ஒரு துவக்கம்
ஏனித்தனை சிரமமாக இருக்கிறது
நேரம் எடுத்துக் கொள்கிறது
தடுமாறுகிறது
தயங்கி நடுவில் வீழ்கிறது
முடிவைப் போல் அல்லாமல்...
- போகன் சங்கர்
#வானிலிருந்து
வீழாத ஏணியில்
இரவெல்லாம்
ஏறி
சுவர்க்கம் போய்க்கொண்டிருந்த
நம்பிக்கையாளர்கள்
காலையில் செய்தித்தாளைப் பார்க்க மறுத்தார்கள்
-போகன் சங்கர்
வலி என்ற
வார்த்தையைப் போல
அவ்வளவு
சின்னதாய் இல்லை
வலி!
- போகன் சங்கர்
நல்ல கவிதைகள். திரட்டி வைத்திருக்கும் பதிவுகள் அனைத்தும் சிறப்பானவை.
ReplyDeleteஅன்புடன்
இரா.பூபாலன்
www.raboobalan.blogspot.com