Sunday 4 March 2018

படித்தது

[21/01, 10:37 am] THANGAM: எதிலும்
முழுசாய் லயிக்க முடியாமல்
எப்பொழுதும்
இரைதேடிக் கொண்டும்
இருப்பு பற்றி யோசித்தபடியும்
என்ன இது இது என்னது?

-விக்ரமாதித்யன்
[21/01, 10:50 am] sakthi MANIKANDAN: என்னைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் என்னைப்பற்றி பிறர் கூறும் பாதையில் பயணித்து கூட தெரிந்துகொள்ள முடியும் ...

ஆனால் என் உணர்ச்சிகளை உணர வேண்டுமா ??
அது நான் பயணப்பட்ட
அதே பாதையில் பயணப்பட்டால் மட்டுமே சாத்தியம் ...

Nice one in Twitter
[21/01, 10:56 am] THANGAM: எவ்வளவு தனிமையில் அமர்ந்து நாம் ஒரு கதையை வாசித்தாலும் நாம் தனியாக இருப்பதில்லை. அக்கதைக்குள் நாமும் பார்வையாளராக நடமாடவே செய்கிறோம்.
[21/01, 3:00 pm] SURYA VENBAA: நொடி நொடியாய் முடிந்து போன கருவறை நாட்கள்
அவள் முகம் பார்க்க இன்னும் மூன்று நொடிகள்
அயராத மெளனம் களைந்து
நான் கருவறையில் இருந்து
கண் விழித்து பார்க்க
இருள் சூழ்ந்த நிழல் என் மேல்
இரவென்று இருக்க இல்லை இல்லை
குடையின் கீழ் நான்
குப்பைத்தொட்டியில்

-சூர்யா
[21/01, 3:14 pm] 💥TNPTF MANI💥: பிரியத்தை விட
பிணக்குற்று பிரிதல்
கொடுமை

சந்திக்க நேர்கையில்
அழக்கூட தோணாமல்
அவரவர் குழந்தைகளை
பொய்யாய்க் கொஞ்சிட

-யுகபாரதி
[21/01, 3:52 pm] பாரத் கோவை: 💥எழுத்துக்கள் என்பதென்ன?
அங்கீகரிக்கப்பட்ட
கிறுக்கல்கள் தாமே?

- கவிக்கோ அப்துல்ரகுமான்.
[21/01, 3:56 pm] 💥TNPTF MANI💥: பதில் தோன்றாத உன் கேள்விகளை மௌனத்தால் மொழிப்பெயர்க்கிறேன்!
[21/01, 6:19 pm] 💥TNPTF MANI💥: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டு வாசல்ல ஒரு பெரிய போர்டு இருக்கும்
அதில் எழுதப்பட்ட வாசகம் இது.

நடப்பது தானே நடக்கும்
நடப்பதுதானே நடக்கும்
[21/01, 6:33 pm] பாரத் கோவை: 💥என் அன்பு

உன் கைகளை விட்டிறங்க
மனமில்லாத ஒரு குழந்தை

அதை
என்றென்றைக்குமாக
உன்னிடம் ஒப்படைக்கிறேன்.

-பாப்லோ நெரூதா
[21/01, 6:36 pm] பாரத் கோவை: 💥"பிறக்கும்போதே இறக்கைகளுடன் பிறந்த பறவை போன்றது மனது. அதைப் பறக்கக் கூடாது என்று எப்படி சொல்வது?"
- பிரபஞ்சன்
[21/01, 10:16 pm] 💥TNPTF MANI💥: பிணம்; மற்றும்
உடல்
இரண்டிற்கும் இடையில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது
பொருத்தமான
என்
பெயர்

#வசுமித்ர
[21/01, 10:17 pm] 💥TNPTF MANI💥: ஒரு பார்வை..
விசாரிப்பு..
சிரிப்பு..
இல்லாது தொடர்கிறது
உறவொன்று
இழப்பை பற்றிய
பயத்துடனயே.

-குமரகுருபரன்

மணிகண்டபிரபு

மீனுக்கு நீரெல்லாம் பாதைகள்
-ராஜா சந்திரசேகர்

  கவிதை புத்தகம் படிப்பதன்  சுவாரஸ்யமே அடுத்தடுத்த பக்கங்களில் இருக்கும் ஆச்சர்யங்களுக்காகவே.
தரையிலிருக்கும் நீர் ஆவியாகி சென்று மேலிருந்து மழையாய் பொழிவதன் பிரமிப்பு போல
அன்றாட வாழ்வில் நாம் கவனிக்காத ஆயிரம் விஷயங்களை கவிதையில் சில வார்த்தைகளில் உணர்த்தும்போது மனம் தெளிவடைகிறது. கடந்துவந்த பாதைகளை நினைக்கிறது.
அவ்வாறுதான் ராஜா சந்திரசேகரின் கவிதைகளும். நுட்பமான பார்வையுடன் அவர் செல்லும் பாதைகள் முழுவதும் நம்மையும் ஒரு மீன் போல யதார்த்த உலகிற்கு அழைத்துச் செல்கிறார்.

சிறு அசைவுகளில் பெரிய விளைவுகள் உண்டாக்கும் சலனத்தை ஏற்படுத்துவது.  பல ஆயிரம் பக்கங்களில் கிடைக்காத அனுபவம் ஒரிரு வரிகளில் கிடைக்கும்போது விதை விருட்சமான மனநிலை ஏற்படுகிறது.
"தனிமை அழகானது
தனிமையைப் போல..எனும்  கவிதை போல

சுருங்கச் சொல்லி விளங்க வைத்தது போல் அல்லாமல் பெருக சிந்தித்து சுருங்க வெளிப்படுத்திய
நவீன கால உணர்வை இத்தொகுப்பு முழுவதும் பார்க்க முடிகிறது.

"ஓடிவருகின்றன மீன்கள்
நேற்று பொரி போட்ட கையில்
இன்று தூண்டில்"

மனித மனதை அறியாத மீனின் பார்வையில் இருந்து பார்த்த உயிர்ப்பு மிளிர்கிறது இவ்வரிகளில். வாக்கியங்களில் அடர்த்தியை கூட்டி, மொழியை கடுமையாக்கி புரியவைக்கும் இந்நாட்களில் எளிமையான சொற்களில் ஒட்டுமொத்த சூழலையே புரிய வைக்கிறார்.

"என் மரண ஊர்வலத்தில்
நானும் வந்து
கொண்டிருக்கிறேன்
உங்களை கவனித்தபடி"

"நண்பர் இறந்துபோன
குறுந்தகவல் வந்திருக்கிறது
எனது மரணச்செய்தியை
படிப்பது போலிருந்தது"

மரணத்தை மாற்றுச் சிந்தனையில் சொல்லியிருக்கிறார். யதார்த்தமும் நவீனத்தையும் இவ்விரு கவிதைகளில் இணைத்துச் சொல்லியிருக்கிறார்.

கவிதை குறித்து லா.ச.ரா சொல்லுவார்..
"கரைவதும் அனுபவமாவதும் தவிர வேறென்ன இருக்கிறது கவிதையில்"..

கவிதையில் மட்டும் மனம் லயித்து ஒன்றிவிடும்.வாசித்த வரிகள்
மனதை திறந்து உட்சென்று வாழ்வியல் நிகழ்வுடன் ஒன்றுபடுத்தி பார்க்கிறது.அதில் நனவின் பொலிவு கற்பனையைவிட அழுத்தமாய் இருக்கும்போது மனம் கவிதைக்கு பக்குவப்பட்டுவிடுகிறது.

கவிதைகள் பெரும்பாலும் மென்சோகத்தை அழுத்திச்
சொல்லும். இரவில் வரும் சோகத்துக்கு ஆறுதலே சொல்ல முடியாது..உறக்கத்தை தவிர.இதுபோன்ற நிகழ்வை படம்பிடிக்கிறார்

"துயரத்தை
தடவி தடவி
உறங்க வைக்கிறேன்
நான் விழித்திருக்கிறேன்"

"கண்ணீர் கவனிக்கிறது
கவனமாக பேசுங்கள்"

என்று சோகத்தை கூட தன் பார்வையில் எளிமையாய் அணுகுகிறார். சொற்களின் கவிஞர் காட்டும் ஈடுபாடு, கருத்துக்களை சொற்களின் வழியாகவே தரிசிக்க வைக்கிறார்.மனித மனதின் ஈரத்தை காய்வதற்குள் காண்பித்துவிடுகிறார். ஒருவரை நிராகரிக்க சொற்களைவிட சிறந்த ஆயுதம் வேறில்லை. அதன் வெளிப்பாடாய்..

"தவிர்க்க நீ
காரணங்களை வைத்திருக்கிறாய்
சந்திக்க நான்
அன்பை வைத்திருக்கிறேன்"

உள்ளார்ந்த சொல்லாடலில் அகவுலகை வெளிச்சமிட்டு காட்டுகிறார்.அதேபோல் புறஉலகை நடைமுறை வாழ்வியலோடு காண்ப்பிக்கிறார். அழுத்தமான உண்மையை முற்றிலும் புதுமையான பார்வையோடு காண்பிப்பது.

"ஆச்சர்யத்துடன்
அண்ணாந்து பார்த்தே
பலரை உயரமாக்கிவிட்டோம்"

எவ்வளவு நெகிழ்ச்சியுடன் கீழ்தட்டு மக்களின் அப்பாவித்தனத்தை  அக்கறையோடு கூறியிருக்கிறார். தன்னால் கூறமுடியாதவற்றை ஒருவர் படம்பிடித்துக் காட்டும்போது நெகிழ வைப்பவையே நல் வரிகளாய் அமைகிறது.

இத்தொகுப்பு முழுவதுமே சொல்ல நினைத்ததை கேட்பது போல் இருக்கிறது.ஒரு அனுபவத்தை சொல்லும்போது அது எத்தனை பேரை சிந்திக்க வைக்கிறது என்பது முக்கியம். சிந்திக்கிற இயல்பை வாசிப்பவரும் உணரும் வகையில் இக்கவிதைகள் இருக்கிறது.

ஒவ்வொரு மனிதனும் தனக்குள் ஒரு உலகத்தை வைத்திருக்கிறான். ஒவ்வொரு பெண்ணும் தனக்குள் ஒரு இருட்டை ஒளித்து வைத்திருக்கிறாள் என்பார் தஞ்சை பிரகாஷ்.அதுபோல் பெண்களின் அகஉலகை காணும் கவிதைகள் இதில் உள்ளன. துயரத்தை பெண்களை போல் வெளிப்படுத்த யாராலும் முடியாது.அவ்வகையில்

"தெரியாமல் அழுதேன்
துடைத்துக் கொண்டபோது
தெரிந்துவிட்டது"

மெளனத்தின் குளத்தில் வீசப்பட்ட ஒரு கல் போல இத்தொகுப்பின் ஒவ்வொரு கவிதையும் படித்தவுடன் கரை நோக்கிச் செல்லும் அலைபோல் சிந்தனை விரியும்.இதனை படித்து முடித்தவுடன் கார் தடத்தில் தொலைந்த காலடித் தடங்களை நிச்சயம் நினைத்து பார்ப்போம்.

புத்தகத்தில் புதிய முயற்சியாக
புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் உள்ள QR code-scan செய்தால் youtube இணைப்பில் காணும் வசதி உள்ளது.

புத்தகம்:மீனுக்கு நீரெல்லாம் பாதைகள்
ஆசிரியர்:ராஜா சந்திரசேகர்
சந்தியா பதிப்பகம்

-மணிகண்டபிரபு

படித்தது

[20/01, 7:11 pm] 💥TNPTF MANI💥: தேவையை நேரடியாகக்
கேட்கத் தெரியாதவர்கள்
தங்கள் உரையாடலை
ஆரம்பிக்கிறார்கள்
பாராட்டிலிருந்து
-யுகபாரதி

[20/01, 7:19 pm] 💥TNPTF MANI💥: நமக்கானவர்கள் கண்ணில் மட்டுமே
நாம் எதார்த்தமாக தெரிவோம்.

-படித்தது

[20/01, 7:43 pm] பிரகாஷ் செல்வராஜ்: ஒருவரது சந்தோசம் மற்றவருக்குப் பொறாமையை ஏற்படுத்தவே செய்கிறது.. எஸ்.ரா..

[21/01, 6:38 am] 💥TNPTF MANI💥: "வாடிவாசல்" | தமிழ்ச் சொல் அறிவோம்

*வாடி=அடைப்பிடம் (விறகுவாடி, கங்கவாடி, மரவாடி)
*வாசல்=நுழைவு

அடைப்பிலிருந்து, மாடு கள நுழைவு= வாடிவாசல்

[21/01, 6:41 am] 💥TNPTF MANI💥: உனது ஆரோக்யம் மூன்று கி.மீ அப்பால் உள்ளது, அதை நீ நடந்து சென்றுதான் பெற வேண்டும்
-காந்தி

[21/01, 6:47 am] 💥TNPTF MANI💥: சோம்பலின் உச்சம் எது?
கையில் இருக்கும் மிட்டாயை வாயில் போட..கொட்டாவி வருவதற்காக காத்திருப்பது.!
-இறையன்பு

[21/01, 6:52 am] 💥TNPTF MANI💥: மரம் வெட்டப்பட்டபின் மீண்டும் பழக வேண்டியுள்ளது பழகிய சாலையை
-கருப்பையா

[21/01, 6:58 am] 💥TNPTF MANI💥: கல்லெறிந்து கொண்டேதான் இருப்பார்கள்.. குளமாவதும், கண்ணாடியாவதும் நம் விருப்பம்..

-படித்தது

[21/01, 7:44 am] முருகேசன்: வெளியிலிருந்து வந்த கிளியை வீட்டுக்குள் வளர்க்கத் தொடங்கினோம்.

அது எங்கள் மொழியைப் பேசுவது இனிமையாக இருந்தாலும் வருத்தம்தான் தாய்மொழியை மறந்தது.
-பழநிபாரதி

[21/01, 10:19 am] 💥TNPTF MANI💥: இருக்க இடம் கொடுத்தால் படுக்க நிழல் தருகிறது.....மரம்..!!!

-ப்ரியா

படித்தது

[19/01, 8:43 pm] பாரத் கோவை: 💥தண்ணீர்த் தொட்டியில்
செத்துக் கிடந்த
காக்கைக் குஞ்சுகளுக்கு
மனதார வருத்தப் பட்டாயிற்று.

வாசலில் நிற்கும்
வயசாளிக்கு …..
“ஒன்றுமில்லை” என்று
அனுப்பிவிடலாம்.
இன்றைக்கு …..
என்னால் முடிந்தது இவ்வளவே.

- கல்யாண்ஜி

[19/01, 9:33 pm] 💥TNPTF MANI💥: தந்தையாய் ஆவது சுலபம். தந்தையாய் வாழ்வதுதான் கடினம்.!
-மினிமீன்ஸ்

[20/01, 6:41 am] 💥TNPTF MANI💥: தகழி சிவசங்கரன் பிள்ளை எழுதிய தோட்டியின்மகன்

இது வெளிவந்தது 1951.சுந்தரராமசாமி மொழிபெயர்த்துள்ளார்.இது ஒரு மொழிபெயர்ப்பு போலவே தோன்றாமல் தமிழில் நடை இயல்பாக இருந்தது.தோட்டிகளும் தொழிலாளர் வர்க்கம் தானே தோழர் என்று ஜி.நாகராஜன் சொல்லியுள்ளார்.

கதை

சுடலை முத்து ஒரு மலம் அள்ளுபவர்.மகன் இசக்கி முத்துவும் இத்தொழிலுக்கு வருகிறார்.தன் பிள்ளை இத்தொழிலுக்கு வரக்கூடாதென உறுதியாய் இருக்கிறார். வள்ளி எனும் பெண்ணை திருமணம் முடித்து மகன் பிறக்கிறார்.ஆசையாய் மோகன் என பெயர் வைக்கிறார்.ஊரே தோட்டியின் மகன் என கிண்டல் செய்யுது.இடையில் தொழிற்சங்கம்,கொடிய நோய் பரவுதல் போன்றவை காட்சிப்படுத்தப்படுகிறது.

ஒரு கட்டத்தில் தாய் தந்தையும் நோயில் பலியாக மகனின் நிலைமை கதை.

மலம் அள்ளுதலின் நகைச்சுவைகள் சிரிப்பை ஏற்படுத்தினாலும் அது அவல சுவையாகவே தெரிகிறது.

மகனிடம் தோட்டி வேலை மறைப்பதும்,
தோட்டியின் அர்த்தத்தை மகன் கேட்கும்போது அப்பா பொறுமுவதும் மனம் கணக்க வைக்கிறது.

*கடந்த ஆண்டு வெளிவந்த கக்கூஸ் படம் இதன் பாதிப்பாக கூட இருக்கலாம்

கையிலெடுத்த இரு நாளில் பல்வேறு பணிக்கிடையில் இதனை படித்து முடித்தேன்.மொழி பெயர்ப்பை போலவே தெரியாத இதன் எழுத்து நடையை வியக்கிறேன்

தோழமையுடன் மணிகண்டபிரபு

[20/01, 6:46 am] 💥TNPTF MANI💥: பழகுதல் இருவகை
ஒன்று நட்புடன்
மற்றது நடிப்புடன்

[20/01, 6:47 am] 💥TNPTF MANI💥: தண்ணீர் தொட்டிக்குள் எட்டிப் பார்த்தேன்...
என்னை அறியாமல் விழுந்துவிட்டேன்.,
பிம்பமாக..!
-p

[20/01, 6:52 am] 💥TNPTF MANI💥: என் அரிசியில் உன் பெயரும் சேர்த்தே எழுதப்பட்டிருந்தது....
# அட்சதை

-படித்தது

[20/01, 9:57 am] 💥TNPTF MANI💥: பேய்களின் அதி அற்புதமான குணம் ,
என்றாவது ஒருநாள் தாங்கள் யார்
என்பதை அவை வெளிப் படுத்தி விடுகின்றன என்பது தான்.

