Monday 29 June 2020

பர்த்ருஹரி

நீ போகாதே என்று 
நான் சொல்லக்கூடும்
ஆனால் அது அபசகுணம்
'சரி போ' என்றாலோ 
அன்பிலாத சொல்

என்னுடன் இரு என்பது
உத்தரவு ஆகும்
'உன் விருப்பப்படி செல்' என்றாலோ
உதாசீனம் ஆகும்

நீ சென்றால் நான் இறந்துவிடுவேன்
என்பதை நம்பக்கூடும்
நம்ப மறுக்கவும் கூடும்

தலைவா நீ செல்லும்போது
நான் சொல்லவேண்டியதை
நீயே எனக்கு
சொல்லிக்கொடு

-பர்த்ருஹரி
தமிழில்:ஐராவதம்

படித்தது

[29/06, 7:44 am] மணிகண்ட பிரபு: சமஸ்கிருதத்தில் அஸ்தி என்றால் இருக்கிறது என்றும், நாஸ்தி என்றால் இல்லை என்றும் பொருள்.அதிலிருந்தே நாஸ்திகன் வந்தது

-படித்தது


# பெண்களின் கூந்தலுக்கு 
இயற்கையிலே 
வாசம் உண்டு
உன் தலைமுடி ஒன்று விழுந்த 
சாம்பார்
எத்தனை வாசமாய இருக்கிறது 
பார்.

-கட்டளை ஜெயா


# காலிச் சொம்பை நிரம்பின சொம்பு என்று நினைத்துக்கொண்டு எடுக்கும்போது கை ஒரு நொடி ஏமாறுமே, அது போல அந்தச் சிரிப்பு ஏமாற்றியது”

-வண்ணதாசன்

சுஜாதா

நல்ல கவிதை என்பதற்கான வரையறை என்ன?"

 கவிதையில் எழுதாத வரிகள் ( unwriiten lines) வாசகன் தானாக உணரும் வண்ணம் இருக்க வேண்டும்

-சுஜாதா

Saturday 27 June 2020

சுப்ரமணிய ராஜூ

அலம்பி விட்ட  ஈரம் இன்னும் காயவில்லை. கலைந்து போகாத மேகங்களைப் போல திட்டுத்திட்டாய் பரவிக் கிடக்கிறது. தரை குளிர்ந்து கிடக்கிறது. ஆனால் மனம் வெதும்புகிறது. அம்மாவைக் கொண்டு எரித்து விட்டு வந்தேன். அதிகாலையில் இறந்து போனாள். அகால வேளையில் வந்தாலும் விழித்திருந்து சோறு போடுவாளே அவளுக்கு என்னால் கொடுக்க முடிந்தது நெருப்பைத்தான்

-சுப்ரமணிய ராஜூ

Friday 26 June 2020

எஸ்.ரா

"இந்த நகரில் வசிப்பவர்களில் எத்தனை பேர் இந்நகரைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள். இந்த நகரில் வாழ்வதற்கான அத்தனை சுகங்களும் வேண்டும் என நினைப்பவர்கள்,நகரின் பிரச்சனையை எப்படி தீர்ப்பது,என்ன வழி,யார் காரணம் என ஏன் யோசிப்பதேயில்லை

-Educators படத்தில் வரும் வசனம்
-எஸ்.ரா

க. சீ. சிவகுமார்

வெவ்வேறு வெளிச்சச் செறிவுகளில் வெவ்வேறு அழகு காட்டுகிற ஆனால், எப்போதும் அழகாயிருக்கிற முகங்களை இயற்கை படைத்துக் கொண்டேதானிருக்கிறது.

- க. சீ. சிவகுமார்

தஞ்சை ப்ரகாஷ்

ஒரு புத்தகம் மனக்குளத்தில் விழுந்த கல் போன்றது. எப்படிப்பட்ட அலைகளை அது எழுப்பும் என்று யாருக்குத் தெரியும்? 

- தஞ்சை ப்ரகாஷ்

Wednesday 24 June 2020

சத்தியாகிரகம்

தென்னாப்ரிக்காவில் நடைபெற்ற போராட்டத்திற்கு சாத்வீக எதிர்ப்பு என பெயர் சூட்டினார் காந்தி.வேறு ஒரு பெயரை பரிந்துரை செய்ய இந்தியன் ஒப்பீனியனில் அறிவிப்பு கொடுத்தார்.

காந்தியின் உறவினர் மகன் மகன்லால் சதாகிரகம் பரிந்துரைத்தார்.இதனை சத்தியாகிரகம் என மாற்றினார் காந்தி.

சத்ய+ஆக்ரஹ எனும் இரு சொற்களின் இணைவு. சத்தியத்திலிருந்து அல்லது அஹிம்சையிலிருந்து பிறந்த சக்தி என அர்த்தம்.

உச்சரிக்கும் போது உதடு ஒட்டாத குறள்கள்

உச்சரிக்கும் போது உதடு ஒட்டாத குறள்கள்

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்'

யார் ஒருவர் ஒரு குறிப்பிட்ட பொருள் மீது அதிகப் பற்று வைக்காமல் இருக்கிறாரோ அவருக்கு, அந்தப் பொருளால் தீங்கு எதுவும் நேராது என்பது பொருள்.

*நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

இந்தக் குறட்பாவும் உதடுகள் ஒட்டாத திருக்குறள்தான். உச்சரிக்கும்போது உதடுகள் ஒட்டாத திருக்குறளை 'இதழகல்' குறட்பாக்கள் என்றும் சொல்வார்கள். இதழ்கள் ஒட்டாமல் அகலுவதைத்தான் இப்படிக் குறிப்பிடுகிறார்கள்.நிறைய குறள்கள் உள்ளன

#info

கவியரசர்

1954 முதல் 1962வரை காமராஜர் முதல்வராய் இருந்தார்.அவர் அதிகம் படிக்கவில்லை என்பதை கேலி செய்யும் வண்ணம் எதிர்கட்சியினர் தம் பெயருக்கு பின் பி.ஏ,எம்.ஏ என விளம்பரம் செய்தனர்.இதனை சுட்டிக்காட்ட கவியரசர் படிக்காத மேதை படத்தில்..

