Thursday, 16 July 2020

போகன் சங்கர்

ஒரு துவக்கம்
ஏனித்தனை சிரமமாக இருக்கிறது
நேரம் எடுத்துக் கொள்கிறது 
தடுமாறுகிறது
தயங்கி நடுவில் வீழ்கிறது
முடிவைப் போல் அல்லாமல்...

- போகன் சங்கர்

#வானிலிருந்து
வீழாத ஏணியில்
இரவெல்லாம்
ஏறி 
சுவர்க்கம் போய்க்கொண்டிருந்த
நம்பிக்கையாளர்கள்
காலையில் செய்தித்தாளைப் பார்க்க மறுத்தார்கள்

-போகன் சங்கர்


 வலி என்ற 
வார்த்தையைப் போல 
அவ்வளவு 
சின்னதாய் இல்லை 
வலி!

- போகன் சங்கர்

1 comment:

  1. நல்ல கவிதைகள். திரட்டி வைத்திருக்கும் பதிவுகள் அனைத்தும் சிறப்பானவை.

    அன்புடன்
    இரா.பூபாலன்

    www.raboobalan.blogspot.com

    ReplyDelete