Wednesday 20 November 2019

20/11/19

"உனக்குள் நகர்ந்து செல்:ஆனால் பயம் உன்னை நகர்த்திச் செல்கின்ற வழியில் நகர்ந்து செல்லாதே."

*அதாவது பயம் உன்னை நகர்த்திச் செல்லும் வழியில் செல்லாதே.அன்பு உன்னை நகர்த்து செல்லும் வழியில் செல்

-ரூமி

#எழுத்துகளை விட எழுதுபவன் மேன்மையாக இருக்க வேண்டும்.
எழுத்துகள் இறந்த கருப்பு நிறங்கள்.எழுதுபவன் உயிருள்ள மனிதன்

-மாக்சிம் கார்க்கி

# சாவிலிருந்து

ஒரு தூக்குக் கயிறென
தேங்காய்ச் சில்லு தொங்கிக் கொண்டிருக்கும்
மரணத்தின் கூண்டிற்குள்
இரவெல்லாம் அல்லாடிக் கொண்டிருந்த
எலியொன்று
இப்போது திறந்து விடப்படுகிறது
ஒரு கயிற்று சாக்கிற்குள்.
உயிரைக் கையில் பிடித்தபடி
ஓடுகிறது எலி
சாவிலிருந்து
சாவுக்குள் !

– வைகறை


# பொய்யுடையொருவன் சொல்வன்மையால் மெய்யாகிறது;
மெய்யுடையொருவன் சொல்ல மாட்டாமையால் பொய்யாகிறது

-கண்ணதாசன்


#வரலாற்றிலிருந்து மனிதர்கள்
கற்றுக்கொள்வதில்லை-என்கிறார்கள்.
படித்தால்தானே-
உட்கார்ந்து

-பழமலய்


# மக்கள் எப்போதும் கூட்டத்தின் மத்தியில் இருக்கவே விரும்புவார்கள்.
அந்த கூட்டமானது அதிகாரமுள்ள மக்களை வழிபடவும்,புகழவும் தான் செய்யும்.அதிகாரத்தினால் அடிமைப்படுத்தப் படும்போது சுதந்திதம் பறி போவதை அறியமாட்டார்கள்.அது தெரிந்தாலும் அந்த சுதந்திரத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது எனக் கேட்பார்கள்

-ஓஷோ

19/11/19

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்

ஆன்ற பெரியோ ரகத்து

*சேர்ந்த நகை என்றால், ஒருவன் காதுக்குள் ஒரு இரகசியத்தை சொல்லிவிட்டு,பிறகு சொன்னவனும் கேட்டவனுமாகச் சிரிக்கக்கூடாது.
மன்னனின் பார்வையிலோ அல்லது அங்குள்ள பெரியோரின் பார்வையிலோ தவறான எண்ணம் ஏற்படக்கூடும்.


#சண்டாளன்

இதனை ஒரு வசைச்சொல்லாக இன்றும் பயன்படுத்துகிறோம்.இது ஒரு சாதியை குறிக்கிறசொல்.மநு வின் படி பஞ்சமர்களை ஊரின் எல்லையில் வைத்துக்கொள்ளலாம்.சண்டாளர்களை ஊருக்குள்ளேயே வைக்கக்கூடாது.
யாரும் உணவோ,நீரோ கொடுக்கக்கூடாது.

பிணத்தின் மேல் போர்த்திய உடையை அணியவேண்டும்.உணவு உண்ண உடைந்த பாத்திரம்தான்.விலங்கினும் கீழாய் நடத்தப்படும் சாதி அது.எனவே இனி இவ்வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்ப்போம்

-படித்தது


#அதிகாரம் என்பது மனித மனங்களை சுக்கல் சுக்கலாகக் கிழித்துப் போட்டுவிட்டு,நமக்கு ஏற்ற வடிவத்தில் அதை மீண்டும் ஒட்ட வைத்துக் கொள்வதுதான்

-ஜார்ஜ் ஆர்வெல்


#கல்வியேறாத ஆண்தான் எங்கும் கடைநிலைத் தொழிலாளி. 

வாழத் துடிக்கும் ஆண் மனம்தான் தாழ்ந்த பணிகளுக்கு இரை

மகுடேஸ்வரன்

18/11/19

#பாரதியார் வகுத்த பாடத்திட்டங்கள்

அ.எழுத்து,படிப்பு,கணக்கு

ஆ.இலேசான சரித்திரப் பாடங்கள்

இ.பூமி சாஸ்திரம்

ஈ.ராஜ்ய சாஸ்திரம்

உ.பொருள் நூல்

ஊ.அறிவியல் மற்றும் பெளதிகம்

எ.கைத்தொழில்,விவசாயம்,
தோட்டப்பயிற்சி

ஏ.சரீரப்பயிற்சி

ஐ.யாத்திரை


#உன்னை
பள்ளிக்கூடத்திலே
சேர்ப்பது பற்றியே
இன்னும் யோசிக்கவில்லை மகனே!
காரணம்
உன்னை அங்கே சேர்த்தாலும்
கற்றுக்கொள்வதற்கு-நீ
தெருவுக்குத்தான் வரவேண்டும்

-வைரமுத்து


#நீ தந்ததை நினைவில் வைத்திருந்தால்,தரவே இல்லை என்று பொருள்

-இசைக்கவி ரமணன்


# மனித மூளையில் கொள்ளளவு 2.5 PB 
(1 million GB). இது 300 வருடங்களுக்கு தொடர்ச்சியாக ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பை பதிய போதுமானது.
[18/11, 5:42 pm] மணிகண்ட பிரபு: கைப்பிள்ளையுடன் பேசிக்கொண்டே கோலம் போடுகிறாள் அந்த பெண், 
நிபந்தனையற்ற அன்பில் பேரழகாகி கொண்டிருக்கிறது வாசல். 

-வண்ணதாசன்

17/11/19

அடிவானத்தை மீறிய 
உலகின் அழகு என்பது, 
பயங்களற்ற 
இரு மிக சிறிய இதயங்களின், 
நட்பில் இருக்கிறது. 

-அறிவுமதி


#பெண்கள் எப்போதும் மைகிரேஷன் தான்.ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குச் சந்தோஷமாக போறதுல பெண்களுக்கு இணையா எதையும் சொல்ல முடியாது

-சா.கந்தசாமி



#திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. அவ்வளவு உயரத்தில் அப்படி ஒரு அசம்பாவிதம் நடந்தால் என்னால் அதை எப்படித் தடுக்க முடியும்?

-ஆர்.சி.சம்பத்

Tuesday 19 November 2019

16/11/19

சாமானியன் ஒருவன் ஞானமடைகிறபோது அவன் ஞானியாகிறான்.இதை புரிந்துகொள்ளும் ஞானி சாமானியனாகிறான்

-ஜென்


[16/11, 7:03 am] மணிகண்ட பிரபு: 

உழைப்பு என்பது சுதந்திரத்தை பறிகொடுத்த பிழைப்பு என்றாகிவிட்டது

-சுந்தர ராமசாமி


[16/11, 7:07 am] மணிகண்ட பிரபு: 

எளிமையை பற்றி பேசவும் எழுதவும் தாம் தயங்குவதில்லை,ஆனால் அப்படி வாழத்தான் தயங்குகிறோம்

-மு.வ


[16/11, 8:36 pm] மணிகண்ட பிரபு: நமது நம்பிக்கைகளே நமது அச்சத்தின் தொடக்கம். எவ்வளவுக்கு எவ்வளவு நாம்மிக ஆழமாக ஒரு விஷயத்தை நம்பத் தொடங்குகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நாம் அந்தரங்கமாக பிளவுபட்டு விடுகிறோம்

-ஜி.கார்ல்மார்க்ஸ்

15/11/19

 இப்போதுள்ள சிக்கல்
ஒரே மாதிரியானவர்களில்
ஒருவரைத் தேர்ந்தெடுப்பது

-யுகபாரதி

# கம்பீரமாக அவன்
உட்கார்ந்து கொண்டிருந்தான்.
எல்லோரிடமும்
கை நீட்டிச் சென்றது
யானை.

-நடராஜன்


# “Five thousand Indians stop smoking every day — by dying.”


 முதல் இரத்தம் பார்த்து
கலங்கி
பாதி வகுப்பில் வெளியேறும்
பெண்

ஒரு செவிலித் தாய்க்கான
பிரியத்தை விட்டுச் செல்கிறாள்
தன் வகுப்பறையிடம்…

-அ.வெண்ணிலா

14/11/19

 குழந்தைகள் தினத்தை கொண்டாடும் அளவு குழந்தைகளை
கொண்டாடுவதில்லை
-அப்துல் ரகுமான்

இன்று குழந்தைகள் தினம்


* மணிகண்ட பிரபு: 

சறுக்கல்களுக்கு ஆசைப்படுவது குழந்தைகள் மட்டுமே


#ஜனநாயகம் என்றால் அது ஒரு சகிப்புத் தன்மை.நமக்கு இணங்கிப் போவோருடன் சகித்துக் கொள்வது மட்டுமல்ல, நம்முடன் ஒத்துப் போகாதவர்களுடன் கூட சகித்துக் கொண்டு போதலே ஜனநாயகம்

 - நேரு


#Asphyxiated..என்ற வார்த்தை..சென்னை,அண்ணாசாலை யில் ஒரு மாலில்... கழிவு நீர் அகற்றுதலில் அருள் என்ற இளைஞர் இறந்து விட்டார்...இந்த மாதிரி மூச்சு திணறி கழிவு நீரில் இறப்பதை..ஆங்கிலத்தில் குறிக்கும் வார்த்தை..(ஆஸ்பிக்சியாட்டட்.). Asphyxiated...ஆகும்.இதேபோல்..மின்சாரம் தாக்கி இறப்பதை.... Electrocuted to death..என்று இருக்கும்.அரிவாளால் வெட்டி கொலை செய்ய பட்டார் என்பதை.Hacked to death. என்று தினசரி ஆங்கில பேப்பரில் இருக்கும்..



# எந்த ஒரு படைப்பும் தனக்குரிய நீளத்தைத் தானே தீர்மானித்துக் கொள்ளும்

-மாலன்

12/11/19

# சிக்கிக்காம தப்பிச்சுட்டோம்னா
எந்த தப்பும் நம்ம ஞாபகத்தில் இருப்பதில்லை
-நடிகர் பிரகாஷ்ராஜ்


#எல்லோரும்
தப்புத்தப்பாகவே வரைகிறார்கள்
வண்ணத்துப்பூச்சியை
அதனழகு
அதில் மிதக்கும் வண்ணங்களில்லை
படபடக்கும்
சிறகிலிருப்பதை உணருவதேயில்லை பலரும்
ஆயினும்
வரை வோவியத்தில் பார்த்தஉடனே
தவறாமல்
படபடக்கத் தொடங்கிவிடும் எல்லோர் மனதிலும்

-விஷ்ணுபுரம் சரவணன்


# அவை அஞ்சி மெய் விதிர்ப்பார் கல்வியும்,
கல்லார் அசையஞ்சா ஆகுலச் சொல்லும் பூத்தலின் பூவாமை நன்று.

*ஒருவர் எத்தனை அறிவு பெற்றிருந்தாலும் அவை அஞ்சாமை இல்லை எனில் எக்கருத்தையும் எடுத்தியம்ப இயலாது.அடுத்தவர் அறிவற்றவர்..இவர் ஆரவாரச் சொற்களை மட்டும் உதிர்ப்பார்கள்.இருவரும் அவைக்கு வராததே நல்லது

-குமரகுருபரர்



#கருணை என்பது கிழங்கின் பெயராக மட்டும் நிலைத்துவிட்டது
-புதுமைப்பித்தன்

-உலக கருணை தினம்

Monday 18 November 2019

Mens day


இன்று ஆண்கள் தினம்
-மணி

#முதல் காதலுக்கு விசுவாசமாக இருப்பது

#தன் சம்பாத்தியத்தில் பைக் வாங்கும்போது மட்டும் அதிக மைலேஜ் தரும் பைக்காக
பார்த்து வாங்குகின்றனர் ஆண்கள்.!

*சாதிக்கும் தன்மை இருக்கோ இல்லையோ சகிப்புத்தன்மை கட்டாயம் இருக்கும்

*நியாயமா பேசுவாங்க..நியாயப்படுத்தி பேசமாட்டாங்க

*சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் ஆண்கள் வாங்கும் முதல் ஆடம்பர பொருள் 'பாடிஸ்பிரே'!

*எவ்வளவு தான் குடும்பத்துக்குக்காக ஆண்கள் நாயா உழைச்சாலும்,மட்டன்ல நாலு எலும்பு அதிகம் வந்தால்..
கரிச்சு கொட்டுவாங்க பெண்கள்

#பந்தக் காலில் நிற்கும் முன், சொந்தக் காலில் நின்று சம்பாதிப்பவர்களே ஆண்கள்.

#காதல் தோல்வியையும் பெண்கள் மனதிற்குள்ளும், ஆண்கள் தாடிக்குள்ளும்  மறைத்து வைக்கிறார்கள்

#ஆண்கள் சீரியல் பார்ப்பது கதைக்காக அல்ல, கதைமாந்தருக்காக..!

#அழகை பார்ப்பவர்கள் பெண்கள் என்றால்
அழகாய் பார்ப்பவர்கள் ஆண்கள்"!

#தன் தங்கைக்கு இருபது பவுன் நகை போட முப்பது வயது வரை காத்திருப்பது

#பேருந்தில் வரும்போது எத்தனை முறை இடம் மாறச் சொன்னாலும் சலிக்காத ஆண்கள்

#தனக்காக இல்லாமல், தன் குடும்பத்திற்காக எல்.ஐ.சி போடுவது

#ஒரே ப்யூட்டி டிப்சாக ஃபேர்& ஹேன்சன்ட் போடுவது

#மீசை எடுப்பது, தாடி வைப்பது ஒன்றே கெட்டப் சேன் ஜ்

#எவ்வளவு சம்பாதித்தாலும் பழைய லுங்கியே கட்டியிருப்பது

#ஹெல்மெட்டை கழட்டியவுடன் ஆண்கள் கண்ணாடி பார்ப்பது முகம் பார்க்க அல்ல,
முடி இருக்கானு பார்க்க..

#கல்யாணத்திற்கு முன்பு "விஜய்" போலவும்,
கல்யாணத்திற்கு பின்பு
 "தலைவாசல் விஜய்" போலவும் மாறிவிடுகிறார்கள் ஆண்கள்
#முடி உதிர்தல்

#ஆண்கள் அதிக நேரம் வாக்கிங் செய்யும் இடம் துணிக்கடைகளே"!

#மனைவியுடன் வெளியூருக்கு சென்றால் கை குழந்தையுடன் அல்லாடுவது

#எல்லா கடனையும் சமாளிப்பது

#பாரமான மனைவிக்காக பெட்ரோல் டேங்கில் அமர்ந்து பைக் ஓட்டுவது என

அனைத்து ஆண்களுக்கும் ஆண்கள் தின வாழ்த்துக்கள்

-*மணிகண்டபிரபு

Monday 11 November 2019

vikatan web tv today 11/11/19

11/11/19

[10/11, 7:40 am] மணிகண்ட பிரபு: உறக்கமா சோகமா
என்று 
கணிக்க முடியாத 
பள்ளிக்குழந்தைகளின் முகங்களை
ஏந்திச் செல்லும்
பேருந்துகள்
வரத் துவங்கும் முன்பு
நாம் நடையை முடித்துக்கொள்ள வேண்டும்.

-போகன்


[11/11, 7:09 am] மணிகண்ட பிரபு: நம்முடைய கெட்டிக்காரத்தனத்துக்கு இடம் தருகிற எழுத்தாளர்களைத் தான் நாம் விரும்பிப் படிக்கிறோம்

-ஃபிராங் ஓ கானர்


[11/11, 7:55 am] மணிகண்ட பிரபு: நல்லவர்களை அடையாளம் காண்பது..

தூரத்தில் பார்க்கும்போது ஏற்பட்ட உணர்வை விட.. அருகில் சென்று பழகும்போது அதிக பிரமிப்பு ஏற்பட வேண்டும்

-வெ.இறையன்பு


[11/11, 8:02 am] மணிகண்ட பிரபு: அதிகார வெறியில் நிலை தடுமாறும் முன், 
ஒரு பாழடைந்த கோட்டையைப் பார்த்துவிட்டு வாருங்கள். 

-மகுடேசுவரன்


[11/11, 7:32 pm] மணிகண்ட பிரபு: கொச்சையாகவோ 'புரியாத' மாதிரியோ எழுதுவதுதான் புதுக்கவிதையின் இலக்கணம் என்று சில சமயம் நினைப்பு வந்துவிடுகிறது

-சார்வாகன்


[11/11, 7:42 pm] மணிகண்ட பிரபு: அரிவாள் மீதேறி,
ஆடு குடித்து,
சந்நதம் கொண்டு ஆடிய
சாமியாடிக்கு,
கூட்டத்தில் ஒருத்தியாய்
மனைவியை கண்டதும்.....

மலையேறியது சாமி.

-கோ வசந்தகுமாரன்


[11/11, 7:56 pm] மணிகண்ட பிரபு: மீன் என்பது 
மீனுக்கு தெரியும் வரை 
மணலே கடல்.

- குமரகுருபரன்
[11/11, 8:21 pm] மணிகண்ட பிரபு: அதென்ன சார் மாத்ருபூதம் ன் பேரு..

தாயுமானவர் என்பது சமஸ்கிருதத்தில் 'மாத்ருபூதம்'. திருச்சியில் பிறந்ததால் அந்தப் பெயர் வைத்துவிட்டார்கள்.

-Dr.மாத்ருபூதம்

manushya puthiran

பணி நீங்கிச் சென்றவள்
சம்பளப் பாக்கிக்காக
தனது பழைய அலுவலக வரவேற்பரையில்
தயங்கித் தயங்கி நிற்கிறாள்

தான் சகலமுமாய்
ஆட்கொண்டிருந்த அந்த  இடத்தில்
இன்று ஏதேனும் ஒரு நாற்காலியில்
உட்காரலாமா என தடுமாறினாள்

அவளது பழைய சகாக்கள்
இயன்றவரை அவளுக்கு
கருணைகாட்டவே விரும்பினர்
ஆனால் ஏதோ ஒரு சங்கடம்
அங்கே பனியாகப் படர்ந்தது

அவளுக்கு ஒரு க்ளாஸ் தண்ணீர் 
தேவையாக இருந்தது
யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை
தண்ணீர் இருக்குமிடம்
அவளுக்குத் தெரியும்
பத்தடி தூரம்
அப்போது நூறு மைலாகிவிட்டது

பிறகு அவள் அங்கிருந்தவனிடம்
" நான் கொஞ்சம் கழிவறையை
உபயோகித்துக்கொள்ளலாமா?"
என்றாள் கூச்சத்துடன்
அவன் திசை காட்டினான்
அவ்வளவு பரிச்சயமான இடத்தில்
அவள் திக்கற்று நடந்து சென்றாள்

மனிதர்கள் ஒருவரைக் கைவிடுவதைக் காட்டிலும்
இதயமற்றதாக இருக்கிறது
ஒரு இடம் ஒருவரைக் கைவிடுவது

9.11.2019
இரவு 10.16
மனுஷ்ய புத்திரன்

Story

ஒரு ஊரில் ஒரே ஒரு 
ஒத்தைவீட்டுக்காரன் இருந்தான்.
அவனிடம் ஒரு குதிரை இருந்தது.
நல்ல குதிரை. அழகான வால் அதற்கு. 

அந்த குதிரை காணாமல் போனது. 
தேடினான். 

அது ஊர்ப்பெருந்தனக்காரனின் தொழுவத்தில் இருந்தது. 
ஆனால் வால் கத்தரிக்கப்பட்டு இருந்தது.  

நீண்ட யோசனைக்குப் பின்
ஊர் பஞ்சாயத்தில் பிராது கொடுத்தான்.

விசாரிக்க ஊர்க்கூட்டம்
போடப்பட்டது.

குதிரையும் கொண்டு வரப்பட்டது. 

ஒத்தை வீட்டுக்காரன் குதிரை  எனது என்றான்.
பெருந்தனக்காரனும் எனது என்றான். 

ஒத்தை வீட்டுக்காரனின் அடுத்த வீட்டுக்காரனை சாட்சி சொல்ல ஊர்காரர்கள்    அழைத்தார்கள். 

அவன் குதிரையை மேலும் கீழும் பார்த்தான்.

இறுதியாக சொன்னான்," முன்னால் பார்த்தால் ஒத்தை வீட்டுக்காரன்  குதிரை போல் இருக்கிறது. பின்னால் பார்த்தால் பெருந்தனக்காரன் வீட்டுக்குதிரைபோல்
இருக்கிறது ".

தீர்ப்பு அளிக்கப்பட்டது.

குதிரையை பெருந்தனக்காரன்
ஓட்டிச் சென்றான். 

ஒத்தை வீட்டுக்காரனுக்கு 
வெட்டிய குதிரை வால்முடி கிடைத்தது.

 பிராது பைசல் செய்யப்பட்டது.

9/11/19

[09/11, 7:18 am] மணிகண்ட பிரபு: அறிவுரை குறித்து ஆண்டன் செக்காவ் To advice is not to compel என்பார்.அதாவது என் கருத்து,என் பார்வை இது என்று நிறுத்திக்கொள்வதே நாகரிகம் என்று

-சுப.வீ


[09/11, 7:21 am] மணிகண்ட பிரபு: விளக்கு வெளிச்சம் அறை எவ்வளவு சிறியதென்று எடுத்துக்காட்டியது

-ஜி.நாகராஜன்



[09/11, 7:29 am] மணிகண்ட பிரபு: கூச்சத்தின் வலி கொடியது.
அது பல்லில் வந்தாலும் சரி,
சொல்லில் வந்தாலும் சரி..!
-பாதசாரி



[09/11, 7:34 am] மணிகண்ட பிரபு: மனத்தின் முரண்பாடுகளில் ஒன்று
எது கிடைத்தாலும் நீ சலிப்படைவாய்,
எது கிடைக்காவிட்டாலும் அதற்காக ஏங்குவாய்
-ஓஷோ


[09/11, 7:37 am] மணிகண்ட பிரபு: மேகம் மழையாய் இறங்கியபோது, நனைந்து சிலிர்த்த பூமி சொன்னது "பெருமை மேலே ஏறுவதில் இல்லை கீழே இறங்குவதில் இருக்கிறது"



-அப்துல்ரகுமான் பிறந்ததினம்
[09/11, 6:05 pm] மணிகண்ட பிரபு: 

மனிதர்களிடம் நிலவ வேண்டியது பரஸ்பர மதிப்பே தவிர,பரஸ்பர அன்பு அல்ல்; அப்போதுதான் ஏமாற்றுக் குறையும்

-ஜி.நாகராஜன்

வெள்ளமோ..புயலோ பாதிக்காத வகையில் உயர்ந்த இடங்களில் வசதிபடைத்தவர்கள் வீடு கட்டிக்கொள்வார்கள்.ஏழைகள் ஒதுக்குப்புறமான பள்ளத்தில் இருப்பார்கள்.பாதிக்கப்படாத மேட்டில் இருப்பதால் மேட்டுக்குடி எனப்பட்டனர்.

Friday 8 November 2019

7/11/19

நட்பு மொழி

அறிவுமதி

* உனக்கு ஆண் நண்பரே
இல்லையாம்மா
என்றேன்
தாவணி
தடுத்துவிட்டது மகளே
என்றாள்
அம்மா

* இருவரும் என்ன காதலர்களா
என்று கேட்கிற உலகில்தான்
நண்பர்களாக
இருக்கிறோம்

* திருமணத்திற்கு முன்பு சரி
இனி வேண்டாம் 
என்று சொல்கிற
ஆணோ பெண்ணோ
கொலை செய்கிறார்கள்
மூன்று
மனசுகளை

* நண்பர்களைக்
குழந்தைகளாகப்
பார்க்கத் 
தெரியாதவர்களின் 
குழந்தைகள்
பாவப்பட்டவர்கள்

* அய்ந்தாறு ஆண்களோடு
பேசிப் போகிற
பெண்ணைப் பார்க்க
கழுவிய
கண்கள் 
வேண்டும்

* காமத்திற்கு 
அறை
நட்புக்கு
வானம்



#அறிதல் வேறு;உணர்தல் வேறு.அறிதலுக்கு அடிப்படை தெரிதல்.உணர்தலுக்கு அடிப்படை அனுபவித்தல்

-வலம்புரி ஜான்


#பக்கத்து வீட்டில் ஒருவன் இருக்கிறான், என்னைத் தொடக்கூடாது என்கிறான் - தீண்டாதே என்கிறான். 

இன்னொருவன் அயல் நாட்டுக்காரன் - ஆயிரம் மைல் களுக்கு அப்பால் இருந்து வருகிறான்.என்னோடு கைகுலுக்குகிறான்; என்னைக் கட்டிப் பிடித்துத் தழுவுகிறான். இவர்களில் எனக்கு யார் அந்நியன்? 

-பெரியார்

#இன்றைய பிரச்சனைகளுக்கு நேற்றைய பதில்களை அளிப்பதுதான் அரசியல்

 -மார்ஷல் மக்லூகன்

#பசித்தால் குழந்தைகள் அழுகின்றனர்!
ஆண்கள் கோபப்படுகின்றனர்!! பெண்கள் சமைக்கின்றனர்!!!

-செளம்யா

வெள்ளமோ..புயலோ பாதிக்காத வகையில் உயர்ந்த இடங்களில் வசதிபடைத்தவர்கள் வீடு கட்டிக்கொள்வார்கள்.ஏழைகள் ஒதுக்குப்புறமான பள்ளத்தில் இருப்பார்கள்.பாதிக்கப்படாத மேட்டில் இருப்பதால் மேட்டுக்குடி எனப்பட்டனர்.

கற்றதும் பெற்றதும்-87*மணி

கற்றதும் பெற்றதும்-87
*மணி

ஆதிக்க வெள்ளத்தின் அடியில் கிடந்தாலும்-பாதிக்கப்படாத பாஸ்பரஸ் அவன்

-பாரதி குறித்த வலம்புரி ஜான்

#பாரதியின் இறுதிநாட்கள்
-மாலன்
(கயல் பருகிய கடல்)

எழுத்தாளர் மாலன் குறித்து அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருப்பினும் அவர் பாரதிதார் குறித்து அழகிய கட்டுரைகள் எழுதுவார்.புதிய தலைமுறையின் ஆரம்பகால வாசகன் நான்.அதில் ஜன்னலுக்கு வெளியே எனும் தலையங்கத்தில் அடிக்கடி பாரதியார் வெளிப்படுவார். பாரதி குறித்து வலம்புரி ஜானின் பாரதி ஒரு பார்வை முக்கியமான புத்தகம்.
கயல் பருகிய கடல் புத்தகத்தின் இறுதி கட்டுரையில் பாரதியார் குறித்த இறுதிநாட்களை விவரிப்பதாக இக்கட்டுரை அமைந்திருந்தது

#பாரதியார் புகைப்படம்..

ஒரு யானை சிங்கத்தை அடித்தது என வர்ணிப்பார்கள்.ஆனால் பாரதியின் முடிவு யானையால் வந்ததல்ல.யானைச் சம்பவம் நடந்தது ஜூனில்.மறைந்தது செப்டம்பரில்.ஜூலை ஆகஸ்டில் வேலைக்கு போய் வந்தார்.

தான் உடல்நலம் தேறிவிட்டதாய் பாரதிதாசனுக்கு கடிதம் எழுத அவர் நான் நம்பமாட்டேன். புகைப்படம் அனுப்புங்கள் என்றதும் சென்னை பிராட்வேயில் இருந்த ரத்னா கம்பெனிக்கு சென்று 1921ல் படம் எடுத்துக்கொண்டார்.
அதுதான் இன்று பிரபலமான முண்டாசுடன் கூடிய படம்

#மகாகவியின் முடிவு

ரா.அ.பத்மநாபனின் சித்திரபாரதி நூலில்..

1921 செப் முதல் தேதி வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.விரைவில் அது வயிற்றுக்கடுப்பாக மாறியது.செப்டம்பர் 12 அன்று பணிக்கு திரும்புவதாக சக ஊழியர்களிடம் உறுதி அளித்தார். ஆனால் அன்றுதான் இறந்தார்.

வ.வே.சு ஐயர் சிறை சென்றுக்கொண்டிருந்த போது செப் 11 அன்று வழியில் காவலருடன் நலம் விசாரித்து சென்றார்.பாரதிக்கு சிகிச்சை அளித்தவர் டி.ஜானகிராமன்.
ஆந்திரகேசரி டி.பிரகாசத்தின் சகோரரர்.அவரிடம் எனக்கொன்றும் இல்லையென கோபப்பட்டிருக்கிறார்.
மருந்து எடுத்துக்கொள்ள மறுத்திருக்கிறார்.

#11ம் தேதி

யார் மருந்து கொடுத்தாலும் கேளாத பாரதி மகள் சகுந்தலா மருந்து என நினைத்து பார்லி தண்ணீரை கொடுத்துள்ளார்.இதனை கூறி விட்டு பாரதி படுத்துக்கொண்டார்.  நீலகண்ட பிரம்மச்சாரி,பரவி சு.நெல்லையப்பர்,
லட்சுமண ஐயர் மூவரும் அன்று இரவு இருந்தனர்.

இறப்பதற்கு இரண்டு மணி நேரம் பிரிட்டனுக்கு எதிராக இருந்த ஆப்கன் மன்னர் அமானுல்லா கான் பற்றி எழுத வேண்டுமென இறுதியாகச் சொல்லிவிட்டு மயக்கத்திலிருந்தார்.
இதுவே இறுதியாய் பேசிய வார்த்தைகள். அவர் மறைந்த நேரம் இரவு 1-30மணி

#இறுதியாத்திரை

விடிந்ததும் தகவல் சொல்லி அனுப்புகிறார்கள்.45 கிலோவிற்கு குறைவாய் இருந்த அவரின் உடலை கிருஷ்ணாம் பேட்டை மயானத்திற்கு எடுத்துச் சென்றனர்.மகன் இல்லாததால் பாரதியின் தூரத்து உறவினரான ஹரிஹர சர்மாதான் கொள்ளிவைத்தார் என கூறுகிறார்கள்.

பாரதி படத்தில் வருவது போல் பாரதியால் பூணூல் அணிவிக்கப்பட்ட கனகலிங்கம் அந்திமக்காலத்தில் அருகில் இல்லை  என தன் நூலில் எழுதியிருக்கிறார்.

அவரின் மரணம் குறித்து பல கேள்விகள் எழுவதாக கூறுகிறார் மாலன்.செப் 12ல் மதியம் இரண்டு மணியோடு சுதேசமித்ரன் வேலை நிறுத்தபடுவதால் பிரசுரமாகவில்லை என தலையங்கம் வெளியிட்டதாக குறிப்பு உள்ளதாக காணப்படுகிறது.

கற்றதும் பெற்றதும்:

மொழியை மட்டும் பாடிக்கொண்டிருந்தவர் மத்தியில் 
சமூக விடுதலை, பெண் விடுதலை குறித்தும் துணிச்சலாய் பாடி கவிஞன் என்பவன் காலத்தின் குரல் என வாழ்ந்து காட்டியவன்.பாரதி எனும் பறவை உதிர்த்த சிறகுகளே அவரின் பாடல்கள்.வானம் அளந்த அந்த பறவையின் சிறகுகளை போற்றி பாதுகாப்போம். அச்சிறகுகள் மூலம் அப்பறவை குறித்த பெருமையை வருங்கால தலைமுறைக்கு உணர்த்துவோம்

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Wednesday 6 November 2019

6/11/19

[06/11, 7 am] மணிகண்ட பிரபு: எழுத்து என்பது அங்கீகரிக்கப்படும் பொய்

-புதுமைபித்தன்


[06/11, 7:31 am] மணிகண்ட பிரபு: 


நாம் ஒருவரை ஒருவர் வெறுப்பதற்கு வேண்டுமளவு மதங்கள் இருக்கின்றன,ஆனால் ஒருவர் நேசிப்பதற்கு தேவைப்படும் அளவுக்கு இல்லை
-ஜோனதன் ஸ்விஃப்ட்



[06/11, 7:33 am] மணிகண்ட பிரபு:

 தான் எவ்வளவு வேகமாக படிக்கப்பட வேண்டும் என ஒரு புத்தகம்தான்
தீர்மானிக்கிறது
-முருகேசபாண்டியன்


[06/11, 8:05 am] மணிகண்ட பிரபு: 

வலிக்கும் வேதனைக்கும் கண்ணீரை கொண்டு வரும் பலம் என்றைக்கும் இருந்ததில்லை.ரோசத்திற்கு மட்டும்தான் கண்ணீர் இறங்கி வரும்

- காவல் கோட்டம்


[06/11, 7:27 pm] மணிகண்ட பிரபு: இன்றைய பிரச்சனைகளுக்கு நேற்றைய பதில்களை அளிப்பதுதான் அரசியல்

 -மார்ஷல் மக்லூகன்


[06/11, 8:49 pm] மணிகண்ட பிரபு: 

பசித்தால் குழந்தைகள் அழுகின்றனர்!
ஆண்கள் கோபப்படுகின்றனர்!! பெண்கள் சமைக்கின்றனர்!!!

-செளம்யா

6/11/19

 “ சில படங்களில் உங்களின் நடிப்பு சற்று மிகையாக இருப்பதாகச் சிலர் குற்றம் சுமத்துகிறார்களே…இதற்கு உங்களின் விளக்கம் என்ன ?” என்று நடிகர் திலகத்திடம் கேட்டேன்.

“ வாஸ்தவம்தான், நான் மறுக்கவில்லை! எல்லாம் தெரியாமலா செய்வேன்? ‘மைக்’ இல்லாத காலத்தில் மேடையில் நாம் சத்தம் போட்டு பேசியிருக்கிறோம். அது போல கட்டபொம்மன் காலகட்டத்தில், நான் அப்படி வசனம் பேசி, ஓரளவு மிகையாக நடிக்காவிட்டால், அந்த கட்டபொம்மன் மக்கள் மனதில் பதிந்திருக்க மாட்டான். இன்று வரை அந்த கட்டபொம்மன் வசனத்தை நினைவு வைத்துப் பேசவும் மாட்டான். 
என்ன மாதிரி கேரக்டரை எனக்குக் கொடுக்கிறார்களோ…அதற்கு தக்கபடி நான் நடிக்கிறேன். உதாரணத்துக்கு, ஒரு பென்சிலை என்னிடம் தந்து கையெழுத்துப் போடச் சொன்னால், அதைக் கொண்டு அதற்கு ஏற்ற மாதிரி கையெழுத்து போட்டுக் காட்டுவேன். பேனாவைக் கொடுத்தால், அதற்கேற்ற மாதிரி…’பெயிண்ட்’ அடிக்கும் ‘ப்ரஷ்’ஷைக் கொடுத்தால் அதற்கேற்ற மாதிரியும் எழுதுவேன்…இப்படித்தான் எனக்குத் தரப்படும் கதாபாத்திரங்களின் தன்மைக்கேற்ப, இயக்குநரது சொல்படி எனது நடிப்பும் வேறுபடுகிறது.” 

“ அவரது அற்புதமான இந்த சுயவிளக்கம் எனக்குத் திருப்தி அளித்தது. ஆனால், அவரது வாழ்வின் இறுதிப்பகுதியில் அவரை வைத்துப் படம் எடுத்தவர்கள், இயக்கியவர்கள் எல்லாம் அவரிடம் ‘பெயிண்ட்’ அடிக்கும் ‘ப்ரஷ்’ஷைக் கொடுத்துவிட்டார்கள். அது எனக்கு மிகுந்த வருத்தம் கொடுத்தது.
சராசரிக்கும் தகுதியற்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் போது, அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் உப்புசப்பற்றதாக அமையும் போது, அதை ஈடுகட்ட…அப்படியான காட்சிகளைக் கரையேற்றும் முனைப்பில் அவராகவே மிகையாக நடிக்க வேண்டிய நிர்பந்தத்துக்குத் தன்னை உட்படுத்திக்கொண்டார் என்றே கூற வேண்டும்.”

- இயக்குநர் மகேந்திரன் (சினிமாவும் நானும் - புத்தகத்திலிருந்து...)




[05/11, 7:28 pm] மணிகண்ட பிரபு: அழுதுகொள்வது ஒன்றுதான் நமக்கு நாமே தேடிக்கொள்ளும் ஆறுதல்
[05/11, 7:41 pm] மணிகண்ட பிரபு: புராதானங்கள் செப்பனிடப்படும் போது ரகசியங்கள் திறந்து கொள்ளும்.

-நா.முத்துக்குமார்

இந்த வார விகடன் மேடையில்..(உங்கள் வாழ்க்கையோடு நீங்கள் பொருத்திப்பார்க்கும் டயலாக்)

இந்த வார வலைபாயுதேவில் என் இரு கீச்சுகள்நன்றி ஆனந்த விகடன்

Tuesday 5 November 2019

5/11/19

[05/11, 7:08 am] மணிகண்ட பிரபு:


 கருள் என்றால் இருட்டு,
கருப்பு  என்று பொருள்.கருள் தான் மாறிமாறிக் கிருள் ஆகிக் கிருஷ் ஆகி, கிருஷ்ணர் ஆயிற்று.நாமும் கரு என்பதை கருப்பன் என்றும் அதிலிருந்து கண்ணன் என்றும் சொல்கிறோம்.
எனவே கண்ணன்,கிருஷ்ணன் என்றாலும் வேர்ச்சொல் கருப்பன் தான். கருள் என்பது வேர்ச்சொல்

-பாவாணர்


[05/11, 7:14 am] மணிகண்ட பிரபு: நம்மிலும் மெலியார்க்கு நாம் இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டும்

-பாரதியார்
[05/11, 1:26 pm] மணிகண்ட பிரபு: 


“ சில படங்களில் உங்களின் நடிப்பு சற்று மிகையாக இருப்பதாகச் சிலர் குற்றம் சுமத்துகிறார்களே…இதற்கு உங்களின் விளக்கம் என்ன ?” என்று நடிகர் திலகத்திடம் கேட்டேன்.

“ வாஸ்தவம்தான், நான் மறுக்கவில்லை! எல்லாம் தெரியாமலா செய்வேன்? ‘மைக்’ இல்லாத காலத்தில் மேடையில் நாம் சத்தம் போட்டு பேசியிருக்கிறோம். அது போல கட்டபொம்மன் காலகட்டத்தில், நான் அப்படி வசனம் பேசி, ஓரளவு மிகையாக நடிக்காவிட்டால், அந்த கட்டபொம்மன் மக்கள் மனதில் பதிந்திருக்க மாட்டான். இன்று வரை அந்த கட்டபொம்மன் வசனத்தை நினைவு வைத்துப் பேசவும் மாட்டான். 
என்ன மாதிரி கேரக்டரை எனக்குக் கொடுக்கிறார்களோ…அதற்கு தக்கபடி நான் நடிக்கிறேன். உதாரணத்துக்கு, ஒரு பென்சிலை என்னிடம் தந்து கையெழுத்துப் போடச் சொன்னால், அதைக் கொண்டு அதற்கு ஏற்ற மாதிரி கையெழுத்து போட்டுக் காட்டுவேன். பேனாவைக் கொடுத்தால், அதற்கேற்ற மாதிரி…’பெயிண்ட்’ அடிக்கும் ‘ப்ரஷ்’ஷைக் கொடுத்தால் அதற்கேற்ற மாதிரியும் எழுதுவேன்…இப்படித்தான் எனக்குத் தரப்படும் கதாபாத்திரங்களின் தன்மைக்கேற்ப, இயக்குநரது சொல்படி எனது நடிப்பும் வேறுபடுகிறது.” 

“ அவரது அற்புதமான இந்த சுயவிளக்கம் எனக்குத் திருப்தி அளித்தது. ஆனால், அவரது வாழ்வின் இறுதிப்பகுதியில் அவரை வைத்துப் படம் எடுத்தவர்கள், இயக்கியவர்கள் எல்லாம் அவரிடம் ‘பெயிண்ட்’ அடிக்கும் ‘ப்ரஷ்’ஷைக் கொடுத்துவிட்டார்கள். அது எனக்கு மிகுந்த வருத்தம் கொடுத்தது.
சராசரிக்கும் தகுதியற்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் போது, அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் உப்புசப்பற்றதாக அமையும் போது, அதை ஈடுகட்ட…அப்படியான காட்சிகளைக் கரையேற்றும் முனைப்பில் அவராகவே மிகையாக நடிக்க வேண்டிய நிர்பந்தத்துக்குத் தன்னை உட்படுத்திக்கொண்டார் என்றே கூற வேண்டும்.”

- இயக்குநர் மகேந்திரன் (சினிமாவும் நானும் - புத்தகத்திலிருந்து...)


[05/11, 7:28 pm] மணிகண்ட பிரபு: அழுதுகொள்வது ஒன்றுதான் நமக்கு நாமே தேடிக்கொள்ளும் ஆறுதல்
[05/11, 7:41 pm] மணிகண்ட பிரபு: புராதானங்கள் செப்பனிடப்படும் போது ரகசியங்கள் திறந்து கொள்ளும்.

-நா.முத்துக்குமார்

4/11/19

மீதி முத்தம்

மீசையை திருத்துகிறார் தோழர்
ச்சீக்... ச்சீக்....
எனும் கத்தரியோடு
உதடுகளை நெருங்கும் அவரின்
கட்டைவிரலிடம் எவ்வளவோ போராடிப்பார்த்தும்
சகட்டுமேனிக்கு ஈஷிக்கொண்டுபோகிறது
முத்தங்களை.

யியற்கை


புதைமணல் என்பது மணலும், களிமண்ணும், தண்ணீரும் கலந்த கலவை. அது உண்மையில் ஆபத்தற்றது.காரணம் அதன் அடர்த்தி ஒரு மி.மீட்டருக்கு 2கிராம்.மனித உடல் 1கிராம்.இடுப்புவரை இறங்குவதற்கு மட்டுமே வாய்ப்பு.ஆனால் பதற்றமடைந்து எம்பிக்குதிக்கும் போது மூழ்கிவிடுகிறோம்.கால்களை வெகுவாக அசைத்து,பதற்றப்படாமல் உடலைதிருப்பினால் உயிர்பிழைக்க வாய்ப்புண்டு

#info

3/11/19

#வரலாறு நல்ல மனிதர்களின் வருகைக்காக ஒருபோதும் காத்திருப்பதில்லை.
இருப்பவர்களில் ஒருவரை தேர்வு செய்து பயணிக்கிறது

-பிரடெரிக் ஏங்கல்ஸ்



#வெ. இறையன்பு அவர்கள் எழுதிய புத்தகங்களில் மிக முக்கியமான புத்தகம் அவரே கேள்வியை உருவாக்கி அவரே பதில் எழுதிய கேள்வியும் நானே பதிலும் நானே! ராணி வாராந்திர இதழில் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருந்தவை. வெ. இறையன்பு எவ்வளவோ நல்ல புத்தகங்கள் எழுதியிருக்கிறார்! அவற்றை எல்லாம் விட இந்தப் புத்தகத்தில் அப்படி என்ன இருக்கிறது? என்ற கேள்வி எழலாம். சில உண்மைகளை பட்டென்று கூறுவது தான் மற்ற புத்தகங்களிலிருந்து இந்தப் புத்தகத்தைப் பிரித்துக் காட்டுகிறது. அவற்றில் சில கேள்வி பதில்களை இங்கு பார்ப்போம்.

1. எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் எது?
நாட்டுப்பண்ணும்! தமிழ்த்தாய் வாழ்த்தும்!

2. எது சிறந்த உதவி?
செய்த உதவியை மற்றவர்களுக்குச் சொல்லாமல் இருப்பது!

3. நமக்கு நாமே எதிரியாவது எப்போது?
உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டுவிடும்ம்போது! நாம் செய்த நல்ல செயல்கள் எல்லாம் காற்றில் பறந்து போய்விடுகின்றன. அப்போது நமக்கு நாமே எதிரியாகிவிடுகிறோம்.

4. மனிதன் எப்போது ஞானம் அடைகிறான்?
தான் ஒன்றுமில்லை என்று உணர்கிற போது!

5. குழந்தைகள் வளர்ப்பில் உள்ள இன்றைய பிரச்சினைகள் என்ன?
இன்றுள்ள குழந்தைகள் எந்த வரிசையிலும் காத்திருப்பதற்காகப் பழக்கப்படவில்லை. அனைத்தையுமே ஆன்லைன் மூலம் பெற்றுவிடுகிறார்கள். எனவே அவர்கள் ஏமாற்றுத்துக்குப் பழக்கப்படாமல் வாழ்கிறார்கள். ஒரு சின்ன தோல்வி ஏற்பட்டாலும் அவர்களால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.,

6. நன்றாகப் பேச எதைக் கற்றுக்கொள்ள வேண்டும்?
மௌனத்தை…

7. அன்பு முக்கியமா… அறம் முக்கியமா?
அறத்துக்கும் அன்பே ஆதாரம்!

8. நண்பர்களுக்கும்… சந்தர்ப்பவாதிகளுக்கும் என்ன வேறுபாடு?
நெருக்கடி வந்தால் அதை உதவி செய்யும் சந்தர்ப்பமாகக் கருதுபவர்கள் நண்பர்கள். விட்டுவிட்டு ஓடுபவர்கள் சந்தர்ப்பவாதிகள்.

9. புறம் சொல்பவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
புறம் சொல்வது சிலருக்குப் பொழுதுபோக்கு.

” ஆற்றில் குளித்து முடித்துவிட்டு வந்த யானை ஒன்று, அழுக்கில் புரண்டு வந்த பன்றியைப் பார்த்ததும் ஓரமாக ஒதுங்கிச் சென்றது.

உடனே பன்றி, ‘ இவ்வளவு பெரிய உருவத்தோடு இருந்தாலும்… என்னைப் பார்த்து பயந்துவிட்டாயே! ‘ என்று பரிகசித்தது.

அதற்கு யானை, ‘ நீ மோதினால் மறுபடி குளிக்க வேண்டுமே என யோசிக்கிறேன். உன்னை ஒரே மிதியில் என்னால் துவம்சம் செய்ய முடியும்! ” என்று சொன்னது. புறம் சொல்பவர்களிடம் அந்த யானையைப் போல் நாம் நடந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பன்றிகளின் சேறு நம் உடலெல்லாம் ஒட்டிக் கொள்ளும்.

10. சோம்பலின் உச்சம் எது?
கையில் இருக்கும் மிட்டாயை வாயில் போட கொட்டாவி வருவதற்காகக் காத்திருப்பது.

11. ஒருவரை புண்படுத்தாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
சில உண்மைகளைப் பேசாமல் இருந்தால் போதும்!

12. துன்பம் வரும்போது சிரிக்க முடியுமா?
பலருக்கும் முடியும்… அடுத்தவர்களுக்கு வரும்போது!

13. தகுதியற்றவர்களும் புகழ் பெறக் காரணம் என்ன?
தகுதியற்றவர்களை ஆர்வப்பட்டு தூக்கிப் பிடிப்பதாலும் தரம் பிரிக்கத் தெரியாதவர்களை அவசரப்பட்டு முன்மொழிவதாலும் இது போன்ற விபத்துக்கள் நிகழ்வதுண்டு. ஆனால் அது புகழ் அல்ல. பிரபலம் மட்டுமே! வளரும்போது வாத்துக்களுக்கும் அன்னத்துக்குமான வேறுபாடு வெளியில் தெரிந்துவிடும். கண்கள் சொல்லாததைக் காலம் சொல்லிவிடும்.

14. திருமணம் வெற்றியடைய என்ன செய்ய வேண்டும்?
கணவனும் மனைவியும் நண்பர்களைப் போல பழக வேண்டும். ஒரே ரசனையை உள்ளவர்களைவிட … அடுத்தவர் ரசனையை மதிக்கத் தெரிந்தவர்களே மிக நல்ல இணையர்கள்.

15. எது அழகு?
செயற்கை ஒப்பனைகளின்றி இயல்பாக இருப்பதே அழகு!

16. பிரபலமானவர்களைப் பற்றி ஏன் வதந்திகள் அதிகமாக உருவாகின்றன?
பிரபலமானவர்கள் மீது மக்களின் இதயத்தில் ஒரு சின்ன பொறாமை இருக்கிறது. அவர்களைப் போல நாமும் பலருக்குத் தெரியவில்லையே என்கிற வருத்தம் மேலிடுகிறது. அவர்களுக்கு அவதூறு நேர்ந்தால்… தாங்கள் அவர்களைவிடப் புனிதமானவர்கள் என்பதைப் போன்ற எண்ணமும் சமாதானமும் ஏற்படுகிறது. அந்தப் பரபரப்பை வைத்தே வதந்திகளைப் பரப்புகிறவர்கள் இயங்குகிறார்கள்.

17. எந்தப் பஞ்சம் கொடியது?
இயற்கை தவறுவதால் ஏற்படும் பஞ்சத்தை விட… இருப்பவர்கள் பதுக்குவதால் உண்டாகும் பஞ்சம் கொடியது.

