யான ஒரு ஆபத்தை நாம் எதிர்கொள்ளும்போது, அந்த ஆபத்தை ஒட்டுமொத்த சக்தியையும் நாம் திரட்டிக் கொள்வதுதான் ஸ்ட்ரெஸ்
உதாரணத்திற்கு, சாலையில் நடந்து போய்க் கொண்டிருக்கிறோம் திடீரெனெ ஒரு மாடு நம்மை முட்டிவிட வேகமாய் வருகிறது அப்போது நமக்கு எப்படி இருக்கும்? உடல் ரீதியாகவும், ம ரீதியாகவும் என்ன என்ன மாற்றங்கள் நமக்குள் நடக்கும்? படபடம் பாய் இருக்கும். வியர்த்துப்போய்விடும். மூச்சு முட்டும். மனம் பதட்டமாய் இருக்கும். நம் கவனம் முழுவதும் அந்த மாட்டின்மீகண் அதில் இருந்து எப்படித் தப்பிப்பது என்பது பற்றியும்தான் இருக்கும். இதுதான் ஸ்ட்ரெஸ்.
நாம் ஒரு ஆபத்தில் இருக்கும்போதோ அல்லது அதை எதிர்நோக்கி இருக்கும்போதோ, நமது மூளை தன்னிச்சையாகச் செயல்பட்டு அட்ரினலின் முதலான ஹார்மோன்களை நமக்குள் சுரக்க வைத்து ஆற்றலையும் சக்தியையும் கொடுக்கிறது. இப்படிக் கிடைக்கும் ஆற்றலை வைத்துக்கொண்டுதான் நமது உடல் ஆபத்தோடு போராடுகிறது.எல்லா வகையான ஆபத்துகளும் இந்த ஸ்ட்ரெஸை உண்டு பண்ணுமா என்றால், இல்லை. நாம் எதை ஆபத்தாகப் பார்க்கிறோமோ அப்போதுதான் இந்த ஸ்ட்ரெஸ் வருகிறது.
*மனம் ஒரு ஊற்று போல ஏராளமான எண்ணங்களை அது சுரந்து கொண்டே இருக்கும்
*அறிவியலிடம் கேட்பது மிகச் சிக்கலான ஒரு கேள்வியை, ஆனால், எதிர்பார்ப்பது மிகச் சுலபமான பதிலை.. மனம் அத்தனை சுலபமானதல்ல
*சகமனிதர்களிடம் நாம் மேற்கொள்ளும் உள்ளார்ந்த தன்னலமற்ற உறவாடல்தான்.. ஒரு ஆரோக்கியமான மனதிற்கு அடையாளம்
*எண்ணங்களை அழிப்பதற்கு
இன்னும் எந்தஒரு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை
*ஒரு எளிமையான, எதிர்னார்ப்பு இல்லாத உறவாடலில் எப்போதும் ஏமாற்றத்திற்கு இடமில்லை
*ஒரு நல்ல உரையாடல் பல விவாதங்களுக்கு தொடக்க புள்ளி.நமது கருத்தை ஏற்றுக் கொள்ள வைப்பது உரையாடலின் நோக்கமல்ல
*ஒவ்வொரு இழப்பிலிருந்து நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றது.அதுமட்டுமே எல்லா இழப்புகளையும் அர்த்தமுள்ளதாக மாற்றுகின்றது.
இவ்வாறு மனித மனம் குறித்த பல்வேறு தகவல்கள் இதில் உள்ளன. ஒவ்வொரகட்டுரையும் அதிக ஆழ்ம் பொதிந்தவையாக அர்த்தமுடனும் இருக்கின்றன
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment