நான் கடவுள் படத்தில் ஒரு பிச்சைக்கார பையன் ஆங்கில அறிவுடனும் உலக ஞானத்துடனும் ஜாலியாக பேசுபவனாகவும் இருப்பான்.
ஒரு காட்சியில்
−அம்பானி மாதிரி தொழிலதிபர் ஆகி நடிகையை கல்யாணம் செய்யணும் என்பான்
− அம்பானினா யாரு என்பான் சக பிச்சை
− ப்ச் செல்ஃபோன் விக்கிறவய்ங்கடா என்பான் அலட்சியமாக
இந்த கேரக்டரின் முழு வடிவம் ஏழாம் உலகம் நாவலில் இருக்கும்.
அந்த நாவலில் தனது மிகப்பெரிய சொத்தாக கருதி பழைய ஆங்கில நாளிதழ்களை ஒரு மூட்டையில் கட்டி சேகரித்து வைத்திருப்பான் அவன். ஆங்கில சொற்கள் வாக்கிய அமைப்புகள் என தெரிந்து கொண்டு அசத்துவான்
அந்த தனது சொத்தையே ஒரு கட்டத்தில் தியாகம் செய்ய முன்வருவான்
தமது சேகரிப்புகளை ஒன்று திரட்டி சக பிச்சைக்காரன் ஒருவனை பெரிய ஆடம்பர உணவகத்துக்கு அனுப்பி அந்த அனுபவத்தை தெரிந்து கொள்ள விரும்புவார்கள்
அதற்கு கொஞ்சம் காசு பத்தாததால் தனது சொத்தை விற்க முன்வருவான். அவனது அடையாளமே அதுதான் என்பதால் பிறர் அதை மறுத்துவிடுவார்கள்
காசே இல்லை என்றாலும் ஒருவரை ஒருவர் போற்றும் அக்காட்சி சிறப்பானது
நாளிதழ்கள் நம் அன்றாட வாழ்வில் வகிக்கும் இடம் வியப்புக்கு உரியது
ஆட்சியையே கவிழ்க்கும் ஆற்றல் படைத்த நாளிதழை சர்வசாதாரணமாக சப்பாத்தி பூரிக்கான மாவு உருண்டையை வைப்பதற்கு பயன்படுத்துவார்கள்
நுழைத்தேர்வுகளுக்கு படிப்போருக்கும் டீக்கடை பஜ்ஜி மடிப்பதற்கும் தோழன்
− ஆங்கிலம் கற்கவும், உதவும் பிளாட்பாரத்தில் படுக்கவும் உதவும்
-படித்தது
No comments:
Post a Comment