Thursday, 15 September 2016

புத்தக அறிமுகம்

*திண்டுக்கல்லில் 5 வது புத்தகத் திருவிழா*

*_டிசம்பர் 1 முதல் 11 வரை_*

இன்னும் 7⃣7⃣ நாட்களே உள்ளன ...

அறிமுக நூல் : 2⃣4⃣

இந்த நூல் உங்களிடம் உள்ளதா ?

*நூலின் பெயர் :* சிந்துவெளி பண்பாட்டின் திராவிட அடித்தளம்

ஆசிரியர் : ஆர். பாலகிருஷ்ணண்

இதை ஒரு ஆய்வு நூல் என வகைப்படுத்திவிட முடியாத ஒரு நூல்...

காரணம் ஒரு ஆய்வுக்குரிய நூலுக்குரிய அம்சங்களுடன் பல விசயங்களை, உண்மைகளை கூறும் நூலாகவும் இருப்பது இதன் சிறப்பு !

சிந்துசமவெளி நாகரிகத்தை பற்றி பேசுகிறது இந்த நூல்..

சிந்துவெளி நாகரிகத்தோடு திராவிட பண்பாட்டையும் இணைத்து பேசியிருப்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது...

கோட்டை, ஊர் போன்ற திராவிட பெயர்கள் சிந்து சமவெளியிலெ காணப்படும் போக்கு ..

சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் கொற்கை, வஞ்சி, தொண்டி போன்ற பெயர்கள் இன்றும் ஆப்கன், ஈரானில் காணப்படும் நிலை என அடுக்கடுக்காய் கூறுகிறார் ஆசிரியர் !

இடப்பெயர்வு ஆய்வுகள் தரும் சிந்து சமவெளி - திராவிட பண்பாடு ஒற்றுமை பற்றி குறிப்பிடுகிறது !

சிந்து சமவெளி நாகரிகம் என்பது திராவிட பண்பாட்டு அடித்தளத்தில் கட்டப்பட்டது என்று பல சான்றுகள், அட்டவணைகள், அட்ச தீர்க்க ரேகைகள்  மூலம் விளக்குகிறார் !

வாசியுங்கள் !

சிந்து சமவெளி திராவிடத்தின் எச்சமா ,
திராவிடம் சிந்து சமவெளி எச்சமா என்பது புரியும் !

வெளியீடு  : பாரதி புத்தகாலயம்
விலை        : ரூபாய் 150
பக்கங்கள் : 173

வாசிப்பை சுவாசமாக்குவோம் !

*நம்பிக்கையுடன்*
         ஸ்ரீதர்
��திண்டுக்கல்

No comments:

Post a Comment