Friday 23 February 2018

மணநாள்

வாழ்க்கை இணை ஏற்ற நாள்

சிடுமூஞ்சி அல்லாள்
சீரியல் பார்க்கும் விழி அல்லாள்
சிரித்தபடியே சண்டைபோடும் சிம்பிளானவள்

பார்லர் போகும் முகமல்ல
பவுடர் மட்டுமே பூசிக்கொள்ளும் முழுமதியாள்

பொன்னோ பொருளோ ஆசையில்லை
பொருட்காட்சியில் விற்கும் டெல்லி அப்பளமே போதும் அவளுக்கு

சூடான உணவை தயாரித்துவிட்டு
சூடு பன்னிய குழம்பையே உண்ணும்
சுத்தமான ஜீவன்

செருப்பு எண்ணிக்கையும்
சேலை எண்ணிக்கையும்
அதிகமில்லை என்பதால் மணவாழ்க்கை இன்னும் மைலெஜ் குறையாமல் ஓடுகிறது

சினிமாவுக்கு போக நச்சரிப்பவள் அல்ல
சின்னத்திரையே போதும் என மெச்சியவள்

எத்தனை பணி இருந்தாலும்
என்னை நம்பி எந்த பக்கெட் துணியும்
ஊற வைக்காதவள்

கல்யாண் ஜுவல்லர்ஸ் போனாலும்
கல்யாணி கவரிங் போனாலும் ஒரு போதும் கடுப்பை காட்டாதவள்

இவள் பொறுமையாக இருப்பதால்தான்
என்னால் பொறுப்போடு இருக்கமுடிகிறது

-மணிகண்டபிரபு

மனைவி

#மனைவி

ப்யூட்டி பார்லர்
போகும் பழக்கமில்லை
நகைகளின் மீது
நாட்டமில்லை

புடவைக்கு பதில்
பிறந்த நாளில்
புத்தகம் கொடுத்தால்
புன்னகையுடன் வாங்கிக்கொள்வாள்

காரில் போக
விரும்பாமல்
கைப்பிடித்து நடக்கவே
விரும்புவாள்

இன்னும் டைம்
சரியில்லையென
தனிக்குடித்தனம் செல்ல
அழைத்ததேயில்லை

தங்கமோ வைரமோ அல்ல
எப்போதும் எனக்கு
அன்றாட வாழ்வில்
அவசியமாய் பயன்படும் உப்பு

-மணிகண்டபிரபு

(என் மனைவி சூர்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்)

Tuesday 13 February 2018

லா.ச.ரா

[15/01, 6:23 p.m.] 💥TNPTF MANI💥: "எல்லா தர்க்கத்திலும் கடைசி வார்த்தை அவளுடையது தான்."

#லா.ச.ரா
[15/01, 6:29 p.m.] 💥TNPTF MANI💥: ஒருவரை ஒருவர் உபயோகிப்பதற்கும், உபயோகப்படுவதற்கும் உண்டாக்கிய பொய்கள்தான் - சொந்தங்கள்

#லாசரா
[15/01, 6:43 p.m.] 💥TNPTF MANI💥: கண்ணுக்கு கண்ணாடியை முகமூடியாய் பயன்படுத்தினால் இளமை! ஊன்றுகோலாய் பயன்படுத்தினால் இயலாமை ! # coolin class /power class"

-இளந்தென்றல்
[15/01, 10:37 p.m.] 💥TNPTF MANI💥: பல இரங்கல் செய்திகள்..
"சாக வயதில்லை வணங்குகிறோம்"
டோனிலேயே சொல்லப்படுகிறது.

கர்ணா

ஞாநி ஒருகட்டத்தில் தனது மனைவியுடனான கருத்து முரண்பாட்டால் சட்டப்படி பிரிந்தார். அது செய்தியல்ல.. அப்படி அவர்கள் பிரிந்த பிறகும் இருவரும் ஒரே வீட்டிலேயே வாழ்ந்தனர். இதைக் கேட்டபோது, பெரும் சிரிப்புடன் வேறொருவருடன் வாழுமளவு எங்க ரெண்டு பேருக்குமே வேற யாரையும் தெரியாதே என்றார்.

