Thursday 27 September 2018

படித்ததில் பகர்ந்தது

[29/07, 10:22 am] TNPTF MANI: கலைஞர் உடல் நலக்கோளாறால் ஒருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது டாக்டர் கூறுகிறார்.

“மூச்சை நல்லா இழுத்துப் புடிங்க” (கலைஞர் மூச்சை இழுத்துப் பிடிக்கிறார்)

“இப்போ மூச்சை விடுங்க”

“மூச்சை விடக்கூடதுன்னுதான் டாக்டர் நான் மருத்துவமனைக்கே வந்திருக்கேன்”
[29/07, 10:22 am] TNPTF MANI: ஹாக்கிப் போட்டி ஒன்றிற்கு கலைஞர் பரிசளிக்க வந்திருக்கிறார். இரண்டு அணிகளும் சமமான கோல். டாஸ் போடப்படுகிறது. “தலை” கேட்ட அணி தோற்று,  “பூ” கேட்ட அணி ஜெயிக்கிறது.

கலைஞர் இப்போது பேசுகிறார்.

“இது நாணயமான வெற்றி. நாணயத்தால் தீர்மானிக்கப்பட்ட வெற்றி. “தலை” கேட்டவர்கள் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார்கள். ஏனென்றால் “தலை” கேட்பது வன்முறை அல்லவா?” என்றார் கலைஞர்.
[29/07, 10:22 am] TNPTF MANI: கவியரங்கம் ஒன்றில் புலவர் புலமைப் பித்தன் ஈழத்தைப் பற்றி ஒரு கவிதை பாடுகிறார். “கலைஞரே எனக்கொரு துப்பாக்கி தாருங்கள்!”“ என்று ஆவேசத்துடன் முடிக்கிறார். கலைஞர் வசம்தான் அப்போது காவல் துறை இருக்கிறது.  “புலவேரே! வேறு ஏதாவது  ‘பாக்கி’ இருந்தால் கேளுங்கள். துப்”பாக்கி”  மட்டும் என்னால் தர இயலாது”
[29/07, 10:22 am] TNPTF MANI: கவிஞர் கண்ணதாசன் தி.மு.க.வில் இருந்த போது கலைஞர் அவரிடம் கேட்கிறார்.

“இந்த முறை தேர்தலில் எங்கு நிற்கப் போகிறீர்கள்..?

” எந்த தொகுதி கேட்டாலும் ஏதாவதொரு காரணத்தைச்  சொல்லி மறுத்து விடுகிறீர்கள்.  நான் இம்முறை தமிழ்நாட்டில் நிற்கப்போவதில்லை. பாண்டிச்சேரியில் நிற்கப் போகிறேன்..!”

சிரித்தபடி தனக்கே உரித்தான பாணியில் கவிஞருக்கு இருக்கும் மதுப்பழக்கத்தை மனதில் கொண்டு …

” பாண்டிச்சேரி போனா உங்களால் நிற்க முடியாதே..!”
[29/07, 10:22 am] TNPTF MANI: ஒருமுறை செல்வி ஜெயலலிதா  “நான் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு நன்மை செய்வேன்” என்று கூறியபோது “அம்மையார் ஆட்சியில் இல்லாமல் இருப்பதே மக்களுக்கு செய்யும் பெரிய நன்மைதான்” என்றார்.
[29/07, 10:25 am] TNPTF MANI: ஒலிபெருக்கியில் கட்சிக்காரர்: அடுத்து மீன்வளத்துறை அமைச்சர் பேசுவார் (பேச எழுந்த அமைச்சரின் காதில் கலைஞர் கிசுகிசுக்கிறார்.”அயிரை மீன் அளவுக்குப் பேசு, அதிகமாய் பேசாதே!” இதனை ஒரு நிகழ்ச்சியின்போது கவிஞர் வைரமுத்து சொன்னது.
[29/07, 10:25 am] TNPTF MANI: 1970 களில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அரசுப் பேருந்துகளில் திருக்குறள் எழுதி வைக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது, இதன் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் கருத்திருமன், விளையாட்டாக,

பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும்
(பெரியாரை மதிக்காமல் நடந்துகொண்டால் பெரும் துன்பத்தை அனுபவிக்க வேண்டி வரும்)

என்ற குறளை ராஜாஜி வீட்டிலும்

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
( இறைவன் திருவடிகளை வணங்காவிட்டால், படித்தும் பயனில்லை)

என்ற குறளை பெரியார் வீட்டிலும் வைக்க அரசு ஏற்பாடு செய்யுமா என்று கேட்டார்.

முதல்வர் கருணாநிதி உடனே எழுந்து,
”யார் வீட்ட்டில் எந்த குறளை வைக்கிறோமோ இல்லையோ

யாகவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

என்ற குறளை கருத்திருமன் வீட்டில் வைக்க நிச்சயமாக ஏற்பாடு செய்யப்படும்’ என்றார். அவையில் சிரிப்பலை எழுந்தது
[29/07, 10:25 am] TNPTF MANI: ஆர்.சிங்காரம்: ‘‘இந்த சட்டமன்றத்தில் நிலைய வித்வான்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள்தான் எப்போது பார்த்தாலும் வாசித்துக் கொண்டே இருக்கிறார்கள். இது நியாயம்தானா? புதிய வித்வான் களுக்கு வாய்ப்பு தர வேண்டாமா? நாங்கள் எல்லாம் புதிய வித்வான் கள்!’’

கருணாநிதி: ‘‘நான் ஏறத்தாழ 25 ஆண்டுகளாக இங்கே இருக்கிறேன். நானும் பழைய நிலைய வித்வான் தானா? நான் வாசிக்கலாமா, கூடாதா?’’
[29/07, 10:25 am] TNPTF MANI: வி.பி.துரைசாமி: ‘‘ஆஞ்சநேயர் கோயிலில் அசையும் சொத்து எவ்வளவு? அசையா சொத்து எவ்வளவு?’’

கருணாநிதி: ‘‘அசையும் சொத்து, அங்கே வந்து போகும் பக்தர்கள். அசையா சொத்து ஆஞ்சநேயர்!’’
[29/07, 7:25 pm] TNPTF MANI: வெல்வதற்காக அல்ல
விளையாடுவதற்காகவே விளையாட்டு

-படித்தது
[29/07, 7:34 pm] TNPTF MANI: பாதை ஒன்று கிடைத்திருக்கிறது வெகு தூரம் நடக்க நான் மட்டும் போதும், வெகுநேரம் நடக்க நீயும் வேண்டும்.

-நித்திலன்
[29/07, 7:36 pm] TNPTF MANI: ஜன்னலை திறந்தேன்
அகப்பட்டது வானம்
"இணையம்"!
[29/07, 7:43 pm] TNPTF MANI: அசோகப் பேரரசு,
மெளரியப் பேரரசு,
முகலயாப் பேரரசு
எல்லாவற்றையும்
எல்லை பிரித்து
வர்ணம் அடித்துக்
காட்டிய கலர் பென்சில்
என் பரணில் கிடைத்தது
நேற்று.

அந்தப் பேரரசுகள்
கிடக்கின்றன
வேறு ஒரு பரணில்.

#முகுந்த்_நாகராஜன்
[29/07, 7:47 pm] TNPTF MANI: கோபங்கள் மோதிக் கொண்டன.
கருத்துக்கள் உடைந்து கிடந்தன.

-ராஜா சந்திரசேகர்
[30/07, 6:42 am] TNPTF MANI: நீங்கள் ஏற்றுக்கொண்டால் உண்டு, இல்லையேல் சந்தேகம் உங்களுடையது, உண்மை என்னுடையது,அவ்வளவுதான்.
  - லாசரா,
[30/07, 6:47 am] TNPTF MANI: அழைத்துப் போய் வந்த
   ஆசிரியரின் அத்தனை
   கெடுபிடிகளுக்குப் பின்னும்
   இன்னமும் நினைவில்
   அந்த ஸ்கூல் பயணம்
   இன்பச் சுற்றுலா என்றே..!”

-செல்வராஜ் ஜெகதீசன்.
[30/07, 12:30 pm] TNPTF MANI: ஒரு வலுவான
உலுக்கலுக்கு
உள்ளத்தை
உட்படுத்தியபோது
வினா,துணைவினாக்கள்
உள் வினாக்கள்
சடசடவென உதிர்ந்துவிட
நின்றேன்
பளிச்சென்று
ஒரு விடையாக

ஆயினும்
எந்த வினாவின் விடையாக நான்?

-தமிழன்பன்
[30/07, 12:50 pm] TNPTF MANI: எண்களில் 4 என்ற எண் மட்டுமே
தன் பொருளுக்கேற்ப அதே எண்ணிக்கையிலான எழுத்துக்களை கொண்டுள்ளது
[30/07, 1:00 pm] TNPTF MANI: தந்தது எதையும்
கேட்பதில்லை உலகம்
உலகம் போல்
உள்ளம் வேண்டும்
-ராஜா சந்திரசேகர்
[30/07, 8:08 pm] TNPTF MANI: நீ அருந்தும் மெளனத்தில் 
என் ஏதோ ஒரு சொல் 
இனிப்பாக இருக்கக்கூடும்

-ராஜா சந்திரசேகர்
[30/07, 8:14 pm] TNPTF MANI: நட்பு புரிதலோடு இருக்கும் வரை நன்றாக இருக்கும்.எடை போடுதலாக மாறும் போது உடைந்து விடும்

-படித்தது
[31/07, 7:21 am] TNPTF MANI: மகுடேசுவரனின் 'சென்ட் ரப்பரை'
நான் திருடியதாய் நினைத்து
முழிகளை வீங்கவைத்த
இரண்டாம் வகுப்பு மிஸ்ஸிற்கு
குற்றத்தை நிரூபிக்கக் கிடைத்த
ஒரே தடயம்
என் கறுப்பு முகம்

- நிறமறியா தூரிகை.
[31/07, 7:24 am] TNPTF MANI: மனிதனாய் இரு;
மனிதனுக்கு அடிமைப்பட்டவனாய் இராதே!
உன் பாதையை நீயே வகுத்துக்கொள்
வழிகாட்டியை தேடி அலைந்து தலை கிறுகிறுக்கும் ஒருவனாக இருக்காதே"

-ரூமி
[31/07, 7:34 am] TNPTF MANI: என்னை எடை போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல நான் விலைபொருளும் அல்ல

-படித்தது
[31/07, 12:52 pm] TNPTF MANI: குறை சொன்னது யார் என்பதை இரண்டாவது பார்
சொல்லப்பட்ட குறை
உன்னிடம் உண்டா
என்று முதலில் நீ பார்!
[31/07, 10:29 pm] TNPTF MANI: காலம் எந்தக்  காயத்தையும் ஆற்றுவது இல்லை அது நம் மனதைப்  பக்குவபடுத்துகிறது..அவ்வளவே...!!

