Wednesday 31 August 2016

சுஜாதா

நேரம்!
ஒர் இளம் நகரவாசி, ‘நேரம் பொன்னானது. அதை வீணாடிக்கக் கூடாது’ என்று நம்பினார்.
அதனால், காலை அலுவலகத்துக்குப் புறப்படுமுன் ஷேவ் பண்ணிக்கொண்டே குளிப்பார். பாத்ரூம் போகும்போதே, பேப்பர் படிப்பார். தோசையோ, இட்லியோ வெகுவாகச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே, கையை காலை ஆட்டி, உடற்பயிற்சி பண்ணிக்கொண்டே, ரேடியோவில் பக்திப் பாடல்கள் கேட்பார்.
இவ்வாறு ஒவ்வொரு நிமிஷத்தையும் விரயமடிக்காமல் பணம் சம்பாதிப்பதிலேயே கவனமாக இருந்தார். ஒருமுறை இந்த அவசரத்தின்போது ஒரு சின்ன பிழை நேர்ந்துவிட்டது. மாறுதலுக்காக ஆம்லெட் சாப்பிட எண்ணி, அதைக் கையால் சாப்பிட்டால் நேரமாகும்; கையலம்ப வேண்டும் என்று, முள் கரண்டியால் சாப்பிடும்போது நியூஸ் பேப்பரில் கவனமிருந்ததால், அக்கரண்டி அவர் கண்ணைக் குத்திவிட்டது. கண்ணின் விழி, கரண்டியால் வந்துவிட்டது.
இப்போது அவர் ஒரு கண்ணால் ஜீவனம் நடத்திக்கொண்டிருக்கிறார். நேரம் பொன்னானது என்று யாராவது சொன்னால் சீறுகிறார். அவ்வப்போது அமைதியாக மீன் பிடிக்கச் சென்று விடுகிறார். மணிக்கணக்காக ஒரு மீனுக்காகக் காத்திருக்கிறார், பிடித்து மறுபடி நீரில் விட்டு விடுகிறார்.
நீதி : நேரத்தைவிட, வாழ்க்கை பொன்னானது

க.நா.சு

பெரியதோட்டத்திலே ஒரு பூதான் பூத்திருக்கிறது
1000பட்டுப்பூச்சிகள் அந்தப் பூவை கண்டுகொள்கின்றன
தேடிக்காண்பதே கவிதை
தேடாமல் காண இயலாது.
-கநாசு

Friday 26 August 2016

ஆத்மாநாம்

எனது சுதந்திரம்
அரசாலோ தனிநபராலோ
பறிக்கப்படுமெனில்
அது என் சுதந்திரம் இல்லை
அவர்களின் சுதந்திரம்தான்
-ஆத்மாநாம்

க.நா.சு

தூக்கமா என்று கேட்டார்
கனவு என்றேன்.அனைவரும் சிரித்தனர்
-க.நா.சு

தேவதச்சன்

உயிர் பிரிவதற்கு எப்போதும்
ஒரு நிமிடம்தான் இருக்கிறது
மகிழ்ச்சி துண்டிக்கப்பட்டு
துயரத்தில் சாய்வதற்கும்
எப்போதும் ஒரு நிமிஷம்தான்
இருக்கிறது.
இருட்டு, பயம், திகைப்பு, இவற்றின்
இருண்ட சரிவில் உருள்வதற்கும்
எப்போதும் ஒரு நிமிஷம்தான்
இருக்கிறது.
இவ்வொரு
நிமிஷத்தில்
அண்டசராசரம் ஆடி
ஒரு நிமிஷம்
வளர்ந்து விடுகிறது.
              -தேவதச்சன்

Thursday 25 August 2016

அழகிய உறவு

கடவுள் இன்னும் மனித இனத்தின் மீது நம்பிக்கை இழக்கவில்லை என்பதைத் தான், மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு பிஞ்சுக் குழந்தையும் நினைவுபடுத்துகிறது என்பது மகாகவி தாகூரின் வரிகள். அப்படி அமைதியின் சின்னமாக… பதினொரு வயதிலே உருவெடுத்த சமந்தா ஸ்மித் எனும் சுட்டியின் கதை உங்களுக்காக இதோ…

