Tuesday, 2 August 2016

தூரத்து உறவு-வைரமுத்து


"கதை நேரம்"        
      "தூரத்து உறவு"
       ✍��வைரமுத்து

✈எரிமேடையில் கிடத்தப்பட்டிருந்த அப்பாவின் உடலைக் கடைசியாகப் பார்க்க அமெரிக்காவிலிருந்து பறந்து வந்தான் சிவராமன்.....

��எனக்கு உயிர் தந்த உடல், நேற்று வரை அப்பா  ஓர் உயிர்; இன்று உடல்; நாளை வெறும் சொல்....

��அப்பாவின் மரணத்திற்கு அழமுடியாத அழத்தெறியாத ஒரு தலைமுறை தயராகிவிட்டது.

��மயானத்தில் மனைவியின் குரல் கைபேசியின் மூலம் ஒலித்தது. சடங்குகளில் தள்ளி நல்லுங்கள் 'இன்ஃபெக்க்ஷன்' வந்து தொலைக்கப் போகுது.

♨வெந்து தணிந்தது கூடு

����மொட்டையடிப் பதை மறுத்து நீ........ண்ட யோசனைக்குப் பிறகு மீசையை மட்டும் தியாகம் செய்தான்

��உடைந்த குரலில் கதறி அழுதாள் அம்மா........

��அவரை பொழைக்க வைக்க வேண்டாம்; சாகும்போது பக்கத்துல கூட இல்லையே......

��என்னம்மா பண்றது...? தூரம்!

��"ஆமாப்பா....... எல்லாமே தூரமாப்போச்சு"

வாரம் கடந்தது........

��ஒரு இடம் பாத்திருக்கிறேன்மா? பெத்த தாய் மாதிரி உன்னக் கவனிச்சுக்குவாங்க "பழத்தோட்டம்னு" ஒரு முதியோர் இல்லம்.

��அப்ப வீடு........?

��நீயே இல்லாதபோது இந்த வீடு எதுக்கு? வித்திடலாம்மா

��மகனே சிவராமா? எனக்கு ஒரே ஒரு ஆசை என்றாள் அம்மா.

��அப்பா கிடத்தப்பட்டிருந்த தரையில் விழுந்தாள். உருண்டாள். கண்ணீரால் நனைந்தாள்;

��"கவலையே படாதீங்க இனி உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் இவங்க அம்மாதான்" என்றான் பழத்தோட்டத்தின் காப்பாளர்.

✈நியூயார்க் சென்றான் சிவராமன்; மனைவி வரவேற்க காத்திருந்தாள்

��அமெரிக்காவில் இறங்கியதும் அம்மா இறந்த செய்தியை மனைவி கூறினாள்.

��மறுநாள் அதே நேரம் அம்மாவின் உடல் மின்மயானத்தில் கொண்டு செல்வதை கணினித் திரையில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

♨13412 கி.மீ தூரத்தில் "ஸகைப்பில்" எரிந்து கொண்டிருந்தாள் அம்மா.

முற்றும்........

No comments:

Post a Comment