நீள் வட்ட வாழ்க்கை!
இயற்கைக்கு மிகப் பிடித்த கணித வடிவம், நீள்வட்டம். சின்னஞ்சிறிய அணுவில் எலக்ட்ரானும், பரந்து விரிந்த இந்த பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள், கிரகங்கள் என அனைத்தும் நீள் வட்டப் பாதையிலேயே சுற்றுகின்றன. நமது கண், பெரும்பாலான தாவரத்தின் இலைகள், முட்டையின் வடிவம் என நம்மைச் சுற்றியுள்ள பல பொருட்களின் அவுட்லைன் நீள் வட்டமாகவே அமைந்திருக்கும்.
நேர்கோட்டை விட வட்டப்பாதை சிறப்பானது. வட்டப்பாதையை விட நீள் வட்டப்பாதை இன்னும் சிறப்பானது. நீள்வட்டத்தில், மையத்துக்கும் வட்டத்தின் நிலைக்கும் இருக்கும் ஆரத் தொலைவு மாறிக்கொண்டே இருக்கும். சில காலம் மிக அருகிலும், சில காலம் மிக தொலைவும் அமையும்.
நமது வாழ்வுமே, நீள் வட்டப் பாதையாக இருந்தால் நல்லது. நம்மைச்சுற்றியுள்ள மனிதர்கள், நிகழ்வுகள், பொருட்கள் ஆகியவற்றுடன் எப்போதும் ஒரே வித தொடர்பும், பிடிப்பும் கொண்டிருக்க வேண்டியதில்லை. சில சமயங்களில் அவைகளுடன் நாம் விலகி இருக்க வேண்டும், சில சமயங்களில் அவைகளுடன் நெருங்கி பயணிக்க வேண்டும். அது, நமது எதிர்பார்ப்பை குறைத்து, பல ஏமாற்றங்களை தவிர்க்க உதவும்.
நமது வாழ்க்கையின் வெற்றி ஒன்றினை அடைவதில் அல்ல, பூஜ்யத்தைப் புரிந்து கொள்வதில் உள்ளது.
-janakiraman
No comments:
Post a Comment