Wednesday, 22 March 2017

பிரகாஷ்

பள்ளி
செல்லும்,
பருவமெய்திய
சிறுமிகள்..
மாத நாட்களில்,
புத்தகப்பையில்,
மறைத்து
எடுத்துவருமந்த,
வஸ்துவுக்கு..,
கொஞ்சமும்
குறைவில்லாதளவு
சங்கடங்களை
தரக்கூடியது...
ஒரு,
ஒடுக்கப்பட்ட
மாணவன்,
எடுத்து வந்திருக்கும்
சாதி சான்றிதழ்..!

No comments:

Post a Comment