"படித்ததனால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு-பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு என எழுயியிருப்பார்.

#HBDKannadasan

Monday 22 June 2020

நா. முத்துக்குமார்

அப்பாவின் கைபேசி எண்ணை 
அவர் இறந்து
பத்து வருடங்கள் கடந்தும்
என் கைபேசியில்
சேமித்து வைத்திருக்கிறேன் 

அப்பாவின் குரலை
அது அநேக முறை
தொலைதூரத்தில் இருந்து
அழைத்து வந்திருக்கிறது

அந்தக் குரல்
என்னைக் கண்டித்திருக்கிறது
தண்டித்திருக்கிறது
அவ்வப்போது
மன்னித்தும் இருக்கிறது

கண்ணாடி பிம்பம்போல் 
கைதொடும் தூரத்தில் 
இப்போதும் இருக்கிறது 
அப்பாவின் கைபேசி 

நம்பர் நாட் இன் யூஸ் 
என்று திரும்பத் திரும்பச் சொல்லும் 
பெண் குரலைத்தாண்டி 
அப்பாவிடம் 
பேசிவிடும் ஆவலில் 
அவ்வப்போது 
அழைத்துக்கொண்டே இருக்கிறேன் 

உறவினர் புடை சூழ 
உடன்வந்தோர் விடை வாங்க 
அரிச்சந்திர காண்டம் பாடி 
அப்பாவை அன்றொரு நாள் 
சிதையில் வைத்தோம் 

அப்பாவை எரிக்கலாம் 
அவர் குரலை 
எப்படி எரிப்பது ?

.

நா. முத்துக்குமார்

பெளலோ கொய்லோ

துன்பத்தை விடக் கொடுமையானது துன்பம் வரும் முன்பே அத்துன்பம் பற்றி அஞ்சுதலே

-

*நாம் எப்பொழுதும் மாற்றத்தை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.

-பெளலோ கொய்லோ

Sunday 21 June 2020

20-6-20

: பகிரப்படாத நேசத்தின் 
துயரென்னைத் தின்கிறது
தனக்குத்தானே கட்டிக்கொண்ட
கைகளின் தனிமை போல 

-தமிழச்சி தங்கப்பாண்டியன்



ஒரு பெண் இல்லாத வெறுமைக்கு ஒரு பொழுதையே சலிப்புமிக்கதாக மாற்றும் ஆற்றல் எப்படியோ வந்துவிடுகிறது. நம்மைச் சுற்றி நிகழும் பல ஆச்சரியங்களில் இதுவும் ஒன்று.
-பாவண்ணன்


#குலாம் ரசூல் கல்வான் என்பவர் லடாக்கைச் சேர்ந்த மலையேற்ற வீரர். லடாக்கிலிருந்து திபெத்துக்கு பாதை உருவாக்க பிரிட்டிஷ் காலத்தில் முயற்சி நடந்தபோது, அந்த குழுவுக்கு வழிகாட்டி அழைத்துச் சென்றவர்.லடாக்கில் ஓடும் நதிக்கு அவர் பெயரையே வைத்தனர் பிரிட்டிஷ் அதிகாரிகள்..

-தி.முருகன்


#ஹாஸ்பிட்டல் வராண்டாவுல ஒரு அப்பா வெட்கத்தோடயும் கூச்சத்தோடயும் சொல்றாரு-என் குழந்தைக்கு குழந்தை பொறந்திருக்கு சார்!

-ராஜா சந்திரசேகர்


#எப்போதும் சுதந்திரத்தைப் பயன்படுத்துவதில்தான் சிக்கல்.  சுதந்திரத்தின் விளைவுகளில் தண்டவாளத்தின் வரைநீட்டம் போல  நல்லதும் கெட்டதும் பக்கத்தில் பக்கத்தில் இருக்கின்றன.

- க. சீ. சிவகுமார்

லட்சுமண பெருமாள்

லட்சுமண பெருமாள் எழுதிய சிறுகதை ஒன்றில் "தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண் இருப்பாள்.அவள் கணவன் ஒரு நோயாளி.கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு வேலைக்கு செல்வாள்.அவளிடம் ஒரே ஒரு கிழிந்த உள்பாவாடை ஒன்றுதான் இருக்கும்.சிறுநீர் கழிக்கும் போதெல்லாம் உடனிருக்கும் பெண்கள் கிண்டல் செய்வார்கள். அவமானத்தால் அதனை கழட்டி எறிந்துவிட்டு நாடாவினால் புடவை இறுக்கி கட்டிக்கொள்வாள்.


அடுத்தநாள் கணவனின் பழைய அன்டர்வேரை போட்டுக்கொண்டு அதன் மேல் புடவை கட்டிக் கொண்டு வருவாள். உள்ளூர ஒரு பதட்டம் இருந்துகொண்டே இருக்கும். மறைவாகச் சென்று அண்டர்வேரை கழட்டி போட்டு உள்ளே நுழைவாள். அவ்வழியே வரும் மேலாளர் முன்பு கழட்டி போட்டிருந்த பாவாடையையும் டவுசரையும் பார்த்து எவன் வந்தான் எனக்கேட்க  அவமானம் தாங்காமல் குழந்தையை தூக்கிக்கொண்டு சென்றுவிடுவாள். அப்போது அவள் கணவன் இறந்து விட்டதாக சைக்கிளில் வந்து ஒருவன் சொல்வான்.எந்த சலனமின்றி செல்வாள்.அப்போது அவன் சொல்வான் "உன் பெரியப்பா மகன் சடங்கு செய்ய" உனக்கு புடவை, ஜாக்கெட்,பாவாடை எடுக்கிறேனு சொன்னான்.நான் தான் பாவாடை எதுக்கு? புடவை,ஜாக்கெட்டே போதுமென சொல்லிட்டேன்னு சொல்ல அவள் வெடித்து அழத் துவங்குவாள் னு கதை முடியும். இப்போது படித்தாலும் அப்படியே மனசு கனமாகி அழனும் போல் தோன்றும்.பல நாட்கள் இக்கதை மனதை உலுக்கியது.

Thursday 18 June 2020

யுகபாரதி

அம்மாவின்கை
ஊருக்குப் போய் திரும்பிய அம்மா
குழந்தைகளின் முகத்தைப் பார்க்கிறாள்

குழந்தைகள் கையைப் பார்க்கின்றன
தூக்கி  வளர்த்த கையை
சோறூட்டிய கையை
தலை வாரிவிட்ட கையை

தாலாட்டுக்கேற்பத் தட்டிய கையை
தகப்பன் அடிக்க வர
தடுக்க வந்த கையை
அம்மாவின்கை அப்படியே தானிருக்கிறது

குழந்தைகளின் கண்கள் தான்
மாறிவிடுகின்றன சமயத்திற்கேற்ப

#யுகபாரதி

Tuesday 16 June 2020

மகுடேசுவரன்

கண்ணீர் அஞ்சலியில் -அஞ்சலி என்பது என்ன?
அஞ்சலி எனில் வணக்கம், தொழுகை.'பூதம் அஞ்சும் வந்து அஞ்சலித்து என்றார் கம்பர்.
தமது கண்ணீர் வணக்கங்களை உயிர்நீத்தார்க்கு வைப்பது ஆகும்

-மகுடேசுவரன்

Monday 15 June 2020

சுஜாதா

உலகில் நீங்கள் அதிகம் கவலைப்படும் விஷயம் எது? சந்தோஷப்படும் விஷயம் எது?
 
நம் குழந்தைகள் சீக்கிரமாக இழக்கும் அறியாமை, நம் குழந்தைகள் சீக்கிரமாகப் பெறும் திறமை!

-சுஜாதா

சதிஸ்பிரபு

செருப்புத் தைக்கும் இடம்

அவன் அலுவலகத்தில்
செருப்பை உள்ளே
விட்டுவிட்டு
நீங்கள் வெளியே
வந்து நிற்க வேண்டும்

-சதிஸ்பிரபு

தேவதேவன்

தூரத்தில் போய்க்கொண்டிருப்பது
அவரே தான்
முகத்தைச் சொல்லிவிடுகிறது
முதுகும் நடையும்

-தேவதேவன்

செல்வேந்திரன்

எழுத்துப்பிழைகள் தயிர்சாதத்தில் முடி கிடப்பது போல. அதற்காக ஒருவன் காலம் முழுக்க தயிர்சாதத்தில் முடியை மட்டுமே தேடிக்கொண்டிருத்தல் சரியல்ல.

-செல்வேந்திரன்

Friday 12 June 2020

ஜெயகாந்தன் சிறுகதைகள் -நன்றி பிரகாஷ்

ஜெயகாந்தன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு கவிதா பப்ளிகேஷன்..

படிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே ஜெயகாந்தன் சிறுகதைகளை பற்றி பற்றி  நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.. ஆனால் அங்கொன்றும் இங்கொன்றும் ஒரு ஏழு எட்டு கதைகள் மட்டுமே படித்திருப்பேன்.. நீண்டகாலமாகவே அவருடைய சிறுகதைகள் முழுவதையும் படிக்க வேண்டும் வேண்டும் என்ற ஆசை இருந்துகொண்டே இருந்தது.. தற்போது அதற்கான ஒரு வாய்ப்பு அமைந்தது.. கவிதா பப்ளிகேஷன் வெளியிட்டுள்ள இந்த ஜெயகாந்தன் சிறுகதைகள் முழுத் தொகுப்பும் சேர்ந்து 1750 பக்கங்கள் வரும் என்று நினைக்கின்றேன்.. மொத்தம் 136 சிறுகதைகள் உள்ளன.. ஒரு வாரத்தில் மொத்தக் கதைகளையும் படித்து முடித்துவிட்டேன்.. மிகவும்  அற்புதமான கதைகள்.. இவ்வளவு காலமாக படிக்காமல் விட்டு விட்டோமே என்று ஒரு எண்ணம் தோன்றியது..

வெவ்வேறு விதமான மனிதர்கள், வெவ்வேறு விதமான வாழ்க்கை முறை, வெவ்வேறு விதமான எண்ணங்கள், வெவ்வேறுவிதமான உறவுமுறை என்று பலதரப்பட்ட மாந்தர்களின் உணர்வுகள், உறவுகள் என்று கதைகளாக மாற்றப்பட்டுள்ளது..
பெரும்பாலான கதைகள் எளிய மக்களின் வாழ்க்கை முறையை பேசுகின்றன..  முன்னுரையாக நவ பாரதி அவர்கள் அவர்கள் 40 பக்கங்கள் எழுதியுள்ளார்.. அதை படித்துவிட்டு கதைகளை படிக்காமல், அனைத்து கதைகளையும் படித்து விட்டு முன்னுரையைப் படிக்கும்போது மிகவும் நன்றாக உள்ளது..  முன்னுரையை பின்னுரையாக படிக்க வேண்டும்..


காந்தி ராஜ்யம் என்ற கதையில் சுதேசி இயக்கத்தில் கலந்துகொண்டு உயிரைவிட்ட சுதந்திரப்போராட்ட சுதந்திரப்போராட்ட வீரரின் மகன் சைனா பஜாரில் பொருட்களை விற்கும் காட்சி,
தமிழச்சி என்ற கதையில் கண்ணகியும் இளங்கோவடிகளும் மீண்டும் பூமிக்கு வந்து தற்போதுள்ள நாட்டை பார்த்து வெட்கப்படுவது போன்ற ஒரு காட்சி,
ஒரு பிடி சோறு கதையில் பிடி சோற்றுக்கு  அல்லல் படும் காட்சி,
தாம்பத்தியம் கதையில் வீடு இல்லாத ஏழை திருமணம் செய்துகொண்டு பக்கத்தில் உள்ள பூங்காவில் முதலிரவு நடக்கும் நடக்கும்போது விபச்சாரம் செய்ய வந்தவர்கள் என்று போலீஸ் கூட்டிச் செல்லும் செல்லும் காட்சி இன்னும் இதுபோல பல நூறு காட்சிகளை அவரது கதைகளில் இருந்து சொல்லிக்கொண்டே போகலாம்.. 

