[05/01, 7:02 a.m.] 💥TNPTF MANI💥: சாமியானா கட்டிய வீடுகளையெல்லாம்
சந்தேகத்துடனேயே பார்த்துக் கடக்கிறோம்
[05/01, 7:02 a.m.] 💥TNPTF MANI💥: வாங்க மறந்த பொருளுக்கு பதிலாக பொய்யை வாங்கிச் செல்கிறோம் வீட்டிற்கு..!!
[05/01, 7:07 a.m.] 💥TNPTF MANI💥: @urs_priya
உறங்கிக்கொண்டிருக்கும் குழந்தையின் அருகே விழித்திருக்கும் தருணங்களில்.. எப்போதோ திட்டியதற்கெல்லாம் மானசீகமாய் மன்னிப்பு கேட்கப்படுகிறது!!
[05/01, 1:47 p.m.] 💥TNPTF MANI💥: அதுதான் வாழ்க்கை...
“கடைசிப் பக்கங்கள்
கிழிந்துபோன
துப்பறியும் நவீனத்தை
தெரியாமல் எடுத்துப்
படித்திருக்கிறீர்களா..?
அதுதான் வாழ்க்கை..!”
- அப்துல் ரகுமான்.
[05/01, 3:22 p.m.] 💥TNPTF MANI💥: வகுப்பறை பெஞ்சில் சேர்ந்து கிறுக்கப்பட்ட நம் பெயர்கள் மட்டும் இன்னும் சேர்ந்தே வாழ்ந்து கொண்டிருக்கிறது நாம் வாழாத வாழ்க்கையை
-படித்தது
[05/01, 8:55 p.m.] 💥TNPTF MANI💥: திருமணத்தன்று வெட்கப்படாதது போல் ஆணும், வெட்கப்படுவது போல் பெண்ணும் நடிக்க வேண்டியிருக்கிறது!"
-கிராமத்தான்
[05/01, 9:01 p.m.] 💥TNPTF MANI💥: மாநகர இறப்பு பதிவேட்டிலிருந்து ஒரு மனிதன் நீக்கப்படுவது தான், வாழ்க்கை அவனுக்கு தரும் அவகாசம்
#எஸ்.ரா
[05/01, 9:19 p.m.] 💥TNPTF MANI💥: "தாயிற் சிறந்த கோயிலுமில்லை,! மகனுக்கு சொல்லிக் கொடுக்கும் மனைவி, கணவனுக்கு மட்டும் சொல்வதில்லை
[05/01, 9:23 p.m.] 💥TNPTF MANI💥: பேச்சிலர்களின் பீரோ என்பது கொடிக் கயிறே!
[05/01, 10:04 p.m.] செ பாலா: கூறுப்போட்டு விற்கின்றன
கடலில் சடலமான மீனவனை
#ஊடகங்கள்
அருள் பி ஜி
[05/01, 10:13 p.m.] 💥TNPTF MANI💥: Out Standing Performance செய்பவர்கள் பிச்சைக்காரர்களே!
[06/01, 6:31 a.m.] 💥TNPTF MANI💥: சாலையில் அடிபட்டவன் இருக்கிறானா,இறந்தானா என்று தெரிந்து கொள்வதற்குள் எனக்கான பேருந்து வந்து விட்டது
#நகரவாழ்க்கை
[06/01, 6:39 a.m.] 💥TNPTF MANI💥: தூக்கம்- கனவின் பிரசவ காலம்
[06/01, 11:54 a.m.] 💥TNPTF MANI💥: நினைவில் இருந்தவள்
நினைவாய் ஆனாள்
No comments:
Post a Comment