-படித்தது

மணிகண்டபிரபு

[25/07, 7:01 am] TNPTF MANI: செத்த மீன்

— கு.அழகர்சாமி

ஒரு மீன் வரைந்து ’கலர் அடி’ என்பார்
டீச்சர்.

குழந்தை
கலரடிக்கும் கட்டத்துக்கு வெளியே.

‘கட்டத்துக்குள் அடி’ என்பார்
டீச்சர்.

குழந்தை
மறுபடியும் கலரடிக்கும் கட்டத்துக்கு வெளியே
மீன் நகர்ந்திருக்கும் நீந்தியென்று.

கத்துவார் டீச்சர் இம்முறை
’கட்டத்துக்குள் அடி’  என்று.

பரிதாபமாய் டீச்சரைப் பார்த்துக் கொண்டே
கட்டத்துக்குள் கலரடிக்கும் குழந்தை
செத்த மீனின் மேல்.
[25/07, 7:03 am] TNPTF MANI: மூட நெஞ்சே
தலையிலிடி விழுந்தால் சஞ்சலப்படாதே
ஏது நிகழினும் நமக்கேன் என்றிரு
கவலைப்படுதலே கருநரகம்
கவலையற்றிருத்தலே முக்தி ”
நெஞ்சம் துவளாதிருத்தல் சுகம்

-பாரதியார்
[25/07, 7:07 am] TNPTF MANI: எங்கு போனாலும்
எனக்கு ஓர் இடம் கிடைக்கிறது
எங்கு போனாலும்
என் இடம் பறிபோகிறது.
-பேயோன்
[25/07, 9:13 am] TNPTF MANI: வெறுத்தபின் அதற்கான நியாயங்களை சிந்தித்து சிந்தித்து உருவாக்கிக் கொள்கிறோம்
-ஜெயமோகன்
[25/07, 1:03 pm] TNPTF MANI: புல் முளைத்தபோதல்ல
சொல் முளைத்தபோதே
பூமி உயிர் பெற்றது

-அப்துல்ரகுமான்
[25/07, 1:08 pm] TNPTF MANI: குளிர் காய்வதற்காய்
சுள்ளி பொறுக்கச் சென்றாய்,
சுள்ளி பொறுக்குவதிலேயே உன் காலம் கழிந்துவிட்டதே,
எப்போது நீ குளிர் காயப் போகிறாய்?

-அப்துல்ரகுமான்
[26/07, 8:08 am] TNPTF MANI: பொறாமைப்படுபவனின்
மௌனமே
மிகவும்
சப்தமானது...

-கலீல் ஜிப்ரான்
[26/07, 7:20 pm] TNPTF MANI: பையன் கேட்டான் அப்பாவிடம். ''அப்பா, நீயும் அம்மாவும் ஹனிமூன் போனப்ப நான் உன்கூட வந்தேனா, அம்மாகூட வந்தேனா?''

                அப்பா சொன்னார். ''போகும்போது என் கூட வந்தே, வரும்போது அம்மாகூட வந்தே.''

-சுஜாதா
[27/07, 7:29 am] TNPTF MANI: என்னை வழிநடத்திய திருக்குறள்: ‘அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும், உள்ளழிக்க லாகா அரண்‘:
-முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்"
[27/07, 12:59 pm] TNPTF MANI: புரிதல் இல்லாதபோது வார்த்தைகள்
அர்த்தமற்றதாகி விடுகிறது.!!
[27/07, 1:06 pm] TNPTF MANI: கோபம் வந்தால் கொட்டி விடுங்கள்.. அடக்கி வைக்காதீர்கள்.. அந்த கோபம் சாதாரண தவறு செய்தவரிடம் வெடித்துவிடும்..!!""

-படித்தது
[27/07, 2:06 pm] TNPTF MANI: எந்த சண்டையிலும் கடைசி வார்த்தை யாருடையதோ, அவரே அதிகம் குற்றவுணர்வு சுமக்க வேண்டியதாகிறது”

-யமுனை
[27/07, 5:20 pm] மினிமீன்ச்: நான் என்னையே தேடிச் செல்கிறேன் . இத்தேடலில் தான் என்னுடைய சாராம்சம் உள்ளது. தேடலின் போதுநான் நடந்து செல்லும் பாதை கவிதையினுடையது

-பிரமிள்
[27/07, 5:21 pm] மினிமீன்ச்: வயிற்றுப் பசிதீர்க்க
வராதா என்றேங்கி
மழைக்கு அண்ணாந்த
கண்கள்
கண்டு கொண்டன -

வானம்
எல்லையில்லாதது.

