[23/04, 3:29 pm] மினிமீன்ச்: அழுபவர் அழட்டும்
சிரிப்பவர் சிரிக்கட்டும்
இறப்பவர் இறக்கட்டும்
இருப்பவர் இருக்கட்டும்
நான் இயங்கிக் கொண்டே இருக்கிறேன்
இது என் இயற்கை
-லாசரா
[23/04, 3:31 pm] மினிமீன்ச்: விளக்கு ஏற்றினால் வெளிச்சம்
ஆனால் விடிவு என்னவோ வேளையில் தான்.
-லாசரா
[23/04, 3:33 pm] மினிமீன்ச்: வீணையின் ஸ்வரக் கட்டுகளை விருதாவாய் நெருடிக் கொண்டிருக்கையில், திடீரென்று ஒரு வேளையின் பொருத்தத்தால் ஸ்வரஜாதிகள் புதுவிதமாய்க் கூடி ஒரு அபூர்வ ராகம் ஜனிப்பதுபோல் அவள் என் வாழ்க்கையில் முன்னும் பின்னுமில்லாது முளைத்தாள்.
-லாசரா
No comments:
Post a Comment