-குமரகுருபரன்

[20/01, 9:58 am] 💥TNPTF MANI💥: சுயமரியாதையை இழக்கும்
எவனையும் எவளையும்
கேட்டுப் பாருங்கள்

அது காதலில் ஆரம்பித்து
காதலில் முடிகிற அபத்தம்

-குமரகுருபரன்

[20/01, 10:20 am] பிரகாஷ் செல்வராஜ்: எவ்வளவு எழுதினாலும், பேசினாலும் புரிந்து கொள்ள முடியாத சிக்கல்களும் சிடுக்குகளும் கொண்டது குடும்ப உறவுகள்... யார் எப்போது எதன் பொருட்டு முரண்படுவார்கள், சண்டையிட்டு பிரிந்து போவார்கள் என்று கணிக்கவே முடியாது...
எஸ்.ராமகிருஷ்ணன்..

[20/01, 10:43 am] பிரகாஷ் செல்வராஜ்: நிலவழி... எஸ்.ராமகிருஷ்ணன்..

எஸ்.ரா புத்தகத்தை படிப்பது எப்போதுமே எனக்கு மிகவும் பிரியமான ஒன்று.. ஏனென்றால் கணக்கற்ற புதிய விஷயங்களை கணக்கில்லாமல் அள்ளித்தெளித்துக் கொண்டே செல்வார் வழிநெடுகிலும்...

இந்த நூலில் உள்ள கட்டுரைகளும் அவ்வாறே நமக்கு தெரியாத, நமக்கு அறிமுகமே இல்லாத பல இந்திய எழுத்தாளர்களையும், அவர்களது படைப்புகளையும் நூல் முழுவதும் நமக்கு அறிமுகம் செய்கிறார்...

நமது இந்திய மொழிகளான மராத்தி, உருது, மலையாளம், தெலுகு, பெங்கால், கன்னடம், குஜராத்தி, ஒரியா போன்ற மொழிகளில் உள்ள மிகச்சிறந்த படைப்புகளையும், அதை எழுதிய எழுத்தாளர்களின் குறிப்பையும் சொல்லி செல்கிறார்..

இந்திரா கோஸ்வாமி, இஸ்மத் சுக்தாய், மாண்டோ, பினோதினி, ராஜாராவ், பபானி, மொகந்தி, கேசவரெட்டி, விலாஸ்சாரங், திவாகர், மாதவன் என பல இந்திய எழுத்தாளர்களை நமக்கு அறிமுகம் செய்துள்ளார்...

இந்த 90 பக்க புத்தகத்துல இவ்வளவு விஷயம் சொல்கிறார்.. எல்லாவற்றையும் நினைவில் கொள்வது மிகவும் சிரமமே.. எஸ்.ரா வின் ஒரு புத்தகத்தை படித்து, அடுத்த புத்தகத்திற்கு செல்லும் போது முன்னர் படித்த புத்தகத்தில் உள்ள செய்திகள் நினைவில் நில்லாது ஏனெனில் புது புத்தகத்தில் அதை விட அதிக விஷயங்களை அள்ளி கொட்டியிருப்பார்.. அவ்வாறே இந்த நிலவழியும் ஒரு முக்கிய கட்டுரைகள் அடங்கிய நூலே...

செ.பிரகாஷ்,
குருசாமிபாளையம்..

[20/01, 4:17 pm] பாரத் கோவை: 💥வேலிக்கு வெளியே தலை நீட்டிய என் கிளைகளை வெட்டிய தோட்டக்காரனே.....

பூமிக்கு அடியே நழுவும் என் வேர்களை என்ன செய்வாய் ?

-கவிக்கோ அப்துல்ரகுமான்

[20/01, 4:20 pm] 💥TNPTF MANI💥: எல்லோருக்கும் ஒரு Root உண்டு; அதை ஒட்டித்தான் அவரவர் பயணிக்கும் Route இருக்கும்.

என் வேர்
என் வேர்!
-வாலி

உஷாராணி

பச்சை கம்பளம் போர்த்திய வயல்
பல்லக்கில் செல்வதை போல் மயில்
பளிங்கு போன்று அழகான முயல்
பரவசத்தில் இனிமையாய் கூவிய குயில்
பக்கவாட்டில் குதித்து ஆடும் கயல்
பட்டம் அதை பறக்க விடும் பயல்
கண்டதும் கிடைத்தது கண்களுக்கு மோட்சம் இப்பிறவியில்.....

தாய் தன் குழந்தைக்கு உணவு தருவதை காண்பதற்கு முன்பு வரை நினைத்தேன் தானே அகில உலக அதிர்ஷ்டகாரி என்று......
        தாயில்லா பணக்காரி.

படித்தது

[19/01, 12:22 pm] 💥TNPTF MANI💥: நன்றி சொல்ல நினைக்கும்போதெல்லாம் கண் கலங்கிவிடுகிறது.முதல் நன்றியை
கண்ணீர்த்துளி சொல்லிவிடுகிறது.

       - ராஜா சந்திரசேகர்

[19/01, 12:22 pm] 💥TNPTF MANI💥: புகைப்படக்காரரே
என் புன்னகையில்
இருக்கிற துயரத்தை
உங்களை யார்
படமெடுக்கச் சொன்னது

         ராஜா சந்திரசேகர்

[19/01, 4:16 pm] பிரகாஷ் செல்வராஜ்: எந்த ஒன்றையும் யாரோ சுயமாக முயற்சிக்கும் போது இந்த உலகம் அனுமதிக்காது.. அதில் வெற்றி கிடைக்கிறது என்று தெரிந்த பிறகே அதை அனுமதிக்கும்... எஸ்.ரா..
[19/01, 5:26 pm]

💥TNPTF MANI💥: இரவு என்றால், எங்கோ தூரத்திலிருந்து இசை வழிந்து கொண்டிருக்க வேண்டும் - மகுடேசுவரன்

[19/01, 5:26 pm] 💥TNPTF MANI💥: எழுத்து எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை ,ஆனால் எல்லாவற்றிர்க்கும் சாட்சியாய் இருக்க வேண்டும் .

-அரசு

[19/01, 6:27 pm] பாரத் கோவை: 💥சுயகட்டுப்பாடு ஒன்றைத்தவிர, பெண்களைக் கட்டுப்படுத்த வேறு எந்த சக்தியும் இல்லை.

-அபிராமி.

[19/01, 6:30 pm] பாரத் கோவை: 💥" இந்த உலகம் புத்திசாலி மனிதர்களின் அயோக்கியத் தனத்தாலும், நல்ல மனிதர்களின் முட்டாள் தனத்தாலும் வடிவமைக்கப் பட்டிருக்கிறது.

இதை என்றோ ஒருநாள் மாற்றக் கூடிய மனிதர்கள்தான் இப்போது உன் முன்னே அமர்ந்திருக்கும் மாணவர்கள் என்பதை எப்போதும் நினைவில் வைத்திரு " 
-கனவு ஆசிரியர் கட்டுரையில்
ஞாநி.

நூலேணி

19.01.2018
நூலேணி - படி 45

*கொஞ்சம் பேசலாம்*- 3
By ஆண்டாள் பிரியதர்ஷினி

திறமைசாலிகள், அனைவரின் கண்களுக்கும் தானாகவே தெரிய வாய்ப்புகள் இருப்பதில்லை. யாரேனும் இப்படிப்பட்ட எழுத்தாளர்களோ, பேச்சாளர்களோ ஒரு குறிப்பிட்ட நபரைப்பற்றி சொல்லித்தான் வெளியுலகத்திற்கு தெரியவரும். ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயாவில் பயிலும் ஒரு 12 வயது சிறுவனைப் பற்றிய ஆண்டாளின் அறிமுகம் மிக அற்புதம் என்று சொல்லும் அளவிற்கு சிறப்பானதாக இருக்கிறது. இவனைப்பற்றி ஆண்டாள் இப்படி குறிப்பிடுகிறார்.
*குழந்தைத்தனம், மனதை கரைக்கும் புன்னகை, விளையாட்டுத்தனத்தோடு பேச்சு; தெளிவு-தீர்க்கம்-ஞானமும் கூடிய பேச்சு என இரண்டு குணாதிசியங்கள் கொண்ட சிறுவன் என ரசிக்கலாம்.
சுவாமி விவேகானந்தரைப் பற்றியும், அவரது உரையைப் பற்றியும் இச்சிறுவன் பேசிக்கேட்பது நமது பாக்கியம். எந்த தடங்கலும், எந்த ஞாபகச்சிக்கலும் இல்லை. பேசத்தொடங்கினால், தெளிவான, ஏற்ற இறக்கத்தோடு பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். 12 வயதில் ஆன்மிகத் தெளிவு இருப்பது அதிசயம். ஆன்மிகத்தில் ஆர்வம் இருப்பதும் அதிசயம். பின்னாளில் மிகச்சிறந்த ஆன்மிக ஆளுமை கொண்ட ஆன்றோனாக உருவாகும் சாத்தியம் உள்ள சிறுவன்*
இந்த சிறப்பு மிக்க சிறுவனிடம் ஆண்டாள் நடத்திய பேட்டி:
"ராத்தரி எப்போ நீ தூங்குவ?"