-பிரமிள்.
[28/07, 6:53 am] TNPTF MANI: அடிமையிடம் நீ அடிமை எனச் சொல்
அவன் கிளர்ந்தெழுவான்
-அம்பேத்கர்
[28/07, 7:21 am] TNPTF MANI: பிறை தெரியாத ரம்ஜான்
ஆயுள் அதிகமானது..
ஆடுகளுக்கு
-மு.முருகேஷ்
[28/07, 7:26 am] TNPTF MANI: உற்சாகம் எப்போதும்
விளக்கம் சொல்வதுமில்லை
விளக்கம் கேட்பதுமில்லை..!!..

-கலீல் ஜிப்ரான்
[28/07, 8:02 am] TNPTF MANI: நமக்கு எது வசதி என்பதில்
எது சரி என்பதை மறந்து விடுகிறோம்.

-படித்தது
[28/07, 9:13 am] TNPTF MANI: காலை எழுந்தவுடன்
படிப்பென்றான்
பாரதி..
படிப்பவனுக்கு மட்டும்தான்
காலையே எழுகிறது
-தமிழன்பன்
[28/07, 11:26 am] TNPTF MANI: குற்ற உணர்வு என்பது
ஆரோக்கியமானது...
அது, நியாயவாதிகளுக்கு மட்டுமே தோன்றும் என்பதால்...

-படித்தது
[28/07, 11:29 am] TNPTF MANI: தேநீர் அருந்தியவன்
மழையை ரசிக்கிறான்
மழையில் நனைந்தவன்
தேநீரை ரசிக்கிறான்

-மணி
[28/07, 5:27 pm] TNPTF MANI: பயத்திலிருந்து எது விடுவிக்கிறதோ அதுதான் தெய்வம்
-சரவணன் சந்திரன்
[28/07, 11:13 pm] TNPTF MANI: பகலைக் கடப்பதற்கு ஆசைகள் போதும்.
இரவைக் கடப்பதற்குத்தான் துயரில் ஆழவேண்டும்!
-மகுடேசுவரன்
[29/07, 7:11 am] TNPTF MANI: நீங்கள் மானுட மோதலை எளிமையாக்கி விட்டீர்கள். மானுட போராட்டம் அகிம்சைக்கும் வன்முறைக்கும், வாய்மைக்கும் பொய்மைக்கும், நியாயத்துக்கும், அநியாயத்துக்கும் இடையேயான ஒன்றாக நீங்கள் எளிமைப்படுத்தி விட்டீர்கள். ஆனால், வாழ்க்கையில் ஒரு நியாயமும், இன்னொரு நியாயமும் தானே மோதிக்கொள்கின்றன. ஒரு உண்மையும், இன்னொரு உண்மையும் தானே போரிடுகின்றன."

- காந்தியிடம் மேனாள் குடியரசு தலைவர் கே.ஆர். நாராயணன் எழுப்பிய கேள்வி.
[29/07, 7:16 am] TNPTF MANI: அக்காலத்தில் பாடல்கள் ஏடுகளில் எழுதியிருக்கும்.அதில் சில செல்லறித்தும்,அழிந்தும் போயிருக்கும்.இதனை ஒட்டிக்கொடுப்பதற்கென்றே புலவர்கள் இருந்தார்கள்.
சொந்தமாய் பாடவராது.
ஆனால் ஊகித்து பாடி ஒட்டிக்கொடுப்பதால் அவர்களுக்கு ஒட்டக்கூத்தர்கள் என பெயர்
-அ.முத்துலிங்கம்
[29/07, 7:21 am] TNPTF MANI: எதுவாக என்றாலும்
"இரு" க்க ஆசைப்படு
"ஆக" ஆசைப்படாதே

-ஓஷோ
[29/07, 8:04 am] TNPTF MANI: யானைகள் எவ்வளவு பெரியவை
அவை மிக அதிகமாக உண்கின்றன
அவை நம் வயல்களுக்குள் புகுந்து
சூறையாடுகின்றன
நமக்கு யானைகளைக் கண்டால்
அச்சமாக இருக்கிறது
ஆனால் நாம் யானைகளை வெறுப்பதில்லை.

எலிகள் எவ்வளவு சிறியவை
அவை குறைவாக உண்கின்றன
அவை நம் இருப்பிடங்களுக்குள் புகுந்து
நம் தானியங்களை, பழங்களைக் கொறிக்கின்றன
எலிகளிடம் நமக்கு பயமில்லை
ஆனால் நாம் எலிகளை
மனதார வெறுக்கிறோம்.

யானைகள் வெளிப்படையாக நடந்துகொள்கின்றன
அவற்றால் தம்மை ஒளித்துக்கொள்ள முடியாது
அவை நம்மை நேரடியாகத் தாக்குகின்றன
நம்மால் அவற்றைச் சகிக்க முடியும்.

