💥: உங்கள் வாழ்க்கையின் இறுதிக் கணங்களில் உங்களுக்கு என்னவெல்லாம் தேவைப்படும் ? பிரேம் செய்யப்பட்ட அந்த கல்லூரிப் பட்டத்தை அணைத்துக் கொள்வீர்களா ? கேரேஜூக்கு தூக்கிச் சென்று காரில் உட்கார வைக்கச்சொல்லி கேட்பீர்களா ? உங்களின் சொத்து மதிப்புகளை படிக்கச் சொல்லி கேட்டு இன்பம் அடைவீர்களா ? கண்டிப்பாக இல்லை அல்லவா ? அப்பொழுது அன்பால் நிறைக்கும் மனிதர்களையே நீங்கள் விரும்புவீர்கள் இல்லையா. அப்பொழுது முக்கியமாகத் தோன்றும் உறவுகளை இப்பொழுதே ஏன் முக்கியமானவர்களாக நடத்தக்கூடாது ?. - Max Lucado
நன்றி - பூ.கொ.சரவணன்
💥: ''நேரடி வானத்தில் தெரிவதை விடவும் நிலா அழகாக இருப்பது கிளைகளின் இடையில்''
-வண்ணதாசன்
💥: நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதை பெற கவனமாக இருங்கள். இல்லையென்றால் எதை பெறுகிறீர்களோ அதை விரும்பும் கட்டாயத்திற்கு தள்ளப்படுவீர்கள்
-P
No comments:
Post a Comment