Sunday, 22 October 2017

@மணி

வளையல்

“சின்னதாயிருக்கும் பொழுது
செய்த வளையல்.

அழித்துப் பண்ணவும் காசில்லை.

விரல்களை மடக்கி
கையைக் குலுக்கி
அழுந்திட
சோப்புப்போட்டு அழுத்தி
கஷ்டப்பட்டு
உள்ளே தள்ளியாயிற்று.

மினுக்கிக்கொள்ளும்
மணிக்கட்டுக்கு
ஒரு போதும் தெரிவதில்லை
விரல்கள் பட்ட வேதனை..!”

-  வெ. இறையன்பு.

#நேரா போய் ரைட் எடுத்தா,
*ஒரு* *தோல்வி* வரும் ..
அங்கருந்து லெப்ட் போனா
பெருசா *ஒரு* *துரோகம்* இருக்கும்..
கொஞ்ச தூரம் போயி ஒரு யு டேன் அடுச்சா, அங்க *கடன்* என்கிற ஒரு பெரிய பள்ளம் இருக்கும்..
அந்த பள்ளத்துல விழுந்து மூஞ்சி மொகர எல்லாம் பேந்து எந்திருச்சு நேரா போனா,
*ஏமாற்றங்கர* ஒரு சிக்னல் இருக்கும், அதையும் தாண்டி போனா,
போட்டி, *பொறாமைங்கர*
ஸ்பீடு பிரேக்கர் வரும்,
அதையும் தாண்டி டாப் கியர் போட்டு போயிகிட்டே இருந்தால்
அதுக்கடுத்த வீடு தான் நீங்க கேட்ட *வெற்றியோட* வீடு வரும்..
வெற்றிய தொட்ட அடுத்த கனமே திரும்பி பார்த்தால் .
இது தானுங்க *வாழ்க்கை...*

No comments:

Post a Comment