எலிகள் நம்மை ஏமாற்றுகின்றன
நம்மை முட்டாளாக்குகின்றன
நாம் தூங்குவதற்காகக் காத்திருக்கின்றன
நம்மைப்போலவே அவை
சாதுர்யமாக நடந்துகொள்கின்றன
அது நம்மைப் பாதுகாப்பற்றவர்களாக்குகிறது
நம்மால் எலிகளை சகித்துக் கொள்ள முடியாது.

முக்கியமாக
யானைகளைக் கொல்வதுபோல
அவ்வளவு சுலபமாக
நம்மால் எலிகளைக் கொல்ல முடியாது.

- மனுஷ்ய புத்திரன்
நூறு பெளர்ணமிகளின் வெளிச்சம்/ உயிர்மை
[29/07, 8:21 am] TNPTF MANI: சுயநலம் நமக்கு இருந்தால் பிடிக்கிறது,அடுத்தவருக்கு இருந்தால் பிடிப்பதில்லை

@MANIPMP

[20/07, 8:33 pm] TNPTF MANI: பயணங்கள் முடிவதில்லை
என்பது போய்
பயணங்களில் முடிவதில்லை
என்றாகிவிட்டது உடல்நிலை!

-சஞ்சீவிபாரதி
[20/07, 9:19 pm] TNPTF MANI: நடு இரவில்
ஆள் அரவமில்லா தெருவில்
வீதியோரம் சுருண்டு
படுத்து விழித்தே
இரவைக் கடக்கும்
அவனின் அரிசியில் மட்டும்
கடவுள் இன்று பெயர்எழுத

மறந்து போனார்..

-படித்தது
[20/07, 9:32 pm] TNPTF MANI: "கடந்து போகும்
ஜோடிக் கால்களின்
பின்னாலெல்லாம்
ஓடி ஓடிக் களைத்து
ஏமாந்து திரும்புகின்றன
அநாதை நாய்க்குட்டிகள்!
செய்யாத உதவிக்கு
வாலாட்டியபடியே!"

-படித்தது
[21/07, 6:57 am] TNPTF MANI: இனி ஒன்றுமில்லை என அழுது தீர்க்கும் பொழுது
கடைசி நொடியில் பிறக்கும் துணிவுதான் மீண்டும் வாழ்வை
வாழச் சொல்கிறது.!

-படித்தது
[21/07, 7:12 am] TNPTF MANI: வழுக்கைத் தலைகளைப் பார்க்கும்போதெல்லாம்
நாளைய நானாகத் தெரிகிறார்கள் அவர்கள்!
ஒருவேளை அவர்களுக்கு
நேற்றைய அவர்களாகத் தெரியலாம் நான்!

-மகிழ்நன்
[21/07, 9:45 am] TNPTF MANI: கனவில் இறந்தேன்
விழிக்கவே மனமில்லை
விடிந்த பிறகும்

-கோ.வசந்தகுமாரன்
[22/07, 7:04 am] TNPTF MANI: ஓடுகிற கோழையை பார்த்தால் விரட்டுகிற கோழை வெறியனாக மாறுவான்
-ஜெயகாந்தன்
[22/07, 10:56 am] TNPTF MANI: #வரிசை

மோதி மோதி
முடிந்தவரை முன்னே
நகர்த்துகிறோம்
வரிசையை

எல்லோரையும்
உற்றுப்பார்த்து
முன் நிற்போரை
பின்பற்றி நகர்கிறோம்
எறும்பை போல

புதிய வரிசை
உருவாகாமல் முடிந்தவரை
கற்போடு காப்பாற்ற
வேண்டியுள்ளது
வரிசையை

கால் மாற்றியும்
கை கட்டியும்
சுவரையே பார்த்து
யார் நின்றாலும்

கடைசியில் நிற்பவரே
கட்டுக்குழையாமல்
பாதுகாக்கிறார் வரிசையை

ஒரு வாக்குறுதியை
காப்பது போல்
இறுதிவரை
அடைகாக்க வேண்டியுள்ளது
வரிசையை

-மணிகண்டபிரபு
[22/07, 12:01 pm] TNPTF MANI: கோவை மக்களின் குடிநீரை விழுங்கும் சூயஸ்
-சி.பத்மநாபன்

கட்டுரை சுருக்கமாக

*கோவை மாநகராட்சி நிர்வாகம் சூயஸ் நிறுவனத்திற்கு குடிநீர் விநியோக உரிமை வழங்கியுள்ளது.

#10ஆண்டு கால பட்ஜெட்

*26 ஆண்டுகளுக்கு குடிநீர் வினியோக உரிமை கொடுத்ததற்கு ரூ3150 கோடி செலவாகும்.இது மாநகராட்சியின் 10ஆண்டுகால பட்ஜெட்

*மாநகரம் முழுவதும் ஒன்றரை லட்சம் இணைப்புகளும் மீட்டர்களும் மாற்றப்போகிறார்கள்

*இதற்கு ஆகும் செலவை வீட்டு உரிமையாளர்கள் தான் கட்ட வேண்டும்.இதனால் வாடகைக்கு குடியிருப்போர் நிலை மோசமாகும்

*அனைத்துப்பொருட்களும் வேனில் வரும்.இணைப்பை கொடுப்பார்கள்.அவர்கள் நிர்ணயிப்பதே கட்டணம்.