-கர்ணா

இறையன்பு

எதையும் அன்பாலே சாதிக்க முடியும்.
ஆனால் அவர் அதிகாரம் செய்து சாதித்தவர்.
144ஆல் அல்ல.
133ஆல்.
#வெ_இறையன்பு
#திருவள்ளுவர்_தின_வாழ்த்துகள்

ஹைக்கூ

_திருவள்ளுவர் தின வாழ்த்துக்கள்_

*தமிழ் ஹைக்கூ 1⃣0⃣1⃣ ஆண்டு*

பகுதி - 89

ஹைக்கூக்களில் தலைப்பு

ஹைக்கூக்கு தலைப்பு வேண்டுமா வேண்டாமா என்பது இன்னும் தீராத சர்ச்சை..

ஜப்பானிய ஹைக்கூக்கள் பல தலைப்புகளோடு வந்திருக்கின்றன..

ஹைக்கூவிற்கு தலைப்பு தந்தால் அது வாசகனின் புரிதலை கட்டுப்படுத்திவிடும் எனவே தலைப்பு கூடாது என்போரும் உண்டு..

தமிழ் ஹைக்கூக்கள் தலைப்பிட்டே வருகின்றன..

        புத்தி
   வெறுங்களிமண்
   பிசைந்து வனைந்து வனைந்து
   சுட்டால் சட்டி

🌹

                யார்
   அந்த காட்டில்
   எந்த மூங்கில்
   புல்லாங்குழல்.

🌹

            உறவுகள்
   முதுகில் அரிக்கும்
   வேர்க்குருக்கள் - சதா
   நான் நெளிந்தபடி..

🌹

                வெற்றி
   முன்னால் நீண்டது முள்
   சோர்வுற்ற எனக்காக
   பின்னால் முகிழ்த்தது பூ

🌹

                  நெருப்பு
   அடுப்பின் நெருப்பெங்கே
   அதோ எரிகிறது
   ஏழையின் வயிற்றில்

தமிழ் ஹைக்கூக்களில் தலைப்பு தொடரும்..

*பெருநதி 2018 அக்டோபர் 16 வரை உங்களை நனைக்கும்*

               ஸ்ரீதர்
🍀 திண்டுக்கல் 🍀

@MANIPMP

உன்னைப்போல் ஒருத்தி கடந்து செல்கிறாள்.
இம்முறை அந்த தவற்றைச் செய்ய மாட்டேன்.

நாயோன்.

💥: சாதாரண எளிய
மனிதர்களுக்கு நோயாளிகளாக
இருக்கக்கூட தகுதி இல்லை. அதற்குக்
கூட பணம் தேவைப்படுகிறது.

#ஞாநி #ஓபக்கங்கள்

💥: அடையாமல் இருப்பதால் தான் அதற்கு இலட்சியம் என்று பெயர்

💥: உறக்கத்தில் வருவதல்ல கனவு
உறக்கம் வருவது போல் காண்பதே
கனவு

💥: பிரார்த்தனை செய்யாமல் இருப்பதுவே
உண்மையான தரிசன நிறைவு

💥: காதல் என்பது மனிதனுக்கு மனிதன் வேறுபடுவதுபோலப்
பருவத்துக்குப் பருவம் மாறிக்
கொண்டேயிருக்கிறது
-p
[
💥: அறை என்பது படுக்க மட்டும்தான்
என்பது, மேன்ஷன்கள் தமக்குள் இயற்றிக்கொண்ட இலக்கணம்
-பிரபஞ்சன்

ஏறுதழுவுதல்

ஏறுதழுவுதல்
-மணிகண்டபிரபு

தமிழகம் முழுவதும் இன்று பரவலாக பேசப்படுவதில் ஒன்று ஜல்லிக்கட்டு.அனைவரின் கவனமும் ஜல்லிக்கட்டு எனும் ஏறுதழுவலை எதிர்நோக்கியே.எல்லாம் தெளிவாக இருக்கிறது என்ற நிலையே தெளிவின்மையின் துவக்கம்.இளைஞர்கள் முதல் இணையம் வரை வைரலாக உள்ளது.

#தமிழகத்தில் ஜல்லிக்கட்டின் பாரம்பரியம்

தமிழரின் பாரம்பரிய விளையாட்டான 'ஏறுதழுவுதல்' விளையாட்டின் தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழகம் முழுவதும் தைமாதம் நடைபெறுகிறது.அக்காலத்தில் சொரிக்காம்பட்டி எனும் அழகத்தேவனுக்கும்,முக்கம்பட்டி எனும் ஊரில் செல்லச்சாமி என்ற மாடுபிடி வீரனுக்கும் நடுகல் எடுத்து வழிபட்டு வருவதிலிருந்து புரிந்து கொள்ளலாம் தமிழர்களின் ஜல்லிக்கட்டின் ஈடுபாடு.

இது தமிழர்களின் கலாச்சார அக்கறையும் பண்பாட்டு நம்பிக்கையும் ஆகும்.இறைச்சிக்கு என வெட்டும்போதும்,அடிமாடாய் ஏற்றுமதி செய்யும்போதும் அமைதியாய் இருந்தவர்கள் தடை போடும் அளவு துன்புறுத்தவில்லை என தெரிந்தும் தடை இருப்பது வேதனை.

காளை வளர்ப்பு பயிற்சி

புகழுக்காகவும் பெருமைக்காகவும் வளர்க்கப்படும் காளைகளே ஜல்லிக்கட்டில் பயன்படுத்தப்படுகின்றன.வீட்டில் வளரும் கன்றுகளை தேர்ந்தெடுக்காமல் காட்டில் கூட்டம் கூட்டமாக மேய்ந்து வளரும் வரும் கிடைமாட்டுக் கன்றுகளிலிருந்து தேர்ந்தெடுக்கின்றனர்.கன்றுகளுக்கு இயல்பாக சுழி இருப்பதைவிட உடலின் வேறு சில பகுதியில் சுழி இருந்தால் பெரும்பாலானோர் வளர்ப்பதில்லை.இயற்கையாக காளைகளுக்கு நெற்றியில்,முதுகில்,கொண்டையில் என மூன்று சுழிகள் இருக்கும்.சில காளைகளுக்கு அஞ்சு சுழி இருக்கும்."அஞ்சு சுழி மாடு கெஞ்சினாலும் கிடைக்காது" என்பார்கள் நாட்டுப்புறத்தில்.கன்றினை ஒருவரின் பராமரிப்பில் வளர்வதால் மற்றவரை கண்டால் குத்தும் இயல்புடன் வளர்கிறது.

கன்றுக்கு அளவான தவிடு,புண்ணாக்கு,நீச்சல்பயிற்சி போன்றவை வயிறு பருக்காமல் இருக்க வழிவகுக்கிறது.வயிறு பருத்திருந்தால் வேகமாய் ஓடமுடியாது.விரைவில் சோர்ந்துவிடுவதை தவிர்க்க இப்பயிற்சி.
காளையின் பற்கள் நான்கு ஆண்டிற்குள் எட்டுப்பற்களும் விழுந்து முளைத்துவிட்டால் காளை பருவத்தை அடைந்துவிட்டதாய் அர்த்தம்.இதன் பின்னர் ஐந்து ஆண்டுகள் சிறப்பாய் விளையாடும்.

காளையின் தலை,காதுகள் சிறியதாய் இருக்க வேண்டும்.கண்கள் பெரிதாய் இருக்க வேண்டும்.,பூ விழுந்திருக்க கூடாது.தொங்குதசை சிறியதாக இருக்கணும்.பருத்த திமில் இருந்தால் திமில் சாய்ந்து கொண்டே இருக்கும்,எளிதில் பிடித்து அடக்கிவிடுவான் என்பதால் பருத்த திமில் காளைகளை பெரும்பாலும் தேர்ந்தெடுப்பதில்லை.

#பயிற்சிகள்

மாடுபிடி வீரர் மாடு பிடிக்க கடும் பயிற்சி மேற்கொள்கிறார்.மது அருந்தாமை,தீவிர உடற்பயிற்சி செய்கிறார்.

பரந்த வெளியில் காளையின் கழுத்தில் மணல் சாக்கு கட்டி,சுற்றி இளைஞர்கள் சிறுவர்கள் சுற்றி நின்று கூச்சலிடுவர்.இதனை பாய்ச்சல் காட்டுதல் என்பர்.வளர்த்தவரை தவிர மற்றவரை குத்த நினைக்கும்.மணல் மூட்டையின் பாரம் தாங்காமல் நிற்கும்.தன்னையும் பராமரித்தும் மற்றவர்களை குத்தவும் பயிற்சி அளிப்பார்கள்.

இதேபோல் மரத்தில் பொம்மை குத்த பயிற்சி அளிக்கப்படும்.எதிரே இருக்கும் பொம்மையை குத்த முயலும்போது மரக்கிளையில் அமர்ந்திருப்பவர் பொம்மையை அங்கும் இங்கும் அசைத்து காளையின் கவனத்தை நிலைநிறுத்துகிறார்.

எலுமிச்சம்பழத்தை பரந்தவெளியில் உருட்டிவிடுவர், காளை அதனை குறிவைத்து குத்தும்.இதன்மூலம் மாடுபிடி வீரர் தரையில் படுத்திருந்தாலும் குத்தி காயப்படுத்தும்

#ஜல்லிக்கட்டு விளையாட்டின் விதிமுறை

மாடுகளின் இரத்தம் சிந்த அனுமதிப்பதில்லை.மனிதன் இரத்தம் சிந்தியாவது காளையை தழுவுகிறான்.
மாடு நுரை தள்ளிவிட்டால் உடனே நிறுத்தும்படி அறிவிக்கப்படும்.

வாடியிலிருந்து வெளியேறும் காளை ஓடக்கூடியதாக இருந்தால் மாடுபிடிவீரன் 30அடி தூரத்திற்கு திமிலை அணைத்தவாறு செல்லனும்

காளை நின்றுவிளையாடும் குணமாய் இருந்தால் வீரன் தழுவி மூன்று தாவிற்கு கீழே விழாமல் இருக்கணும்.ஜல்லிக்கட்டு வேறு மஞ்சுவிரட்டு வேறு.வாடியிலிருந்து ஒருகாளை அனுமதித்த பின்னர் அடுத்தகாளை அனுமதிக்கப்படும்.ஆனால் மஞ்சுவிரட்டுக்காக கொண்டுவரப்பட்ட காளைகள் அனைத்தும் மஞ்சு விரட்டுக்கு முன்னரே அடைத்துவிட வேண்டும்.பின்னர் விழாக்குழுவினர் திறந்து விட்டவுடன் 50அடி தூரம் கடந்தபின் பலர் கூடி அடக்கி கழுத்தில் கட்டியிருக்கும் பொருட்களை எடுத்துக் கொள்வதே மஞ்சுவிரட்டு.
எருதுவின் கழுத்தில் வடத்தை கட்டி வட்டப்பாதையில் சுற்றவிட்டு பிடிப்பது எருதுகட்டு எனப்படுகிறது.

ஜல்லிக்கட்டில் பிடிபட்ட காளைகள் உழவுத்தொழிலுக்கு பயன்படுத்தப்படுகிறது.இதனை வாடிவாசல் நாவல் கூறுகிறது.

பிடிபாடாத காளையினை வழிபடும் வழக்கமும் உள்ளது.தொழுவத்தில் மஞ்சள் பத்திட்டு சிறப்பான உணவு வழங்கப்படுகிறது.
இத்தகைய மாட்டின் உரிமையாளரை ஊர்ப்பெரியவர்கள் நேரில் பார்த்து வெத்தலை பாக்கு வைத்து ஜல்லிக்கட்டுக்கு அழைக்கும் வழக்கமும் உண்டு.

மாட்டை அணைத்து வெற்றி கண்ட வீரனை ஊரே பெருமையுடன் பார்க்கிறது.பிடிபடாத காளை இருக்கும் வீட்டினை மதிப்புடனும் தன்மானத்தின் உச்சமாய் பார்க்கப்படுகிறது.

#தடை:
இத்தகைய பாரம்பறிய விளையாட்டை  தடை செய்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மாட்டினங்களை அழிவிலிருந்து காக்கப்பட வேண்டும்.நாட்டு மாடுகள் 137 லிருந்து 36 ஆக குறைந்துள்ளது.
தமிழக மாடுகளில் காங்கேயம் காளை,புளிய குளம் போன்ற மாட்டினங்களை மேம்பட்ட பெருக்கம் செய்ய ஜல்லிக்கட்டு அடித்தளமாகிறது.

இரண்டு பவுனோ,உருமத்துணியோ காளையை அடக்க உந்துதல் இல்லை, அது மக்களின் மதிப்பை பெறும் வாழ்வு என்று சி.சு செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலில் வரும்.
அத்தகைய மக்களின் மாண்பு இன்று கேள்விக்குறியாகி உள்ளது.