1972-ல் அமெரிக்காவின் மெய்ன் நகரத்தில் பிறந்து, தன்னுடைய ஐந்து வயதிலே இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்குக் கடிதம் எழுதிய சமத்துப் பொண்ணுதான் இந்த சமந்தா. அப்பொழுது, அமெரிக்காவும் ரஷ்யாவும் பகைமை கொண்டு, டிஷ்யூம் டிஷ்யூம் பண்ணிக் கொண்டு இருந்தன. சமந்தா பதினொரு வயது சிறுமியாய் இருக்கும் போது, யூரி அன்ட்ரபோவ் சோவியத் ரஷ்யாவின் தலைவராக இருந்தார். ரொம்பவும் ஸ்ட்ரிக்ட், இரு நாட்டுக்கும் இவராலே சண்டை வந்துவிடும் என்று அமெரிக்க பத்திரிகைகள் அவரை வில்லனா சுட்டிக் காட்டின. இப்படி ஒரு கட்டுரையைப் படித்த சமந்தா, தன் அம்மாவிடம்… ”அம்மா… சண்டை போடறதுதான் அவரோட வேலைனா அதைத் தப்புன்னு அவருக்குப் புரியவைக்கணும். யார் அவருக்கு இதைச் சொல்றது?” எனக் கேட்டாள். ”நீயே கடிதமா எழுதேன் சமந்தா!” என்றார் அம்மா. அஞ்சே வரிகளில் சமந்தா எழுதிய கடிதம் இதுதான்…
மதிப்பிற்குரிய அன்ட்ரபோவ்!

உங்களுடைய புதிய பொறுப்புக்கு வாழ்த்துகள்! உங்கள் நாடும் அமெரிக்காவும் சண்டை போடப்போவதாக அறிகிறேன். ஏன் நீங்கள் சண்டையை விரும்புகிறீர்கள்? எப்படி அதைச் செய்வீர்கள் எனச் சொல்லவும். இரண்டாவது கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. அந்தக் கேள்வி இதுதான்… ஏன் நீங்கள் என் நாட்டையும், உலகையும் பிடிக்கத் துடிக்கிறீர்கள்?

அன்புடன்,
சமந்தா

நவம்பர் மாதம் எழுதிய இந்தக் கடிதத்தை அப்படியே மறந்து போனாள் சமந்தா. ஆனால், அடுத்த வருடம் ஏப்ரலில் ரஷ்யாவின் தலைவரிடம் இருந்து பதில் வந்தது.

அன்புள்ள சமந்தா…

உன் கடிதம் கிடைத்தது. உன்னுடைய நேர்மையும் தைரியமும் என்னைக் கவர்கிறது. நீ டாம் சாயரின் நேர்மையான நண்பனான பெக்கியை ஞாபகப்படுத்துகிறாய். நீ கேட்டது போல், நாங்கள் போரை விரும்பவில்லை. ஹிட்லரின் நாஜி படைகள் எங்கள் நாட்டைச் சூறை ஆடியபோதே… நாங்கள் போரின் வலியை நன்கு உணர்ந்து இருக்கிறோம். நாங்கள் முதலில் போர் செய்ய விரும்புவது இல்லை. மேலும், நீ கேட்ட இரண்டாவது கேள்விக்கு எளிமையாக பதில் தருகிறேன். எங்கள் நாட்டில் உள்ள விவசாயிகள், எழுத்தாளர்கள், மருத்துவர்கள் என அனைவரும் அமைதியையே விரும்புகிறோம். கோதுமை விளைவிக்கிறோம், கட்டடங்கள் கட்டுகிறோம், வானில் பறக்கிறோம்… நாங்கள் அமைதி விரும்பிகள். எங்கள் நாடு அமைதியின் பூமி என அறிய, நீ ஏன் எங்கள் நாட்டுக்கு வரக் கூடாது? இங்கிருக்கும் ‘அர்டேக்’ எனும் சுட்டிகளுக்கான கேம்ப்பை நீ நிச்சயம் விரும்புவாய். கூடவே உன் பெற்றோரையும் அழைத்துக் கொண்டு வா!

அன்புடன்
அன்ட்ரபோவ்.

என அந்தக் கடிதம் முடிந்தது. சமந்தா ரஷ்யா போனாள். அங்கே அவளுக்கு மாபெரும் வரவேற்பு. ரஷ்ய சுட்டிகளோடு தங்கி, பொழுதைப் போக்கினாள். வானில் முதலில் பறந்த பெண் மணியான வாலன்டினாவைச் சந்தித்துப் பேசினாள். ஆனால், அன்ட்ரபோவ் உடல்நலமின்மையால் அவளைச் சந்திக்க முடியாமல், போனில் பேசினார். சமந்தா ரஷ்ய மக்களும் நம்மைப் போன்றவர்கள்தான் என்று புரிந்துகொண்டாள். அதே வருடம் ஜப்பானில் அமெரிக்காவின் இளைய அமைதித் தூதராய் கலந்து கொண்டு, அன்பைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் அமைதியை வளர்க்க முடியும் என ஐடியா சொன்னாள். அதை, இரண்டு நாடுகளும் செயல்படுத்தின.

சமந்தா, லைம் ஸ்ட்ரீட் எனும் நாடகத் தொடரில் நடித்துவிட்டு, விமானத்தில் வந்து கொண்டு இருக்கும்போது… இயந்திரக் கோளாறால் பற்றிய நெருப்பில் அவளின் கள்ளமில்லாச் சிரிப்பு அடங்கிப் போனது. ஒரு அமெரிக்கச் சிறுமிக்காக ரஷ்யாவே கண்ணீர்விட்டு அழுதது. அவளின் நினைவாக ஒரு நினைவுச் சின்னத்தை ரஷ்யா எழுப்பியது. அவளுக்காக ஒரு அஞ்சல்தலையையும் வெளியிட்டது. மெய்ன் நகரில் ஒரு கரடிக் குட்டியோடு பளபளக்கும் கண்களோடு, அன்பின் அற்புதச் சின்னமாக சமந்தா சிரித்துக்கொண்டு நிற்கிறாள். ஆகஸ்ட் 25. அவளுடைய நினைவு தினம்.

கடிதத்தின் மூலம் இரு நாடுகளையும் அன்பாலே பிணைத்த சமந்தா இன்றும் எல்லோரின் நினைவுகளில் வாழ்கிறாள்

-பூ.கோ.சரவணன்

கோவை வெரைட்டி ஹால்

கோவை வெரைட்டி ஹால்

லூமியர் சகோதரர்கள் ஏசுநாதர் பற்றி ஒரு படம் எடுத்து பலநாடுகளுக்கும் அனுப்பி வைத்தார்கள்.நாடகம் பார்த்த மக்கள் சினிமா பார்த்து ஆச்சர்யம் அடைந்தனர்.திருச்சியில் இப்படம் பார்த்து வியந்தவர் சாமிக்கன்னு வின்சென்ட்.திருச்சி ரயில்வேயில் ட்ராப்ட் மேன்.கோவை பூர்வீகம்.இரண்டாயிரம் கொடுத்து அப்படத்தை விலைக்கு வாங்கினார்.

1909 ல் சென்னையில் சினிமா படம் காட்ட எல்பிஸ்டனில் புதிய படங்களை காட்டினார்.

கோவையில் 1914ல் சினிமா கட்டுவதற்கென்றே சிறப்பு அம்சம் கொண்ட அரங்கை கட்டினார்.அதற்கு வெரைட்டி ஹால் என்று பெயரிட்டார்.வெளிநாட்டு படங்களை வெரைட்டி ஹாலில் போட்டு காண்பித்தார்.

சென்னைக்கு வெளியே நிரந்தரமான சினிமா தியேட்டர் கட்டியது வெரைட்டி ஹால் மட்டும்தான்

பூ.கோ.சரவணன்

'கடவுள் நம்பிக்கை எனக்கில்லை? தப்பா, சரியா அண்ணா?' என நேற்று கூட்டத்தில் ஒரு தம்பி கேட்டான்
'அதுல என்ன தப்பு? நீங்கள் நம்புறதுக்கு உண்மையா இருங்க. மகத்தான ஆளுமைகளான புத்தர், இங்கர்சால், ரஸ்ஸல், நேரு, பெரியார் இவர்களுக்கெல்லாம் கடவுள் நம்பிக்கை இல்லை. புத்தமும், தம்மமும் படிங்க. ரிச்சர்ட் டாகின்ஸ் எழுதின God delusion படிங்க. எனக்கும் நம்பிக்கையில்லை' என்றேன்
இப்பொழுது தான் கவனித்தேன் விபூதியோடு மேடையில் உரையாற்றி இருக்கிறேன். நண்பனின் தாத்தா ஆசையோடு வைத்ததை அழிக்கவில்லை. மேடையில் எனக்கு நம்பிக்கையில்லை என சொன்னதை கூட்டத்தினர் பொய் என எண்ணியிருக்கலாம்

Wednesday 24 August 2016

செவாலியர் விருது

பன்மொழிக் கலைஞன் கமல்ஹாசன் பத்மபூஷன், பத்மஸ்ரீ, தேசிய விருதுகள் பலவற்றைப் பெற்றவர். நடிகர் திலகம் ‘செவாலியர்’ சிவாஜி கணேசனுக்கு கடைசி வரை தேசிய விருது தரப்படவே இல்லை. “நடிப்பின் பல்கலைக்கழகமான அவரது பெயருடன் ‘தேசிய விருது’ இடம்பெறாதது, அந்த விருதுக்குத்தான் குறையே தவிர அவருக்கு அல்ல” என்று பேசிய கமல்ஹாசன், திரையுலகுக்கு ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, சர்வதேச விருதான ‘ஹென்றி லேங்லொய்ஸ் விருது’ கடந்த ஏப்ரல் மாதம் பிரான்ஸ் அரசால் வழங்கப்பட்டது நினைவில் இருக்கலாம். இந்நிலையில், கமலின் நடிப்பாற்றலைப் பாராட்டி, பிரான்ஸ் கலைத்துறை அமைச்சகம், தனது உயரிய விருதான ‘செவாலியர்’ விருதை கமலுக்கு அறிவித்திருக்கிறது. 2016ஆம் வருடத்தில் மட்டும் நான்கு பேருக்கு செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தலைசிறந்த ஓவியரான S.H. ரசா, பல வருடங்களாக ஃபேஷன் டிசைனிங்கில் பணியாற்றிவரும் மனிஷா அரோரா, முன்னாள் ராணுவ அதிகாரியாகவும், அருணாச்சலப் பிரதேசத்தின் கவர்னராகவும் பொதுசேவை செய்துவந்த ஜே.ஜே.சிங் ஆகியோருக்கு இவ்வாண்டில் ‘செவாலியர்’ விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் பிரான்ஸ் ஆட்சி நடைபெற்றது முதல் இதுவரை 26 நபர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது. யாருக்காவது கொடுக்க வேண்டும் என்ற காரணத்துக்காக இந்த விருது வழங்கப்படுவதில்லை. 20 அல்லது 25 வருடங்களுக்கும் மேலாக குறிப்பிட்டத் துறையில் பொது சேவையில் ஈடுபட்டு தலைசிறந்த பங்காற்றலைக் கொடுக்கும் நபர்களுக்கு இவ்விருது வழங்கப்படும். ‘செவாலியர்’ என்பதற்கு Knight என்று பொருள். Légion d'honneur என சொல்லப்படும் இந்த கௌரவப் பெயரில் Knight (செவாலியர்), Officer, Commander, Two dignities : Grand Officer, Grand Cross ஆகிய விருதுகள் இருக்கின்றன. இவற்றில் தலைமையானது செவாலியர் எனப்படும் Knight விருது. நெப்போலியன் காலத்தில் போரிலும், அரசின் செயல்பாடுகளிலும் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இந்த கௌரவ விருது, இந்தியாவில் பிரெஞ்சு ஆட்சி பரவியபோது இந்தியாவுக்குள் நுழைந்தது. பிரெஞ்சு ஆட்சியில் சிறப்பாக செயல்பட்ட இந்தியர்களின் உழைப்பை மரியாதை செய்யும் பொருட்டு செவாலியர் விருது பெரும்பாலானவர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்களில் கலைத்துறை சார்பாக முதல் செவாலியர் விருதைப் பெற்றவர் இயக்குநர் சத்யஜித்ரே (1987). அதன்பிறகு சிவாஜி கணேசனுக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்ட விருது, பல வருடங்கள் கழித்து 2007இல் அமிதாப் பச்சனுக்கும், 2014இல் ஷாருக்கானுக்கும் வழங்கப்பட்டது.

நியாயப்படி பார்த்தால் கமல்ஹாசனுக்கு எப்போதோ வழங்கியிருக்கவேண்டும். காலம் தாழ்ந்தாலும், விதியின் பயனால் சேர வேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டது செவாலியர் விருது. விதி, கமல்ஹாசனும் இதே விதியைத்தான் நொந்துகொண்டார். விருது பெற்றது குறித்து பேசிய கமல் ‘இனி நான் செய்ய வேண்டிய வேலைகளுக்கான ஊக்கியாக இந்த விருதைப் பார்க்கிறேன். என் முன்னோர்கள் இயக்குநர் சத்யஜித்ரே, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வழியில் இந்த விருது எனக்கு கிடைத்திருப்பது பெருமையாக இருக்கிறது. இந்த பெருமையைக் கண்டு ரசித்து ஆனந்தப்பட என் பெற்றோர்கள் இல்லை எனினும், உறவுகளும், நண்பர்களும் சூழ நின்று கொண்டாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார். இந்தியா முழுவதுமாக சேர்ந்து கமலை வாழ்த்தி வருகிறது. தென்னிந்திய நடிகர் சங்கம், ‘கமலுக்காக பாராட்டு விழா எடுக்கப்போகிறோம்’ என வேலையைத் தொடங்கிவிட்டது. சிவாஜி கணேசனுக்கு செவாலியர் விருது வழங்கப்பட்டபோது மிகப்பெரிய விழா எடுத்து கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மரணத்தின் ஆண்டு-surya fn

மரணத்தின் ஆண்டு  
               -Kwang-kyu Kim

இறந்த ஒருவன் அந்த ஆண்டு வரை உயிருடன் இருந்தான்.
ஒருமுறையும்  எதிர்பாராத எதிர்காலத்தில் என்ன மிச்சம் மரணத்துக்கு பின் உள்ளது.
நேரம் முடிவற்று  ஓடுகிறது.
இன்னும் நிறைய ஓய்வு உயிருடன்
அடைப்புக்குறிக்குள் அடைபட்ட இடத்தில் பாராமுகமாக வாழ்வது நின்றுவிடவில்லை .

தென் கொரியாவை சேர்ந்த கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். ஜெர்மன் கவிதைகள் பலவற்றையும் கொரியனின் மொழிபெயர்த்துள்ளார் .

#Translated by Surya Vn

நூறு புத்தகங்கள்-விநாயக முருகன்

எனக்கு பிடித்த நூறு புத்தகங்கள்
நன்றி தோழர் !!!
விநாயக முருகன்

இரண்டாயிரத்துக்கு பிறகு தமிழில் பல்வேறு பிரிவுகளில் வெளிவந்த எனக்கு பிடித்த நூறு புத்தகங்கள். இவை எல்லாம் இரண்டாயிரத்துக்கு பிறகு முதல் பதிப்பில் எழுதப்பட்டவை அல்லது தொகுக்கப்பட்டவை.. (சே.பிருந்தாவின் மழை பற்றிய பகிர்தல் தவிர) இந்த வருட புத்தக கண்காட்சிக்காக தனிப்பட்ட ரசனையில் தேர்வு செய்த பரிந்துரை.

1. காடு (நாவல்) - ஜெயமோகன்
2. ராஸ லீலா (நாவல்) - சாரு நிவேதிதா
3. ஆழி சூழ் உலகு (நாவல்) - ஜோடி குரூஸ்
4. வெட்டுப்புலி (நாவல்) - தமிழ்மகன்
5. காவல் கோட்டம் (நாவல்) - சு.வெங்கடேசன்
6. சோளகர் தொட்டி (நாவல்) - ச.பாலமுருகன்
7. கால்கள் (நாவல்) - ஆர்.அபிலாஷ்
8. யாமம் (நாவல்) - எஸ்.ரா
9. உப்பு நாய்கள் (நாவல்) - லட்சுமி சரவணக்குமார்
10. களவு காமம் காதல் (குறுநாவல்) - சாம் நாதன்
11. அழிக்க பிறந்தவன் (குறுநாவல்) - யுவகிருஷ்ணா
12. 6174 (நாவல்) - க.சுதாகர்
13. கொரில்லா (நாவல்) - (ஷோபா சக்தி)
14. இரண்டாம் ஜாமங்களின் கதை (நாவல்) - சல்மா
15. தூப்புக்காரி (நாவல்) - மலர்வதி
16. மங்கலத்து தேவதைகள் - வா.மு.கோமு

