குல சாமிப் பெயர்கள்
----------------------
என் முந்தைய தலைமுறையில்
கருப்பசாமி
கந்தசாமி
வெள்ளைச்சாமி
என்பது பெயரானது
ஆண்டைகள்
எங்களைச் சாமி
என்றழைக்க வேண்டும் என்ற சூட்சமத்தில்
அது குலசாமிப் பெயர் என்பதெல்லாம்
ஆண்டையை நம்பவைக்கப் பரப்பிவிட்டதுதான்
அந்தத் தந்திரம்
புரிந்த ஆண்டை
கருப்பா
கந்தா
வெள்ளையா
என்றே அழைத்து வந்தார்
தொல்காப்பியன்
செங்குட்டுவன்
எனும் எங்களின்
இத்தலமுறைப் பெயருக்கு
"குலசாமி மறந்த பயல்க" என
குற்றம் சொன்னாராம் ஆண்டை
-ஆண்டன் பெனி-
: 💥எல்லோருக்குமான மழை யாருக்குமற்று கடலில் பெய்துகொண்டிருக்கிறது!
-லதாமகன்
No comments:
Post a Comment