Sunday 31 May 2020

கரிகாலன்

டயானா மரணமும்
கிளிண்டன் காதல் லீலைகளும்
பஞ்சாயத்து தொலைக்காட்சியில்
பார்த்தபின் விவாதமாயிற்று
டீக்கடை பெஞ்சுகளில்

முதிர்ந்த கரும்பு காய்ந்து கருக
ஆலை திறக்குமா
நிலுவை கிடைக்குமா
இருள் சூழ் மர்மமாயிற்று

வீட்டுக்கொரு தொலைக்காட்சிப் பெட்டி
லட்சியமானபோது
மருங்கூருக்குள் வந்துவிட்டது உலகம்
உலகத்துக்குத்தான் கவலையில்லை
மருங்கூர் பற்றி

-கரிகாலன்

Saturday 30 May 2020

புதுமைப்பித்தன்

மனக் குழப்பத்திற்கு மருந்து இருக்கிறது. ஒன்று தன்னை மறக்கும் அபார தெய்வபக்தி. அதாவது கேள்வி கேட்காமல், ஆவேசப்படாமல் ஆடுகள்போல எல்லாம் அவன் செயல் என்று இருப்பது. இன்னொன்று மூளை சலித்து களைத்துப்போகும்படி அதற்கு வேலை கொடுப்பது. இப்படி இரண்டில் ஒன்றைப் பழக்கத்திற்குக் கொண்டு வந்தால்தான் நம்மால் தப்ப முடியும்”

-புதுமைப்பித்தன்

Friday 29 May 2020

முகுந்த் நாகராஜன்

தோசை தெய்வம்

தோசை என்ன ருசி என்று கேட்டால்
என்ன சொல்ல முடியும்?
என் பாட்டி சுட்ட தோசையா?
என் அம்மா சுட்ட தோசையா?
வெளியூர் பஸ் வழியில் நிறுத்தியபோது
அங்கே சாப்பிட்ட தோசையா?
தோசை என்ன ருசி என்று கேட்டால்
என்ன சொல்ல முடியும்?
அந்தந்த தோசையில் உள்ள ருசியை
அடுத்த தோசையில் தேடுதல் பெரும் பிழை.
ஒவ்வொரு அவதாரத்திலும்
ஒவ்வொரு குணம்.
இரண்டும் ஒரே ருசி என்று
எப்போதும் சொல்லாதே.
தோசை தெய்வம் கோபித்துக்கொள்ளும்.

-முகுந்த் நாகராஜன்

படித்தது

 சுப.வீ யின் கருத்தை கேட்கும் போது எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது



ஒரு கூடைக்கொழுந்து எனும்
ராமையா எழுதிய தேயிலை தோட்ட கதையில் தேயிலை கூடுதலாய் பறித்த லட்சுமி எனும் பெண்ணை கங்கானி உதாசினம் செய்கிறார்.ஒரு பெண் இத்தனை தேயிலை பறிக்க முடியாது என்று. பெண்ணுக்கு இவ்வளவு வலிமை இல்லை என்று. அடுத்த நாள் சவால்விட்டு நடக்கும் போட்டியில் மீண்டும் ஒரு ஆணை விட அதிக தேயிலை பறித்து ஜெயிக்கிறாள் லட்சுமி.
ஒரு பெண்ணின் வலிமை குறித்த ஆணின் குரூரத்தை சொல்லியிருப்பார்.



இப்போதும் ஒரு பெண் வாகனத்தில் ஒரு ஆணை முந்திசென்றாலோ, கார் ஓட்டிச் சென்றாலோ ஏளன பார்வை பார்க்கும் அந்த கங்கானிகள் மண்ணில் அவதரித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

-மணி



காரணம் தேடிப் பேசிக்கொண்டிருந்தோம்..
காரணமின்றி பேசிக்கொண்டே இருக்கிறோம்..

-படித்தது



*விழித்திருக்கும் வேளையின் மொழி
அறிவதில்லை கனவின் வாக்கியங்களை

                                -முகுந்த் நாகராஜன்




எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து!”
என சிலிர்ப்புடன்
பெயர் சொல்லி அழைக்கும்
நண்பனுடன் பேசுகையில்
பயமாய் இருக்கிறது
“எம் பேரு ஞாபகமிருக்கா”
என கேட்டு விடுவானோ?

  -கபிலன்.

வைரமுத்து

வானத்திலிருந்து ஒரு நட்சத்திரம் உதிர்ந்தாலும் மரத்திலிருந்து ஒரு பூ உதிர்ந்தாலும் இழப்பு இழப்புதான். மழைத்துளியில் எறும்பு மூழ்கினாலும் கடலுக்குள் கப்பல் மூழ்கினாலும் வலி வலிதான். அதனதன் நிலையில் அவரவர் துயரம் பெரியதுதான். துன்பத்தில் 'சிறுசு - பெருசு' என்பதெல்லாம் இடம் பொருள் ஏவல் குறித்த ஒப்பீடுகள்.

-கள்ளிக்காட்டு இதிகாசம்


உருமாறும்_வில்லன்(Grasshoppers v/s Locusts )

#
அறிவியல் காதலன் 
-ரா.பிரபு -

வெட்டுகிளியை இவ்வளவு நாளாக grasshopers னு தானே சொல்லி கொடுத்தாங்க.. இப்ப ஏதோ  locusts னு சொல்றோமே ஏன் என்று சிலருக்கு தோன்றியிருக்கலாம். சிலர் 'அட ரெண்டும் ஒன்னு தான் பா இப்படியும் சொல்லலாம் அப்படியும் சொல்லலாம் 'என்று சொல்லலாம்.. இந்த கும்பலாக வரும் மஞ்சள் வெட்டுகிளிகள் திடீரென வருகின்றனவே இவ்வளவு நாள் இவைகள் எங்கே இருந்தன என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கலாம். வெட்டுகிளிகள் படையெடுப்பு என்பது வரலாற்றில் புதிது அல்ல கி.மு வில் இருந்தே பல வரலாற்று சம்பவங்கள் உள்ளன.

Grasshopers.. locusts.. இவை இரண்டும் ஒன்றா..? 
ஆம் இவை இரண்டும் ஒன்னு தான். ஆனால் ஒன்னு இல்லை. Grasshopers களின் உருமாறிய சூப்பர் வில்லன் வடிவம் தான் locust. பொதுவாக நாம் கூறும் கிராஸ் ஹோபார்ஸ்களை நாம் அவ்வபோது வயவெளிகளில் பார்த்து இருக்கலாம் அவைகள் பச்சை நிறத்தில் இருப்பதை பார்த்து இருப்போம். மேலும் அவைகள் கூட்டம் சேராமல் தனி தனியாக இருப்பதை தான் பார்த்து இருப்போம். பெரும்பாலும் அவைகளை நாம் பறந்து சென்றே பார்த்திருக்க மாட்டோம் குதித்து குதித்து சென்று தான் பார்த்திருப்போம் ஆனால் வயல்வெளிகள் மீது கும்பலாக படையெடுக்கும் இந்த வெட்டுக்கிளிகள் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறத்தில் இருப்பதை காணலாம். அசால்டாக பல நூறு கிலோமீட்டருக்கு பறந்து செல்வதையும் பார்க்கலாம்.

இவைகள் க்ராஸ்ஹோபார்ஸ் கள் இல்லையா ? என்றால் இவைகள் ஒரு காலத்தில் க்ராஸ் ஹோபராய் இருந்து பின் உடலில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் இந்த வில்லன் வடிவில் மாறி விட்டவைகள் . (பரிணாம வளர்ச்சியுடன் குழப்பி கொள்ள வேண்டாம். இது பரிணாம வளர்ச்சி அல்ல ) அவை ஏன் அப்படி மாறுகின்றன ? எப்போதும் அனைத்து க்ராஸ்ஹோபர்ஸ்ர்ஸ்களும் இப்படி லோகஸ்ட் ஆக மாறுமா?  என்றால் இல்லை. மிக சில தருணங்களில் மட்டுமே இந்த க்ராஸ் ஹோபார்ஸ்களில் வில்லன் மாற்றம் நடக்கிறது. அது ஏன் எப்படி எதனால் நடகிறது என்று பார்த்தால்....

பொதுவாக வெட்டுக்கிளிகள் தனித்து வாழக்கூடியவை. முட்டைகள் இட்டு அவற்றில் இருந்து வரும் குட்டி வெட்டு கிளிகள் இதே போல தனித்து பச்சை நிறத்தில் இருக்கும் வெட்டுக்கிளி ஆக வளர்பவை. ஆனால் மிகச் சில தருணங்களில் இது நடக்கிறது. தனியாக இருக்க வேண்டிய வெட்டுக்கிளிகள் கும்பலாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. உணவு தேவை அதிகம் மக்கள் தொகையோ அதிகம் என்கிற சூழலை வெட்டுக்கிளிகள் எதிர்கொள்ள நேர்கிறது. சில நேரங்களில் இவைகள் உணவு தேவை ,வறட்சியை எதிர்கொள்கின்றன. அப்போது கும்பலாக வாழும் வெட்டுகிளிக்கு உடம்பில் ஒரு மாற்றம் ஏற்பட ஆரம்பிக்கிறது. அது ஒரு உயிர்காக்கும் உள்ளுணர்வு என்று சொல்லலாம். ' நாம இப்படியே இருந்தா செத்துப் போய் விடுவோம் நாம உயிர் வாழனும்னா நாம வேற மாறி மாறி ஆகணும் ' என்று அவைகளுக்குள் உள்ளுணர்வு கட்டளையிடுகிறது. 

கும்பலாக வாழும் போது ஒரு வெட்டு கிளி அடுத்த வெட்டு கிளியை பார்க்கிறது .. முகர்கிறது மேலும் பின் பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொட நேருகிறது. இந்த செயல்களால் அவைகள் உடலில் உள்ள சில ஹார்மோன்கள் சுரக்க வைக்க படுகிறது.அந்த ஹார்மோன் சுரக்க சுரக்க படி படியாக வெட்டுகிளிகள்  உருமாறுகிறது.

பச்சையாக இருந்த உடல் இப்போ மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது. ரக்கைகள் முன்பை விட வேறு மாதிரி பலமாக .. நீண்டதூரம் பறப்பதற்கு  ஏற்றமாதிரி மாறுகிறது. க்ராஸ் ஹோபர் ரக்கைகள் இரண்டடுக்கு மெல்லிய ரக்கைகள் கொண்டிருக்கும் ஆனால் locust ரக்கைகள் நீண்டு வலிமையான வடிவாக மாறுகிறது.அவைகளின் பார்க்கும் திறன் முகரும் திறன் எல்லாமே அப்பாவி to சூப்பர் வில்லன் நிலைக்கு நிலைமாற்றம் அடைகிறது. சொல்ல போனால் இவைகளின் மூளை கூட அளவில் பெரிதாக மாறுகிறது. இந்த மாற்றம் இரண்டு மூன்று கட்டமாக நடக்கிறது..உடல் உருவ அளவில் கொஞ்சம் முன்பை விட தன்னை சுருக்கி கொள்கின்றது. 

ஒரு grass hoppers தனித்து மட்டுமே இருக்கும் ஆனால் ஒரு locust  கும்பலாக சமூக விலங்காகவும் வாழ முடியும்.  இப்போது இவைகள் கும்பலாக ஒற்றுமையாக வலிமை மிக்கவையாக நாடு விட்டு நாடு கண்டம் விட்டு கண்டம் பறந்து செல்கின்றன. அவைகள் செல்லும் பாதைகளில் உள்ள பயிர்கள் அனைத்தையும் தின்று தீர்த்து போகும் வழி பூராவும் அழிவை தடயமாக விட்டு செல்கின்றன.

பொதுவாக இந்த மாதிரி வெட்டுக்கிளிகளின் இடமாற்றம் என்பது பருவ மாறுதல் மழை பொழிவு.. காற்று திசை இவைகளை பொறுத்து உண்டாகிறது. குறிப்பாக பாலைவனப் பகுதியில்  வரட்சிகள் மிகுந்து  உணவு குறைவாக பற்றாக்குறையாக  இருக்கும் தருணங்களில்  வெட்டுக்கிளிகள் முட்டையிட  நேர்ந்து இருக்கும் சமயங்களில் இந்த உருமாறும் வில்லன்கள் உருவாகின்றன. இவைகள் காற்றை பின் தொடர்ந்து தனது பாதையை அமைக்கின்றன என்பதால். ஓரளவு இவைகள் செல்ல போகும் பாதையை நம்மால் கணிக்க முடியும். இயல்பாக வாழ சூழல் இல்லாத போது காலத்துக்கு ஏற்றார் போல தன்னை மாற்றி கொண்டு உயிர்வாழும் சக்தி பொதுவாகவே விலங்குகளுக்கு பூச்சிகளுக்கு அதிகம் இருக்கின்றன. இந்த வெட்டுகிளிகள் அதை தான் செய்கின்றன.

இவைகள் கடந்து செல்லும் இடங்களில் பயிர்கள் பெரிய அளவில் நாசம் செய்து விவசாயிகளை கதற விடுகின்றன.உணவு உற்பத்தி குறைவதால் உண்டாகும் chain reaction களுக்கு காரணமாகின்றன. இவைகளை அடக்க சிறந்த வழி பறவைகள் .
பறவைகள் தான் இந்த வில்லன்களை தட்டி கேட்கும் சூப்பர் ஹீரோஸ்கள். இவைகளை தின்று தீர்க்கும் பறவைகள் எண்ணிக்கை குறைந்து போனால் இவைகள் தட்டி கேட்க ஆள் இல்லாமல் அட்டகாசம் செயகின்றன.. (குருவிகள் சாகும் போது குருவி செத்தா நமக்கு என்ன என்று இருந்த மனிதர்கள் இப்போது கொஞ்சம் சங்கிலி தொடர் விளைவு பற்றி உணரலாம் ) 

இதை தவிர தகுந்த ராசயணங்கள்  மூலம் இவைகளை கட்டு படுத்தலாம்.  மற்றும் இவைகள் உடலில் சுரக்கும் சேரடோனியம் தான் இவைகளின் வில்லன் நடத்தைக்கு காரணம் என்பதால் அதற்கு எதிரான கெமிக்கல் தெளிப்பது மூலமாகவும் இவைகளை கட்டு படுத்தலாம்.

சரி இந்த வெட்டுகிளிகளை காப்பான் படத்தில் வருவது போல மனிதர்களே உருவாக்க முடியுமா ? என்றால் விடை ஆம் நிச்சயம் முடியும்.

Paul Driessen இவர்  the Committee for a Constructive Tomorrow (CFACT) and the Center for the Defense of Free Enterprise இல்
சீனியர் பாலிசி அட்வைசராக இருப்பவர்... கிழக்கு ஆப்ரிக்காவில்  Kenya, Ethiopia, Eritrea, Djibouti மற்றும்  Somalia வில் வெட்டுகிளிகள் 70 ஆண்டுகள் இல்லாத அளவு பாதிப்பை உண்டு பண்ணிய போது. இது ஒரு man made என்று அவர் அறிவித்தார்.
அவர் கூறுகிறார்..". Economic development organizations and activist nongovernmental organizations have foisted "agroecology" on the poorest nations — an organic-style agriculture.

இது மனித உருவாக்கமோ அல்லது இயற்கையின் உருவாக்கமோ ஆனால் ஒன்று நிச்சயம் மனிதன் தன்னை மிகப்பெரிய மாற்றத்திற்கு தயார் செய்துகொள்ள வேண்டிய நேரம் இது. இல்லையேல் டார்வின் சொன்ன 'தகுதியுள்ளவை' லிஸ்டில் மனிதன் பெயர் இருப்பது சந்தேகம்தான். 

-ரா.பிரபு -

அதிகம் உணர்ச்சிவசப்படாது இருக்க என்ன செய்வது??*கரப்பான் பூச்சி கோட்பாடு



இது கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை அவர்களால் பகிரப்பட்ட கதை.

ஒரு உணவகத்தில் கரப்பான் பூச்சி ஒன்று எங்கிருந்தோ பறந்து வந்து ஒரு பெண் மீது அமர்ந்து கொண்டது. உடனே அந்த பெண் பயத்தால் கூச்சலிட ஆரம்பித்தார். மிகவும் கஷ்டப்பட்டு அவர் அந்த கரப்பானை அவர் மீதிருந்து விலக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். அது வரை அமைதியாக இருந்த அவருடன் வந்தவர்களுக்கும் இப்பொழுது அந்த பதற்றம் பற்றிக்கொண்டது. மிகவும் கஷ்டப்பட்டு அவர் அந்த கரப்பானை தன் மீதிருந்து விளக்கி விட்டார்.

ஆனால் அந்த கரப்பான் இப்பொழுது வேறொரு பெண் மீது சென்று அமர்ந்து கொண்டது. இப்பொழுது இந்த பெண் அதே போல் கூச்சலிட ஆரம்பித்தார். அமைதியாக இருந்த மொத்த உணவகமும் இப்பொழுது அமைதியிழந்து காணப்பட்டது.

இதை பார்த்துக் கொண்டிருந்த பணியாளர் சூழ்நிலையை சரி செய்ய விரைந்தார். இந்த முறை கரப்பான் பறந்து சென்று அந்த பணியாளர் மீது அமர்ந்து கொண்டது. பணியாளர் தன்னை நிதானித்துக் கொண்டு தன் சட்டையின் மீது அமர்ந்திருக்கும் கரப்பானின் நடத்தையை கவனித்தார். அது தன் நகர்தலை நிறுத்தியதும், தன் விரல்களால் அதை பிடித்து உணவகத்திற்கு வெளியே வீசியெறிந்தார்.

நான் என் காபியை பருகி கொண்டே இதை பார்த்துக் கொண்டிருந்தேன். என் மனது இந்த நிகழ்ச்சியிலிருந்து சில கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தது. அவர்களின் அந்த நடத்தைக்கு கரப்பான் பூச்சி தான் காரணமா? அப்படியெனில் அந்த பணியாளர் ஏன் அதன் மூலம் அமைதியிழக்கவில்லை? அவர் மட்டும் எந்த ஆரவாரமுமின்றி அதை நேர்த்தியாக கையாண்டார்.

எனவே அந்த பெண்களின் நடத்தைக்கு கரப்பான் பூச்சி காரணம் அல்ல. அந்த கரப்பான் ஏற்படுத்தும் தொந்தரவை கையாள முடியாத அவர்களின் இயலாமை தான் அவர்களின் அந்த நடத்தைக்கு காரணம்.

இதன் மூலம் நான் உணர்ந்தது என்னவெனில், என் தந்தை அல்லது மனைவி அல்லது முதலாளியின் கடுமையான பேச்சு என்னை அமைதியிழக்க செய்யவில்லை, அந்த வாக்குவாதத்தை கையாள முடியாத என் இயலாமை தான் என்னை தொந்தரவு செய்கிறது. என் அமைதியை குலைக்கிறது.

சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசல்கள் என்னை தொந்தரவு செய்யவில்லை, ஆனால் அந்த நெரிசல்களை கையாள முடியாத என் இயலாமை தான் என்னை தொந்தரவு செய்கிறது.

என் வாழ்வில் குழப்பத்தை சிக்கல்கள் உருவாக்குவதில்லை, அதற்கு நான் செய்யும் எதிர்வினை தான் உருவாக்குகிறது.

இதன் மூலம் நான் கற்றது

வாழ்வில் நான் எதிர்வினை ஆற்ற கூடாது, பதிலளிக்க வேண்டும்(I should not react in life, I should always respond).

நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு நடக்கும் நிகழ்ச்சிகள் நம்மிடம் உள்ள அனைத்தையும் பறிக்கக்கூடும் ஒன்றை தவிர, அது தான் ஒரு சூழ்நிலைக்கு நாம் எவ்வாறு பதிலளிக்கிறோம் என்பதை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்.

*வாழ்வில் நமக்கு நடக்கும் விடயங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது ஆனால் அதற்கு நாம் எப்படி பதிலளிக்கிறோம் என்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.*

நன்றி:திரு.சிவா

Thursday 28 May 2020

பொன்மகள் வந்தாள்*மணி


சூர்யா ஜோதிகா தயாரிப்பில் மற்றுமொரு ஹீரோயின் ஓரியன்டட் படம்.நிறைய பெரிய நடிகர்கள் இருக்கிறார்கள்.சமூக கருத்து இருக்க வேண்டுமென்ற ஒரு மெசேஜ் சொல்லும் படம்

#கதை

ஆரம்பக்காட்சியில் இருவரின்மீது துப்பாக்கி சுடும் சத்தத்துடன் துவங்குகிறது படம்.

ஊட்டியில் வசிக்கும் பாக்யராஜின் மகளாக வருகிறார் ஜோதிகா. சமூக அநீதி வழக்குகளை பொதுநல வழக்காக பதிந்து தண்டனை பெற்று தருகிறார் பாக்யராஜ்.15 வருடத்துக்கு முன் குழந்தைகளை கொன்றதாக சைக்கோ கொலையாளி ஜோதி என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப் படுகிறார்.மீண்டும் தூசு தட்டி இந்த வழக்கில் ஆஜராகிறார் ஜோதிகா. சுடப்பட்டவரின் தந்தையான பணக்காரரான தியாகராஜன் அவரின் வக்கீலாக பார்த்திபன். இருவரிடையே வாதம்.இறுதியில் நிகழ்ந்ததை நெகிழும்படி முடிகிறது கதை

#டின்ஜ்

*படத்தின் பெரும்பலம் ராம்ஜியின் கேமரா.ஊட்டியை வேறுவிதத்தில் காட்டிய விதம் அருமை.

*மற்றவர்க்கு வந்த வலியை தனக்காக உணரும் மனிதநேயம் எனும் கருத்து

*பெண் காமுகர்கள் சட்டத்தை பயன்படுத்தி தப்பித்துவிடுவதை தைரியமாய் சொல்லியிருக்காங்க

*ஆங்காங்கே பளிச்சிடும் வசனம்

*சமீபத்தில் நடக்கும் சிறுமி பாலியல் துன்புறுத்தல் எனும் வலுவான கதைக்கு பலவீனமான திரைக்கதை.
முதல் ஒரு மணி நேரம் தைரியமாய் ஓட்டிவிட்டு பார்க்கலாம்

*படத்தின் இரண்டாம் ரீலிலேயே தியாகராஜனை காட்டிவிடுவதால் இவர்தான் மச்சி கொலைகாரன் அல்லது இவன் புள்ளைனு யோசிச்சுவிட்டதால் காத்து போன பலூன் ஆகிடுச்சு திரைக்கதை

* Forensic ,evaru போன்ற படங்களில் கொலை நடக்கும் ஆனால் அதை கண்டுபிடிக்க மெனக்கெடும் காட்சிகள் இவரா இவரா என சுவாரஸ்யமா இருக்கும்.இதில் மிஸ்ஸிங்

*ஜோதிகாவின் நடிப்பு ஓகே.

*பார்த்திபன் சாரை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம்.

-ஒரு முறை பார்க்கலாம்

Wednesday 27 May 2020

நேரு குறித்து வாசிக்க வேண்டிய 29 தமிழ் கட்டுரைகள்*_



*நேரு - இந்தியாவின் எதிர்காலத்தை கட்டி எழுப்பியவர்*
https://goo.gl/ZmXEXy

*ஏன் இந்தியாவில் ராணுவ ஆட்சி ஏற்படவில்லை?’ நேருவுக்கு நன்றி சொல்லுங்கள்!*
https://goo.gl/RzfhDZ

*நேருவின் நம்பிக்கை நமக்கு சொல்வது என்ன? - நேருவை தெரிந்துகொள்வோம்! - மினி தொடர்: பகுதி 1*
https://goo.gl/aPbC7o

*தாகூரும் காந்தியும் முரண்பட்ட புள்ளி! நேருவைத் தெரிந்துகொள்வோம்! - மினி தொடர்: பகுதி 2*
https://goo.gl/a5HvTf

*ஏன் நேரு டைரி எழுதத் தொடங்கினார்...? : நேருவைத் தெரிந்துகொள்வோம்! - மினி தொடர்: பகுதி 3*
https://goo.gl/eM58tD

*காந்தியை ஆய்வுக்கு உட்படுத்திய நேரு..! - நேருவைத் தெரிந்துகொள்வோம்! - மினி தொடர்: பகுதி 4*
https://goo.gl/9MJpwD

*நேருவின் அரசியல் அறம்!..- நேருவைத் தெரிந்துகொள்வோம்! - மினி தொடர்: பகுதி-5 
https://goo.gl/8qXwAa

*நேரு இருக்காரே மச்சி! - நேருவைப் பற்றிய ஐந்து கற்பிதங்கள் (Ramachandra Guha's article in Tamil)*
https://goo.gl/a8W0p7

*நேரு: அழித்த தலைவரா? காத்த கடவுளா? (Manoj Joshi's article in Tamil)*
https://goo.gl/T691Ek

*நேரு 125 - விகடன்*
https://goo.gl/b77GfK

*சிறியன சிந்தியாத நேரு - மே 27 நினைவு தின சிறப்புப் பகிர்வு*
https://goo.gl/CGljST

*நேருவைத் துணைகொள்ளல்*
https://goo.gl/OS5bK8

*இந்தியாவும் உலகமும் - ஜவகர்லால் நேரு உரை*
https://goo.gl/uaEqe9

*போஸ் தூக்கிலிடப்பட்டாரா? நேரு தான் இதற்கு காரணமா?*
https://goo.gl/O8u2Pf

*நேரு, நேதாஜி - அரசியல் எதிரிகளா? - 1 (Early years)*
https://goo.gl/kBkn10

*நேரு, நேதாஜி - அரசியல் எதிரிகளா? - 2 (The friendship)*
https://goo.gl/akRMwJ

*நேரு, நேதாஜி - அரசியல் எதிரிகளா? - 3 (Conflict and crisis)*
https://goo.gl/kGBx9G

*நேரு, நேதாஜி - அரசியல் எதிரிகளா? - 4 (The afterlife of Bose-Nehru conflict)*
https://goo.gl/qAeYjB

*நேரு - ஒரு சமகாலத்தவரின் மதிப்பீடு! (About Walter Crocker's 'Nehru: A Contemporary Estimate')*
https://goo.gl/5s3QJu

*நேருவின் ஆட்சி: பதியம் போட்ட 18 ஆண்டுகள்!*
https://goo.gl/M6sKDn

*விதியோடு ஒரு ஒப்பந்தம் - விடுதலை பெற்ற அன்று நேரு ஆற்றிய உரை*
https://goo.gl/pwULTN

*நேருவின் வாழ்வில் பெண்கள்: தொடரும் சர்ச்சைகளும் உண்மைகளும்.*

https://goo.gl/sDs9dh

*இந்தியாவின் ஆன்மாவில் கலந்த நேரு! - திரு.வீரபாண்டியன்*

https://goo.gl/LuAtNo

*’இந்து நாடாக’ இந்தியா: நேரு - படேல் உறவில் பகைமை இருந்ததா?*

https://bbc.in/2Kf7zkr 
*காஷ்மீர்: நேரு வெளிநாட்டில் இருந்தபோது சர்தார் படேல் சட்டப்பிரிவு 370ஐ ஏற்றுக்கொண்டாரா?*

https://bbc.in/353tzH4 

*பிழைகள்..தோல்விகள்...மகத்தான சாதனைகள்... இந்தியா மறக்கக் கூடாத நேரு!*

http://bit.ly/2OedXJK 

*இந்தியாவிற்கான பாதுகாப்பு கவுன்சில் இடத்தை சீனாவிற்கு தாரைவார்த்து துரோகம் செய்தாரா நேரு?*

http://bit.ly/2pm9Y5G 

*நேரு குறித்த விமர்சனங்கள்*

http://bit.ly/376NMgH 

*நேருவிடம் நமக்கு மிஞ்சியிருப்பது என்ன எனும் குஹாவின் கட்டுரையின் ஒரு பகுதி*

http://bit.ly/2qQEWTI

வனமாலி

ஆயிரமடி தோண்டியும்
பாறையில் கிடைக்கவில்லை
தண்ணீர்
ஒரு அடி நீ நகர்ந்தாய்
என் கண்ணில் சமுத்திரம்

-வனமாலி


சிந்திக்காத ஒருவன் மற்றவர்களும் சிந்தனை மனமற்றவர்களாக இருப்பதையே சுயநலத்துக்காக விரும்புவான்.சுயநலத்துக்காக அதை வளர்க்கவே விரும்புவான்

-நா.பார்த்தசாரதி

தமிழ்ச்செல்வன்

கால்களை மடக்கி உட்கார்ந்து பார்த்தான்..
ஒரு காலை நீட்டி 
ஒரு காலை மடக்கி 
கொஞ்சம் பின்னால் சாய்ந்து பார்த்தான் ..
ஒரு பக்கம் சாய்ந்து உட்கார்ந்து 
ஒரு கையை தரையில் ஊன்றி 
படுத்து பார்த்தான்..

எப்படி உட்கார்ந்து பார்த்தாலும் பசித்தது ..

ச.தமிழ்ச்செல்வன் 
பிறந்ததினம்

சுப.வீ

1477. இதுதான் இந்து தர்மமாம்!
================================
இந்து தர்மம் என்றால் என்ன? என்பதை கோல்வால்கர் தன்னுடைய நூலில் எழுதுகிறார் (கோல்வால்கர்தான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினுடைய குருநாதர்). ஆங்கிலேய அதிகாரி ஒருவர் தென்னாட்டில், தெருவில் தன் பியூன் பின்தொடர நடந்து வந்தாராம். அவருடைய ஏவலாளர் (அதாவது பியூன்) பிராமண வகுப்பைச் சார்ந்தவராம். எதிரில் அவருக்கு அடுத்த நிலையில் இருக்கிற ஒரு அதிகாரி வந்தாராம் அவர் நாயுடு வகுப்பைச் சேர்ந்தவராம். அவர் இந்த ஆங்கிலேய அதிகாரியிடம் கைகுலுக்கி விட்டு பின்னால் நின்ற அந்த பியூன் பிராமணரிடம் காலைத்தொட்டு வணங்கினாராம். இப்போது இந்த ஆங்கிலேய அதிகாரி கேட்டிருக்கிறார் "நான் உன்னுடைய அதிகாரி என்னைக்கூட நீ கையை தொட்டுதான் குலுக்கினாய் ஆனால் அவர் காலைத் தொட்டு வணங்குகிறாயே?" என்று கேட்டபோது "இது தான் எங்களுக்கு இந்து தர்மம் நாங்கள் பிராமணர் காலில் விழவேண்டும்" என்று அவர் சொன்னாராம். இதை பெருமையுடன் கோல்வால்கர் தன்னுடைய "Bunch of Thoughts" என்னும் புத்தகத்தில் 138வது பக்கத்தில் எழுதியிருக்கிறார். ஆம் பார்ப்பனர்களை மதிப்பதுதான் இந்து தர்மம் என்று சொல்லித் தருகிறார்கள்.



நன்றி.குமரகுரு

Tuesday 26 May 2020

25-5-2020

[: ஒரு ஆவணக்குறிப்பில் 1782ம் ஆண்டு உப்புவரி மூலம் 29 இலட்சமும்,1785ல் அது 62 இலட்சமுமாக வருமானம் உயர்ந்தது.இதை தொடர்ந்து 1869ம் ஆண்டு இந்தியாவின் குறுக்கில் கிழக்கு மேற்காக 2500 கி.மீ க்கு புதர் வேலியை அமைத்தார்கள்

- உப்பு வேலி நூலிலிருந்து


ஏற்றிவிட்டுத்தான்
கரைத்தாள்.
கூழ் குடிக்கும் ஆசையில்
இறங்கி வந்துவிட்டது
வளையல்

-கண்மணி குணசேகரன்


திட்டுவதற்கு உபயோகிக்கும் வார்த்தைகள் தீர்ந்தனவே ஒழிய,திட்டுகின்ற கோபமும் ரோசமும் தீராது
- ஜெயகாந்தன்



: கறுத்த கண்ணனுக்கு தங்கச்சி பேரு அன்னக்கொடி.கொணத்துல தங்கமா இருந்தவா உருவத்தில கன்னங்கரேர்னு..அழகு கறுப்புன்னு ஒண்ணு இருக்கு.அவ பாவம் எழவு கறுப்பு. ஒலக்கைக்கு குஞ்சம் வச்ச மாதிரி ஒடிசலா வேற இருப்பா.அவ சிரிச்சா பளீர்னு தெரியிறது பல் இல்ல; ரெண்டு பல்லுக்கு மத்தியில் இருக்கிற விரிசல்தான். 

அதுல ஒரு ஈயோ எறும்போ இடைஞ்சல் இல்லாம போயிட்டு வரலாம்.கொஞ்சம் கூன் போட்ட முதுகு.அது வேற வருசா வருசம் அளவு மாறிக்கிட்டேயிருக்கு. எப்பேர்ப்பட்ட தையக்காரனும் அவ லவுக்கையை தச்சிர முடியாது..

-வைரமுத்து
கள்ளிக்காட்டு இதிகாசம்

படித்தது

முகங்கள்


நிச்சயிக்கப்பட்ட முன்முடிவுகளை நோக்கி
நகர்ந்துகொண்டிருந்தது மாறுவேடப் போட்டி

ராஜா வேடத்தில் வாள்வீசி நடந்த சிறுவன்
கிரீடம் சரிய இறங்கி வந்து சொன்னான்,
“கழற்றிவிடு அம்மா தொப்பி கனக்கிறது”

உலக அழகி வேடமிட்ட ஒன்றாம்வகுப்புக் குழந்தை
மேடையில் சிறுநீர் கழித்து அம்மாவிடம் அடிபட்டது

காந்தி வேடதாரி கதராடை புரள வந்து
“குளிரெடுக்குது சட்டை போட்டுவிடு” என்றான்

வேஷம் கலைத்து விளையாடப் போய்விட்டனர்
குழந்தைகள்
பரிசளிப்பு விழாவில் கத்திக்கொண்டிருந்தனர்
பெற்றோர் வேடமிட்டவர்கள்.

-மயூரா ரத்னசாமி



இலவு காத்த கிளி
ஒரு பக்கம் இருக்கட்டும்
தானும் ஒரு நாள்
மேகமாவதாய் எண்ணியிருந்த பஞ்சின் கனவு
தலையணையில் முடிந்தது

-தென்றல்


எதிர்காலத்துக்கு தேவைப்படுமென செல்போனில் சேமித்துக் கொள்கிறார்கள் நம்பர்களோடு நண்பர்களை


 ஒரு கவிஞனின்போஸ்ட் மார்டம்
ரிப்போர்ட்

விபத்தில் இறந்த கவிஞனை
வெட்டிப்பார்த்த
டாக்டர்எழுதினார் 
மூளை முழுவதும்
பூக்கள்!

கண்குழியில்
சின்னதாய் இரண்டு வானவில்

மூச்சுக்குழாயில்  ஒரு புல்லாங்குழல்
தொண்டையில் நெருப்பை
விழுங்கிய அடையாளங்கள்

நெஞ்சுநிறைய வானத்து நீலம்
இதயத்தில் ஏராளமாய்
விதைகள்

வயிறு
காலி!

-தஞ்சாவூர் கவிராயர்



புத்தகங்களைப் பொறுத்தவரை பூஜ்ஜியம் ரூபாய்தான் இங்கே சரியான விலை, அதற்குமேல் என்ன விலை வைத்தாலும் பெரும்பாலானோர் வாங்கத் தயங்குகிறார்கள்

-என்.சொக்கன்

Saturday 23 May 2020

கல்பற்றா நாராயணன்

முரண்டு

இறந்தவர்கள்
பிடிவாதக்காரர்கள்.
கங்கைநீர் வாயில் விட்டாலும்
விழுங்க மாட்டார்கள்.
நாம்
சுவரில் தலைமுட்டி உடைத்துக் கொண்டாலும்
அவர்கள் பொருட்படுத்துவதில்லை.
அவர்களின் மடக்கிய விரல்களை
உடைக்காமல் பிரிக்க முடியாது நம்மால்.
மண்ணால் விழுங்கப்படுகையில்
தீ எரிந்து ஏறுகையில்
சற்று முகம் சுளிப்பதுகூட இல்லை.
அவர்கள் செய்யமாட்டோம் என்று முடிவெடுத்தால்
முடிவெடுத்ததுதான்.

-கல்பற்றா நாராயணன்

எஜ்சிவெல்

வளர்ச்சியடையாத ஆப்பிரிக்க நாட்டில் வெள்ளைக்காரன் மின்சாரத்தால் ஓடும் மோட்டாரை கண்டுபிடித்தான்.அதை கரும்பு பிழிய பயன்படுத்தினான்.

அவனிடம் ஒரு வேலைக்காரன் இருந்தான்.அவனிடம் இந்த மோட்டாரை வணங்கிவிட்டுத்தான் நீ சுவிட்சை போட வேண்டும் என்றான்.அவன் அதை ஏதோ சக்தியுள்ள கடவுளாய் நினைத்தான்.அது எந்திரம் என சொல்லவில்லை.

ஒரு நாள் வெள்ளைக்காரன் ஊருக்குப்போனான்.மறுநாள் அந்த வேலைக்காரன் மெசினை ஆராய்ச்சி மனப்பான்மையுடன் சுற்றி வருகிறான்.சுவிட்சை துணிந்து போட்டான். பட்டை ஓடியது. தொட்டுப்பார்த்தான் கை இழித்துக் கொண்டது.பின் அவனுடைய தலையும் இழுத்துக்கொண்டது.

இதை இன்னொருவன் பார்த்து அலறுகிறான்.பின் நாம் வணங்காமல் இயக்கியதாலும்,பலி கொடுக்காமல் இந்த மெசினை இயக்கியதாலும் இந்த வேலைக்காரனை கடவுள் என்ற இந்த இயந்திரம் பலி வாங்கிவிட்டது.

#எஜ்சிவெல் எழுதிய கதை.மதங்கள் உருவானதை கூறுகிறார்.இது வழிபாட்டுக்கும், பலி வாங்கியதற்கும், மதத்திற்குரிய தகுதியையும் பெற்றது எனக்கூறி முடிக்கிறார்.

 *மணி

info

திப்பு சுல்தான் மைசூரை ஆண்டபோது அந்தியூருக்கு வேட்டைக்கு வருவதுண்டு. அப்போது குதிரை விற்க வியாபாரிகள் சந்தைக்கு வருவார்கள்.

திப்பு கோட்டையையும் குதிரை லாயத்தையும் உருவாக்கினாராம். தற்போது பேருந்துநிலையம் பின்புற பகுதி கோட்டை என அழைப்பது குறிப்பிடத்தக்கது

#info

சகுனி

ஒருவனுக்கு யாகம் செய்ய நூறு வெண் பசுக்கள் தேவைப்பட்டது.தருமரிடம் 21 பசுக்கள் இருந்தன.தானமாய் கேட்டு கொடுக்காததால் பகடை விளையாட அழைத்தான்.அதில் தோற்றுப்போய் அவனிடம் பசுக்களை இழந்தான்.

இந்த விஷயம் கேள்விப்பட்ட சகுனி ஒரு யாசகனே வென்றிருக்கிறான்.நாமும் வெல்லலாம் என பொறி தட்டி சூதாட்டத்தை தருமரை தோற்கடிக்க தேர்ந்தெடுத்தான்.

-படித்தது.

கணையாழியின் கடைசிப் பக்கங்களில் சுஜாதா


பரிச்சயமில்லாதவர்களிடமிருந்து எனக்கு வரும் கடிதங்களைப் பெரும்பாலும் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
1. உங்கள் கதைகளை ரசித்துப் படிக்கிறேன். உங்கள் கையெழுத்திட்ட போட்டோ ஒன்று அனுப்புவீர்களா?
2. உங்கள் கதைகளை ரசித்துப் படிக்கிறேன். நான் எழுதியுள்ள கள்ளும் முள்ளும் என்கிற காவியத்தை உங்கள் மேலான பார்வைக்கு அனுப்ப விரும்புகிறேன். அனுப்பலாமா?
3. உங்கள் கதைகளை ரசித்துப் படிக்கிறேன். நான் ஆண்டிப்பட்டி இண்டஸ்ட்ரியல் ட்ரெய்னிங் இன்ஸ்டிட்யூட்டில் ஃபிட்டர் தொழில் பரீட்சை பாஸ் பண்ணிவிட்டு வேலையில்லாமல் இருக்கிறேன். உங்கள் தொழிற்சாலையில்....

பரிச்சயமில்லாதவர்கள் நேரில் வந்து சந்திக்கும்போது அவர்கள் கேட்கும் கேள்விகளும் பெரும்பாலும் மூன்று வகைப்படும்.
1. உங்களுக்கு எல்லாம் எப்படி ஸார் டயம் கிடைக்கிறது எழுதுவதற்கு?
2. இதுக்கெல்லாம் எவ்வளவு கொடுப்பான் உங்களுக்கு?
3. நான் படிக்கிறதில்லை. என் ஒய்ஃப்தான் படிப்பாள் இதெல்லாம்....

உண்மையான ரசிகர்கள் கடிதம் எழுதுவது அல்லது நேரில் வந்து சந்திக்கிற ஜாதியில்லை.

Wednesday 20 May 2020

INFO

[07/05, 5:41 pm] மணிகண்ட பிரபு: கடைசியாக மிச்சமிருப்பது
இது ஒன்றுதான்
நிஜவாழ்க்கையின் யதார்த்தத்தோடு
மோதிவிடுவது மட்டும்தான்

-தஸ்தாயெவ்ஸ்கி


[09/05, 7:23 am] மணிகண்ட பிரபு: துவங்கிய இடத்திலேயே வந்து சேருகிற இரண்டே எண்கள் 0& 8.இதில் ஜீரோ போடுவது எளிது.8 சற்று சிக்கலானதும் கன்ட்ரோல் இருந்தால் மட்டும் காலூன்றாமல் போட முடியும் என்பதால் இருசக்கர ஓட்டுநர் உரிமத்துக்கு இதை தேர்ந்தெடுத்தனர்.

#info
[09/05, 7:28 am] மணிகண்ட பிரபு:


 பாட்டு போட்டாலென்ன
படம் காட்டினாலென்ன
நடந்து போனாலும்
வாகனத்துக்குள் இருந்தாலும்
ஒவ்வொருவர் மனதிலும்
ஒரு லாரி ஓடிக்கொண்டுதான்
இருக்கிறது

-க.பஞ்சாங்கம்


[09/05, 11:34 am] மணிகண்ட பிரபு: வயிறு
இருக்கும்வரை
எல்லா  மனிதர்களும்
யாருக்கோ கைக்கூலிகள் தான்

-படித்தது
[10/05, 8:12 am] மணிகண்ட பிரபு: 


ஆங்கிலத்தில் 'பாக்ஸ்' என்பது பெட்டி செய்யும் மரம். பின்னாளில் பெட்டிக்கே அப்பெயர் வைத்துவிட்டனர்

#info
[10/05, 6:45 pm] மணிகண்ட பிரபு: 



இந்திய ரசிகர்கள், ஒரே மாதிரியான பாத்திரங்கள், எதிர்பார்க்கக் கூடிய வசனங்கள் ஆகியவற்றுக்குத் தங்களைப்  பழக்கப்படுத்திக் கொண்டுவிட்டார்கள்

-நஸ்ரிம் முன்னி கபிர்
(சினிமா வரலாற்றாளர்)
[11/05, 6:05 am] மணிகண்ட பிரபு: 


நம்மை யாரும் புறக்கணிக்காத அளவிற்கு நாம் வளர்வதற்கு அறிவு ஒன்றே அட்சயப் பாத்திரம்

-இறையன்பு
[12/05, 7:30 am] மணிகண்ட பிரபு:


 ஒரு கால்பந்தாட்டக்காரன் தன் காலடியில் வந்துசேரும் பந்தை தன்னுடையது என எண்ணாமல் குழுவினுடையது என நினை. நீதான் 'கோல்' போடவேண்டுமென நினைக்காதே.பந்தை மேலெடுத்துச் செல்ல,உன் சக ஆட்டக்காரன் காத்திருக்கிறான். எங்கும் பலவீனத்திற்கான ஊற்றுக்கண் மனிதன்தான்.

-ஜே.ஜே.சிலகுறிப்புகள்
[12/05, 7:39 am] மணிகண்ட பிரபு: 


காய்ச்சி வடிகட்டும் நுட்பத்தை அரேபியர்கள் அறிந்திருந்தனர். பழச்சாற்றில் இருந்து பிறப்பது ஒயின்.78 டிகிரியில் கொதிக்கவைத்து குளிரவைத்தால் எரியும் தன்மையான நீர்(பிராந்தி) கிடைத்தது.இதே போல் பீரைக்காய்ச்சி வடிகட்டினால் கிடைத்தது விஸ்கி. 
கரும்புச்சக்கையிலிருந்து ரம் தயாரித்தனர்.அடிமைகளை பிடித்துவர,ரம் தயாரிக்க ஊதியமாக ரம் தயாரிக்கப்பட்டது.இப்படித்தான் மது உலகம் முழுதும் பரவியது.
[12/05, 7:47 am] மணிகண்ட பிரபு: 


போனஸ் பிறந்த வரலாறு:

1979-ல் சரண்சிங் தலைமையிலான மத்திய அரசானது இடதுசாரி தலைவர்களிடம் ஆதரவ கேட்டபோது, அமைச்சர் பதவி ஏதும் கேட்டுப் பெறாமல் அவசரநிலை (எமர்சென்சி) காலத்தில் பணிநீக்கம் செய்யப்ட்ட இரயில்வே ஊழியர்களை பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும், எல்லா தண்டனைகளையும் இரத்து செய்ய வேண்டும், ஊழியர்களுக்குப் போனசு வழங்கப்பட வேண்டும் ஆகிய நிபந்தனைகளோடு ஆதரவு வழங்கியது. இதன் தொடர்ச்சியாகவே மாநில அரசின்  ஊழியர்களுக்கும் போனசு என் ற வாசல் திறக்கப்பட்டது.
[13/05, 6:56 am] மணிகண்ட பிரபு: கொஞ்சமாக தெரிந்து கொண்டிருக்கும் போது தெரிந்து கொண்டுவிட்டோம் என்றும், அதிகம் தெரிந்துகொள்ள முற்படும்போது தெரிந்து கொள்ளவில்லை என்ற எண்ணம் ஏற்படுகிறது.ஒரு கதவு திறக்கும்போது திறக்காத பல கதவுகள் தெரியும் விசித்திரம்.
திறப்பதே திறக்காத கதவை பார்க்கத்தானா?

-சுந்தர ராமசாமி
[13/05, 7:00 am] மணிகண்ட பிரபு: 


இதழியலில் show..dont tell என்ற ஒரு உக்தி உண்டு.இப்படி நடந்தது,
அப்படி நடந்தது என்று வார்த்தைகளை கொட்டி அளந்து கொண்டிராமல், நடந்ததை காட்சியாகத் தீட்டிக் காண்பிப்பது வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும்

#info

படித்தது

இந்தியாவுக்கு எதற்கு போகிறீர்கள் என தூதரகத்தில் அதிகாரி கேட்டார்..சுற்றுலாவுக்கு என்றேன்.

மீண்டும் எதற்காக என்றார்
மறுபடியும் சுற்றுலாவுக்கு என்றேன்.

பல்வைத்தியர் 'இன்னும் அகலமா' 'இன்னும் அகலமாக' என்பது போல் அதே கேள்வியை திரும்பத்திரும்ப கேட்டார்.

-அ.முத்துலிங்கம்



தேவையானது எது?சிறந்தது எது?’’
சமூகத்தில் தேவையானது, சிறந்தது என்று இரண்டு நிலைகள் உள்ளன

சமூகப் போக்கு தேவையானதை அங்கீகரித்துக் கொண்டு, சிறந்ததைப் புறந்தள்ளுகிறது. இதனால் சமூகத்தில் சிறந்தது ஒதுக்கப்படுகிறது.
சமூகப் போராளியின் கடமை சிறந்ததைத் தேவையானதாக மாற்றுவதாகும்’’

-புத்தர்


சிகரம் படத்தில் வண்ணம் கொண்ட வெண்ணிலவே பாடல் ரெக்கார்டிங் முடிந்தவுடன் பேசினார்களாம் இப்படி

SPB:ஒரு முறையாவது காதலிக்காதவன் இப்படி எழுத முடியாது.

வைரமுத்து:இருமுறையாவது காதலில் தோற்றவனால் தான் இப்படி பாட முடியும் என்று.


ஒருவரை ஒருவர் கண்டதும் முகமலர்ச்சி சிரமமின்றி ஏற்படவேண்டும். பயன் கருதி அல்ல - பாசாங்குக்கு அல்ல - அர்த்தமற்று அல்ல - கண்டதும் களிப்பு - நம்மைப்போல ஒருவன் என்ற நினைப்பிலிருந்து களிப்பு மலர வேண்டும். அந்த அகமலர்ச்சிக்குப் பெயர்தான் தோழமை.

–அண்ணா


இலக்கியம் பிறப்பது திருத்தும்போதுதான்.அதற்கு முன்பு வெறும் வசனங்களாக மட்டும் இருக்கும்

-அ.முத்துலிங்கம்



வயதாகும்போது புலிகள் வேட்டையாடுவதில் சிரமப்படும். எனவே யானைக்கூட்டத்தை தேடும்.அங்கிருக்கும் யானைக்குட்டியின் கால்களை கடித்துவிட்டு ஓடிவிடும்.நடக்க முடியாத குட்டியை காப்பாற்ற முடியாமல் யானைக் கூட்டம் சென்றபிறகு அதை புலி பதம்பார்த்துவிடும்.

-கோதண்டம் எழுதிய கட்டுரையிலிருந்து

படித்தது

 வாங்கியவுடன்
கால் முளைத்துவிடுகிறது
"செருப்புக்கு"!
- மணிகண்ட பிரபு: 



ஆறிவரும் தழும்பின்
நமநமப்பு அழைக்கிறது
அன்பின் வருடலை
மீண்டும் புண்ணாக்குவதற்கோ
அன்பின் மிகுதியை
அது அலாவுகிறது
-தேவதேவன்



கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.

கூறப்போகும் சொல்லை கூறு கூறாக பிரித்து
சரியாகப் பொருந்துகிறா எனப்பார்த்து, அழகுறப் பொருத்தி, 
கூர்மையானதாக்கி பின் சொல்ல வேண்டுமாம்

-படித்தது


பூஜ்யக் குறைபாடு(zero defect)

தொழிற்சாலையில் உற்பத்தியாகும் பொருட்களில் ஒன்றுகூட சேதாரமில்லாமல் பார்த்துக் கொள்வது தொழிற்சாலை மேலாண்மையில் பெரிய இலக்கு.பொதுவாக ஆயிரம் பொருட்களுக்கு ஒன்று குறைந்தால் ஏற்றுக்கொள்கிறார்கள்.இதுவே பூஜ்யக் குறைபாடு

#info

குரலை மட்டுமே சுமந்து வரும் தொலைபேசி உரையாடலின்
சொற்களின் இடையில்
ஊடாடும் நுண்ணிய 
மௌன இழைகள்
தானே நெய்து கொள்கிறது 
புரிதலின் அடர்த்தியை..

-லதா

கற்றதும் பெற்றதும்-94*மணி



அயோத்திதாசர் திராவிட இயக்கங்களின் முன்னோடி

இங்கே எத்தனை கோடி மனிதர்கள் இருக்கிறார்களோ அத்தனை கோடி நியாயங்கள் கற்பிக்கப்படும் . ஆனால் தர்மம் ஒன்று தான் எனும் 
புத்தரின் சொல்லுக்கு இலக்கணமாய் திகழ்ந்தவர் அயோத்திதாசர்.தமிழர்,திராவிடர் என்ற இரண்டு அடையாளச் சொற்களையும் அரசியல் மையப்படுத்திய பெருமை இவரையே சாரும்.

தமிழகத்தில் திராவிட இயக்க முன்னோடியாய் திகழ்ந்தவரும் முதல் தலித் தலைவருமான க.அயோத்திதாசர் சென்னையில் பிறந்தாலும் நீலகிரி மாவட்டம் காத்தவராயன் எனும் ஊரில் புலம்பெயர்ந்து குடும்பத்தினரோடு வாழ்ந்து வந்தனர். எல்லீஸ் துரை காலத்தில் இவருடைய தாத்தா கந்தப்பன் ஆர்லிங்டன் பிரபுவிடம் வேலை பார்த்தவர்.இளம் வயதிலேயே தமிழ்,ஆங்கிலம், சமஸ்கிருதம்,பாலி மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.நீலகிரியில் தோடர்கள் மற்றும் பழங்குடியினருடன் பழகும் வாய்ப்பு கிடைத்து அவர்களிடம் விழிப்புணர்வை உண்டாக்கிய அனுபவத்தினால் அவருக்கு திராவிடர்கள் குறித்து ஆர்வம் ஏற்பட்டது.

#தியோசபிகல் சொசைட்டி

அயோத்திதாசரின் வாழ்வில் தியோசபிகல் சொசைட்டி முக்கிய பங்காற்றியது.1882ல் சொசைட்டி பம்பாயிலிருந்து சென்னை அடையாறுக்கு மாறியது. முக்கியமான பல ஆளுமைகள் இதில் இருந்தனர்.
அன்றைய நாளில் சுயமரியாதை உணர்ச்சியை ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தது தியாசபிகல் சொசைட்டி.அயோத்திதாசர், லட்சுமி அரசு முதலான மாற்று சிந்தனையாளர்களுக்கு உறைவிடமாய் இருந்தது. முக்கியமாக ஏழை மற்றும்
பஞ்சம சிறுவர்களுக்கு இலவச கல்வி கொடுத்தது.