தொ.பரமசிவம் அவர்கள் கூறும்போது

மாடு அடக்குதல் அல்ல அணைத்தல். it is not a wild animal, its pet animal.
மாடு என்பது காட்டிலே பிறந்து வாழ்வது அல்ல.மனிதனுடனே வாழ்ந்து மனிதனுடனே மடிகிறது.மேலும் காயம்படாத விளையாட்டுகள் ஏதும் இருக்கா? என்றார்.

இதில் காணப்படும் பிரச்சனைகளையும்,
சீர்திருத்தங்களையும் செய்து தடை நீக்கம் செய்ய வேண்டும்

#ஜல்லிக்கட்டு சார்ந்த நம்பிக்கைகள்

நம்பிக்கைகள் அனைத்தும் முன்னோர்களால் உருவாக்கப்படவை.அவை காலங்காலமாக ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு பரவியுள்ளன.உண்மையை விரும்பி ஏற்றுக்கொள்ளுதலே நம்பிக்கை எனப்படுகிறது.இந்நம்பிக்கைகளே மக்களின் பழக்கமாய் மாறியுள்ளன.

ஐக்கிய நாடுகளின் நிறுவனச் சட்டம் 1948இன்படி கலாச்சாரம் மற்றும் சமூக உரிமையைத் தொடர்ந்து பராமரிப்பதின் அவசியம் கருதியாவது இவ்வீரவிளையாட்டைத் தமிழ் மண்ணில் தொடர வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் தற்போதைய நம்பிக்கையாய் உள்ளது.!"

-ப.மணிகண்டபிரபு

@மணி

💥: குடும்பத்திற்காக மாடாய் உழைக்கும் அனைவருக்கும் மாட்டுப்பொங்கல்
நல்வாழ்த்துக்கள்

*மணி

💥: அதிகாரம் எப்போதும் அறிவை பார்த்து பயப்படும்
-ஞாநி

💥: திருத்தப்பட்ட பிறகே பிழை
தெளிவாக தெரிகிறது

💥: உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரித்தார் பலர்"

-தம்முடைய பலம் அறியாமல் ஒரு காரியத்தில் இறங்கி பாதியில் கைவிட்டவர்கள் பலர்

💥 உளுத்தம் பருப்பு, உளுந்தம் பருப்பு - எது சரி?
**
பயறு வகைச் செடியிலிருந்து விளையும் தானியம்தான் உழுந்து. உளுந்து என்றும் வழங்கப்படுவதுண்டு.

ழகர ளகரத்தில் இருவாறும் வழங்கப்படும் சில சொற்களில் உழுந்து/உளுந்து என்பதும் ஒன்று. பவழம்/பவளம், குழறு/குளறு என்று சில வழக்குகள் இவ்வாறு இருவகை ழ/ள பயன்பாட்டோடு வழங்கப்படுகின்றன. நிற்க.

உழுந்து என்னும் நிலைமொழி, வருமொழியான பருப்புடன் சேர்கையில் அம் சாரியை மிகும்.

புணர்ச்சியில் வல்லொற்று மிகுவதைப்போல அம் சாரியை மிகுவதும் ஒரு பண்பு. அத்துச் சாரியை மிகுவதைப்போல அம் சாரியை மிகுவது. 

குளம் + மீன் = இதைக் குளமீன் என்று புணர்த்த முடியாது.

குளம் + மீன் = குளம் + அத்து + மீன் = குளத்து மீன் என்றுதான் புணர்த்த வேண்டும். இங்கே ’அத்து’ என்ற சொல்லுருபு மிகுந்தது. அந்தச் சொல்லுருபுக்குச் சாரியை என்று பெயர். அத்து போலவே ‘அம்’ என்பதும் ஒரு சாரியை.

உழுந்து + பருப்பு = உழுந்து + அம் + பருப்பு

அப்படியானால் உழுந்தம்பருப்பு என்றுதானே ஆகவேண்டும் ? உழுத்தம்பகுப்பு என்றானது எப்படி ?

மென்தொடர்க்குற்றியலுகரச் சொற்கள் புணரும்போது, அச்சொல்லின் கடைசி எழுத்துக்கு முன்னுள்ள மெல்லின மெய் தனக்குரிய வல்லின மெய்யாகத் திரியும்.

உழுந்து என்பதில் கடைசி எழுத்துக்கு முன்னுள்ள மெல்லின மெய் ந் என்பதாகும்.