அந்தரங்கம் புனிதமானது, பொம்மை, பத்தினிப் பரம்பரை, லவ் பண்ணுங்க சார், அடல்ஸ் ஒன்லி, உண்மை சுடும்,
 பூ உதிரும், ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின், விளக்கு எரிகிறது, அக்னிப்பிரவேசம், இறந்த காலங்கள், அக்ரஹாரத்துப் பூனை, கோடுகளை தாண்டாத கோலங்கள், தவறுகள் குற்றங்கள் அல்ல, அந்த உயிலின் மரணம், புது செருப்பு கடிக்கும், அரை குறைகள், புகை நடுவினிலே, ரிஷி பத்தினி, ரிஷி குமாரன் போன்ற எண்ணற்ற கதைகள் நினைவில் நீங்காமல் மனதை அரிக்கின்றது..
ஒவ்வொரு கதையிலும் பலவிதமான உளவியல் சிக்கல்கள், பாலியல் சிக்கல்கள், மனச்சிக்கல்கள், பண சிக்கல்கள் என்று பல யதார்த்த யதார்த்த கதைகள்..

ஏழைகள், பணக்காரர்கள்....
 வீடு இல்லாதவர்கள்,
 குடிசை வீட்டில் வசிப்பவர்கள், பங்களாவில் வசிப்பவர்கள்,
சாலையோரத்தில் வசிப்பவர்கள், நாடோடிகளாக திரிபவர்கள்....
தொழிலதிபர், பிச்சைக்காரன், விபச்சாரி, குமாஸ்தா, கிளர்க், ரிகஷாக்காரன், சோற்று மூட்டை தூக்கி வியாபாரம் செய்பவர், கைவண்டி இழுப்பவன், மளிகை கடை, துணி வியாபாரம் போன்ற பல தொழில் செய்பவர்கள்..
பிராமணர், செட்டியார், முதலியார், அருந்ததியர், நாயுடு, ஆதிதிராவிடர் போன்ற பல ஜாதியினர்... 
என்று அனைவருடைய வாழ்க்கையும் கதைகளில் புகுத்தியுள்ளார்..


ஜெயகாந்தன் சிறுகதை தொகுப்பில் இருந்து அவருடைய சில வரிகள்..

எப்பொழுதும் ஏதோ தப்பு செய்துவிட்டோம் என்று நினைத்துக் கொண்டே இருந்தால் 
யார் என்ன கேட்டாலும் தப்பாதான் படும்..

ஒரு நியாயத்தின் அடிப்படையில்தான் சில நிர்ப்பந்தங்கள் நேர்கின்றன..

பயந்து நடுங்குகிறவர்களுக்குக் கூட தன்னை விட பயந்து நடுங்குகிற இன்னொரு துணை இருந்தால் ஒரு தைரியம் பிறக்கும்..

மனிதனே ரொம்ப பழமையான உலோகம்தான்..
காலம் தான் அவனை புதிது புதிதாக வார்க்கிறது..

கெட்டவனா எல்லாருக்குமே கெட்டவங்களா இருந்திடுவாங்கன்னு நினைக்கிறது சரியா..

ஆசையும், உறவும் மனசிலே ஆழமாக இருந்தால் உதட்டோட சொல்ற வார்த்தை எல்லாம் அனாவசியம் என்று தோன்றுகிறது..

இயற்கையிலே ஒரு சிக்கலும் இல்லை.. சிக்கலே இல்லை என்றால் அது செயற்கையே இல்லை..

தாய்ப் பாலில் என்னென்ன வைட்டமின் இருக்கு என்று தெரிந்து கொண்டா குழந்தை குடிக்கிறது..

எல்லா விஷயங்களிலும் ஏதோ ஒரு மகத்துவம் நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கிறது..

வாழ்வைப் புரிந்து கொண்டு அதன் பொய்யான மயக்கத்திற்கு ஆட்படாமல்  வாழ முயல்வது தான் துறவு..

பூ உதிரும் ஆனாலும் புதுசு புதுசாக பூக்கும்..

அழகுங்கிரது ஒரு வேஷம் தான், வேஷங்கள் கலைக்கப்பட வேண்டியவை தான்..

வாழ்க்கை பழசே ஆவதில்லை, அது ஒவ்வொரு வினாடியும் புதுசு புதுசாக பூக்கிறது..

மனசு இருக்கே அது ரொம்ப பொறுக்கி..

சும்மா சொல்லிக்கிறது தான் மனசு சலிச்சு போச்சு, வெறுத்துப் போச்சு என்று   அனுபவித்தவனுக்கு எதுவும் சலிப்பதில்லை..

கெட்டுப் போறதுன்னாலும் சிலபேர் ஓசியில தான் கெட்டுப் போவார்கள்..

வாழ்க்கையே உறுத்தல்களும் சமாதானங்களும்தான்..

அழகு என்றால் நீங்கள் என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ எனக்கு தெரியாது..
என்னைப் பொறுத்தவரை ஒன்றின் நினைவே சுகம் அளிக்கிறது என்றால் அது ரொம்ப அழகாகத்தான் இருக்க வேண்டும்..

ஆசைதான் மானத்துக்கு பகைவன்..

வயது வேறு அனுபவம் வேறு.. அனுபவம் வேறு அதிலிருந்து பெறுகின்ற முதிர்ச்சி வேறு..

ருசி என்பதே பழக்கத்தினால் படிகிற பயிற்சி தானே..

ஒரு மனிதனுடைய பெருமை, திறமை எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவனுடைய அந்தரங்கமான பலவீனங்களைப் பற்றிப் பேசுவதே நமது வேலை..

பொறுமையும், சகிப்புத்தன்மையும் இல்லை என்றால் அன்பு, காதல் என்பதற்கெல்லாம் அர்த்தமே இல்லை..

