[24/04, 8:34 am] TNPTF MANI: தோசை தெய்வம்
தோசை என்ன ருசி என்று கேட்டால்
என்ன சொல்ல முடியும்?
என் பாட்டி சுட்ட தோசையா?
என் அம்மா சுட்ட தோசையா?
வெளியூர் பஸ் வழியில் நிறுத்தியபோது
அங்கே சாப்பிட்ட தோசையா?
தோசை என்ன ருசி என்று கேட்டால்
என்ன சொல்ல முடியும்?
அந்தந்த தோசையில் உள்ள ருசியை
அடுத்த தோசையில் தேடுதல் பெரும் பிழை.
ஒவ்வொரு அவதாரத்திலும்
ஒவ்வொரு குணம்.
இரண்டும் ஒரே ருசி என்று
எப்போதும் சொல்லாதே.
தோசை தெய்வம் கோபித்துக்கொள்ளும்.
-படித்தது
[24/04, 8:39 am] TNPTF MANI: சிறகுகள் முறிந்ததில் ஒரு சின்ன சந்தோஷம். பறக்கும் சுமை இனியில்லை.
-தனலட்சுமி
[25/04, 6:44 am] TNPTF MANI: பசி என்பது உண்மையில் ஒரே வித அனுபவம் அல்ல.ருசியான உணவு கிடைக்கும் என்ற உறுதி உள்ள ஒருவனுக்கு பசி என்பது ஒரு இனிய அழைப்பாக இருக்கக்கூடும்.கடுமையாக உழைத்த பிறகு பசி உடலெங்கும் ஊறிப்பரவும் ஓர் இனிய அனுபவம்.
பசித்து வெகுதூரம் நடக்கும்போது பசி தூரத்தை அளக்கும் முழக்கோல்.தனியறையில் பசித்து படுத்திருக்கையில் அது ஒரு ஓயாத சத்தம். காத்திருக்கும் போது நச்சரிப்பு.
ஆனால் பசியின் பயங்கரம் அதற்கான உணவு கிடைக்கும் என்பது எவ்விதத்திலும் நிச்சயமற்ற ஒன்றாக இருக்கும் போதுதான் தெரியவரும்.
அந்தப்பசி அணைக்கப்படாது பெருகி நம் உயிரையே காவு கேட்கும் வாய்ப்பு உள்ளது என்று அறியும்போது ,பசி என்பது பெரும் அச்சம்
-ஜெயமோகன்
(பின் தொடரும் நிழலின் குரல்)
No comments:
Post a Comment