Saturday, 10 February 2018

@மணி

[23/12/2017, 6:27 a.m.] 💥TNPTF MANI💥: நிழல்கள் மட்டுமே ஆறுதல்
சொல்கின்றன
செருப்பில்லாதவன் பாதங்களுக்கு
[23/12/2017, 6:27 a.m.] 💥TNPTF MANI💥: பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கப்படும் பிரச்சனைகளை விட
பேச்சு வாக்கில் தீர்க்கப்படும் பிரச்சனைகள் அதிகம்
[23/12/2017, 6:30 a.m.] 💥TNPTF MANI💥: கடந்தகால வாழ்க்கை தெளிந்த சாக்கடை.
கலக்கினால் நாற்றம் தான் மிஞ்சும்
-கண்ணதாசன்
[23/12/2017, 6:31 a.m.] 💥TNPTF MANI💥: அனைத்து ஆச்சர்யங்களும் கரைந்துவிட்ட பின்
அருகிலிருப்பவர் எவ்வளவு மேதையாய் இருந்தாலும் சாதாரணமாகத் தான் தெரிவார்
[23/12/2017, 10:43 a.m.] 💥TNPTF MANI💥: ஒரு எண்ணத்தை தடுக்க நினைத்தால் நம்மால் முடியாது.மாறாக அதை தடுக்க நினைக்கும் முயற்சியே அதற்கு சக்தி ஊட்டுகிறது. அதைத் தவிர்க்க எடுக்கும் முயற்சியே அதை மேலும் கவனிப்பதாகிறது

-ஓஷோ
[23/12/2017, 11:01 a.m.] 💥TNPTF MANI💥: எல்லா புறப்பாடுகளிலும்
தவிர்க்கவே முடிவதில்லை
லேசான தவிப்புகளோடு
சற்றே சங்கடங்களையும்

-மு.முருகேஷ்
[23/12/2017, 1:08 p.m.] 💥TNPTF MANI💥: அதிகாரம் எப்போதும் அறிவை பார்த்து
பயப்படும்
-ஞாநி
[23/12/2017, 1:08 p.m.] 💥TNPTF MANI💥: டைம் இல்லை என்பது இயலாமைக்கு செய்யப்படும் ஒப்பனை
-சுஜாதா
[23/12/2017, 2:06 p.m.] 💥TNPTF MANI💥: விவசாயி சுமக்கும் கலப்பையே
அவரின் சிலுவை
[23/12/2017, 2:38 p.m.] 💥TNPTF MANI💥: RT"@arivucs: விவசாயியைவிட ஒரு சிறந்த 'வயலின்' கலைஞர் இருக்கமுடியாது!"

No comments:

Post a Comment