"நடு ராத்திரி தாண்டித்தான்"

"அது வரைக்கும் என்ன பண்ணுவே?"

"படிப்பேன். இல்லேன்னா யோசிப்பேன்"

"என்ன யோசிப்பே?"
"ஸ்கூல் பத்தி, கல்வி பத்தி, சமூகம் பத்தி, எதிர்காலம் பத்தி.."
பதில் சொன்னது 12 வயது குருத்து!

ராமகிருஷ்ணா வித்யாலயா துறவிகள் இவனைப்பற்றி கூறும் ஒரு வார்த்தை, *இவன் ஒரு ஞானக்குழந்தை*.

இறைவனைத் தேடி வெளியே ஓடாமல், உள்முகமாகத் திருப்புவதும், நம் ஆன்மாவை பல உயர்வுகளுக்கு தகுதிப் படுத்திக் கொள்வதும்தான் ஆன்மிகம். ON-ME-COME என்பதே ஆன்மிகம் என்று ஞானத்தை சிந்திக்கலாம்.

இந்தச் சிறுவனிடம் தான் இதை உணர்வதாகவும் குறிப்பிடுகிறார் ஆண்டாள் பிரியதர்ஷினி .
இவன் பெயர் சபரி வெங்கட்.
இது வரை நீங்கள் படித்த விஷயங்கள் ஒன்றும் ஆச்சர்யமில்லை என்பேன் நான். க்ளைமாக்ஸ் இதற்கு பிறகு தான் வருகிறது.
அவனிடம் கேட்ட கேள்வி..

"எதை பார்க்கணும்னு உனக்கு ஆசை?"
"எங்க அம்மா முகத்தை!"
இதை கேட்டு தான் அழுது விட்டதாக பதிவிடுகிறார் ஆண்டாள்!
"இப்படி இருக்கோமேன்னு உனக்கு வருத்தமா இருக்கா?
சாமி மேலே கோபமா இருக்கா?"

பதில்: *இல்லியே. ஹெலன் கெல்லருக்குக் கண் தெரியாது, காது கேட்காது, வாய் பேச முடியாது- ஆனா, எனக்குக் கண்ணு மட்டும் தெரியாது. அவ்வளவுதானே!*

ஆம்! இவ்வளவு சிறப்பு மிக்க சிறுவனுக்கு கண் தெரியாது.
குறை காணாத மனசு தான் கடவுள் வாழும் இடம். அது சபரி வெங்கட்டின் மனசு தானே, நண்பர்களே?!!!!!
இவன் மேலும் தன் வாழ்க்கையில் பல சாதனைகள் புரிய உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்!

*கடவுள் தரிசனம்*

அதிகாலையில் எழுவது ஆன்ம தரிசனத்திற்கு, தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம். மனசுக்கும், உடலுக்கும் வாரணம் ஆயிரம் பலம் தோன்றும் என்கிறார் ஆண்டாள். பிரம்ம முகூர்த்தம் எனப்படும் சூரிய உதயத்திற்கு முன்பு எழும் பழக்கம் உள்ளவர்கள் பெரும்பாலானோர் சாதனையாளராக இருக்கின்றனர். அதிகாலையை ரசிப்பவர்கள் தேவர் குலம் என்பேன். கடவுளை அமைதியாக வழிபட்டு நிம்மதி பெற கூட நேரமின்றி, வாழ்க்கையில் ஓட்டப்பந்தயத்தைப் போல ஓடும் வீரர்களாகவே மாறி விட்டோம் இப்போதைய தலைமுறை மக்கள் அனைவரும்!
ஆண்கள் சாமி கும்பிடுவது என்பது வேறு. பெண்கள் சாமி கும்பிடுவது என்பது ஒரு தவம் என்ற வேறு லெவல்!
பெண்களுக்கு சாமி கும்பிடுவது என்பது ஓர் ஆசுவாசம். ஒரு நிம்மதி. ஒரு தைரியம். ஒரு தெளிவு. ஒரு வெளிச்சம். ஒரு பரவசம். ஒரு சுகானுபவம். ஒரு செல்லம். ஒரு கெஞ்சல். ஒரு கொஞ்சல். ஒரு சிணுங்கல். ...எல்லாமே.
ஆண்கள் போல துறவு வாழ்க்கை மேற்கொண்டு ஆன்மிகத் தேடலில் ஈடுபடுவதில்லை. தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் கடவுளை உணர்பவர்கள். இதில் ஜென் துறவியும், பெண்களும் ஒன்று என்கிறார், ஆண்டாள்!
அதென்ன ஜென் துறவி கதை? வாசிப்போமா?!

*ஜென் துறவியின் கதை*

ஒரு ஜென் துறவியிடம் பக்தன் ஒருவன் தானும் துறவு மேற்கொள்ள விழைந்து துறவியை சந்திக்கிறான். "சரி, என்னோடு இரு என்றார் துறவி."
பின்பு துறவி, அவர் பாட்டுக்கு குளித்தார், வயலில் வேலை செய்தார், காய்கறி பறித்து, சமைத்து சாப்பிட்டு, மாலையில் விளையாடினார். உடற்பயிற்சி செய்தார். இசை கேட்டார். தானும் பாடினார். மலையுச்சி ஏறி சூரியனை ரசித்தார். நட்சத்திரம், நிலவை ரசித்தார். இரவு உணவுக்குப்பின் காலாற நடந்தார். பின்னர், இரவு வெட்ட வெளியில் படுத்துக்கொண்டார்.
பக்தனுக்கு ஆச்சர்யம்! குரு கடவுளை கும்பிடவில்லை, பூஜைகள் எதுவும் செய்யவே இல்லை என்று!

துறவியிடம் கேட்டான்.
துறவி சிரித்துக்கொண்டே, "காலையிலிருந்து நான் கடவுளைத் தரிசித்துக் கொண்டுதானே இருந்தேன், நீ பார்க்கவில்லையா?" என்றார்.
இல்லையே, நீங்கள் பலவிதமான வேலைகளைத் தானே செய்தீர்கள் என்றான் பக்தன்.
*ம்.. அதுதான் கடவுள் தரிசனம். அதுதான் தெய்வ சிந்தனை. ஒவ்வொரு செயலையும் முழுமையாக ரசித்து, மகிழ்ந்து மனப்பூர்வமாக செய்வதே இறைதரிசனம், பூஜை எல்லாமே! இதை தாண்டிய இறை தேடல் உண்டா?! என்றார் துறவி*

*பெண்களின் தவம்*

இந்த ஜென் துறவிக்கும், நம்மூர் பெண்மணிகளுக்கும் அதிக வித்தியாசமில்லை. பெண்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அது பால் காய்ச்சும்போது, குழந்தையை கவனிக்கும் போது, சமையல் வேலை செய்யும் போது, துணி துவைக்கும்போது, பாட்டு பாடும்போது, பேருந்துப்பயணத்தின் போது, ஏன் கட்டில் நேரத்திலும் கூடச் சாமியை நினைப்பது பெண்களின் இயல்பு என்று ஒரு துல்லியமான மன இயல் ஓட்டத்தை பதிவு செய்கிறார், நூலாசிரியர் ஆண்டாள்.

இப்படி நுணுக்கமான உணர்வுகளை ஒரு பெண்ணால்தான் வெளிக்கொணரவும் முடியும் என்று வியந்த வேளையில் நெசவு முதல் பாகத்தில் உபநிஷத்து கூறும் "ஈஸ்வர அர்ப்பண புத்தி" என்ற கோட்பாட்டை நான் கோடிட்டு காண்பித்து இருந்தது நினைவுக்கு வருகிறது.

ஆக, வேதம் கூறும் மனப்பாங்கிணை நம் பெண்கள் இயற்கையிலேயே பெற்று செயல்படுத்தியும் வருகிறார்கள் என்பது மிகவும் பாராட்டத்தக்கது!
கடவுள் தரிசனம் ஆண்களுக்கு மேல்சட்டை மாதிரி. ஆனால், பெண்களுக்கு உடம்புக்குத் தோல் மாதிரி, கண், மூக்கு, வாய் மாதிரி பின்னிப் பிணைந்த உணர்வு! சுவாசம் போல இயல்பானது என்று பெண்ணின் பெருமை பேசும் ஆண்டாளின் இன்னும் பல பிரமாதமான கருத்துக்களை அடுத்த பதிவில் தொடர்ந்து வாசிப்போம்!

அன்புடன்,
நாகா.
19.01.2018