Monday, 6 August 2018

கற்றதும் பெற்றதும்-19

கற்றதும் பெற்றதும்-19

*மணி

நல்லவர்களை அடையாளம் காண ஒரு வழி?
"மாசக்கடைசியில் அவர்கள் கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பார்கள்

-மதன்

#ஹாய் மதன்

பொதுவாய் கேள்விக்கு பதில் சொல்வது என்பது சாதாரணமானதல்ல..எனக்கு கேள்வி மட்டும்தான் கேட்கத்தெரியும் என்பார் திருவிளையாடலில் நாகேஷ். தனக்கு எவ்வளவு தெரியும்,உனக்குத் தெரியுமா என்பது போல இருக்கும் சிலரின் கேள்வி.ஒருவரின் அறியாமையிலிருந்த கேட்பதே உண்மையான கேள்வி என்பார் ஓஷோ. சினிமா அறிவியல், வரலாறு என அனைத்து தளத்திலும் அறிந்தவர்களில் ஒருவர் மதன் சார் .அவரின் வந்தார்கள் வென்றார்கள் தேர்ந்த வரலாற்றாசிரியர் கூட இப்படி எழுத முடியுமா எனத் தெரியாது. அவரின் மதன் கேள்விபதில் விகடனில் வந்தபோது வாரவாரம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

அதிலிருந்து சில கேள்வி பதில்கள்..

*சர்க்கஸ் எப்போது தோன்றியது?

சர்க்கஸ் (வட்டம்) என்ற வார்த்தையிலிருந்து வந்ததுதான். ரோம் நாட்டில் கிமு ஆறாம் நூற்றாண்டிலேயே வட்டமான மைதானத்தில் குதிரை ரேஸ் ரேக்ளா ரேஸ் முதலிய எல்லாம் நடந்த பிறகு அதைச் சுற்றி ஸ்டேடியம் கட்டினார்கள். ஜூலியஸ் சீஸர் 3 லட்சம் மக்கள் அமர்ந்து பார்க்கும்படி விரிவுபடுத்தினார்.

18ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் மாடர்ன் சர்க்கஸ் தொடங்கியது.
சர்க்கஸை உலக புகழுக்கு கொண்டு போனவர் பி.டி.பார்னம் என்ற அமெரிக்கர்.

# யானை குதிரை குட்டிகள் பிறந்த சில நிமிடங்களில் எழுந்து நடக்க ஆரம்பித்து விடுகின்றன மனிதக் குழந்தைகள் நடக்காதது ஏன்?

இந்த விஷயத்தில் ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு மாதிரி. சுறாவின் கர்ப்பப் பைக்குள் கையை விட்டார் ஒருவர் உள்ளே இருந்த குட்டி அவர் விரலை கடித்து துண்டாக்கியது. அதேபோல் நல்ல பாம்பு குட்டி விஷயத்தோடு பிறக்கிறது. ஒட்டகச்சிவிங்கி பிறந்து சில நிமிடங்களில் எழுந்து ஓடுகிறது. குரங்கு தானாக செயல்பட சில நாள் ஆகிறது. மனிதனுக்கு சில வருடங்கள் ஆகிறது. தாய் தரும் பாதுகாப்பு இப்பொழுது பரிணாம வளர்ச்சி.

# முதலில் கிருதா வைத்துக் கொண்டவர் யார்?

19 ஆம் நூற்றாண்டில் US ராணுவ தளபதியாக இருந்தவர் general ஆம்ப்ரோஸ் பர்ன்ஸைடு முதலில் வைத்துக்கொண்டதால் தான் அவர் பெயரை திருப்பி போட்டு side burn என்றாகியது.

# ஹெல்மெட் பெயர் காரணம்
பற்றி?

kel-கெல்  என்றால் மூடிக்கொள்வது அல்லது கவர் செய்து கொள்வது என்று இந்தோ-ஐரோப்பிய மொழியில் அர்த்தம். பிரெஞ்சு மொழியில் ஹெல்மெட் என்பது பாதுகாப்பு தொப்பி என்று மாறியது.

# கொரியர் -கூரியர் எது சரி?

கூரியர் தான் சரி. ஓடுவது அல்லது வேகமாக முன்னேறுகிறது என்று அர்த்தம். அதில் இருந்து தான் career-ம் வந்தது.  இவையெல்லாமே கரண்ட் என்கிற வார்த்தையில் இருந்து பிறந்தவை. மின்சக்தியும் கூரியர் மாதிரி ஒயரில் ஓடுகிறது அல்லவா.

# லட்சுமி படத்தின் இரண்டு பக்கங்களிலும் யானை படங்கள்  வரைவது ஏன்?

ஒரு சமயம் யானைக்கு இறக்கைகள் இருந்தன. வானத்தில் மேகக் கூட்டம் போல பறந்து தும்பிக்கையால் மழை பொழிந்தன. இரு யானைகள் மரத்தின் மீது அமர கீழே இருந்த ரிஷிக்கு தொந்தரவாகி உங்களது இறக்கை  இல்லாமல் போக என்று சபித்ததார். மழை என்பது செல்வம். ஆகவே மனமிரங்கி லட்சுமி இரு யானைகளும் தன் பக்கத்தில் நிரந்தரமாக வைத்துக் கொண்டுவிட்டார்

# டாக்டர்கள் ஸ்டெதாஸ்கோப்பை தன் இதயத்தின் மீது வைத்து துடிப்பை கணக்கிடுகிறார்கள்.ஏன் முதுகுப்பக்கம் சிலசமயம் பார்க்கிறார்கள்?

