[02/01, 8:06 p.m.] 💥TNPTF MANI💥: முற்றுப்புள்ளிதான் கோலத்தை துவக்கி வைக்கிறது.!
[02/01, 10:32 p.m.] 💥TNPTF MANI💥: மறக்க முடியாதது நினைவு
நினைக்க மறந்தது மறதி
[03/01, 7:14 a.m.] 💥TNPTF MANI💥: சிலருக்கு தேவைகள் பெருமையாகவும்,
பலருக்கு பெருமைகள் தேவையாகவும் இருக்கின்றது!
-P
[03/01, 7:16 a.m.] 💥TNPTF MANI💥: கல்லே
நீ எப்போது கடவுளாவாய்
தீண்டத்தகாதவர்
தீண்டும்போது"
-தபூசங்கர்
[03/01, 7:17 a.m.] 💥TNPTF MANI💥: உன்னை அனுப்பிவைத்த பிறகு தோன்றியது
இன்னும் ஒருமுறை நீ கெஞ்சியிருக்கலாம்
- அறிவுமதி
[03/01, 7:19 a.m.] 💥TNPTF MANI💥: ஏழு பள்ளிகளில் படித்தவன்
“ஏழு பள்ளிகளில் படித்த
ஆர்.எஸ். கேசவன்
எட்டாவது பள்ளியாக
எங்கள் வகுப்புக்கு
வந்து சேர்ந்தபோது
அரையாண்டு விடுமுறை முடித்து
நாங்கள்
முழு ஆண்டு ஜூரத்தில் இருந்தோம்.
சொல்வதற்கும் அவனிடம்
ஏராளம் கதைகள் இருந்தன.
கேட்பதற்கு எங்களிடம்
இரண்டே இரண்டு
காதுகள் மட்டுமே.
ஒன்பதாவது பள்ளிக்கு
எங்களைச் சுருட்டி
கதையாக மாற்றி
சிரித்தபடி போனான்..!”
-நா. முத்துக்குமார்.
[03/01, 7:25 a.m.] 💥TNPTF MANI💥: RT @Elanthenral: ஓர் அறையில் கடந்து போனது என் காமம்! #சிலேடை"
[03/01, 7:28 a.m.] 💥TNPTF MANI💥: நம்மை சந்திக்க வைத்த அதே காலம் தான் இப்போது நாம் சந்திக்காமலே பார்த்துக்கொள்கிறது."
-நர்சிம்
[03/01, 12:36 p.m.] 💥TNPTF MANI💥: மனதிற்கு பிடித்தவர்கள் பெரும்பாலும் தொலைவிலேயே இருக்கிறார்கள்.!
[03/01, 12:52 p.m.] 💥TNPTF MANI💥: சமையல் கற்றுக் கொள்ளாமல் இருப்பதே ஆண்களின் சிறந்த தற்காப்புக் கலை.!
[03/01, 12:55 p.m.] 💥TNPTF MANI💥: இயல்பாக பேசுவதற்கு வாய் போதும். தந்திரமாக பேசுவதற்குத்தான் வார்த்தைகளை தேட வேண்டும்!"
-தமிழச்சி
[03/01, 12:58 p.m.] 💥TNPTF MANI💥: யோசித்து பேச முடிவதில்லை;பேசுகிற பொழுதும் யோசிக்க முடிவதில்லை.பேசி முடித்த பின்னர், நடந்ததை குறித்து யோசிப்பது தான் அனுபவம்.
-p
No comments:
Post a Comment