ந் - என்பதன் இனவல்லினம் “த்”. அதன்படி உழுந்து என்பது உழுத்து என்றாகி அம் சாரியை பெற்றுப் புணர்ந்தது.

உழுந்து + அம் + பருப்பு =>
உழுத்து + அம் + பருப்பு =>
உழுத்தப்பருப்பு.

வேம்பு + காய் = வேப்பு + அம் + காய் = வேப்பங்காய்
கரும்பு + சாறு = கருப்பு + அம் + சாறு = கருப்பஞ்சாறு
(ம் என்பதன் இனவல்லினம் ப்)

ஆக, உழுத்தம்பருப்பு என்பதே சரி.

உழுத்தங்களி, உழுத்தங்கஞ்சி என்று இன்றும் பேச்சில் வழங்குவர்.

- கவிஞர் மகுடேசுவரன்

எஸ்.ரா

ஒரு முறை டெல்லியில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன். சென்னையில் இருந்து வந்திருந்த அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு கம்பார்ட்மென்டில் இருந்தார்கள். அவர்கள் திடீரென ஆளுக்கு ஒரு பையோடு எழுந்து ரயில் பெட்டிகளுக்குள் நடக்கத் தொடங்கினார்கள். அந்த பையில் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி புத்தககங்கள் இருந்தன.

‘யார் எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் படிக்க எடுத்துக் கொள்ளலாம். படித்து முடித்தவுடன், அங்கேயே வைத்துவிடவும். சென்னை வந்தவுடன் நாங்கள் சேகரித்துக் கொள்கிறோம்’ என்றார்கள்.

ஆச்சர்யமாக இருந்தது. 32 மணி நேரப் பயணத்தில் பயணிகள் தாங்கள் விரும்பிய புத்தகங்களைத் தேர்வு செய்து படித்துக் கொண்டு வந்தார்கள். சிலர் படித்த புத்தகங்களைக் கொடுத்துவிட்டு, வேறு புத்தகங்களைப் பெற்று வந்தார்கள்.
சென்னையை நெருங்கும் போது நான் அந்த இளைஞர்களிடம் சென்று பாராட்டுத் தெரிவித்தபடியே, ‘இந்த யோசனை எப்படி உருவானது?’ எனக் கேட்டேன்.

‘பத்திரிகையில் ஒரு கட்டுரை படிச்சோம். அதுல ஒருத்தர் இப்படி எழுதியிருந்தார். அதை நாங்க ட்ரை பண்றோம்’ என்றார்கள்.

‘என்ன எழுதியிருந்தார்?’ எனக் கேட்டேன்.

“ராஜஸ்தான்ல ஒட்டகத்துல கொண்டு போய் புக்ஸ் தர்ற மொபைல் லைப்ரரி இருக்கு. தாய்லாந்துல குக்கிராமங்களுக்கு யானையில கொண்டுபோய் புக்ஸ் கொடுக்கிறாங்க. நம்ம ஊர்ல லாங் ஜர்னி போற ட்ரெயின்ல தனியா ஒரு கம்பார்ட்மென்ட்ல ஏன் லைப்ரரி வைக்கக் கூடாதுனு எழுதியிருந்தார். அதைத்தான் நாங்க ட்ரை பண்ணிப் பார்த்தோம்” என்றார்கள்.

‘அந்தக் கட்டுரையை நான்தான் எழுதினேன்’ என அவர்களிடம் சொன்னேன்.

சந்தோஷத்தில் சிரித்தபடியே, ‘சாரி சார், உங்க பெயரை மறந்துட்டோம்’ என்றார்கள்.

எழுத்தில் உருவான ஒரு பொறி என் கண் முன்னே செயலாக மாறியிருந்தது சந்தோஷம் அளித்தது.

- எஸ்.ரா அவர்களின் “இந்திய வானம்” என்னும் புத்தகத்திலிருந்து

*திருவள்ளுவர் தின வாழ்த்துக்கள்*

Saturday 10 February 2018

மணிகண்டபிரபு

[14/01, 3:14 p.m.] 💥TNPTF MANI💥: நீங்கள்தான் கடவுள் என்று கூறுங்கள். அப்போது நீங்கள் செய்யும்  அதர்மம் தெய்வீக நாடகம் என்று ஏற்றுக் கொள்ளப்படும்.

ஆனந்த் நீலகண்டன்

[14/01, 3:18 p.m.] 💥TNPTF MANI💥: “சிரிப்பதற்குக் காரணம் தேடுவதுதான் மனிதனின் மிகப்பெரிய பலவீனம்”

- எஸ்.ராமகிருஷ்ணன்

[14/01, 3:34 p.m.] 💥TNPTF MANI💥: கேள்வி கேட்டால் குழந்தை அம்மாவை பார்ப்பது,உண்மை சொல்லவா பொய் சொல்லவா என்ற தொனியிலேயே இருக்கிறது

[14/01, 5:12 p.m.] VIJAI TNPTF: உன் ஞாபகமாய்
என்னிடம் எதுவுமே இல்லை
உன் ஞாபத்தைத் தவிர.
_தபூ சங்கர்.

[14/01, 5:54 p.m.] 💥TNPTF MANI💥: விவாகரத்து முடிந்தபின்
யாரிடத்தில் இருக்கும்
திருமண ஆல்பம்

-ராஜா சந்திரசேகர்

[14/01, 5:57 p.m.] 💥TNPTF MANI💥: வந்த உடனேயே போகவேண்டும் என்பவர்கள் எதற்கு வருகிறார்கள்

-ராஜா சந்திரசேகர்

[14/01, 6:10 p.m.] 💥TNPTF MANI💥: பக்கத்து இருக்கை நிரம்பாத பயணத்துக்கான பிரார்த்தனையின் முடிவில் வந்து அமர்பவன் கடவுள் என்று அறிக

*மணி

[14/01, 9:40 p.m.] VIJAI TNPTF: அழும் பெண்ணின்
அருகில் போய்
கண்ணீரைத் துடைத்துக்கொள்
என்று சொல்வதற்கு
கருணை வேண்டும்

இதற்கு
யார் காரணம்
என்று கேட்க‌
துணிவு வேண்டும்

அருகில் போய்
துணிந்து கேட்டேன்
சொன்னாள்
உன்னைப் போல்
ஒருவன்தான் என்று...

_ராஜா சந்திரசேகர்...

[14/01, 10:19 p.m.] VIJAI TNPTF: உடைந்த வார்த்தைகள்
வலிகளைத்
தருவதென்னவோ
உடைத்த எனக்குதான்...
_ராஜா சந்திரசேகர்.
[14/01, 11:37 p.m.] 💥TNPTF MANI💥: இரவின் நீளம் தூக்கம் வராத போதுதான் தெரிகிறது.!"

ப.பி

[14/01, 10:19 a.m.] 💥TNPTF MANI💥: வருந்துகிறேன்

நீ இட்ட கோலத்தில்
அறியாமல் நடந்த என் சுவடுகள்.
தடங்களுக்கு வருந்துகிறேன்.

-பேயோன்

[14/01, 10:24 a.m.] 💥TNPTF MANI💥: விலை பார்க்காமல் புத்தகம் வாங்குமளவிற்கு சம்பாதிக்க வேண்டும்

[14/01, 11:01 a.m.] 💥TNPTF MANI💥: பசியோடிருக்கும் போது
விக்கல் வந்தது
அம்மாதான் நினைத்திருப்பாள்

[14/01, 11:03 a.m.] முருகேசன்: எந்த நிழலிலும்
உன் ஆறுதல் இல்லை.
எந்த வாழ்த்திலும்
உன் குரல் இல்லை.
----- பழநிபாரதி

[14/01, 12:12 p.m.] 💥TNPTF MANI💥: மாடு நான்வெஜ்
மாட்டுப்பால்
வெஜ்
-சங்கரநாராயணன்

[14/01, 12:22 p.m.] 💥TNPTF MANI💥: சாகும் வரை உன் பிணத்தை நீ தான் சுமக்க வேண்டும்
-இக்பால்

கடுப்பு பொங்கல்

கடுப்பு பொங்கல்-மணி

ஆறு மணிக்கு
அலாரம் வைத்து எழுந்தது
மலையேறியாச்சு

டி.வி பார்த்து
முகநூலில் லைக்கிட்டு
வாட்ஸ் அப்பில் வாழ்த்து சொல்லி
பட்டி மன்றம் பார்த்தவுடன்
பாதிப் பொங்கல் முடிந்தது

தேங்கி வழிந்து கொண்டிருக்கும்
வாட்ஸ் அப் குழுக்களில்
க்ளியர் சார்ட் செய்தவுடன்
அன்ரூல்ட் நோட்டில்
எழுதிப் பழகிய நிம்மதி