நம்ம உடல் சிலிண்டர் மாதிரிதாங்க. உங்க முதுகு மட்டும் செங்கல்பட்டிலா இருக்கு. ஸ்டெதாஸ்கோப்பை மார்பு முதுகு எல்லாமே ஒன்றுதான்

# பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா?

சத்தியமாக கிடையாது. வெளியே போ என்று உடலால் ஒதுக்கித் தள்ளப்பட்ட செத்துப்போன செல்தான் முடி. அதற்கு எப்படி மனம் இருக்க முடியும். நகமும் இதே கேஸ்தான்.நகத்துக்கு மணம் உண்டா. நக்கீரர் சொன்னது கரெக்ட்

# ஹம்மிங் பறவை எப்படி பின்னோக்கி பறக்கிறது?

ஹம்மிங் பறவை ஒரு உயிருள்ள மினி ஹெலிகாப்டர். ஒரு விநாடிக்கு 60 முறை அதன் இறக்கைகள் இயங்கும். மொத்த இறக்கையும் உடலோடு இணையாமல், ஒரு விரல் நுனி அளவுக்கு மட்டுமே ஒட்டிக் கொண்டிருப்பதால், ஹம்மிங் பறவை மனிதனைப் போல் முன்னாலும் பின்னாலும் சுழற்ற முடியும். மேலும் கீழுமாக கூட முடியும். ஹம்மிங் முட்டைகளை விட கொஞ்சம் பெரியது.

# வவ்வால் இருட்டில் வாழ்வதன் மர்மம் என்ன?

வெளவாலுக்கு செயலிழந்த கண்கள். பார்வை அதற்கு அவசியமில்லை. இருட்டே அதற்கு பகல். வாயால் அல்ட்ரா ஒலி எழுப்பி, அதன் எதிரொலியை வைத்து, ஒலி அலைகளை பயன்படுத்தி கும்மிருட்டில் படு வேகமாகப் பறக்கும்.வெளவாலுக்கு பகல் முழுவதும் சிரசாசன தூக்கம்தான்

# அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடித்தாரா?

கருப்பு இன ஆப்பிரிக்கர்கள்  தான் முதலில் கண்டுபிடித்தார்கள்

# மனித உறுப்புகளில் கைகளில் நடுவிரலுக்கு அதிகம் வேலை இல்லையே?

கைவிரல்களில் படு பிசியானது கட்டைவிரல்.அடுத்து ஆள்காட்டிவிரல். என்றாலும் எல்லா விரல்களுமே முக்கியம் தான். இதை டெஸ்ட் பண்ண நடுவிரலில் ஒரு பிளாஸ்திரி போட்டுக் கொள்ளுங்கள். நடுவிரலின் பணிகளையெல்லாம் முன்னரே இது ஒன்றுதான் வழி

# கொசுவை அடித்தால் எவ்வளவு கொசுக்களின் உற்பத்தி தடுக்கலாம்?

ஒரு கொசுவை  அடித்தால் அது பெண் கொசுவா இருந்தால் பிரசவிக்கப் போகும் சுமார் 300 கொசுக்களை நீங்கள் கொன்றதாக அர்த்தம். 300ம்  பெண்களாக இருந்தால் கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்.

# பிளாட் அபார்ட்மெண்ட் இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

தமிழில் பிரித்து என்றால் பரப்பிவை அல்லது அகலப்படுத்து என்று பொருள். கிரேக்க மொழியில் ப்ளாத்து என்றானது. அதிலிருந்து ஜெர்மானிய மொழிக்கு போன வார்த்தை ப்ளாட்டு. ஆங்கிலத்தில் பிளாட்.

அமெரிக்காவில் அப்பார்ட்மெண்ட் என்கிறார்கள் அதாவது மற்றவரிடம் இருந்து விலகி(apart) தனிமையில் எங்கள் குடும்பம் வாழ்கிற இடம் என்று அர்த்தம்.

( நான் அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு. இந்த அப்பார்ட்மெண்டில் இருப்பவர்கள் எல்லாம் ராஜ பரம்பரையை சேர்ந்தவர்கள். இவங்க மனசு வெச்சா நாம எங்கேயோ போயிடுவோம் னு. இப்போதும் அந்த நினைப்பு வந்திட்டு தான் இருக்கு   -மணி)

- இதுபோல் எண்ணற்ற கேள்வி பதில்கள். மதனின் கேள்வி பதில் தொகுப்பு கிட்டத்தட்ட 7000 கேள்விகளுக்கு மேல் பதிலளித்து ஒரு சாதனை நிகழ்த்தியுள்ளார். இவை அனைத்துமே புத்தகங்களாக தற்போது கிடைப்பதில்லை. அதாவது மறுபிரசுரம் ஆகாமல் இருக்கின்றன. வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் பிரசுரம் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment