Thursday 30 July 2020

காந்தி

என் ஆதிக்கத்துக்கு எதிராக என் மனைவி செயல்படும் வழிமுறையிலிருந்தே சத்தியாகிரகத்தை நான் கற்றுக்கொண்டேன்

-காந்தி

Sunday 26 July 2020

லாவோட்சு

இந்த உலகில் உங்களால் ஒரே ஒரு சிறு பகுதியைக் கண்டிப்பாகச் சீர்திருத்த முடியும்.அந்த சிறுபகுதி நீங்கள்தான்.

-லாவோட்சு

TITAN

1986ம் ஆண்டு டாட்டா இண்டஸ்ட்ரீஸ் மற்றும் தமிழ்நாடு இரண்டையும் இணைத்து சுருக்கமாக TITAN என்ற கைக்கடிகார பிராண்ட் பிரான்ஸ் நாட்டின் EBAUCHES நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் ஓசூரில் உற்பத்தியைத் தொடங்கியது.

Saturday 25 July 2020

எஸ்.ரா

கற்றுக்கொள்வதற்கு வயதோ, சூழலோ தடைகளாக இல்லை.நமது
விருப்பமின்மைதான் எப்போதும் பெரிய தடையாக இருக்கிறது.

-எஸ்.ரா

Friday 24 July 2020

மோகன்

பெருநகரத் தார்ச்சாலையில்
சட்டென வீழ்ந்து
சல்லென நீந்தி
நீண்டதோர் கட்டிடத்தில் மோதி
சிறு விபத்துமின்றி மறைந்தது
ஒரு பறவையின் நிழல்.

-சி.மோகன்

Thursday 23 July 2020

யூமா வாசுகி

பார்த்தாயா?
இதைத்தான் இவன்
இவ்வளவு நாட்களாகப்
படித்துக்கொண்டிருக்கிறான்
என்று

மேசைப்புத்தகத்தின் பக்கங்களை
ஒவ்வொன்றாக விரித்துக் காட்டுகிறது…

மின்விசிறி ஜன்னலருகில்.
எழுத்தறிவற்ற அந்தியொளியோ

மஞ்சள் கைகளால் தடவித்தடவி
இல்லாத சித்திரங்களைத் தேடுகிறது

-யூமா வாசுகி

ரூமி

கவிதைகளின்
உள்ளிருக்கும்
துடிப்புகளைக் கேள்.

அவை விரும்பும் இடத்திற்கு
உன்னை அழைத்துச்
செல்லட்டும்.

உனக்கென விடுக்கும்
சமிக்ஞைகளை
தொடர்ந்துகொண்டே இரு.

அதன் அருகாமையை
நழுவவிடாதே
ஒருபோதும்.

-ரூமி

வைத்தீஸ்வரன்

எறும்பு
கடிக்காத போது
ஏன் கொன்றாய்?

உன்
வேலியற்ற உடம்பில்
விளையாட்டாய் ஊறினால்
உயிர்ப்பலி கேட்குதா….விரல்?

மீறிக் கடித்தாலும்
சாவு உனக்கிலையெனத் தெரிந்தும்
ஊறும் எறும்பை
நசுக்குவதேன் சகிக்காமல்?

சாகும் எறும்பின்
சத்தமற்ற முடிவு
நசுக்கும் மனத்தைக்
குற்றமில்லை என்கிறதா?

உலகத்தில்
நசுக்க மிகச் சுலபம்
எறும்பு தானென்றாலும்
சுலபமாய் இருப்பதால்
கொலையா செய்வது?

-வைத்தீஸ்வரன்

திருவாத்தான்

திருவாத்தான் என்பவன் விறகுவெட்டியிடம் உதவியாளராய் சேர்ந்தான். அங்கிருந்த ஆறை காட்டி எங்க போகுதுனு கேட்டான்.இது என் நடு வீட்டுக்கு போகுதுனு சொன்னான்.சிறிது நேரத்தில் விறகுகட்டை காணோம். விசாரித்தால்..

விறகுகட்டை ஆற்றில் போட்டுவிட்டேன்.இந்நேரம் வீட்டுக்கு போயிருக்கும் என்றானாம்.

குவாரன்டைன்

வெளிநாடுகளுக்கு கப்பலில் சென்றுவிட்டுத் தாயகம் திரும்பும் மாலுமிகளை கடற்கரைக்கு அருகில் 40 நாட்கள் நங்கூரமிட்ட கப்பலில் தங்க வைக்கப்படுவார்கள். உடல்நிலை சரியாய் இருந்தால் அனுமதிக்கப்படுவர்.

'குவாரன்டா கியோர்னி' என்றால் 40 நாட்கள் என அர்த்தம்.பின் இந்நடைமுறை குவாரன்டைன்
என ஆனது

Wednesday 22 July 2020

படித்தது

யார் யாரோ வந்து
ஆறுதல் போல் 
ஏதேதோ சொல்ல

இப்போது  என்னிடம் 
இன்னும் பெரிதுபடுத்தப்பட்ட துயரமும்

அவர்களிடம்
எனக்கு ஆறுதல் சொன்ன பெருமையும்
எஞ்சி இருந்தது

-படித்தது

தேவதேவன்

காட்சியளிப்பது மட்டுமே தன் கடமையென
உணர்ந்தார், துயர்குழப்பமிக்க
இவ்வுலகில் தன் கடமை என்னவென்ற
வெகுயோசனைக்குப் 
பின்,கடவுள்"

-தேவதேவன்

சிக்மண்ட் ஃப்ராய்டு

மனிதன் அவன் நினைப்பதைக் காட்டிலும் அதிக ஒழுக்கமுடையவன். ஆனால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு ஒழுக்கங்கெட்டவன்

-சிக்மண்ட் ஃப்ராய்டு

வரிசை

வரிசை

மோதி மோதி
முடிந்தவரை முன்னே
நகர்த்துகிறோம் 
வரிசையை

எல்லோரையும்
உற்றுப்பார்த்து
முன் நிற்போரை
பின்பற்றி நகர்கிறோம்
எறும்பை போல

புதிய வரிசை
உருவாகாமல் முடிந்தவரை
கற்போடு காப்பாற்ற 
வேண்டியுள்ளது
வரிசையை

கால் மாற்றியும்
கை கட்டியும்
சுவரையே பார்த்து
யார் நின்றாலும்

கடைசியில் நிற்பவரே
கட்டுக்குலையாமல்
பாதுகாக்கிறார் வரிசையை

ஒரு வாக்குறுதியை 
காப்பது போல்
இறுதிவரை
அடைகாக்க வேண்டியுள்ளது
வரிசையை

-மணிகண்டபிரபு

Tuesday 21 July 2020

வெண்ணிலா

துண்டொன்றைக்
கட்டிக்கொண்டு
அம்மாவாக முடிகிறது
குழந்தைகளால்

குழந்தையாக முடியாமல்
தவித்துக் கொண்டிருப்பது
அம்மாக்கள் தான்

-அ.வெண்ணிலா

மருதன்

இரவு கனவு காண்பதால் ஒரு பிரயோஜனுமும் இல்லை. காலை எழுந்து கண்களை கசக்குவதற்கு முன்பே உதிர்ந்துவிடும்.பகல் கனவுகள் உதிர்வதில்லை.கான்க்ரீட் போல் நம்மை திடப்படுத்துகின்றன

-மருதன்

Monday 20 July 2020

அறிவுமதி

நிகழ்கையில் சாரல்..
நினைக்க நினைக்கத்தான்
மழை.! 

-அறிவுமதி.

சும்மா இரு

சும்மா இரு

பாரத்தைத் தாங்குவதற்குத் தலையில் துணி சுற்றி வைக்கப்படுவது சும்மாடு.இது எடையற்றதாய் வெறுமனே இருக்கும்.

சும்மாடாய் இரு என்பது பேச்சுவழக்கில் சும்மா இரு ஆகியிருக்க வேண்டும். 'சும்மா' என்பது மட்டும் பிரிந்தும் சில இடங்களில் சொல்லப்படுகிறது

-மகுடேசுவரன்.

பிரமிள்

வராதா என்றேங்கி
மழைக்கு அண்ணாந்த கண்கள்
கண்டு கொண்டன
வானம் எல்லையில்லாதது

-பிரமிள்

மகிழ்நன்

வழுக்கைத் தலைகளைப் பார்க்கும்போதெல்லாம்
நாளைய நானாகத் தெரிகிறார்கள் அவர்கள்!
ஒருவேளை அவர்களுக்கு
நேற்றைய அவர்களாகத் தெரியலாம் நான்!

-மகிழ்நன்

Sunday 19 July 2020

வாராக்கடன் வங்கி - ஒரு புதிய முயற்சி!By எஸ். புஷ்பவனம் |

வாராக்கடன் வங்கி’ என்ற நடைமுறை மேலை நாடுகளில் ஏற்கெனவே இருந்து வருகிறது. ஆனால், இந்தியாவிற்கு இது புதிது. இந்த வாராக்கடன் வங்கிக்கு ஆங்கிலத்தில் ‘பேட் பேங்க்’ என்று பெயா். தமிழில் ‘பேட்’ வேண்டாமே என்று ‘வாராக்கடன் வங்கி’ என்று கூறலாம் என எண்ணுகிறேன். ‘பேட் பேங்க்’ என்ற பெயரே நன்றாக இல்லையே. இது எப்படி செயல்படும் என்ற கேள்வி உங்களில் சிலருக்கு எழலாம்.

அதாவது இந்த விசேஷ வங்கி மற்ற வங்கிகளின் வாராக்கடன்களை பணம் கொடுத்து சுவீகரித்துக் கொள்ளும். இதன் வேலை அத்தகைய கடன்களை வசூலிப்பது, சொத்துக்களை விற்று, செலவழித்த பணத்தை திரும்பபெறுவது மட்டுமே. உதாரணமாக, இந்த வங்கி இந்தியன் வங்கியிலிருந்து ரூ 1000 கோடி வாராக்கடன்களை அதற்குரிய சொத்துக்களுடன், 30 சதவிகிதம் கழிவு (தள்ளுபடி) செய்து ரூ 700 கோடிக்கு வாங்கும். இந்தியன் வங்கிக்கு, இது வந்தவரை லாபம். இந்த வங்கி பின்னா் அந்த சொத்துக்களை ரூ 800-1200 கோடி வரை விலை வைத்து சாதுரியமாக விற்கும். இது மாதிரி வாராக்கடன்களை கழிவுடன் கொடுக்கும்போது, வங்கிகள் எவ்வளவு சதவிகிதம் கழிவு தரலாம் என்பதை நிதி நிபுணா்கள் தொழிற்முறை திறனுடன் நிா்ணயிப்பாா்கள்.

ADVERTISEMENT
இந்த வாராக்கடன்கள், வங்கிகளுக்கு பெரும் சுமை. இதனை ஏற்படுத்தியது அவா்கள்தான் என்றாலும், இவற்றை அவா்கள் கணக்கில் இருந்து எடுத்து விட்டால் சுமையிலிருந்து விடுபட்டு லாபத்தை நோக்கி நடைபோட வாய்ப்பு உண்டு.

இதில் என்ன அனுகூலம் என்றால், இதில் அவசர விற்பனைக்கு இடமில்லை. ஐந்து வருடம் கூட எடுத்துக் கொள்ளலாம். எப்போது வேண்டுமானாலும் விற்றுக்கொள்ளலாம். சாதாரண வங்கி மேலாளருக்கு, டெபாஸிட் சேகரிப்பு, கடன்கள் தருவது, ரிசா்வ் வங்கியிலிருந்து பணம் பெறுவது, வாடிக்கையாளா் சேவை, வங்கி நிா்வாகம், கணக்கு, ஊழியா்களுக்கு சரியான பொறுப்பை - வேலையை கொடுத்து கண்காணிப்பது போன்ற பல வேலைகள். கடன்களை திரும்பப்பெறுவதும் இதில் ஒன்று. ஆனால் இந்த வாராக்கடன் வங்கி மேலாளா்களுக்கு கடன்களை வசூலிப்பது அல்லது காத்திருந்து சொத்துகளை நல்ல விலைக்கு விற்பது மட்டுமே வேலை. இதில் நிபுணத்துவம் பெற்றவா்கள்தான் மேலாளராக இருப்பாா்கள்.

இந்திய வங்கிகளின் சங்கமும் பாரதிய ஸ்டேட் வங்கியும் இந்த வாராக்கடன் வங்கி அமைக்க ஆதரவு தருகிறாா்கள். மத்திய ராஜாங்க நிதி அமைச்சா் அனுராக் தாகூா் நாடாளுமன்றத்தில், கடந்த பிப்ரவரியில், தேசிய மயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன்களின் மதிப்பு ரூ 7. 27 லட்சம் கோடிகள் என்று கூறியுள்ளாா். நமது 2019-20 பட்ஜெட்டில், தனிநபா் வருமானவரி வசூலே ரூ 4. 5 லட்சம் கோடிதான். நிறுவனங்கள் வரி மூலம் வசூலானது ரூ. 5. 56 லட்சம் கோடிதான்.

ரிசா்வ் வங்கியின் முன்னாள்ஆளுநா் ரகுராம் ராஜன், ‘இந்த கோவிட்-19 பாதிப்பால் அடுத்த ஆறு மாதங்களில் வாராக்கடன்களின் அளவு அதிகரிக்கும்’ என எச்சரிக்கிறாா்.

மத்திய அரசின் பொருளாதார ஆலோசகா் கே. சுப்ரமணியன், இந்த வாராக்கடன் வங்கி அமைப்பதற்கு ஆதரவளிக்கவில்லை. ‘இது போல் வங்கிக் கடன்களை வசூலிக்க 28 கம்பெனிகள் இருக்கின்றன’ என்கிறாா்.

ஆனால் எகனாமிக் டைம்ஸ் ஆசிரியா் டி.கே. அருண், ‘பொதுத்துறை வங்கி மேலாளா்கள், தனியாா் நடத்தும் கம்பெனிகளுக்கு வாராக்கடன்களை கழிவுடன் கொடுக்கத் தயங்குவாா்கள். அதிகக் கழிவுடன் கொடுத்தால் தனியாா் கம்பெனிகளின் லாபத்திற்காக உழைக்கிறாா் என்ற அவப்பெயரும் வரும். சி.பி.ஐ வழக்குகள் வரும். காம்ப்ட்ரோலா், ஆடிட்டா் ஜெனரல் இவா்களிடமிருந்து கேள்விகள் வரும் என நினைப்பாா்கள்’ என்கிறாா்.

வாராக்கடன்கள் வாங்கும் நிறுவனத்தை யாா் நடத்துகிறாா்கள், யாருக்கு சொந்தம் என்பது முக்கியம் என்றும் அவா் கூறுகிறாா்.

பொதுத்துறை வங்கிகள் மூலதனம் போட்டு(அதன் வாராக்கடன்களுக்கேற்ப) நடத்துவதால், வாராக்கடன்களை கழிவு செய்து கொடுக்கும் வங்கி மேலாளா்களுக்கு அதிக பாதுகாப்பு. இந்த வாராக்கடன் வங்கி லாபம் ஈட்டினால், அது பொதுத் துறை வங்கிகளுக்குத்தான் போய் சேரும். பொதுத் துறை வங்கிகளும் கடன் சுமையை எடுத்ததால், புதிய கடன்களை முனைப்புடன் கொடுக்கும். இந்த வாராக்கடன் வங்கி, தனது அனுபவத்திலும், தினசரி கண்காணிப்பிலும், பொதுத் துறை வங்கிகளுக்கு அவ்வப்போது எச்சரிக்கை கொடுக்கும். மேலும் வாராக்கடன்கள் சேருவதை இது தடுக்கும்.

1988-இல் அமெரிக்காவில் பிட்ஸ் பொ்க் மெல்லன் வங்கி , கிராண்ட் ஸ்ட்ரீட் நேஷனல் வங்கி என்ற பெயரில் ஒரு வாராக்கடன் வங்கியைத் தோற்றுவித்து, தன்னுடைய வாராக்கடன்களை 47 சதவிகிதம் கழிவுடன் கிராண்ட் வங்கிக்கு விற்று விட்டது. அதில் முதலீடும் செய்தது. கிராண்ட் வங்கி சொத்துக்களை அதிக லாபத்திற்கு விற்று லாபம் ஈட்டி முதலீட்டை லாபத்துடன் திருப்பிக் கொடுத்தது. பின்னா் கிராண்ட் வங்கி மூடப்பட்டது.

பிரிட்டிஷ் அரசாங்கமும் கோவிட் -19 பாதிப்பினால் நஷ்டமடைந்த வியாபார தொழில்நிறுவனங்களின் வாராக்கடன்களை தீா்க்க வாராக்கடன் வங்கி ஒன்றை உருவாக்க ஆலோசித்து வருகிறது (சன்டே டைம்ஸ் 17 மே, 2020).

ஐரோப்பாவின் மத்திய வங்கியும் (ஈரோப்பியன் சென்ட்ரல் பேங்க்) இது மாதிரி வாராக்கடன் வங்கி ஒன்றை (கடன் தீா்க்கும் காா்ப்பரேஷன்) உருவாக்க முடிவு செய்துள்ளது. இதன் தலைவா் கிறிஸ்டின் லகாா்டே இதற்காக ஒரு கமிட்டியை அமைத்துள்ளாா். ஆனால், ஜொ்மனி, (வடக்கு ஐரோப்பிய நாடு) தெற்கு ஐரோப்பிய நாடுகளின் (கிரேக்கம், இத்தாலி ) கடன் தன் தலையில் விழும் என்ற பயத்தில் இதை தடுக்க முயற்சிக்கிறது.

ஸ்வீடனில் ரெட்ரிவா மற்றும் செக்யூரா என இரு வாராக்கடன் வங்கிகள் அரசு முதலீட்டுடன் 1993-இல் ஆரம்பிக்கப்பட்டன. இரண்டும் லாபகரமாக நடந்து அதற்கு தன் கடன்களை விற்ற ஸ்வீடன் வங்கிகளும் நல்ல நிலைக்கு திரும்பின. பால் கிருக்மன் போன்ற பொருளாதாரப் பேராசிரியா்கள் மற்ற நாடுகளுக்கு ஸ்வீடன் மாடலைத்தான் பரிந்துரைக்கிறாா்கள். இந்த வாராக்கடன் வங்கி முறை, பின்லாந்து, ஸ்பெயின், ஆஸ்ட்ரியா ஆகிய நாடுகளில் நடைமுறயில் உள்ளது.

ஜப்பானில் இது 1990- களிலேயே நடைமுறைக்கு வந்துவிட்டது. 1993-இல் கூட்டுறவு கடன் வாங்கும் கம்பெனி ஒன்று, தனியாா் முதலீட்டுடன் ஆரம்பிக்கப்பட்டது. வங்கிகளின் நஷ்டத்திற்கேற்ப வரிவிலக்கு அளிக்கப்பட்டது. இருந்தாலும், இதனைத் தனியாா் நடத்தி வந்தாலும், வங்கிகளை இத்தகைய பணிக்கு கடன்களை விற்க கட்டாயப்படுத்த இயலவில்லை என்பதாலும் இம்முயற்சி வெற்றி பெறவில்லை. 1999-இல் அரசு முதலீட்டுடன் ‘ரெசல்யூஷன் கலெக்ஷன் காா்ப்பரேஷன்’ என்ற பெயரில் ஒரு வாராக்கடன் வங்கி ஆரம்பிக்கப்பட்டது. அது இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. பங்கு சந்தையில் அது இடம் பெற்றிருக்கிறது. தனியாரை விட அரசு பங்களிப்புடன் இந்த வாராக்கடன் வங்கியை நடத்துவது சிறந்தது என தெரிய வருகிறது.

இந்த வாராக்கடன் வங்கியை விமா்சிப்பவா்கள் முன்வைக்கும் வாதம், இது மாதிரி அரசு உதவியுடன் வாராக்கடன்களை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தால், வங்கிகள் அதிக ஆபத்து (ரிஸ்க்) நிறைந்த கடன்களைக் கொடுக்க முற்படும். கடன் திரும்பி வரவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது வாராக்கடன் வங்கி என்ற எண்ணம் வந்துவிடும். இன்னொரு விமா்சனம், இது காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கும் சலுகை என்று ஆகிவிடும். தற்காலிகமாக கடனை திருப்பித்தர முடியாத கம்பெனிகளில் நிா்வாகக்குழுவில் அரசு பிரதிநிதியை நியமித்து, நிலைமையை சரிசெய்வதை விட்டு விட்டு அந்த கம்பெனி திவால் அறிவிப்பு கொடுக்கும்படி - அப்போதுதான் வாராக்கடன் வங்கிக்கு கடனை விற்க முடியும் என்பதால்- தூண்டுவதாக அமையும் எனக் கூறுகிறாா்கள்.

ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திஸ்கந்த தாஸ் ‘இதே போல் ஒரு அமைப்பை ‘ரெசல்யூஷன் காா்ப்பரேஷன்’ என்ற பெயரில் ஆரம்பிப்பதற்கானத் திட்டம் இருக்கிறது’ என்று கடந்த ஜூலை 11-இல் பாரதிய ஸ்டேட் வங்கி நடத்திய கருத்தரங்கில் கூறியிருக்கிறாா்.

இந்தியாவில் இதற்கு சட்டபூா்வமான அடித்தளம் அமைத்து, எந்த பெயரிலாவது இந்த வாராக்கடன் வங்கிகளை மேற்கூறிய நாடுகளின் அனுபவத்தை கொண்டு, சரியான விதிமுறைகளை அமைத்து, தொழில்முறை நிபுணா்களை நியமித்து, அரசியல் தலையீடு இல்லாமல் நடத்தினால் அவை வெற்றி பெற வாய்ப்புண்டு. கடனை விற்ற வங்கிகளும் கடன் சுமையை இறக்கி வைத்ததனால் முன்னேற வாய்ப்புண்டு.

கட்டுரையாளா்:

செயலாளா், நுகா்வோா் பாதுகாப்புக் குழு,

திருச்சிராப்பள்ளி.

Saturday 18 July 2020

யுகபாரதி

அதென்ன
அஞ்சலிக் கூட்டம்
ஓங்கிக் குரலெடுத்து
ஒருவர்கூட அழாமல்?

-யுகபாரதி

Friday 17 July 2020

யுகபாரதி

கையேந்தி பவனிலிருந்து
காஸ்ட்லி உணவகம்வரை
நல்லதைத் தீர்மானிப்பது
நாக்குதான்
வாக்கு மாறினாலும்
நாக்கு மாறுவதில்லை
நாக்கை வைத்துத்தான்
நடக்கின்றன
உணவகமும் அரசியலும்

-யுகபாரதி

Thursday 16 July 2020

கதே

அதிகம் உற்று நோக்க வேண்டும்.கொஞ்சமாவது துன்பப்பட வேண்டும். ஏராளமாக வாசிக்க வேண்டும்

-கதே

லா.ச.ரா

மெளனம்.இது பெரும் அழகு. இதன் அழகு கலையாமல் பேணுக.சிந்தனையின் ஓட்டத்தில் தானே படரும் மோனத்துடன் தானே இழையும் தியானத்தின் அடையாளம் கண்டுகொள்ள முடியும். கண்டுகொள்ள பழகிக்கொள்

-லா.ச.ரா

போகன் சங்கர்

ஒரு துவக்கம்
ஏனித்தனை சிரமமாக இருக்கிறது
நேரம் எடுத்துக் கொள்கிறது 
தடுமாறுகிறது
தயங்கி நடுவில் வீழ்கிறது
முடிவைப் போல் அல்லாமல்...

- போகன் சங்கர்

#வானிலிருந்து
வீழாத ஏணியில்
இரவெல்லாம்
ஏறி 
சுவர்க்கம் போய்க்கொண்டிருந்த
நம்பிக்கையாளர்கள்
காலையில் செய்தித்தாளைப் பார்க்க மறுத்தார்கள்

-போகன் சங்கர்


 வலி என்ற 
வார்த்தையைப் போல 
அவ்வளவு 
சின்னதாய் இல்லை 
வலி!

- போகன் சங்கர்

Wednesday 15 July 2020

சுகா

‘கதாநாயகியோட அம்மாவா நடிக்கிறதுக்கு ஒரு நாலைஞ்சு நடிகைகளேதானே வளச்சு வளச்சு நடிக்காங்க! சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு அம்மாவத் தேடிப் புடிச்சு நடிக்க வச்சா என்ன?’ இந்த விபரீத ஆசை யின் தேடலில் ஒரு பெண்மணியின் புகைப்படம் கிடைத்தது. அச்சு அசலான நடுத்தரத் தமிழ்க்குடும்பத்து பெண்மணி. மதுரை மாவட்டத்தின் ஏதோ ஓர் பள்ளியின் ஆசிரியை.

‘நடிக்க வருவாங்களாப்பா?’

‘அவங்க ஹஸ்பண்டுக்கிட்ட பேசச் சொன்னாங்க, ஸார்.’

உதவி இயக்குனர் சொன்னார்.

‘அதுக்கென்ன? பேசிட்டா போச்சு. நம்பர் இருக்கா?’

‘இருக்கு ஸார்’.

‘குடு. பேசலாம்.’

‘னைன், எய்ட், த்ரீ, டூ . .’

‘என்ன பண்றாராம், ஸாரு?’

‘போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸார்’.

‘வடிவுக்கரசியம்மா டேட்ஸ் இருக்கான்னு செக் பண்ணுங்களென்’.

நொடிப்பொழுதில் முடிவை மாற்றினேன். ஆனால் தற்செயலாக பெயர் தெரியாத அந்த டீச்சரம்மாவின் வீடியோவைப் பார்க்க நேர்ந்தது. Staff roomஇல் சக டீச்சர்களின் கேலிச் சிரிப்பொலிகளுக்கிடையே, ‘டீச்சர் நல்லா பாடுவாங்க ஸார்’ என்ற குரலைத் தொடர்ந்து, ‘கொஞ்சம் அமைதியாத்தான் இருங்களென்’ என்று யாரோ சொல்கிறார்கள். முகம் முழுதும் பெருகிய வெட்கத்தை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு, கூச்சம் விலகாமல், தலை கவிழ்ந்தபடி, மேஜையில் கைகளை ஊன்றியபடி அந்த டீச்சர் பாட ஆரம்பிக்கிறார், ‘தேவனின் கோயில் மூடிய நேரம், நான் என்ன கேட்பேன் தெய்வமே’. அவர் பாட ஆரம்பித்த அந்த நொடியில் என் மனம் கலங்க ஆரம்பித்தது. ஆனால் பாட்டு போகப் போக டீச்சரின் கூச்சம் மறைந்து அந்தப் பாடலுக்குள் மூழ்கிக்கொண்டிருந்தார். முகத்தில் அத்தனை துலக்கம். . ‘நானொரு சோக சுமைதாங்கி’ என்று சரணத்தைத் தொடங்கும் போது குரலில் அத்தனை உருக்கம். தலையைக் குனிந்தவாறே பாடியபடி ’மறந்தாதால்தானே நிம் . . . .மதி’ என்று முடித்துவிட்டு, வலிய வரவழைத்த சிரிப்புடன் நிமிர்ந்தார். ’டீச்சர் நல்லா பாடுவாங்க ஸார்’ என்று சொன்னவுடன், அவர் ஏன் இந்தப் பாடலைப் பாடினார்? இந்தப் பாடலைத் தவிர வேறெந்தப் பாடலைப் பாடியிருந்தாலும், அது இந்தளவுக்கு நம்மைக் கவர்ந்திருக்குமா என்று மனதுக்குள் பல கேள்விகள்.

folder

‘அறுவடை நாள்’ திரைப்படத்தின் ‘தேவனின் கோயில்’ பாடல், வெளிவந்த நாளிலிருந்து தொடர்ந்து என்னைத் துரத்திக் கொண்டேயிருக்கிறது என்று சொன்னால் அது கொஞ்சமும் மிகையில்லை. நானாக அந்தப் பாடலைக் கேட்பது போக, டீச்சரைப் போல யாராவது ஒருவர் தேவனின் கோயிலுக்குள் இழுத்துச் சென்று விடுவர். சிலசமயங்களில் காரணமேயில்லாமல் சில பாடல்கள், நாள் முழுதும் நம் மனதைச் சுற்றி வருவது போல , ஒருநாள் ‘தேவனின் கோயில்’ பாடலைத் தொடர்ந்து நாள்முழுக்க முணுமுணுத்துக் கொண்டேயிருந்தேன். சொல்லிவைத்தாற்போல நண்பர் விக்கி, நெதெர்லேண்ட்ஸிலிருந்து ஃபோனில் அழைத்தார்.

‘சுகா, குருவி சேக்குற மாரி துட்டு சேத்து, குட்டியானை கணக்கா ஒரு பியானோ வாங்கியிருக்கென்’.

‘வாசிக்க ஆரம்பிச்சுட்டீங்களா, விக்கி?’.

‘பொறவு? அதே சோலிதானெ!’.

‘தேவனின் கோயில் வாசிச்சு பாருங்க’ .

சிலநொடிகள் மௌனம். ‘விக்கி, விக்கி. லைன் கட் ஆயிட்டா?’

‘என்ன சுகா இது அநியாயம்? அந்தப் பாட்டப் பத்திப் பேசத்தானெ ஒங்களக் கூப்பிட்டென். ரைட் ஹேண்ட் நோட்ஸ்லாம் ப்ராக்டிஸ் பன்ணிட்டென். லெஃப்ட் ஹேண்ட்ல பாஸ் கிதார் நோட்ஸ்தான் கைய ஒடிக்கி. எப்படியும் இன்னும் ஒரு மாசத்துல் வாசிச்சிருவ்வேன்னுதான் நெனைக்கென்’.

என்னைப் போலவே திருநவேலிக்காரரான விக்கி, வயலினும், பியானோவும் வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவர். ’தேவனின் கோயில்’ பாடலின் பாஸ்கிதார் பகுதிகளை ஒரு மாதத்தில் வாசித்து விடுவேன் என்று விக்கி சொன்னதில் அர்த்தமில்லாமலில்லை. பொதுவாகவே இளையராஜாவின் பாடல்களின் ஆதார அஸ்திவாரமே, பாஸ்கிதார்தான். ஒட்டுமொத்தப் பாடலின் கட்டுமானத்தையும் தாங்கிப் பிடிக்கும் பாஸ்கிதாரின் அற்புதமான வாசிப்பை ‘தேவனின் கோயில்’ பாடல் முழுவதும் நாம் கேட்கலாம். சினிமா பாட்டு கேட்பது தெய்வக்குற்றம் என்கிற அளவுக்கு கொள்கைப்பிடிப்புடைய கிறிஸ்டோஃபர் ஸார்வாள் தனது கிதார் பயிற்சியின் போது ‘தேவனின் கோயில்’ பாடலின் கிதார் பகுதிகளை, ரகசியமாக ரசித்து வாசித்ததை ஒருமுறை பார்த்திருக்கிறேன்.

திருநவேலியின் லாலா சத்திர முக்கில் இருக்கும் ‘சதன் டீ ஸ்டாலில்’ அதிகாலை நேரத்தில் நடிகர் திலகத்தின் குரலுடன் ‘அறுவடை நாள்’ பாடல்கள் ஒலிக்க ஆரம்பிக்கும். சிவாஜி ஃபிலிம்ஸின் தயாரிப்பு, அது. ‘ப்ரேமம் ப்ரேமாதி ப்ரேமப்ரியம் ப்ரேமவஸ்யப்ரேமம்’ என்று இளையராஜாவின் குரலில் அந்தப் பாடல் துவங்கும் போதே கணேசண்ணனின் கண்கள் கலங்கத் துவங்கும். சொல்லியிருந்த ’விவா டீ’ கைக்கு வரவும், கொஞ்சமும் கூச்சப்படாமல் தரையில் உட்கார்ந்து பாடலைக் கேட்க ஆரம்பிப்பான். பாட்டு முடிந்த பிறகுதான் கண்களைத் திறப்பான். ‘அண்ணாச்சி, இன்னொரு மட்டம் இந்தப் பாட்ட போடுங்களென்’ என்று கடைக்காரரிடம் சொல்லிவிட்டு, என்னிடம் ‘தம்பி, இன்னொரு விவா டீ சொல்லென்’ என்பான். சதன் டீக்கடைக்காரர் கணேசனுக்கு மட்டும் ‘விவா டீ’க்கு பதிலாக, வேறேதும் ஊனா பானா கொடுத்துவிட்டாரோ என்று சந்தேகிக்கும் வண்ணம் பாடல் முடிந்ததும் கணேசண்ணன் பிதற்ற ஆரம்பிப்பான்.

‘இந்தப் பாட்ட எளுதுனவன், பாடுனவ, எசையமைச்சவன் எல்லாரயும் சுட்டுக் கொல்லணும்டெ. துஷ்டி வீட்டுக்கு வந்த மாரில்லா சவம் அளுக அளுகயா வருது. இன்னொரு மட்டம் கேட்டென்னா மூச்சு முட்டி செத்தே பெயிருவென்’.

ஆனாலும் அன்று மாலையே, ‘சதனுக்குப் போவோமா? தேவனின் கோயில் கேட்டுட்டு வருவோம்’ என்பான்.

கணேசண்ணன் சொன்னது போல, தேவனின் கோயில் பாடலோடு சம்பந்தப்பட்டவர்கள் அனைவரது பங்களிப்பும் அந்தப் பாடலை எங்கோ உயரத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது. சித்ராவின் வளர்ச்சியில் மிக முக்கியமான பங்கை ‘தேவனின் கோயில்’ பாடல் ஆற்றியிருக்கிறது. மிக சன்னமான தொனியில் இந்தப் பாடலைப் பாடத் துவங்கும் அவர், இரண்டாவது சரணம் முடியும் இடமான ‘நானோர் கண்ணீர்க் காதலி’ என்னும் போது குரல் உடைந்து, அதேசமயம் ஸ்ருதிவிலகாமல் பாடி, கேட்பவரைக் கலங்க வைக்கிறார். அந்த சமயத்தில் முழுமையாக தமிழைப் புரிந்து கொண்டு பாடக்கூடியவராக சித்ரா இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ‘நானொரு சோக சுமைதாங்கி’ என்ற வரியிலும், ’கேட்டால் தருவேன் என்றவன் நீயே, கேட்டேன் ஒன்று தந்தாயா’ என்ற வரியிலும் அவரது குரலிலுள்ள உணர்ச்சியை கவனித்தால், ‘யாருப்பா சொன்னா அது மலையாளத்துப் பிள்ளன்னு? அது நயம் தமிளச்சில்லா’ என்று அடித்துச் சொல்லி விடலாம்.

ilayaraja_yesudas_chithra_fazil

இதுபோல ‘வாடி என் கப்பக்கிழங்கே’ பாடலாசிரியராகவே அதிகமாக அடையாளம் காட்டப்பட்டுவரும் கங்கை அமரனின் மிக முக்கியமான பாடல்களில் ஒன்று ‘தேவனின் கோயில்’. கன்னியாஸ்திரியாக மாறுவதற்கான பயிற்சியில் உள்ள ஒரு பெண் காதல்வயப்படுகிறாள். காதலனுடன் இணைய முடியவில்லை. இதை பாடலின் முதல் வரியிலேயே எவ்வளவு எளிமையாகச் சொல்லிவிடுகிறார்! ‘தேவனின் கோயில் மூடிய நேரம், நான் என்ன கேட்பேன் தெய்வமே!’. காதலனுடன் இணைய முடியாத காதலியை, ‘பிரிந்தே வாழும் நதிக்கரை போல, தனித்தே வாழும் நாயகி’ என்கிறார், கங்கை அமரன். துக்கத்தின் விளிம்பில் நின்று அவள் தன்னைப் பற்றி ’ஒருவழிப்பாதை என் பயணம்’ என்று பாடியபடியே, ’இணைவது எல்லாம் பிரிவதற்காக, இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக, மறந்தால்தானே நிம்மதி’ விரக்தியின் உச்சத்தைச் சொல்கிறார்.

‘தேவனின் கோயில்’ பாடலின் இசையமைப்பை எடுத்துக் கொண்டால் அதன் மெட்டைச் சொல்வதா, வாத்தியங்களின் அமைப்பைச் சொல்வதா, அதன் தாளத்தைச் சொல்வதா, எதைச் சொல்வது என்று புரியவில்லை. மிக எளிமையாகச் சொல்வதாக இருந்தால் இது ஒரு சோகப்பாடல். ஆனால் பாடலின் துவக்கத்தைக் கேட்டால் ‘ப்ரேமம் ப்ரேமாதி’ என நவீனமான முறையில் பல்குரல் பதிவாக இளையராஜாவின் குரல் கேட்கிறது. பிறகு சித்ரா ’தேவனின் கோயில்’ எனத் துவங்கும் போதே நம் மனம் கனக்கத் துவங்குகிறது. ’இங்கு என் ஜீவன் தேயுதே’ என்னும் வரியில் தேயு . .தே என்கிற ஒரு வார்த்தையில், பின்னால் வர இருக்கும் இசை பூகம்பத்தை நமக்கு சொல்லாமல் உணர்த்திவிடுகிறார், இளையராஜா. பல்லவி முழுதும் தாளம் ஏதுமில்லாமல் அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலின் முதல் இடையிசை (First interlude) தேவாலய மணியின் ஓசையுடன் துவங்கும் போதே, படம் பார்க்காமலேயே நம் கண்கள் முன்னால் காட்சி விரிகிறது. ‘அறுவடை நாள்’ திரைப்படத்தில் வரும் தேவாலயம், பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரி வளாகத்திலுள்ள மிகப் பிரமாண்டமான தேவாலயம். ஒவ்வொரு முறை அந்தப் பக்கம் செல்லும் போதெல்லாம், அந்த தேவனின் கோயிலை சிலமணித்துளிகள் நின்று பார்ப்பது என் வழக்கம். ‘இதயெல்லாம் பாக்காமலயெ அந்த மனுஷன் எப்பிடித்தான் அப்பிடி ஒரு பாட்டு போட்டாரோ’ என்று மனதுக்குள் நினைத்துக் கொள்வேன்.

இப்படி ஒரு சோகப்பாடலுக்கு இளையராஜா அமைத்திருக்கும் தாளம், சற்றே துள்ளலானது. வழக்கமாக சோகரசம் தொனிக்கும் பாடலென்றால் பண்டிட் பாலேஷுக்கு ஃபோன் செய்து, ‘செவன் டூ ஒன் வந்திருங்க பாலேஷ்ஜி’ என்று ஒலிப்பதிவுக் கூடத்திலிருந்து சொல்லி விடுவார்கள். அவரும் சாலிகிராமத்திலுள்ள அவரது வீட்டிலிருந்து கிளம்பும் போதே தானும் மூக்கைச் சிந்தி, தன் ஷெனாயுக்கும் மூக்கைச் சிந்தச் செய்து கைக்குட்டையால் துடைத்து, அழைத்துச் செல்வார். ‘பாலேஷ்ஜி, ஒரு நாலு பார் ஹைபிட்ச்ல வாசிச்சு ஃபில் பண்ணிருங்க’ என்பார்கள். ஆனால் ‘தேவனின் கோயில்’ பாடலில் ஷெனாய்க்கு வேலையில்லை. இது போன்ற சோக கீதங்களில் கிட்டத்தட்ட ஷெனாயின் வேலையைச் செவ்வனே செய்திடும் புல்லாங்குழலும் நவீனமாகக் கையாளப்பட்டிருக்கிறது. ஆனால் இவ்விரு வாத்தியங்களின் வேலையையும் இந்தப் பாடலில் கிதார் எடுத்துக் கொள்கிறது. முதல் இடையிசையின் முடிவில் ’நானொரு சோக சுமைதாங்கி’ என்று பாடலின் மிக முக்கியமான பகுதியை சித்ரா துவக்குவதற்கு வசதியாக ’இந்தா புடிச்சுக்கோ, மகளே’ என்று தளம் அமைத்துக் கொடுக்கிறது, கிதார். பாடலின் துவக்கத்தில் பலகுரல்களாக ஒலித்த இளையராஜாவின் குரல், இரண்டாவது இடையிசையில் தெம்மாங்காக உச்சஸ்தாயியில் உற்சாகமாக ஒலிக்கிறது. ஆனால் எந்த வகையிலும் அந்த துள்ளலொலி பாடலின் மைய உருவைக் குலைக்கவில்லை. இது போன்ற நம்ப முடியாத இசை ஆச்சரியங்களெல்லாம் இளையராஜாவிடம் மட்டுமே சாத்தியம்.

ஒருநாள் திரைப்பட இயக்குனரும், நடிகருமான நண்பர் அழகம்பெருமாள் சொன்னார்.

‘வே, அத ஏன் கேக்கேரு? ராத்திரி சரக்கப் போட்டுட்டு ஒளுங்கா மரியாதயா செவனேன்னு கட்டய சாத்துறத விட்டுட்டு தேவனின் கோயில் பாட்டக் கேக்கலாமாய்யா? சவம் காலச் சுத்துன பாம்பா விடிய விடிய கொன்னு எடுத்துட்டுல்லா. படுக்கும் போது மணி என்னங்கேரு? காலைல எட்டர. ஒரு சினிமாப் பாட்டு இப்பிடியாவே மனச அறுக்கும். ச்ச்சை’.

கணேசண்ணன், கிறிஸ்டோஃபர் ஸார்வாள், பெயர் தெரியாத அந்த டீச்சர், சகோதரர் விக்கி, நண்பர் அழகம்பெருமாள் என யாராவது ஒருவர் அவ்வப்போது என்னை ‘தேவனின் கோயில்’ பாடலுக்குள் இழுத்துச் சென்று விட்டு விடுவார்கள். நானும் கொஞ்ச நாட்களுக்கு அதற்குள்ளேயே கிடப்பேன். கடந்த ஒருவாரகாலமாக ‘தேவனின் கோயில்’ பாடலை விட்டு வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். இந்த முறை, இப்படி ஒரு கட்டுரை எழுதிவிடும் அளவுக்கு என்னை ‘தேவனின் கோயிலுக்குள்’ கொண்டு போய் விட்டு, கதற வைத்தது யார் என்று தீவிரமாக யோசித்து, சற்று சிரமப்பட்டே விடையைக் கண்டுபிடித்தேன். அது வேறு யாருமல்ல. நானேதான்.

-சுகா.

ராவணனுக்கு பத்து தலைகள்?

ராவணனுக்கு பத்து தலைகள்?

மனிதனிடம் கோபம்,கர்வம், பொறாமை,மகிழ்ச்சி,வருத்தம், பயம்,சுயநலம்,விருப்பம், லட்சியம்,அறிவு எனும் பத்து குணங்களில் அறிவை தவிர வெறுத்து ஒதுக்குமாறு ஒன்பதை தவிர்க்க கூறுவர்.

ஆனால் இந்த 10குணங்கள் என்னை முழுமையான மனிதனாக்குவதாக ராவணன் பத்து முகம் கொண்டார்

Tuesday 14 July 2020

அ.முத்துலிங்கம்

அவளிடம் எனக்குப் பிடித்தது சிரிப்புதான்.சிரிப்பு என்றால் அது வெளியே வராத சிரிப்பு. எந்நேரமும் சிரிப்பின் தொடக்கம் அவள் உதடுகளில் இருந்து கொண்டே இருக்கும்

-அ.முத்துலிங்கம்

sathish prabhu

லா.ச.ரா

கேட்காத புத்திமதியை நீயே வழங்காதே.உன்னை நீயே மலிவுபடுத்திக் கொள்ளாதே

-லா.ச.ரா

Sunday 12 July 2020

வைரமுத்து பிறந்ததின பகிர்வு

வைரமுத்து பிறந்ததின பகிர்வு
*மணி

#நிறம் ஒரு ஒப்பீடுதான்,ஆப்பிரிக்காவில இருந்தால் நான் தான் அங்கு சிவப்பு
#வைரமுத்து

#உசுரை விட்டு போறது மட்டும் சாவு இல்லை,  
ஊரை விட்டு போறதும் சாவு தான்
#வைரமுத்து

#பணத்தால் சந்தோஷத்தை வாடகைக்கு வாங்கலாம்,
விலைக்கு வாங்க முடியாது
-வைரமுத்து

#இங்கே மண் ஆசிர்வதிக்கப் பட்டிருக்கிறது,
மனிதர்கள் சபிக்கப்பட்டிருக்கிறார்கள்
#வைரமுத்து

#கட்டிலுக்கு தூக்க மாத்திரையும், ஊக்க மாத்திரையும் தேவைப்படாதவரை உடல் நலமுடன் இருப்பதாக அர்த்தம்
-வைரமுத்து

#சிறகிருந்தால் போதும்,
சிறியதுதான் வானம்.!
-வைரமுத்து

#வாரக்கடைசியில் காட்டிக்கொடுக்கும் சாயமடித்த மீசைப்போல,
மூடிமூடி வைத்தாலும்
முட்டி முட்டி எட்டிப்பார்க்கும் துக்கம்
-வைரமுத்து

#காதலில் மட்டும்தான் தொடங்குவது கஷ்டம்; தொடர்வது கஷ்டம்; முடிப்பது கஷ்டம்; முடிந்தாலும் கஷ்டம்.
-வைரமுத்து

#பிணங்களை எரிப்பதற்காக மேல் நாட்டில் மின்சார அடுப்பு தயாரிக்கிறார்கள்.இந்தியாவில் மகன்களை தயாரிக்கிறார்கள்
-வைரமுத்து

#உடம்பு செத்துப்போனா மண்ணுக்குள்ள பொதைக்கிறோம்.மனசு செத்துப்போனா அவன் அத உடம்புக்குள்ளயே பொதச்சிர்றான்
-வைரமுத்து

#இதுவரை இலட்சியம்தானே உனது இலக்கு
இனிமேல் இலட்சியத்துக்கு நீதான் இலக்கு
-வைரமுத்து

#இங்கே மண் ஆசிர்வதிக்கப் பட்டிருக்கிறது,
மனிதர்கள் சபிக்கப்பட்டிருக்கிறார்கள்
#வைரமுத்து

#உசுரவிட்டு போறதுதான் சாவா?
ஊரவிட்டு போறதும் சாவுதான்
#வைரமுத்து

#மகிழ்ச்சி என்பது வேறொன்றுமில்லை 
மனசின் கொள்ளளவு
-வைரமுத்து

#தட்டில் மிச்சம் வைக்காதே
வயிற்றில் மிச்சம் வை

பசியோடு உட்கார்
பசியோடு எழுந்திரு
-வைரமுத்து

#காதலில் மட்டும்தான் தொடங்குவது கஷ்டம்; தொடர்வது கஷ்டம்; முடிப்பது கஷ்டம்; முடிந்தாலும் கஷ்டம்.
-வைரமுத்து

#ஆடம்பர அவசரத்தில்
புல்லாங்குழலைப் பொன்னில்
செய்துவிடாதீர்கள்
அது மூங்கிலாகவே இருக்கட்டும்
-வைரமுத்து

#ஜனநாயகத்திற்கு ஜனங்கள் தேவையில்லை

இங்கே வெட்டியானுக்கும்
வேட்பாளனுக்கும்
பிரேதங்களே தேவை
-வைரமுத்து

#நூறு வருசம் எதுக்கு இருக்கனும்?
ஒரு மனுசன் சொந்தமா ஒன்னுக்கு போறவரைக்கும் தான் இருக்கனும்.ஏங்கையைத் தூக்கிவிட இன்னொரு கையி வேணுங்கிறப்ப நான் இருந்தா என்ன?போனா என்ன?

-வைரமுத்து
(க.இதிகாசம்)

#முடிக்கத் தெரியாத சிறுகதையைக்
குறுநாவல் என்று
கூப்பிட்ட மாதிரி
தீர்க்கத் தெரியாத பிரச்சனைக்கு
விதி என்று பெயரிட்டு
விலகிவிடுவதா?
-வைரமுத்து

#வானத்திலிருந்து ஒரு நட்சத்திரம் உதிர்ந்தாலும்,மரத்திலிருந்து ஒரு பூ உதிர்ந்தாலும் இழப்பு இழப்புதான்
-வைரமுத்து

#இந்தப் பூவுலகிற்கு பிறந்து வருவதற்கு ஒரே வழிதான். ஆனால் அதை விட்டுப் போவதற்குத்தான் பல வழிகள்

-வைரமுத்து

தோழமையுடன் மணிகண்டபிரபு

மார்ட்டின் லூதர் கிங்

'எனக்கு ஒரு கனவு இருக்கிறது. என்னுடைய நான்கு குழந்தைகளும் அவர்களுடைய தோலின் நிறத்தால் மதிப்பிடப்படாமல்,அவர்கள் குணநலன்களால் மதிப்பீடு செய்யப்படும் நாட்டில் ஒருநாள் வாழ்வார்கள்'

-மார்ட்டின் லூதர் கிங்

பரமேஸ்வரி

“காலையில் எழுகையிலே
ஆயிரம் கைகள் முளைக்கும்
தோசை சுடுவாள்
துணிமணி துவைப்பாள்
கத்தும் குழந்தையை
தட்டிச் சமாளிப்பாள்
அலுவலகம் கிளம்பும்
மறதிக் கணவருக்கும்
மூளையாய் இருப்பாள்
எல்லாம் முடித்து
அலுப்புடன் அமர்ந்து

டிவி காம்பியருக்கு
பாவமாய் பதில் சொல்வாள் 
"ஹவுஸ் வொய்ப்தான்"

-பரமேஸ்வரி

Saturday 11 July 2020

திக் நியாட் ஹான்

'புத்' சொல்லின் வேர்ச்சொல் விழிப்புணர்வு பெறுதல், ஆகும்.இதை புரிந்துகொள்ளும் திறன் புத்தர் இயல்பு எனப்படுகிறது. புத்தம் சரணம் கச்சாமி(நான் புத்தரிடம் தஞ்சமடைகிறேன்)விழிப்புணர்வின் மீதுள்ள நம்பிக்கை வெளிப்படுத்துகின்றனர்.

நான் என்னிலுள்ள புத்தரை நம்புகிறேன்

-திக் நியாட் ஹான்

Thursday 9 July 2020

சதிஸ்பிரபு

அடுத்தவன்
கால்களை எதிர்பார்த்து
வாழும் வாழ்க்கைதான்
என்றாலும் அடுத்தவன்
கைகளை எதிர்பார்த்து
இவன் வாழ்ந்ததேயில்லை

-செருப்புத்தொழிலாளி
-ப.சதிஸ்பிரபு

Tuesday 7 July 2020

புதுமைப்பித்தன்

கொள்கை என்பது தூரத்தில் தூக்கிப்பிடித்த தீப்பந்தம் போல் எட்ட இருப்பதாலேயே வெளிச்சம் விழுகிறது.அது எட்ட இருப்பது அவசியம்

-புதுமைப்பித்தன்

Monday 6 July 2020

புதுமைப்பித்தன்

முதலாளியின் மனசைப் பக்குவமடையச் செய்து, பிறகு தினசரி இடைவிடாமல் கேட்டுக்கேட்டு, வழக்கம்போல் இன்றும் கிடைக்காது என்ற மன ஓய்ச்சலுடன் கேட்கும்போது, நிதானத்தைக் குலைக்கும்படியாக  அவர் கொடுத்து விடுவதைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்புவதே அவர் வேலைபார்க்கும் ஸ்தாபனத்தின் வன்முறை

-முன்பணம் கேட்கும் தொழிலாளி குறித்து

#புதுமைப்பித்தன்

Sunday 5 July 2020

மிர்தாத்

மேலே ஏறுகிற அளவிற்கு இறங்கி வாருங்கள். இல்லாவிடில் சமநிலையை இழக்க நேரிடும்.

-மிர்தாத்

சார்லஸ் பிராட்லா.

1880ம் ஆண்டு நார்தம்டன் மக்களவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் பகுத்தறிவுவாதியான சார்லஸ் பிராட்லா.

கடவுள் மீது ஆணையாக என உறுதிமொழி எடுக்காமல் 'உளமாற' உறுதியளிப்பதாக கூறியதால் அரசு ஏற்கவில்லை.பின் பல போராட்டங்களுக்கிடையில் 1886ல் திருத்தம் செய்து "உளமாற" எனும் சொல் ஏற்கப்பட்டது
குடும்பம் ஒரு விசித்திர எந்திரம்.பழுதுபட்டுப் போன ஒரு பாகத்தினால் அது நிற்பதில்லை.அதற்குப் பிரதி மறுபாகம் தானாகவே உண்டாகிவிடும்

-மெளனி

Saturday 4 July 2020

படித்தது

ஒருவன் மனதில் முதன்முதலில் சுயநலம் பிறப்பது எப்போது?

"முதல் லாபம் கிடைக்கும்போது"

-படித்தது

*பெருந்தன்மையை நிருபிக்கச் செய்யப்படும் மன்னிப்புக்கு பழிவாங்குதல் சமம்.-நாயோன்

#நமக்குத்தான் 'ஆப்பாயில்'
ஆனால் முட்டைக்கு அது  'half ஆயுள்'..
அர உசுரு...-ஊர்க்காரன்

மீரா

உறவினர் வீட்டுக்
கல்யாணங்களுக்காய்
காத்துக் கிடக்கும் பெட்டியில்;
என் மனைவியின் 
ஏழெட்டுப் பட்டுச்சேலைகள்
-வெட்டியில்...

-மீரா

கல்யாண்ஜி

முக்கால்வாசிப் பேர்
ஞாபகமாய்
மூடியை கழற்றிய
பேனாவைக் கொடுத்துதான்
கையெழுத்துக் கேட்கிறார்கள்
கவிதைப் புத்தகத்தில்.
இதற்குக் கூட
நம்பாது போன
இவர்களை நம்பியே
இத்தனை வரிகளும்

-கல்யாண்ஜி

Friday 3 July 2020

ஓஷோ

ஒரு சர்வாதிகாரி தனது படத்தை தபால் தலையாக அச்சடித்தார்.ஆனால் சரியாக விற்பனை ஆகவில்லை.ஏன் என அதிகாரியை விசாரித்தார்.

அவர் "தபால்தலையை கவர்களில் நன்றாக ஒட்டுவதில்லை என்றார்.ஏன் அப்படி?என்றார்

"பசையில் தவறில்லை.மக்கள் தவறான பக்கத்தில் எச்சில் துப்புகிறார்கள் என்றார்

-ஓஷோ

மெளனி

ஏன்? என்ற கேள்வி எழுந்துவிட்டால் ஒருவன் மூளையை இழந்தவன் போன்றாகிவிடுகிறான்

-மெளனி

Thursday 2 July 2020

சாக்ரடீஸ்

நான் இளைஞனாக இருந்தபோது எல்லாம் தெரியும் என நினைத்தேன்.கொஞ்சம் வயதானபோது கொஞ்சம் தான் தெரியும் என உணர்ந்தேன். முதிர்ச்சி அடைந்தபோது தான் தெரிந்தது எனக்கு எதுவும் தெரியாது என்று

-சாக்ரடீஸ்

Wednesday 1 July 2020

முகில்

சூப்பர் ஹிட் வெற்றுப் புத்தகம்!

1989-ல் உளவியலாளர் ஆலன் பிரான்ஸிஸ் என்ற பெண், புத்தகம் ஒன்றை வெளியிட்டார். புத்தகத்தின் தலைப்பு Everything Men Know About Women. கடைகளில் புத்தகத்தின் அட்டையைப் பார்த்து ஆர்வத்துடன் எடுத்துப் புரட்டிப் பார்த்த வாசகர்கள் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தார்கள். உள்ளே எழுத்துக்களே இல்லை. அடுத்தடுத்தப் பக்கங்களையும் புரட்டினார்கள். அவையும் வெற்றுக் காகிதங்களே. மொத்தம் 128 பக்கங்கள் வெற்றுக் காகிதங்களாக இருக்க ஒரு புத்தகம். ஆலன் பிரான்ஸிஸ் சொல்ல வந்த கருத்தும் அதுதான். ஆண்களுக்குப் பெண்களைப் பற்றி எதுவுமே தெரியாது. 
அதைப் புரிந்துகொண்ட பெண்களும் ஆண்களும் புத்தகத்தைப் புரட்டிவிட்டு ‘குபீர்’ எனச் சிரிக்க ஆரம்பித்தார்கள். பலர் ஒருவருக்கொருவர் பரிசளிக்கவும் தொடங்கினார்கள். 

இந்த வெற்றுப் புத்தகம் வெளியானபோது மில்லியன் பிரதிகள் விற்று சூப்பர் ஹிட் ஆனது. இப்போதும்கூட 25-ம் ஆண்டு எடிசனாக இந்தப் புத்தகம் விற்றுக் கொண்டிருக்கிறது. ஆன்லைன் ஸ்டோர்களிலும் இந்தப் புத்தகத்தைப் பணம் கொடுத்து வாங்கும் நல்லவர்கள் இருக்கிறார்கள். பலர் வார்த்தைகளற்ற இந்தப் புத்தகத்துக்குப் பக்கம் பக்கமாக விமரிசனமும் எழுதியிருக்கிறார்கள்.

எல்லாவற்றையும்விட முக்கியமான விஷயம், 128 காலிப் பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தை pdf வடிவில் தேடி, டௌன்லோட் செய்பவர்களும் உலகில் நம்முடன் வசிக்கிறார்கள்!
-முகில்

முகில்

கம்பர் விழாவில் கலந்துகொண்டு பேச எம்.ஆர். ராதாவுக்கு அழைப்பு வந்தது. போனார். பேசினார்.

‘பெரியவங்களே, சின்னவங்களே, பொம்பளைங்களே. நீங்கள்ளாம் இப்ப எதுக்கு வந்திருக்கீங்க அப்படின்னு உங்களுக்குத் தெரியும். இந்த கம்ப நாடாரின் விழாவிலே...’

குறுக்கிடும் ஒருவர் ‘அய்யா, அவரு நாடாரு இல்லை.’

‘நாடார் இல்லையா. நம்மாளு போலருக்கு. இந்த கம்ப முதலியராகப்பட்டவர்...’

‘அய்யா, அவரு முதலியாரும் இல்லை.’

‘முதலியாரும் இல்லையா! சரி என்னன்னு புரிஞ்சு போச்சு. இந்த கம்பர் அய்யர் ஆனவர்...’

‘அய்யா, அவரு அய்யரும் இல்லை.’

‘என்னது நாடார் இல்லை, முதலியார் இல்லை, அய்யரும் இல்லை. அப்ப இப்பதான் சாதியை எல்லாம் சொல்லிக்கிட்டிருக்கோமா? அப்ப ஜாதி கிடையாதா? சரிதான். இந்த சாதியில்லாத கம்பன் விழாவிலே...’

ராதாவின் பேச்சு தொடர்ந்தது.

*முகில்