Saturday, 10 February 2018

கவி

[07/01, 8:27 a.m.] 💥TNPTF MANI💥: மழைவிட்ட நேரம் தேங்கிய நீரில் முகம் பார்த்தது தெருவிளக்கு
- அறிவுமதி"

[07/01, 8:28 a.m.] 💥TNPTF MANI💥: இலையில் சோறை போட்ட வுடன் கொஞ்சம் வெறும் சோத்தை தின்று தன் வெட்கத்தை வெளிப்படுத்துகிறது இந்த பசி!!"

-இளந்தென்றல்

[07/01, 9:16 a.m.] முருகேசன்: ‘போர் வேண்டாம்’ என்பதில் இரண்டாவது கருத்துக்கே இடமில்லை. ஆனால் ‘போர்க்குணம்’ எப்போதும் தேவை; இன்றைய வாழ்வு சூழ்ச்சிகள் நிறைந்த போர்க்களம்.

சிலரது வெடிச் சிரிப்பிற்குப் பின்னால் வெடிகுண்டுகள் ஒளிந்திருக்கும். சிலரது பணிவிற்குப் பின்னால் சதி வேலைகள் மறைந்திருக்கும். தந்திரங்களைத் தெரிந்துகொள்வது அவற்றைக் கையாளுவதற்கல்ல, மற்றவர்கள் கைக்கொள்ளும்போது அவற்றைக் கையாடுவதற்காக.
#வெ_இறையன்பு

[07/01, 3:48 p.m.] 💥TNPTF MANI💥: ஊரில் இல்லாத போது அம்மாவின் அன்பை உணர முடியும்
உலகில் இல்லாதபோது தான்
அப்பாவின் அன்பை உணர முடியும்
-ப.பி

[07/01, 3:57 p.m.] 💥TNPTF MANI💥: அ.வெண்ணிலா:

நான் ஒரு சிறந்த சிறுகதையை எழுதுவதை விட,   எனக்கு முன்னால், யாரெல்லாம் எழுதியிருக்கிறார்கள் என்பதைப் பதிவு செய்வது முக்கியம் என்று நினைக்கிறேன். அதன் பொருட்டே தேடித் தேடி ‘ மீதமிருக்கும் சொற்கள்’ புத்தகத்தை உருவாக்கினேன்.

[07/01, 3:58 p.m.] 💥TNPTF MANI💥: அ. வெண்ணிலா:
இலக்கியம் என்பது கழிப்பறை அல்ல, ஆண்களுக்கு தனி, பெண்களுக்குத் தனி என்று பிரித்து வைக்க.

[07/01, 4:01 p.m.] 💥TNPTF MANI💥: ஒவ்வோர் ஆண்டும் சிறந்த சொல்லாக
முன்னணி ஆங்கில அகராதிகளால் ஒரு சொல் கடந்த சுமார் 10 ஆண்டுகளாகத் தெரிவுசெய்யப்பட்டு வருகிறது. அவ்வகையில், 2016-ன் சிறந்த சொற்களாக முறையே ‘போஸ்ட்-ட்ரூத்’ (ஆக்ஸ்போர்டு அகராதி), ‘பிரெக்ஸிட்’ (காலின்ஸ் அகராதி), சர்ரியல் (மெரியம் வெப்ஸ்டர் அகராதி) தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. ‘போஸ்ட்-ட்ரூத்’ எனும் வார்த்தைக்கு இணையாக, தமிழில் ‘உண்மை கடந்த’ எனும் வார்த்தையை ‘தி இந்து’ நாளிதழ் கடந்த ஆண்டு உருவாக்கியது. 2013-ன் சிறந்த சொல்லாக ‘செல்ஃபி’ ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியால் தேர்ந்தெடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

2017-ன் சிறந்த சொற்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவை: ‘யூத்க்வேக்’ (youthquake) - ஆக்ஸ்போர்டு அகராதி, ‘ஃபேக் நியூஸ்’ (fake news) -காலின்ஸ் அகராதி, ‘ஃபெமினிசம்’ (feminism) -மெரியம் வெப்ஸ்டர் அகராதி. இந்தச் சொற்களைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்களையும் அந்த அகராதிகள் விவாதிக்கின்றன.

[07/01, 5:42 p.m.] 💥TNPTF MANI💥: வெறும் கேள்விகளுடன்  உலகை பார்த்தபடி திரியும் குழந்தை நிம்மதியாக தூங்கிவிடுகிறது.
-அராத்து

[07/01, 5:53 p.m.] 💥TNPTF MANI💥: நிழல்களைப்
புரிந்துகொள்ள
நாமும்
நிழல்களாக வேண்டும்

-நா.விச்வநாதன்

[07/01, 6:10 p.m.] 💥TNPTF MANI💥: நீங்கள் எதிர்பார்க்கும் பாசம் இங்கே இருக்கும்.அதை காட்டுவதற்குதான் நேரம் இருக்காது
-வைரமுத்து

[07/01, 7:18 p.m.] 💥TNPTF MANI💥: பென்சில் கற்றுக்கொடுப்பது
ஒன்றுதான் கூர்மையாக
இரு இல்லை என்றால்
சீவி விடுவார்கள் .. 😬
@Roshni

[07/01, 8:06 p.m.] 💥TNPTF MANI💥: கொட்டாவி என்பது
மவுன விமர்சனம்

No comments:

Post a Comment