ஒருத்தரை நாம் மதிக்கிறோம் என்பதற்கு என்ன அர்த்தம்? அவருடைய அந்தரங்கத்தை, பிரைவசியை தெரிந்து கொள்வதற்கு பலவந்தமாக முயற்சி செய்யாமல் இருப்பதுதான்..

எது பெரியது? பி.ஏ வா? எம்.ஏ வா?..
பெரிசு என்ன பெரிசு எல்லாம் ஒரு கழுதை தான்.. வேலை கிடைச்சா தான் எதுக்குனாலும் மதிப்பு..

மன்னிக்கப்பட்டவர்களே மன்னிக்கிறார்கள்..

பேசுவதற்கு பெண்கள் கிடைத்துவிட்டால் எல்லா அசட்டுத்தனங்களிலும் ஒருவன் கவிதை  கண்டு கொண்டிருப்பான்..

தாவரங்கள் பூமியில் நிலை பெற்ற மனிதர்கள்..
மனிதர்கள் நடமாடும் தாவரங்கள்..

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்.. 
அளவோடு இருந்தால் விஷமும் அமிர்தம்..

நம்மை மனிதனாக மதிக்காமல் நம் முதுகு மேலே உட்கார்ந்து இருப்பவர்களை நாம் ஏன் மனுசன்னு நினைக்கனும்..

உலகத்திலே ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது தான் சொர்க்கம்.. ஆனால் அந்த சொர்க்கத்திலே பசியும் பட்டினியும், பிக்கல் பிடுங்கல் ஏற்பட்டால் அதை விட நரகம் வேறொன்றுமில்லை..

கண்களை என்னதான் அகல திறந்து விழித்து பார்த்தாலும் ஒருவரின் உருவத்தின் வரம்பு தான் தெரியும், இதயத்தின் வரம்பு தெரியுமா..

மற்றவர் கண்ணுக்கு இது என்ன அழகு என்று தோன்றும் இடம் ஒருவனுக்கு இந்திரலோகமாகத் தோன்றும்..

நினைப்புக்கு வயசு உண்டா?.
அழகுக்கு, கற்பனைக்கு, கனவுகளுக்கு  வயசேது..

நாய்க்கு மனிதனுக்கும் நட்பு உண்டாக ஓர் எலும்புத்துண்டு போதும்..
அந்த நட்புக்கு பிறகு தட்டு நிறைய மாமிசத்தை வைத்து அந்த நாயைக் காவலுக்கு விட்டு விட்டு போகலாம்..

செத்தவனுக்காக அழுவார்கள்.. ஆயிரம்தான் அன்பு இருக்கட்டுமே செத்தவனுக்காகச் சாவார்களா..

செத்தால்தான் ஆடையும் சாகும்..
நான் வாழ்கிறேன் என் ஆசை வாழ்கிறது..

நம்ம கண்ணுக்கு அழகா இல்லை என்பதற்காக ஒருத்தரை அவமானப்படுத்துவது எவ்வளவு பாவம்னு யாருக்குமே தோன்றுவதில்லை..

வாழ்க்கையே ஒரு ட்ரையல் தான்..

ஐந்து பேர் உள்ள உலகத்திலே, நாலுபேர் எது தர்மம் என்று சொல்கிறார்களோ சொல்கிறார்களோ அதுதான் தர்மம் என்றாகிவிட்டது...

நன்றி பிரகாஷ்

சதீஸ்பிரபு

தூக்கிச்செல்ல
வருவார்களா?
காத்திருத்தலின்
மணிப்பொழுதுகளில்
முதன்முதலாய்
ஏ.சி அனுபவித்தார்
தாத்தா
மார்ச்சுவரியில்

-சதீஸ்பிரபு

மதன்

இந்த மாநிலத்தில் பிறந்திருக்கலாமே என எண்ணியதுண்டா?

நம் அம்மாவைவிட நூறு மடங்கு அழகாய் இருந்தாலும், அடடா! அந்த பெண்மணிக்கு நாம் மகனாக பிறந்திருக்க கூடாதா என நினைப்போமா?அது மாதிரித்தான் நாம் பிறந்த மண்ணும்

-மதன்

Thursday 11 June 2020

பான்கிராம்ஸ்

விகடகவி
நீலா நீ
வாளா வா
வேலாவே
தோணுதோ

பூ பாப்பா பூ
தேடுதே
பாலா பா
மேக ராகமே
வாசி சிவா
மேள தாளமே

துள்ளுவது
யானை பூனையா
மாறுமா
யானையா பூ யானையா

வா தாத்தா வா
குடகு 
தோணாதோ
மாவடு போடுவமா
மோரு போருமோ

மாமா
தந்த
தேரு வருதே
மாலா போலாமா

வாடா வா
கலக
தாரா ராதா
வாடவா
வாத மாதவா
ராமா மாரா

வினவி 
கலைக
மாயமா
மாடு ஓடுமா
கைரேகை
மாறுமா

தோணாதோ
வான கனவா
மானமா
மாசமா
வாச நெசவா

மோனமோ மோனமோ
மேக முகமே
கற்க
பாடு பா
வாழ வா
சேர அரசே

தாளாதா
மாடமா
போ வாருவா போ
தீ தித்தி தீ
தேயுதே
தீ வாழ வா தீ
நேசனே

பூ தித்தி பூ
தீ நா தீ
தீ வை தீ
கால பாலகா
வேத கதவே
விகடகவி.

நன்றி:ரவி.

பான்கிராம்ஸ்

வாலி

கவிஞர் வாலி அவர்கள் “கையளவு மனசு” என்று கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த ஒரு குறுந்தொடரில் நடித்துள்ளார். அதில் எனக்கு பிடித்த அவருடைய ஒரு கவிதையை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்..
இந்த கவிதையில் அவர் அவருடைய மனைவியின் கை மனத்தை பற்றி அழகாக நகைச்சுவையோடு கூறியிருக்கிறார்.