18. யாருடைய மரணம் அழகு?
இறந்த பிறகும் வாழ்பவர்களின் மரணம்!

19. எப்போது தவறுகள் மறைகின்றன?
அவற்றை மனதார ஒத்துக்கொள்ளும் போது!

20. கோபத்திலும் யார் அழகாக இருப்பார்கள்?
கோபம் வருகிற போது உலக அழகிகள் கூட பொலிவை இழந்துவிடுவார்கள். ஆனால் கோபத்திலும் அழகாக இருப்பவர்கள் குழந்தைகள்!

இப்படி வியக்க வைக்கும் வரிகள் புத்தகம் முழுக்க நிரம்பி கிடக்கிறது. வாசிப்பை பழக்கத்தை புதிதாகத் தொடங்கி இருப்பவர்கள் நிச்சயம் இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம்.


#விளங்கினால் கவிதை,
விளங்காவிட்டால் மரபு கவிதை!


# மழை நின்று போனாலும் இலை சிந்தும் துளி அழகு;
அலை மீண்டும் போனாலும் கரை கொண்ட நுரையழகு;

இமை கொட்டும் விண்மீன்கள் இரவோடு தான் அழகு;
என்னோடு நீயிருந்தால் இருள்கூட ஓர் அழகு

-வைரமுத்து
(புதிய முகம்)

mozhipeyarppu

உலக அரசியலில் மிக முக்கியமான வினையாற்ற வல்லது மொழிபெயர்ப்பு.

உலகையே உலுக்கிய ஹிரோஷிமா, நாகசாகி தாக்குதலுக்கு ஒரே ஒரு வார்த்தை தவறாக மொழிபெயர்க்கப்பட்டது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக அமைந்தது எனச் சொன்னால் நம்பமுடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை....

இரண்டாம் உலகப் போர் உச்சத்திலிருந்த சமயம், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பலம் பொருந்திய நாடுகள் ஒன்றிணைந்து எதிரி நாடான ஜப்பானுக்கு ஒரு செய்தியை அனுப்புகின்றன. ``மொத்தமாக சரணடையாவிட்டால் உடனடியாக ஜப்பான் முற்றிலும் அழிக்கப்படும் " என்று பொருள் கொள்வதாக இருந்தது அந்த இறுதி அறிவிப்பு.
இதற்கு என்ன பதில் சொல்வது என்று திட்டவட்டமாக ஜப்பான் அரசு முடிவெடுக்காத நிலையில், பத்திரிகைகளுக்குப் பேட்டி அளிக்கிறார் ஜப்பான் அதிபர் சுசூகி கண்டரோ.



அணு குண்டு வெடிப்பு
பேட்டியில், இந்த அறிவிப்பு பழைய அறிவிப்புகளிலிருந்து பெரிதாய் மாறுபடவில்லை என்று கூறியவர், தற்போதைக்கு ஜப்பான் அரசு இவ்விஷயத்தில் எதுவும் பதிலளிக்காமல் அமைதி காக்கிறது (Withholding comment) என்று பொருள்படும்படி ``மோக்குசாட்சு" (Mokusatsu) எனும் வார்த்தையை உபயோகப்படுத்துகிறார்.

ஆனால், அதே வார்த்தைக்கு மற்றொரு அர்த்தமும் உண்டு. மறுநாள் காலை, ஜப்பான் பத்திரிகைகள், `அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் இந்தக் கூட்டு அறிவிப்பை ஜப்பான் `ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை’ (not worthy of comment) என்ற அர்த்தத்தில் செய்தி வெளியிட்டன. அவ்வளவுதான், அப்போதைய அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமன்னுக்கு கோபம் தலைக்கேறியது, அன்றிலிருந்து பத்தாவது நாள், உலகின் முதல் அணுகுண்டு பல லட்சம் உயிர்களைக் காவு வாங்கியது. பல அர்த்தம் கொண்ட தெளிவற்ற வார்த்தையை ஜப்பான் அதிபர் பயன்படுத்தியது தவறு என்று ஒருபுறமும், ``சரணடைவதற்குத் தவிர எந்த முடிவைச் சொல்லியிருந்தாலும் ஜப்பானுக்கு இதே நிலைதான். ஆகவே, வார்த்தை பயன்பாட்டில் ஒன்றும் இல்லை" என்று மறுபுறமும் பல வகைகளில் இந்த வார்த்தையை, அதன் எதிர்விளைவுகளைப் பற்றிய மாற்றுக் கருத்துகள் இன்றளவும் விவாதிக்கப்படுகின்றன. இந்த வார்த்தை காரணமோ அல்லது வேறு காரணமோ... moku - `silence' satsu - `killing' எனும் இந்த வார்த்தையின் அர்த்தம் போலவே, ஒரே நொடியில் கத்தியின்றி ரத்தமின்றி பல உயிர்களைக் கொன்றன அந்தக் குண்டுகள்.

1/11/19

மகத்தான நிகழ்வுகள் தாமாகவே மலர்கின்றன. மலினமானவற்றில் மட்டுமே நாம் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறோம்

-வெ.இறையன்பு


காதல் காதல் காதல்
காத்ல் போயிற் காதல் போயிற்
சாதல்,சாதல்,சாதல்.

அருளே யாம்நல் லொளியே
ஒளிபோ மாயின்,ஒளிபோ மாயின்,
இருளே இருளே இருளே.

இன்பம்,இன்பம்,இன்பம்;
இன்பத்திற்கோர் எல்லை காணில்,
துன்பம்,துன்பம்,துன்பம்.

நாதம்,நாதம்,நாதம்;
நாதத் தேயோர் நலிவுண் டாயின்,
சேதம்,சேதம்,சேதம்

-பாரதியார்

info

நிறைய சிறுகதைகள் நாம் வாசிப்பதற்காக கீழேயுள்ள இணையதளங்களில் கிடைக்கின்றன. வாசகர்கள் பெரும்பாலோர் அறிந்திருக்கலாம்.

இருந்தாலும் புதிய வாசகர்களின் கவனத்திற்காகக் கதைகளை வாசிக்க கீழே சில இணையதள வாசிப்புத்தளங்களின் முகவரி தந்திருக்கிறேன்.

நீங்களும் கவனத்துக்குரிய, கதைகளைக் கொண்ட இன்னும் இயங்கிக்கொண்டிருக்கும் வாசிப்புத்தளங்களை இதில் சேர்க்கலாம். 

1. http://azhiyasudargal.blogspot.com/ 
2.http://puthu.thinnai.com/
3.http://www.sirukathaigal.com/
4.https://www.jeyamohan.in/
5.https://www.sramakrishnan.com/
6. https://vannathasan.wordpress.com/
7.http://gnanakomali.blogspot.com/
8.http://maalan.co.in/ 
9.https://padhaakai.com/

10.http://www.valaitamil.com/literature_short-story 
11. https://kuvikam.com/ 
12. http://vallinam.com.my/version2/

13. https://puthu.thinnai.com/?p=38267
14.http://www.keetru.com/
15. https://agaltamil.weebly.com/

Manthiramurthy azaghu
புராதானங்கள் செப்பனிடப்படும் போது ரகசியங்கள் திறந்து கொள்ளும்.

-நா.முத்துக்குமார்