Saturday, 10 February 2018

வாசித்தது

[26/12/2017, 6:47 a.m.] 💥TNPTF MANI💥: நான் எப்போதும் நினைத்து கொள்ளும் நகைச்சுவை கதை-கல்கி யுடையது

நான்குநேரி ஜீயருக்கு திருநெல்வேலியில் ஒரு கிளைமடம். அங்கே இருந்த தாத்தாச்சாரிய சாமிகள் குளத்தில் விழுந்து கால் ஒடிந்துவிட்டது. குப்பனை அழைக்கிறார்கள். ”டேய், நீ என்ன பண்றே , ஓடி நான்குநேரிக்குப் போய் ஜீயர் சன்னிதானத்தைப் பார்த்து இப்டிச் சொல்றே. எப்டிச் சொல்லுவே? ”ஸ்ரீஸ்ரீஸ்ரீ உபய வேதாந்த மகா கனம் ராமானுஜதாச அண்ணா தாத்தாச்சாரியார் ஸ்வாமிகள் ஸ்ரீ புஷ்கரணியிலே திருப்பாதம் வழுக்கி விழுந்து திருக்கால் ஒடிந்து ஸ்ரீமடத்திலே திருப்பள்ளிக் கொண்டிருக்கிறார்’ அப்டீன்னு சொல்லணம் புரியறதோ?”

சரி என்று குப்பன் ஓடிப்போய் நான்குநேரி மடத்தில் ஜீயரைக் கண்டு சுருக்கமாகச் சொன்னான் ”மொட்டைத்தாதன் குட்டையிலே விழுந்தான்”
[26/12/2017, 6:57 a.m.] 💥TNPTF MANI💥: மயானக் கூரையின் மேல்
காக்கையின் சத்தம்
யார் வரப் போகிறார்கள்
-லிங்குசாமி
[26/12/2017, 8:14 a.m.] 💥TNPTF MANI💥: கடை வீதியில் நடந்து
பிச்சை எடுத்து
நான் கொடுத்த 10ரூபாய்க்காக
தும்பிக்கை உயர்த்தி
வணங்கிச் செல்கிறது
தன் பலம் தெரியாத யானை
ஒரு சராசரி இந்திய
வாக்காளனைப் போல..
-ரெஜி தாரகன்
[26/12/2017, 9:12 a.m.] 💥TNPTF MANI💥: நதி அமைதியாக உறைந்திருக்கிறது.
மலைகள் நீந்திக் கொண்டிருக்கின்றன
-ஜென்
[26/12/2017, 9:50 a.m.] 💥TNPTF MANI💥: உலகத்தை அழகுபடுத்த மிச்சமிருப்பவை இன்னும் பிறவா குழந்தைகள் #மகுடேசுவரன்
[26/12/2017, 10:33 a.m.] செ பாலா: பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மார்டின் லூதர்கிங்
[26/12/2017, 10:33 a.m.] செ பாலா: என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் பெட்ரண்ட் ரஸல்
[26/12/2017, 10:33 a.m.] செ பாலா: நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து
என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.
-ஆபிரகாம் லிங்கன்
[26/12/2017, 10:33 a.m.] செ பாலா: புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட
பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!
– லெனின்

உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!
– ஆஸ்கார் வைல்ட்
[26/12/2017, 10:33 a.m.] செ பாலா: ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!
– ஜூலியஸ் சீசர்
[26/12/2017, 10:33 a.m.] செ பாலா: தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் பகத்சிங்
[26/12/2017, 10:34 a.m.] செ பாலா: வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் நெல்சன் மண்டேலா
[26/12/2017, 10:34 a.m.] செ பாலா: மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
[26/12/2017, 10:51 a.m.] 💥TNPTF MANI💥: காதல் , ஒரு நீண்ட அழகிய கனவு . கல்யாணம் என்பது அலாரம்"
-p
[26/12/2017, 10:52 a.m.] 💥TNPTF MANI💥: பெருமை பொங்க பிறரிடம் பேசுவதற்கேனும்
ஒவ்வொருவரிடமும்
ஒளிந்திருக்கும் காதல்
-யுகபாரதி
[26/12/2017, 3:28 p.m.] 💥TNPTF MANI💥: சகஜமாக எடுத்துக் கொள்ள முடியாத ஒன்றே அவமானத்தின் இருப்பு
[26/12/2017, 3:29 p.m.] 💥TNPTF MANI💥: அந்நியமாதல்

வெட்டப்பட்ட ஆட்டுத்தலை
வெறித்துப் பார்க்கிறது
தோலுரித்துத்
தொங்கவிடப்பட்டிருக்கும்
தன் உடலை"!
-பிருந்தாசாரதி
[26/12/2017, 3:30 p.m.] 💥TNPTF MANI💥: பத்து செகன்ட் த்ரில் ஸ்டோரி என்பது
"வெயிட் மெஷினில் ஏறி வெயிட் பார்ப்பது"!

No comments:

Post a Comment