ஹிட்ச்காக் படம் ஒன்றில் நாயகியைக் கொல்ல வில்லன் கிளம்பிக் கொண்டு இருப்பான். என்ன ஆகப்போகிறதோ என பார்வையாளர்களுக்கு பரிதவிப்பாக இருக்கும். துல்லியமாக சரியான நேரத்துக்கு சென்றால் மட்டுமே இவனால காரியத்தை முடிக்க இயலும்
அவசரத்தில் கார் சாவி கம்பி இடைவெளிகளில் புகுந்து இரண்டு அடி ஆழமுள்ள பாதாள சாக்கடையில் விழுந்துவிடும்
நேரம் ஓடிக் கொண்டிருக்கும் டென்ஷன் அவனுக்கு விரல்களை லாகவமாக நுழைத்து அதை எடுக்க முயல்வான். விரலில் சி்க்காது சிக்கினாலும் பாதி தூரத்தில் விழுந்துவிடும் கடைசியில் எடுத்து விடுவான்
என்ன வேடிக்கை என்றால் படம் பார்ப்போரில் சிலர் மட்டுமே அடப்பாவி சாவியை எடுத்து விட்டானே கொல்லப்போகிறானே என பதறுவார்கள்
பெரும்பாலான பார்வையாளர்கள் கதைப்போக்கை சற்றே மறந்துவிட்டு , அப்பாடா சாவியை எடுத்துவிட்டான் என அவனுக்காக நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள். அதன்பின் மீண்டும் திட்ட ஆரம்பிப்பது வேறு விஷயம்
பாயிண்ட் ஆப் ஆங்கிள் என்பதற்கு இக்காட்சியை உதாரணமாகக்காட்டி ஒரு பயிலரஙகில் பேசிக் கேட்டது இது
-பிச்சைக்காரன்
No comments:
Post a Comment