Thursday, 15 September 2016

காவிரி-வைரமுத்து

பிறந்த வீட்டிலேயே
பெண்  இருக்கக்கூடாது

புகுந்த வீட்டிலும் வாழனும்
பிறந்த வீட்டிலும் வாழனும்
அது தான் பெற்றவர்களுக்கும்
சம்பந்திக்கும் அழகே அழகு

காவேரி உங்கள் வீட்டு மகள்
அவளே எங்களுக்கு மருமகள்

காவேரி பெண்ணாகவும்
மருமகளாகவும்
வலம் வரட்டும்

பிறந்தகத்திலேயே
வாழா வெட்டியாக
அடக்கி விடாதீர்.

- வைரமுத்து

No comments:

Post a Comment