இன்றைய நிலையில் மிகச்சிறந்த ஆட்சியை உருவாக்கும் சக்தி வாக்காளர்களாகிய நம்மிடம் இல்லை.
ஆனால் மோசமான ஆட்சியை தவிர்க்கும் வாய்ப்பு நமக்கு உண்டு
-சோ
#தன்னை புகைக்க ஆள் இல்லையென்று
தானே புகைந்து கொண்டிருக்கிறது
சாலையில் கிடத்திய சிகரெட்.!
#தண்டவாளத்தில்
தலைசாய்த்துப் பூத்திருக்கும்
ஒற்றைப்பூ
என் காதல்.
நீ நடந்து வருகிறாயா
ரயிலில் வருகிறாயா
-பழனிபாரதி
#மனசு அசைபோடும்போது
வாய் மெளனமாகும்
-ராஜா சந்திரசேகர்
#எரிக்கப்படுவோம்
என்பது
உறுதியாகத் தெரிந்து
நெருப்புக் குச்சிகள்
அடக்கமாக
இருக்கின்றன
பெட்டிக்குள்
-தமிழன்பன்
No comments:
Post a Comment