மனைவி அமைவதெல்லாம் மசாலா செய்த தவம்..
உன் கை அறைபதற்கே உப்பும் மிளகாயும் தன் கை கூப்பி தவம் செய்திருக்க வேண்டும்.
நீ புடவை கட்டிய நளன், ப்ளௌஸ் மாட்டிய பீமன்..
ஆமாம்ம்??? இட்டலிக்காக நீ ஆட்டுவது மாவா, இல்லை மல்லிகை பூவா?
எங்கிருந்து வந்தது இந்தமென்மை, இந்த வெண்மை, இளகிய தன்மை?
நான் சொல்வது புகழ்ச்சி அல்ல உண்மை.
அன்று உன் கைய்யை நான் பற்ற திருமணம் காரணம்..
இன்று உன் கைய்யை நான் பற்ற நறுமணம் காரணம்..
இது கைய்யா? இல்லை கம கமவென மணக்கும் நெய்யா?
நீ தோசை சுடும் பொழுதெல்லாம் என் நெஞ்சை ஆசை சுடும்..
என் பாரதி கண்ணம்மா, ஒரு கவிஞனுக்கு கவிதை எழுத பேப்பர் தேவையில்லை
உன் பேப்பர் மசாலாவே போதும்..

சுகுமாரன்

சுகுமாரன் பிறந்ததினம்
@manipmp


*தேவதைகளுக்கு ஜாதகமே கிடையாது.அவளுக்கு ஜாதக தோஷம் என்று சொன்னவனை என்ன செய்ய..

-சுகுமாரன்

*ஒரு நிறுவனம் அதன் ஊழியர்களுடன் பாராட்டும் உறவு,
பசி எடுத்த விலங்கு அதன் இரை  மீது காட்டும் இரக்கம் போன்றது..

சுகுமாரன்.. 
வெலிங்டன் நாவலில்..

*பட்டினி வயிற்றுக்கு தன்மானம் ஆடம்பரம்

-சுகுமாரன்

*ஊன்று கோலில் இருக்கிறது
பார்வையற்றவரின் கண்
-சுகுமாரன்

*நெருக்கடியான சூழ்நிலையில் மனித உதடுகள் எப்படியெல்லாம் பிதுங்கும் என்று காண்பதை தவிர பலன் சூனியம்
-சுகுமாரன்

*"என்னுடைய முதலாவது கண்
என் வாழ்க்கையை
நடிப்பாக்கிக்கொண்டிருக்கையில்
இந்த இரண்டாவது கண்
என் நடிப்பை
வாழ்க்கையாக்கிக் கொண்டிருந்தது."

-சுகுமாரன்.


*மனிதர்களை ஜெயிப்பதுபோல இயற்கையை ஜெயிப்பது அவ்வளவு எளிதில்லையா? அதன் வசீகரம் புதிரானதா? விளங்கிக்கொள்ள நெருங்கும்போதெல்லாம் புதிர் இன்னும் அடர்த்தியாகிறதே?

-சுகுமாரன்

*எதுவும் பேசாதே 
இன்று மனிதனாக இருப்பதுவே குற்றம்
- சுகுமாரன்

*சந்தோசத்தின் நடைபாதை மூன்றடிதூரம்,
துயரத்தின் பாலைவெளி முடிவற்ற நீளம்

-சுகுமாரன்

*துணிச்சல் தனியானதல்ல. ஒரு பகுதி நுண்ணறிவு, ஒரு பகுதி அடங்காமை,ஒரு பகுதி பயம் எல்லாம் சேர்ந்தது தான் துணிச்சல்”

-சுகுமாரன்

*கடந்த போனதற்கும்
எதிர்காலத்துக்கும் நடுவில்
இந்த நாள் ஒரு கசியும் காயம்
-சுகுமாரன்

*நெடுங்காலம் புகைந்து கொண்டிருப்பதை விட
ஒரு கணமேனும் பற்றி எரிவதே மேல்

-சுகுமாரன்

-மணிகண்டபிரபு

Wednesday 10 June 2020

info

வகுப்பில் முட்டாள் மாணவனை முன்னால் அழைத்து ஒரு தாளை தொப்பி போலக் கூம்பாக மடித்து அவன் தலையில் அணிவித்து அவனை கோமாளியாக கிண்டலடிப்பது மேற்கில் வழக்கம்.அதனாலேயே அதன் பெயர் Fool's cap paper எனப் பெயர் வந்தது

#info

ஏங்கெல்ஸ்

இயற்கையை ஆதிக்கம் செய்யும்போது முதல் தலைமுறையில் எமக்கு ஆதாயம் இருப்பது போலவே தோன்றும்.ஆனால்,
அடுத்தடுத்த காலங்களில் இயற்கையே எமக்கு எதிராகத் திரும்பும்

-ஏங்கெல்ஸ்

Tuesday 9 June 2020

.இறையன்பு

நம் பார்வைக்கு வண்ணங்களைத் தருகிற பகுதிக்கு ஐரிஸ் என்று பெயர்.கிரேக்கத்தில் வானவில் என்று பொருள்.குச்சி வடிவில் இருக்கும் 12.5 கோடி செல்கள் கறுப்பு வெள்ளை பார்வையும்,கூம்பு வடிவில் 70 செல்கள் வண்ணத்தையும் நமக்கு அளிக்கின்றன.

-வெ.இறையன்பு

குமுதத்தில் வந்துள்ள எனது ஜோக்.நன்றி குமுதம்

பட்டுக்கோட்டையார்

ஆறறிவில் ஓரறிவு அவுட்டு-சிலருக்கும்
ஆறறிவில் ஓரறிவு அவுட்டு-இருக்கும்
ஐந்தறிவும் நிலைக்குமுன்னா
அதுவுங்கூட டவுட்டு..

துடை நடுங்கும் குணத்திலும்
சொந்த நிலை மறந்து திரியும்
ஈனப்பேச்சிலும்
சிந்திக்காத இடங்களிலும்
தெண்டச் சோத்து மடங்களிலும் (ஆறறிவு)

-பட்டுக்கோட்டையார்

என் ரத்தத்தின் ரத்தமே’

'' 'என் ரத்தத்தின் ரத்தமே’ என்கிற புகழ்பெற்ற வரியை எம்.ஜி.ஆர். எதற்காகச் சொன்னார்?''

''எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு, குண்டு அடிபட்ட எம்.ஜி.ஆர். குற்றுயிராகப் படுக்கை யில் உயிருக்காகப் போராடினார். அவர்பால் அளப்பரிய பாசம்கொண்ட ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் ரத்தம் கொடுக்கத் தங்கள் பெயரைப் பதிவுசெய்தார்கள். ஆனாலும், அவருக்குப் பொருந்திய சிலரின் ரத்தம் ஏற்கப்பட்டது. தனக்குப் புத்துயிர் தந்த தொண்டர்களை மேடைதோறும் தவறாமல் பேச்சின் துவக்கத்திலேயே அப்படி அழைப்பார். கரவொலி விண்ணைப் பிளக்கும்!''

-விகடன் கேள்வி பதில்

நாராயண குரு

ஒரு தீக்குச்சியை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்நாள் முழுதும் சமைக்க முடியும் என்று நினைத்துவிடக் கூடாது. விதி அளிக்கக்கூடிய தீக்குச்சிக்களையெல்லாம் சேர்த்துக் கொள்ள வேண்டும்

-நாராயண குரு

Saturday 6 June 2020

லீனா மணிமேகலை

போய் வருகிறேன்

இப்போதெல்லாம்
போய் வருகிறேன்
என்று யாரும் சொல்லிச் செல்வதில்லை

அப்படியே மறைந்துப் போகிறார்கள்

வழியனுப்பும் வகையில்லாமல்
சேமித்து வைத்திருக்கும் கண்ணீரில்
சில துளிகள்
கவனிக்கப்படாமல் வழிகின்றன

தொடர்பறுந்து போன
உரையாடலின் இறுதி வரி
நம்முடையதாக இருக்கும்போது
விம்மும் மனதை தேற்ற
உரியவரின் பதில் வரியையும்
நாமே எழுதிக்கொள்ள வேண்டியிருக்கிறது

நினைவாக மறுக்கும் நினைவாக
விடாமல் துரத்தும்
அருகாமை சூட்டையும், வாசத்தையும்,
ஈரத்தையும், தீண்டலையும், பார்வையையும்
இல்லை என்று ஒரு இறுதியாகாத சொல்
எதிர்கொள்ள முடியாமல் மாள்கிறது

ஒரேயடியாக யாரும்
போய்விடுவதில்லை தான் என்றாலும்
விடைகொடுத்தல்
இல்லாத பிரிவு
எழுதி முடிக்கப்படாத கவிதையை
ஒரு செத்த எலியாக்கி
காக்கையிடம் கையளிக்கிறது

-லீனா மணிமேகலை

கோபி கிருஷ்ணன்

சமூகமே ஒன்றை ஆரம்பிக்கும். அதுவே கண்டிக்கும். களைய எத்தனிக்கும். சீர்திருத்தும். பிள்ளைக்குச் சரியான கிள்ளல். பிறகு ஆதுரத்துடன் தொட்டில் ஆட்டுதல். பம்மாத்து.

சமுதாய அமைப்பு நாறிக்கிடைக்கில் ஒரு தனி நபரைக் குறைகூறுவதில் யாதொரு பயனும் இல்லை.

-கோபி கிருஷ்ணன்

பாவண்ணன்

கிணறு என்பது வெறும் கிணறின் வடிவமல்ல.ஒரு வகையில் நமது ஆழ்மனம். எந்த பொதுநலத்தையும் கருதாமல்,எந்த இரக்கத்துக்கும் இடமில்லாமல் நம் ஆழ்மனத்தின் ஊற்றுக்கண்ணை நாமே அடைத்துவிடுகிறோம்.கதவுகளை அடைத்துவிட்டு வெளிச்சத்தைப் பார்ப்பது எப்படி?

-பாவண்ணன்

Friday 5 June 2020

சுஜாதா

ஒரு டெலிபோன் சம்பாஷணை

“ஹலோ”
“ஹலோ”
“யார் பேசுறது?”
“நான்தான்”
“நான்தான்னா யார்?”
“நான்தான் ரேவதி”
“ரேவதி! அப்பா இல்லையா?”
“இல்லை”
“அம்மா?”
“இல்லை”
“சரி, அப்பா வந்தா ராமன் போன் பண்ணினதாகச் சொல்லுகிறாயா?!”
“யாரு?”
“ராமன், எழுதிக்கோ ரா-ம-ன்”
“ரா எப்படி எழுதுவது?”
“சரிதான்! பாப்பா, வீட்டில வேறே ஒருத்தரும் இல்லையா?”
“சேகர் இருக்கான்”
“சரி சேகரைக் கூப்பிடு”
“சேகர் இந்தா” என்று ரேவதி சேகரிடம் (வயது 1) டெலிபோனைக் கொடுக்கிறாள்.

-சுஜாதா

ஓஷோ

ஒரு மனிதன் திருமணம் செய்து கொள்ள நல்ல அழகான பெண்ணைத் தேடிக் கொண்டிருந்தான்.

அவனை அணுகிய ஒரு தரகன், “ஒரு பணக்கார விதவை இருக்கிறாள். மிகவும் அழகானவள். உன்னைவிட ஒன்றிரண்டு வயது பெரியவளாக இருப்பாள். ஆனால் பார்த்தால் அப்படித் தெரியாது. அவளுடைய அழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. என்னுடன் வா, அவளைக் காட்டுகிறேன்.” என்று சொன்னான்.

தரகனுடன் போய் பெண்ணைப் பார்த்தான் அவன். அவனால் அவனது கண்களையே நம்பமுடியவில்லை. அவன் வாழ்க்கையில் அதுவரை அவ்வளவு அசிங்கமான பெண்ணைப் பார்த்ததில்லை.

ஒரு கண் ஒரு பக்கம் பார்க்கும் போது, மறுகண் அடுத்த பக்கம் பார்த்து கொண்டிருந்தது. மூக்கு கோணலாக இருந்தது. பற்கள் வெளியில் தெத்திக் கொண்டிருந்தன. அவள் தலையில் இருந்து போலி முடி என்று அப்பட்டமாகத் தெரிந்தது. அவளுடைய ஒரு கால் மற்றொரு காலை விட குட்டையாக இருந்தது. குமட்டிக் கொண்டு வந்தது அவனுக்கு.