*குழாய் பழுது ஏற்பட்டால் சூயஸ் நிறுவனமே பழுது பார்க்கும்.

#சூயஸ் நிறுவனம்

*1822ம் ஆண்டு முதல்.உலகம் முழுக்க 15கோடி வாடிக்கையாளர்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்கிறது

*150 ஆண்டுக்கு மேலான நிறுவனம், 11கோடி வாடிக்கையாளர்,உலகில் 7000நகரங்களுக்கு நீர் விநியோகம் செய்கிறது

*சூயஸ் நிறுவன பங்களிப்போடு தனியார் மயமாக்கப்பட்ட தண்ணீர் விநியோகம் பாரீஸ் உட்பட பல நகரங்களில் இருந்து அகற்றி மீண்டும் மாநகராட்சியே  பராமரிக்கிறது.குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டதே காரணம்

*உருகுவேயில் பொது மக்கள் வாக்கெடுப்பு நடத்தி 65% மக்கள் பரிந்துரைப்படி இயற்கை வளங்களை பன்னாட்டு கம்பெனிகளுக்கு தாரை வார்ப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

*தென் ஆப்பிரிக்காவில் குடிநீர் கட்டணம் செலுத்தாததால் 2003-04 ம் ஆண்டில் ஒரு கோடி மக்களின் குடிநீர் இணைப்பை துண்டித்தது

இந்த திட்டத்திற்கு எதிராக அனைத்து கட்சியினரும் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது
[22/07, 7:19 pm] TNPTF MANI: தோற்றம்

வாழ்க்கை சிக்கலானது
அல்லது சிக்கலானது போல் தோன்றுவது,
சுலபமானது
அல்லது சுலபமானது போல் தோன்றுவது

#கல்யாண்ஜி
[23/07, 6:49 am] TNPTF MANI: கிழிசல்கள்

ஆரியப்பட்டா வானத்தை கிழித்தது
அணுகுண்டு பூமியைக் கிழித்தது

அரைக்கைச் சட்டைகள்
கிழிந்தது மட்டுமே
மனதில் நிற்கிறது

பிள்ளை வேண்டாமென்று
கருப்பையைக் கிழித்தார்கள்
உணவும் எதற்கென்று இனி
இரைப்பையையும் கிழிப்பார்கள்

எல்லாம் கிழிந்த
எங்கள் தேசத்தில்
வாய் கிழிவது மட்டும்
வகை வகையாயிருக்கும்

-கந்தர்வன்
[23/07, 6:50 am] TNPTF MANI: வாழ்க்கை என்பது பல்மருத்துவர் முன்பு அமர்ந்து இருப்பதுபோன்றது.
மோசமானது இனி தான் வரப்போகிறது என எண்ணியிருப்பாய்.ஆனால்அது முன்பேமுடிந்திருக்கும்

-பிஸ்மார்க்
[23/07, 7:01 am] TNPTF MANI: இளையராஜா
-படித்ததில் பிடித்தது

1.ஒரு பாடலை உருவாக்க வெளிநாட்டு பயணமோ, அழகான லொகேஷன்களோ, வார அல்லது மாதக்கணக்கில் நேரமோ இளையராஜாவுக்குத்
தேவைப்பட்டதில்லை. தென்றல் வந்து தீண்டும்போது... என்ற பாடலை உருவாக்க இசைஞானி எடுத்துக் கொண்டது வெறும் அரை மணி நேரம்தான்.

2. இளையராஜா வெறும் அரைநாளில் மொத்த ரீரிகார்டிங்கையும் செய்துமுடித்த படம் ''நூறுவாது நாள்"

3. சிகப்பு ரோஜாக்கள் படத்திற்கான ரீரிகார்டிங்கிற்கு ஆன மொத்த செலவு வெறும் பத்தாயிரம்.. மூன்றே நாளில் வெறும் ஐந்தே ஐந்து இசைக்கலைஞர்களை கொண்டு அந்த படத்திற்கு இசை சேர்க்கப்பட்டது

4. எல்லோரும் இசையை வாசித்துதான் காட்டுவார்கள். ஆனால் ராஜா மட்டும்தான் இசையை 'பக்கா' நோட்ஸாக இசைக் கலைஞர்களுக்கு எழுதியே கொடுப்பவர். அவர் நோட்ஸ் எழுதும் வேகம் பார்த்து சர்வதேச இசை விற்பன்னர்களே மிரண்டு போனது வரலாறு.

5. அமிர்தவர்ஷினி என்ற மழையை வரவழைப்பதற்கான தனித்துவமுடைய ராகத்தை ஒரு கோடைப்பொழுதின் பிற்பகலில் "தூங்காத விழிகள்
ரெண்டு" பாடலை அமைத்து மழையையும் வரவழைத்தவர் இசைஞானி

6. பாடலின் மெட்டும் அதற்கான 100% orchestration ஐயும் ஒருவரே செய்யும்போது கிடைக்கும் அத்தனை முழுமை! அத்தோடு ஒவ்வொரு வாத்தியத்தையும் வித்தியாசமாய் கையாளும் ஆளுமை மற்றும் பாங்கு, அதுவும் மற்றவர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக்
காட்டுகிறது

7. இசைஞானி தான் முதல்மிறையாக ரீதிகௌளை என்ற ராகத்தை சினிமாவில் பயன்படுத்தினார் ."கவிக்குயில்" என்னும் படத்தில் "சின்ன
கண்ணன் அழைக்கிறான்" என்ற பாடல்தான் அது.