17. பட்சியின் சரிதம் (கவிதை) - இளங்கோ கிருஷ்ணன்
18. மீன்கள் துள்ளும் நிசி (கவிதை) - நிலா ரசிகன்
19. என்னைக் கடவுளாக்கியத் தவிட்டுக் குருவி
(கவிதை) - வா. மணிகண்டன்
20. உறுமீன்களற்ற நதி (கவிதை) - இசை
21. சிவாஜி கணேசனின் முத்தங்கள் (கவிதை) - இசை
22. உப்பு நீர் முதலை (கவிதை) - நரன்
23. ஞாயிற்றுக்கிழமை மதியப் பூனை (கவிதை) -
அகநாழிகை பொன்.வாசுதேவன்
24. மயிரு (கவிதை) - யாத்ரா
25. பரத்தையருள் ராணி (கவிதை) - லீனாமணிமேகலை
26. நீர்க்கோல வாழ்வை நச்சி - (கவிதை) -
லாவண்யா சுந்தரராஜன்
27. கருவேல நிழல் (கவிதை) - பா.ராஜாராம்
28. அகி (கவிதை) - முகுந்த் நாகராஜன்
29. ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது
(கவிதை) - முகுந்த் நாகராஜன்
30. சூரியன் தனித்தலையும் பகல் (கவிதை) - தமிழ்நதி
31. காந்தியை கொன்றது தவறுதான் (கவிதை) -
ரமேஷ் பிரேதன்
32. வனப்பேச்சி (கவிதை) - தமிழச்சி தங்கபாண்டியன்
33. மஞ்சணத்தி (கவிதை) - தமிழச்சி தங்கபாண்டியன்
34. அதீதத்தின் ருசி (கவிதை) - மனுஷ்யபுத்திரன்
35. பசித்த பொழுது (கவிதை) - மனுஷ்யபுத்திரன்
36. கடைசி டைனோசர் (கவிதை) - தேவதச்சன்
37. அந்தரங்கம் (கவிதை) - செல்வராஜ் ஜெகதீசன்
38. இரவு மிருகம் (கவிதை) - சுகிர்தராணி
39. அவளை மொழிபெயர்த்தல் (கவிதை) - சுகிர்தராணி
40. பரத்தையர் கூற்று - சி. சரவண கார்த்திகேயன்
41. ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் (கவிதை) - செல்வராஜ் ஜெகதீசன்
42. பூமியை வாசிக்கும் சிறுமி (கவிதை) - சுகுமாரன்
43. நகுலன் கவிதைகள் (கவிதை) - நகுலன்
44. விருட்சம் கவிதைகள் (முழுக்கவிதைகள் கவிதை) - (தொகுப்பு நவீன விருட்சம் அழகிய சிங்கர்)
45. கல்யாண்ஜி கவிதைகள் (கவிதை) - (கல்யாண்ஜி)
46. ஞானக்கூத்தன் கவிதைகள் (கவிதை) - (ஞானக்கூத்தன்)
47. ஆத்மாநாம் படைப்புகள் (கவிதை) - ஆத்மாநாம்
48. வேட்கையின் நிறம் (கவிதை) - உமாஷக்தி
49. முலைகள் (கவிதை) - குட்டிரேவதி
50. வீடு முழுக்க வானம் (கவிதை) - சே. பிருந்தா
51. மழை பற்றிய பகிர்தல் (கவிதை) - சே. பிருந்தா
52. நீரில் அலையும் முகம் (கவிதை) - அ.வெண்ணிலா
53. பச்சை தேவதை (கவிதை) - சல்மா
54. காதலியர் மேன்மை (கவிதை) - தபசி

55. நகரத்திற்கு வெளியே (சிறுகதைத்தொகுப்பு) -
விஜய மகேந்திரன்
56. காட்டின் பெருங்கனவு (சிறுகதைத்தொகுப்பு) -
சந்திரா
57. பூனைகள் இல்லாத வீடு (சிறுகதைத்தொகுப்பு) -
சந்திரா
58. கடவுளைக்கண்டுபிடிப்பவன் (சிறுகதைத்தொகுப்பு) -
அமிர்தம் சூர்யா
59. என் வீட்டின் வரைபடம் (சிறுகதைத்தொகுப்பு) - ஜே.பி.சாணக்யா
60. கனவு புத்தகம் (சிறுகதைத்தொகுப்பு) - ஜே.பி.சாணக்யா
61. அய்யனார் கம்மா (சிறுகதைத்தொகுப்பு) - நர்சிம்
62. பதினெட்டாம் நூற்றாண்டு மழை (சிறுகதைத்தொகுப்பு) - எஸ்.ரா
63. எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் (சிறுகதைத்தொகுப்பு) - எஸ்.ரா
64. சுஜாதா தேர்ந்தெடுத்த கதைகள் (சிறுகதைத்தொகுப்பு) - சுஜாதா
65. யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் (சிறுகதைத்தொகுப்பு) - நிலா ரசிகன்
66. வெய்யில் உலர்த்திய வீடு (சிறுகதைத்தொகுப்பு) - எஸ்.செந்தில்குமார்
67. ஊமைசெந்நாய் (சிறுகதைத்தொகுப்பு) - (ஜெயமோகன்)
68. மதுமிதா சொன்ன பாம்புக் கதைகள் (சிறுகதைத்தொகுப்பு) - (சாரு நிவேதிதா)
69. ஒளிவிலகல் (சிறுகதைத்தொகுப்பு) - (யுவன் சந்திரசேகர்)
70. ஜி.நாகராஜன் ஆக்கங்கள் (சிறுகதைத்தொகுப்பு+இரண்டு குறுநாவல்கள்+கட்டுரை) - ஜி.நாகராஜன்
71. நீர் விளையாட்டு (சிறுகதைத்தொகுப்பு) - (பெருமாள் முருகன்)
72. இருள் விலகும் கதைகள் (சிறுகதைத்தொகுப்பு) - (வா.மு.கோமு, சுதேசமித்ரன், ஷாராஜ், கே.என்.செந்தில், ஹரன் பிரசன்னா, எஸ். செந்தில்குமார், பாலை நிலவன், லட்சுமி சரவணக்குமார், சிவக்குமார் முத்தய்யா, விஜய மகேந்திரன், புகழ், என். ஸ்ரீராம்) தொகுத்தவர் விஜய மகேந்திரன்
73. தவளைகள் குதிக்கும் வயிறு (சிறுகதைத்தொகுப்பு) - (வா.மு.கோமு)
74. மகாராஜாவின் ரயில் வண்டி (சிறுகதைத்தொகுப்பு) - அ.முத்துலிங்கம்
75. அமெரிக்காகாரி (சிறுகதைத்தொகுப்பு) - அ.முத்துலிங்கம்
76. வீடியோ மாரியம்மன் (சிறுகதைத்தொகுப்பு) - இமையம்
77. லிபரல் பாளையத்து கதைகள் (சிறுகதைத்தொகுப்பு) - ஆதவன் தீட்சண்யா
78. ஐந்நூறு கோப்பை தட்டுகள் (சிறுகதைத்தொகுப்பு) - அசோகமித்திரன்
79. இரவுக்காட்சி (சிறுகதைத்தொகுப்பு) - கே.என்.செந்தில்

80. என் பெயர் சிவப்பு (மொழிபெயர்ப்பு-நாவல்) - ஜி. குப்புசாமி (தமிழில்)
81. ஓநாய் குலச்சின்னம் (மொழிபெயர்ப்பு-நாவல்) - சி. மோகன் (தமிழில்)
82. பனி (மொழிபெயர்ப்பு-நாவல்) - ஜி. குப்புசாமி (தமிழில்)
83. ஆடு ஜீவிதம் (மொழிபெயர்ப்பு-நாவல்) -எஸ்.ராமன் (தமிழில்)
84. தனிமையின் நூறு ஆண்டுகள் - சுகுமாரன் (தமிழில்)
85. ஹாருகி முரகாமி (மொழிபெயர்ப்பு- சிறுகதைகள்) ஜி. குப்புசாமி (தமிழில்)
86.நான் மடிந்து போவதை காணவே அவர்கள் விரும்புவர் (மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள்) யமுனா ராஜேந்திரன் (தமிழில்)
87.சம்ஸ்காரா (மொழிபெயர்ப்பு-நாவல்) சதாசிவம் (தமிழில்)
88.க ராபர்ட்டோ கலாஸ்ஸோ (மொழிபெயர்ப்பு-நாவல்) ஆனந்த் (தமிழில்)

89. நினைவின் தாழ்வாரங்கள் (கட்டுரைத்தொகுப்பு) - கலாப்ரியா
90.ஓடும் நதி (கட்டுரைத்தொகுப்பு) - கலாப்ரியா
91.கிராமத்து தெருக்களின் வழியே (கட்டுரைத்தொகுப்பு) - ந.முருகேசன் பாண்டியன்
92. கோணல் பக்கங்கள் (கட்டுரைத்தொகுப்பு) - சாரு நிவேதிதா
93. கலகம் காதல் இசை (கட்டுரைத்தொகுப்பு) - சாரு நிவேதிதா
94. நிழல்கள் நடந்த பாதை (கட்டுரைத்தொகுப்பு) - மனுஷ்யபுத்திரன்
95. பல நேரங்களில் பல மனிதர்கள் (கட்டுரைத்தொகுப்பு) - பாரதி மணி
96. அறியப்படாத தமிழகம் - தொ.பரமசிவன்

97. பென்சில்களின் அட்டகாசம் (குழந்தை இலக்கியம்) - விழியன்
98. டாலும் ழீயும் (குழந்தை இலக்கியம்) - விழியன்
99. காசுக் கள்ளன் (குழந்தை இலக்கியம்) - எஸ்.ரா
100. நீளநாக்கு (குழந்தை இலக்கியம்) - எஸ்.ரா

நெஞ்சுக்கு நிம்மதி-கண்ணதாசன்

திரு கண்ணதாசன் அவர்களின் நெஞ்சுக்கு நிம்மதி என்ற புத்தகம் வாசித்திருக்கிறீர்களா..?

Following are excerpted  from this book.in my way...

தகராறு இல்லாத குடும்பம் இல்லை..
வீட்டுக்கு வீடு வாசப் படி..
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை..
யானைக்கு தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே என்ற கவலை இருந்தால் அணிலுக்கு தன் உடம்பு இவ்வளவு சிறிதாக இருக்கிறதே என்ற கவலை..

ஏழைக்கு தொப்பையை நிறைப்பது கவலையென்றால்
பணக்காரருக்கு தொப்பையைக் குறைப்பது கவலை..

காதலித்து கல்யாணம் செய்தவரும் கட்டிலைப் பிரித்து போட்டதுண்டு
பெற்றோர் நிச்சயித்த திருமணத்திலும் பேரன்பு பெருக்கெடுப்பதுண்டு

அன்பிருந்தும் பணமிருந்தும் சந்ததி இல்லாத குடும்பங்களும் உண்டு
சந்ததி இருக்கும் குடும்பங்கள் சாப்பாட்டுக்கே கஷ்டபடுவதுண்டு

அமெரிக்காவில் பகல் என்றால் இந்தியாவில் இருட்டு
பிரச்சனை இல்லாத வாழ்க்கை எவருக்குமே இல்லை
ஆக அடுத்தவர் நன்றாக வாழ்வது போலவும் நாம் மட்டும் தான் கஷ்டப் படுவது போலவும் பிரமை வேண்டாம்

கணவர் வீட்டுக்கு வரும் போதே பிர்ச்சனையோடு வரக் கூடாது
மனைவியும் அவரை கேள்விகுறிகளோடே வர வேற்க கூடாது..

கணவர் எதையும் அடித்து சொல்ல கூடாது
மனைவி எதையும் இடித்து பேச கூடாது

"நீங்க வாங்கின காய்கறி மகா மட்டம் "என்று மனைவி சொன்னால்.."எந்த நாய் சொன்னது?" என்று கணவன் பதில் சொன்னால் தான் பிரச்சனை..தன் தவறை ஒத்துக் கொண்டு.."சரி இனி பார்த்து வாங்குகிறேன்" என்று சொல்லி விட்டால் முடிந்தது

"நீ செய்த சாப்பாடு சகிக்கலை" என்று கணவன் சொன்னால்..
"எனக்கு தெரிந்த லட்சணம் இவ்ளோதான் ..நீங்க உங்க அம்மா வீட்டுக்கு போய் சாப்பிடுங்க" என்று மனைவி பதில் சொன்னால் தான் பூகம்பம் ஆரம்பம்.."இன்னிக்கு உடம்பு முடில..நாளைக்கு நன்றாக சமைக்கிறேன்" என்று சொன்னால் அன்பு வெள்ளம் தான்...

மனைவி புது புடவை உடுத்தினால் ...."இந்த புடவை நன்றாக இருக்கு.. அழகா இருக்கே" என்று சொல்லணும்
கணவன் வெளியிலிருந்து வரும் போது" ஏன் இப்படி வியர்த்திருக்கிறது..எளச்சு போய்ட்டீங்களே" என்று அக்கறையோடு மனைவியும் விசாரிக்க வேண்டும்..

மனைவியைக் கணவன் "அம்மா" என்று அழைக்கணும்
கணவனை மனைவி "அப்பா" என்று அழைக்கணும்

தன் தாயை மனைவி நன்றாக நடத்தினால் கணவனுக்கு நிம்மதி
தன் தாய் வீட்டை கணவன் பெருமையாக கூறினால் மனைவிக்கு நிம்மதி

BedRoom இல் Board Room இல் பேசுவது போல் பேசக் கூடாது..கணக்கு பண்ணும் நேரத்தில் கணக்கு வழக்குகள் பேசக் கூடாது..

பகலில் நடக்கும் எந்த வாக்குவாதமும் அன்று இரவிற்குள்
சரி செய்யப் பட்டு சேர்ந்து விட வேண்டும்..

முக்கியமாக கணவனும் மனைவியும் சிந்திக்க வேண்டிய விஷயம்..வார்த்தைகளில் ஜாக்கிரதை

எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம்
சொல்லைக் கொட்டி விட்டால் பொறுக்க முடியாது

முள்ளால குத்தின காயம் ஆறிடும்
சொல்லால குத்தினா ஆறவே ஆறாது..

ஒருவரையொருவர் அனுசரித்து போனால் உலகையே தனக்குள் அடக்கி கொள்ள முடியும்

இரண்டு கைத் தட்டினால் தான் ஓசை என்பார்கள்..
ஒருவர் கோபம் கொள்ளும் போது இன்னொருவர் விட்டு கொடுக்க வேண்டும்..

"பெண்டாட்டி தானே சொல்லிவிட்டு போகிறாள் ".என்றும்.."கணவன் தானே ..பேசட்டும்" என்றும் விட்டுக் கொடுத்து விட்டால் உள்ளம் துடிக்காது..உடல் வலிக்காது..ஊர் சிரிக்காது..

வாழ்க இல்லறம் !