தரகனின் சட்டையைப் இழுத்துப் பிடித்து அவன் காதருகில் கிசுகிசுத்தான்…

“இவளையா அழகு என்று சொன்னாய்?”

“நீ சத்தமாகவே பேசலாம். அவள் முழுச் செவிடு. உனக்குக் கலா ரசனையில்லாவிட்டால் நான் என்ன செய்ய முடியும்? உனக்கு பிக்காசோவின் கலை பிடிக்கும் என்று நினைத்தேன். நீ இப்படி ரசனை கெட்டவனாக இருப்பாய் என்று யாருக்குத் தெரியும்?”

-ஓஷோ
(நவீன ஓவியங்களை கலாய்க்க சொன்னது)

பாவண்ணன்

ஒரு குழந்தை மீண்டும் மீண்டும் ஒரு வரியைச் சொல்வதன் வழியாக, அதுதான் கண்டடைந்த மகிழ்ச்சியை இரு மடங்காக, மூன்று மடங்காக பெருக்கிக் கொண்டே செல்கிறது

-பாவண்ணன்

தென்கச்சியார்

ஒரு பெரிய பணக்காரர் ஆடிட்டர் வேலைக்கு இன்டர்வியூ வைத்திருந்தார்.48000யும் 84000யும் பெருக்குங்க..இதான் கேள்வி னு சொல்லியிருக்கார். நூறு பேரும் கணக்கு போட்டாங்க.

*ஒருத்தர் மட்டும் உங்களுக்கு எவ்வளவு வரனும் னு கேட்டாராம்.உடனே அப்பாய்ன்ட் செய்திட்டார்

-தென்கச்சியார்

Monday 1 June 2020

கவிக்கோ அப்துல்ரகுமான் நினைவுதினம்

கவிக்கோ அப்துல்ரகுமான் நினைவுதினம்
*மணி

மேகம் மழையாய் இறங்கியபோது, நனைந்து சிலிர்த்த பூமி சொன்னது "பெருமை மேலே ஏறுவதில் இல்லை கீழே இறங்குவதில் இருக்கிறது"

-அப்துல்ரகுமான்

*உன் தலையை புகழால் அலங்கரி
மகுடங்களால் அலங்கரிக்காதே
ஏனென்றால் 
மகுடங்கள் தலைமாறக்கூடியவை
-அப்துல்ரகுமான்

*உன் சாவில் சாம்பலை அல்ல
நெருப்பை விட்டுச்செல்

-அப்துல்ரகுமான்

*வாழ்க்கைத் தேர்வில்
வெற்றி பெறுகிறவர்கள்
விடைகளை அறிந்தவர்கள் இல்லை
வினாக்களை அறிந்தவர்களே
-அப்துல்ரகுமான்

*விதி 
தொட்டிலைச் செய்யும்போது
பாடையையும்
செய்துவிடுகிறது
-அப்துல்ரகுமான்

*நீ பிரிகிறாய்
கட்டடம் முடிந்ததும்
பிரிக்கப்படும் சாரம் போல
-அப்துல்ரகுமான்

*பழமை என்பது
வயதாகிப்போன புதுமைதான்
புதுமை என்பது
மறுபிறப்பெடுத்த பழமைதான்
-அப்துல்ரகுமான்

*மரணக் காற்றில் ஒரு விளக்கை போல் அணைந்து போகாதே!

ஒரு ஊதுவத்தியைப் போல் கொஞ்சம் நறுமணமாவது விட்டு விட்டுப் போ!
-அப்துல்ரகுமான்

*நீ கிடைத்துவிடாதே
உன்னைத் தேடுவதில்தான்
என் இருத்தல்
இருக்கிறது
-அப்துல் ரகுமான்

*தர்மம் வென்றது" என்கிறார்களே;
அதர்மம் அல்லவா வென்றிருக்கிறது என்று
குழம்புகிறீர்களா?
உங்களுக்கு விஷயம் தெரியவில்லை;
அதர்மம் "நியூமராலஜி"ப்படி தன் பெயரைத்
தர்மம் என்று மாற்றிக் கொண்டது!

-கவிக்கோ

-மணிகண்ட பிரபு

செல்வராஜ் ஜெகதீசன்

காணாமல்போன கடிகாரம்

களவு போனது.
கரையோரம் இருந்த
கடிகாரத்தோடு

அருவிக்குளியல்
தந்த
ஆனந்தமும்

-செல்வராஜ் ஜெகதீசன்

இசை

ஒரு பந்தென இருக்கிறோம்
கடவுளின் கைகளில்
அவரதைத் தவறவிடுகிறார்
தொப்பென வீழ்ந்து விடாதபடிக்குத்
தன் பாதத்தால் தடுத்து
முழங்காலால் எற்றி
புஜங்களில் உந்தி
உச்சந்தலை கொண்டு முட்டி
இரு கைகளுக்கு இடையே
மாறி மாறித் தட்டி விளையாடுகிறார்
மறுபடியும் பாதத்திற்கு விட்டு
கைகளுக்கு வரவழைக்கிறார்
‘' நான் உன்னை விட்டு
விலகுவதுமில்லை;உன்னைக் கைவிடுவதுமில்லை''
பிதாவே தயவு பண்ணி எம்மைக் கைவிடும்.

-இசை

முகுந்த் நாகராஜன்

கடந்த 25 வருஷங்களில்
பதிவான மழை அளவுகளைவிட
அதிகம் என்றும் சொன்னார்கள்.
பெரியவர்கள் ‘ நல்ல மழை’ என்றும்
இளைஞர்கள் ‘செமை மழை’ என்றும்
சொல்லிகொண்டார்கள்
‘எவ்ளோ தண்ணீ’ என்று
ஆச்சரியப்பட்டது குழந்தை.

-முகுந்த் நாகராஜன்