8. Counterpoint என்ற யுக்தியை சர்வதேச இசையின் நுட்பங்களை இசைஞானி சிட்டுக்குருவி படத்தில் இடம்பெற்ற "என் கண்மணி" என்ற பாடலில் பயன்படுத்தி வெற்றி கண்டவர்.

9. இந்தியத் திரை இசையில் காயத்ரி என்ற படத்தில்தான் முதன் முதலாக இசைஞானி "எலெக்ட்ரிக் பியானோ" உபயோகபடுத்தினார்.

10. இசைஞானி செஞ்சுருட்டி ராகத்தில் இசையமைத்த ஒரே பாடல் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு.

11. உலகில் வேறு எந்த இசையமைப்பாளரும் முயற்சி செய்திருக்கவே முடியாத விஷயம்., ஓர் இசையமைப்பாளர் ஏற்கனவே இசையமைத்து,
பாடல் வரிகள் எழுதப்பட்டு, படமாக்கப்பட்டு, அந்த சவுண்ட் ட்ராக்கை அப்படியே நீக்கிவிட்டு, அந்தக் காட்சியை மட்டும் அப்படியே வைத்துக்கொண்டு, உதட்டசைவு, உடலசைவு, காட்சித்தேவை அனைத்துக்கும் பொருத்தமாக புதிய இசையை எழுதி வியப்பின் உச்சிக்கு நம்மை அழைத்து சென்றவர் இசைஞானி ( ஹேராம் )

12. முன்பெல்லாம் பின்னணி இசைச்சேர்ப்பில் ஒரு ரீல் திரையிட்டு காண்பித்ததும் இயக்குனரோ மற்றவர்களோ இசையமைப்பாளரிடம் வந்து அமர்ந்து அந்த படத்தில் வந்ததுபோல போடுங்கள், இந்த படத்தில் வந்தது போல போடுங்கள் என்றெல்லாம் சொல்லிப் பின் இசைச்சேர்ப்பு முடிந்து, அது சரியில்லாமல் மறுபடி இசையமைப்பாளரே வேறு மாதிரி இசை சேர்ப்பார். ஆனால் இளையராஜாவிடம் அப்படி இல்லை. ஒரு ரீல்
திரையில் பார்த்தால் போதும் உடனே இசைக்குறிப்புகளை எழுத ஆரம்பித்து விடுவார். அதை வாசித்தாலே போதும். இப்படி வேண்டாம்,
வேறுமாதிரி போடுங்கள் என்று சொல்வதற்கான வாய்ப்பே இருக்காது.

13. இந்தியாவில் அல்ல ஆசியாவிலே முதன் முறையாக சிம்பொனி இசை அமைத்தவர் இசைஞானி, சிம்போனி கம்போஸ் பண்ண குறைஞ்சது
ஆறு மாசமாவது ஆகும். வெறும் 13 நாளில் மற்ற கம்போஸர்களை மிரள செய்தவர் இசைஞானி.

14. விசிலில் டியூன் அமைத்து அதை ஒலினாடாவில் பதிவு செய்து பின்பு பாடகரை வைத்து பாடிய பாடல் "காதலின் தீபம் ஒன்று".

15. படத்தின் கதையை கேட்காமல் பாடலுக்கான சூழ்நிலைகளை மட்டும் கேட்டு இசையமைத்த ஒரே படம், "கரகாட்டக்காரன்".

16. வசனமே இல்லாத காட்சியில் கூட, அந்த காட்சியை இசையால், மௌனத்தால் செழுமைபடுத்தி பார்வையாளர்களுக்கு கொண்டு போய்
சேர்க்க முடியும் என்பது ராஜாவிற்கு நன்றாக தெரியும். அதில் ராஜா கிரேட். இரண்டு பேர் மௌனமாக இருக்கும் காட்சியாக இருந்தால் கூட, அவர்களின் மன உணர்வுகளை கூட புரியாதவர்களுக்கும் புரிய வைத்துவிடுவார் ராஜா. அந்த அற்புதமான ஆற்றல் இளையராஜாவிற்கு உண்டு. இந்திய சினிமாவில் பின்னணி இசையில் நம்பர் ஒன் ஜீனியஸ் இளையராஜா.

17. ராஜா சார் ரீ-ரெக்கார்டிங் பண்றதுக்கு முன்னாடி ஒரு முறைக்கு இரண்டு முறை படத்தை பார்ப்பார், மூன்றாவது முறை படம் திரையில் ஆரம்பிக்கும்போது நோட்ஸ் எழுத ஆரம்பிச்சிடுவார், அவர் ஆரம்பிச்சு முடிக்கும்போது படம் கரெக்டா முடியும். அந்த அளவுக்கு எந்த இசையமைபாளராலும் நோட்ஸ் எழுத முடியாது.