ரிமூவ் டேக் செய்தபின்பு
கேன்டி கிரஷ் தவிர்த்துவிட்டு
பொங்கல் தின்று படுத்தால்
நாள் முழுதும் தூக்க தண்டனை தான்

ரேசன் கடை கரும்பு
தின்னுட்டு
வீதியை பார்த்தால்
பணமில்லாத ஏடிஎம் மாதிரி
வெறிச்சோடி கிடக்குது

கட்டிடமும் கட்டிடமும்
சார்ந்த இடத்தில் இருந்துகொண்டு
வயலும் வயல்சார்ந்த
இடம் பார்த்து வருத்தமடையுது மனம்

வார விடுமுறையில் தான்
வாழ்க்கை கொஞ்சம் மிஞ்சுகிறது
வலிகளை நினைத்தால்
துக்கம் மட்டுமே எஞ்சுகிறது"!

தோழமையுடன்
மணிகண்டபிரபு

மணி

[13/01, 5:05 p.m.] 💥TNPTF MANI💥: மேடைமேல் நின்று கீழே உள்ள உங்களிடம் கக்குகிற  விஷயங்களை ஒரு பிஸ்கட்டைப் போலக் கவ்விக்கொண்டு வாலை ஆட்ட வேண்டும்
-பிரபஞ்சன்

[13/01, 6:34 p.m.] 💥TNPTF MANI💥: உனக்கு என்ன வேணும்னு நீ புரிஞ்சிக்கிற வரைக்கும் உனக்கு வாழ்க்கை நரகம் தான்
-பாலகுமாரன்

[13/01, 6:35 p.m.] 💥TNPTF MANI💥: வரைந்து பார்த்த வீடுகளில் வசிக்காமல் போனவை நிறைவேறாத விருப்பமே

[13/01, 6:38 p.m.] 💥TNPTF MANI💥: survival of fittest
என்பது வேடிக்கை பார்ப்பவரை மனதில் வைத்து எழுதியிருப்பார் டார்வின்
#வேடிக்கை பார்ப்பது பிழைத்துக் கொள்ளும்

[13/01, 8:03 p.m.] 💥TNPTF MANI💥: அதிகாரத்தைப் புரிந்துகொள்வதற்கும், எதிர்கொள்வதற்கும், அதிலிருந்து மீள்வதற்கும் சிந்திப்பதை தவிர நமக்கு வேறு வழியில்லை
-சுகுணா திவாகர்

[13/01, 8:27 p.m.] 💥TNPTF MANI💥: கோர்ட்டில் சொல்லும் முதல் பொய்
சொல்வதெல்லாம் உண்மை என்று சொல்வது

[13/01, 9:03 p.m.] 💥TNPTF MANI💥: கையில் அள்ளிய நீர்

அள்ளி
கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்
நதிக்கு அந்நியமாச்சு
இது நிச்சலனம்
ஆகாயம் அலை புரளும் அதில்
கை நீரை கவிழ்த்தேன்
போகும் நதியில் எது என் நீர்?

-சுகுமாறன்

[14/01, 5:28 a.m.] 💥TNPTF MANI💥: நான் நகரும் சவப்பெட்டி
நான் சுமந்து செல்வது
என் உயிரை

-ராஜா சந்திரசேகர்

[14/01, 5:31 a.m.] 💥TNPTF MANI💥: ஒப்பீடு நாம் தாழ்த்தப்படும் போது மட்டும் கசக்கிறது.

[14/01, 5:44 a.m.] 💥TNPTF MANI💥: பேனா எடுக்கும்
மகள்கள்
தகப்பனின்
உள்ளங்கை
முழுதும்
எழுதுகிறார்கள்
அடுத்த
பக்கமென
வலது கையையும்
விரிக்கிறாரார்கள்!

#ப்ராங்ளின் குமார்

[14/01, 5:48 a.m.] 💥TNPTF MANI💥: கரைவதும் அனுபவமாவதும் தவிர வேறென்ன இருக்கிறது கவிதையில்..

~ லா.ச.ரா

[14/01, 5:48 a.m.] 💥TNPTF MANI💥: நீங்கள் எதை இழந்தீர்களோ
அதை மற்றவர்கள் பெற்றிருப்பார்கள்.!
-முதலாளித்துவம்

*மணி