18. இந்தியாவிலேயே பின்னணி இசை கேசட்டாக வந்து ஹிட்டான ஒரே படம் ‘பிள்ளை நிலா’

19. பருவமே புதிய பாடல் பாடு என்ற பாடலுக்கு தொடையில் தட்டி தாளத்திற்கு புதிய பரிமாணத்தை கொடுத்தவர் இசைஞானி

20. இந்தியாவில் முதல் முறையாக சிறந்த பிண்ணனி இசைக்கான விருதை வாங்கியவர் இசைஞானி ( பழசிராஜா )
[23/07, 7:05 am] TNPTF MANI: உண்மை என்பது வேறொன்றும் இல்லை.நம்பும்படியான ஆதாரங்களோடு சொல்லப்படும் பொய்தான்
-தாகூர்
[23/07, 6:01 pm] TNPTF MANI: காட்சியளிப்பது மட்டுமே தன் கடமையென
உணர்ந்தார், துயர்குழப்பமிக்க
இவ்வுலகில் தன் கடமை என்னவென்ற
வெகுயோசனைக்குப்
பின்,கடவுள்"
-தேவதேவன்
[23/07, 7:07 pm] TNPTF MANI: யார் யாரோ வந்து
ஆறுதல் போல்
ஏதேதோ சொல்ல

இப்போது  என்னிடம்
இன்னும் பெரிதுபடுத்தப்பட்ட துயரமும்

அவர்களிடம்
எனக்கு ஆறுதல் சொன்ன பெருமையும்
எஞ்சி இருந்தது

-படித்தது
[23/07, 7:10 pm] TNPTF MANI: ஒரு சிறுமிக்குப் பாதுகாப்பில்லை என்பதைவிட
17பேர்களில் ஒருவனுக்குக்கூட மனச்சான்று இல்லையே என்பதுதான் தேசிய சோகம்.

-வைரமுத்து
[23/07, 7:54 pm] TNPTF MANI: வேறு வேறாக எதையுமே அடையமுடியாது போல. முதலில் அடைந்ததையே மீண்டும் மீண்டும் அடைகிறோம். அல்லது, இப்போது அடைந்ததன் ஒத்திகைகளையே ஏற்கனவே அடைந்து வந்திருக்கிறோம். அப்படித்தானா..

-வண்ணதாசன்
[24/07, 6:52 am] TNPTF MANI: ஒரு மனிதனைச் சொற்களால் தொடுகிற அனுபவம் உன்னதமானது.சொல் வெளிச்சம் தரக்கூடியது. பேச்சின் நடுவில் இருந்து ஒரு வாக்கியம்,ஒரு சொல் ஒருவரின் மனதில் சென்று சேகரமாகிவிட்டால் போதும்,அது முத்தைப் போல விளைந்து ஒளி வீசத்துவங்கும்.பேச்சின் வலிமை அப்படியானது

-எஸ்.ரா
[24/07, 6:56 am] TNPTF MANI: கண் ஒரு சாதாரண உறுப்பு ஆனால் பார்வையோ
ஒரு மிகப்பெரிய கலை

-கலீல் ஜிப்ரான்
[24/07, 7:01 am] TNPTF MANI: உண்மைதான் மிகப்பெரிய நகைச்சுவையாக இருக்கிறது. நகைச்சுவைதான் மிகப்பெரிய உண்மையாகவும் இருக்கிறது
-அசோகமித்திரன்
[24/07, 12:57 pm] TNPTF MANI: மறக்க முடியாதது நினைவு
நினைக்க மறந்தது மறதி
[24/07, 6:22 pm] TNPTF MANI: எல்லோர் மனதிலும்
அசைந்து கொண்டிருகுகிறது
துக்கம் விசாரிக்கும் போது
அணிந்து கொள்ள
துயரம் தீட்டப்பட்ட
ஒரு முகமூடி
-கோ.வசந்தகுமாரன்
[24/07, 6:29 pm] TNPTF MANI: எறும்பு
கடிக்காத போது
ஏன் கொன்றாய்?

உன்
வேலியற்ற உடம்பில்
விளையாட்டாய் ஊறினால்
உயிப்பலி கேட்குதா….விரல்?

மீறிக் கடித்தாலும்
சாவு உனக்கிலையெனத் தெரிந்தும்
ஊறும் எறும்பை
நசுக்குவதேன் சகிக்காமல்?

சாகும் எறும்பின்
சத்தமற்ற முடிவு
நசுக்கும் மனத்தைக்
குற்றமில்லை என்கிறதா?

உலகத்தில்
நசுக்க மிகச் சுலபம்
எறும்பு தானென்றாலும்
சுலபமாய் இருப்பதால்
கொலையா செய்வது?

-வைதீஸ்வரன்
[24/07, 6:37 pm] TNPTF MANI: யாரும்
கவனிக்கும் முன்
உதிர்ந்து விழும்
புன்னகைக்கு..
உன் நினைவுகளுண்டு...

-நாடோடி
[24/07, 7:41 pm] TNPTF MANI: அன்பெனப்படுவது யாதெனில் புறக்கணிப்பிற்கெனவே காத்திருப்பது

-இந்திரா