அயோத்திதாசரின் வரலாற்றுப் பார்வையில் பண்டைய பறையர்கள் பெளத்தர்கள் என்றும்,நிலச் சொந்தக்காரர்கள் என்றும், அவர்களுடைய நிலத்தை ஆரியர்கள் எடுத்துக்கொண்டனர் எனவும் கூறினார்.கர்னல் ஆல்காட்டை சந்தித்து புத்த மதத்துக்கு மாறுவதாக கூறியதுடன் இலங்கை சென்று பிக்கு சுமங்கள நாயகேவிடம் தீட்சை பெற்று திரும்பினார். ராயப்பேட்டையில் 1898ல் சாக்கிய புத்த சங்கம் ஏற்படுத்தினார். சிக்காகோவில் இருந்த டாக்டர் பால்காரஸ் இதன் தலைவராக இருந்தார்.பெளத்த தர்மத்தை பரப்ப பத்திரிக்கை ஆரம்பிக்க எண்ணினார்.பத்திரிக்கை ஆரம்பிக்கும் முன் இந்திய தேச வரலாற்றை எழுதினார்.1500 ஆண்டுக்கு முன் அரசர்களையும் பெருங்குடிகளையும் வசப்படுத்தி வாழ்ந்தவர் உயர்சாதி எனவும், அவர்களை எதிர்த்தோரை தாழ்ந்த சாதி என பிரித்திருப்பதை உணர்ந்தார்.

#பத்திரிக்கையாளராக

பிராமணிய நலனை மையப்படுத்திய இதழ்களுக்கு நடுவே சமூக சீர்திருத்தத்திற்காக பத்திரிக்கை துவங்கும் அவசியம் ஏற்பட்டது. சாதிபேதமின்மை,திராவிடரை மேம்படுத்துதல்,அனைவரும் சமம் எனும் நோக்கத்திற்காக செயல்பட ஆரம்பித்தார்.

1907ல் "ஒரு பைசா தமிழன்" வார இதழ் துவங்கி 1908 ல் தமிழன் என வந்தது.தமிழன் பத்திரிக்கைக்காக, கோலார் தங்கவயல் பெளத்தர்கள் கூடி சிறு அச்சு இயந்திரம் வாங்கித்தந்து உதவினார்கள்.1914 வரை தாசர் இதன் ஆசிரியப் பொறுப்பில் இருந்தார்.தலித்துகளை அவமதிக்கும் அன்றைய சுதேசமித்திரன் உள்ளிட்ட பிராமணிய இதழ்களோடு விவாதப்போர் புரிந்தது குறிப்பிடத்தக்கது. அஸ்வகோஷர்,நந்தன் எனும் பெளத்த அரசர்கள் ஆண்ட தேசத்தில் ஆரியர்,பாரசீகர் குடியேறினர் எனும் வரலாற்றிலிருந்து துவங்கி 
1910-11 ம் ஆண்டில் 'இந்திரர் தேச சரித்திரம்' எனும் முழு ஒழுங்கமைக்கப்பட்ட கருத்துகளை தொடராய் வெளியிட்டார். வரலாறு அற்றவர்களுக்கான வரலாறு என தெரிவித்தார்.திருக்குறள்(திரிபீடகத்தின் வழிநூலாக திரிகுறள் என்றே எழுதினார் ஆனால் முற்றுபெறவில்லை),ஆத்திச்சூடி உள்ளிட்ட நீதிநூல்களுக்கு உரைகளை தமது பத்திரிக்கையில் எழுதினார்.

#பெளத்தராக

இந்துக்களிடம் சாதிமுறை உண்டு.பெளத்தத்தில் இல்லை என கூறி பெளத்தத்தை தழுவினார்.

1917ல் சென்னையில் முதல் பெளத்த மாநாட்டை கூட்டினார்.இதில்தான் மாண்டேகு-செம்ஸ்போர்டு குழுவிடம் ஆதிதிராவிடர்களுக்குரிய பிரதிநிதித்துவம் கோரி லட்சுமி நரசு தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதை தொடர்ந்து 1920,1932,1952ம் ஆண்டுகளில் பெளத்த மாநாடுகள் நடைபெற்றன.நவீன விழிப்புணர்வு விதைகளை விதைத்தாலும் தலித்துகள் முழுமையாய் அறுவடையை அனுபவிக்கவில்லை.
புரொட்டஸ்டண்ட் கிறித்தவம் இக்காலத்தில்தான் வேகமாய் வளர்ச்சி பெற்றது.குறிப்பாக கன்னியாகுமரியில் 99%பேர் இணைந்தனர்.கல்வி,மருத்துவம், வசதி என தலித்துகள் தங்களையே முன்னேற்றிக் கொண்டனர். வட தமிழ்நாட்டில் வாழ்ந்தவர்களுக்கு மேலை நாட்டு பெளத்தர்களின் உதவி கிட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மைசூர் கோலார் தங்கவயல், மாரிக்குப்பம்,வட ஆர்க்காட்டிலும் பர்மா,இலங்கை, தென்னாப்பிரிக்கா என கடல்கடந்து  பெளத்த சங்கங்கள் துவங்கி நடைபெற்றன.

#தாழ்த்தப்பட்டோரின் முன்னோடியாக

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே அகவிடுதலையாகிய சமூக விடுதலை அடைய முயன்றார். தரிசு நிலங்களை உழைப்பவனிடம் அளிப்பதன் மூலம் வர்க்கப் பிரச்சனையை தகர்க்கலாம் எனக்கூறியதோடு விவசாயம், தொழில்கள்,கல்வி,மனித விருத்தியென நான்கு படிகளை முன்வைத்தார்.தமிழ்நாட்டில் ஆதிவாசிகளையும்,தமிழர்களையும்
திராவிடர் வழி வந்தவர்களாகக் கருதினார்.தலித்துகள் புத்த மதத்துக்கு மாறினால் அவர்களின் கீழ்நிலை நீங்கும் என வெளிப்படையாய்க் கூறினார்.

யாவற்றிற்கும் மேலாக சித்த வைத்திய நிபுணராகத் திகழ்ந்தார்.வாதம்,பித்தம், சிலோத்துமத்தால் தோன்றும் வியாதிகளுக்கு மனம்தான் முக்கிய காரணம் என்பார்.மேலும் சித்த மருத்துவ குறிப்புகளையும் எழுதியுள்ளார்.

*புத்தரின் தேகத்தைத் தகனம் செய்ய எடுத்துப்போன போது ஆனந்த கூத்தாடி கொண்டாடியது கால மாற்றத்தில் துக்கக் கூத்தாகிவிட்டது. இதனை தடை செய்ய வேண்டுமென கூறினார்.

*பழந்தமிழ் இலக்கியங்கள்,பெளத்த சமய நூல்கள் மறுவாசிப்பு செய்து பெளத்த மதத்தை விளிம்பு நிலை மக்களின் மதமாக உருவாக்க நினைத்தார்.

*பெளத்தர்கள் வேறு;இந்துக்கள் வேறு என 1881 மக்கள் தொகை கணக்கெடுப்பில் தாசர் கூறியதை பிரிட்டிஷார் ஏற்று அடுத்த கணக்கெடுப்பில் 1911ல் சாதியற்ற திராவிடர்கள்(ஆதித்தமிழர்கள்) என பதிவு செய்தனர்.

*அந்நாளில் இவரை ஆங்கிலேய ஆதரவாளர் எனக்கூறினர்.ஆனால் தன் சமூக மக்கள் கெளரவத்தோடு வாழ வேண்டுமென பாடுபட்டார்.

*தாசரின் வாழ்வும் வாக்கும் அம்பேத்கர்,பெரியாருக்கு மிகுந்த உத்வேகம் தந்தது.அயோத்திதாசரின் எழுத்துக்களை தலித் சாகித்ய அகாதெமி வெளியிட்டது.மறைந்த தலித் எழில்மலையின் முயற்சியால் அயோத்திதாசரின் நினைவாக சென்னையில் தேசிய சித்த வைத்திய ஆராய்ச்சி மையம் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கால் திறந்துவைக்கப்பட்டது. 
அயோத்திதாசரின் திராவிட அடையாளம் என்பது சாதிபேதமற்றது. தனித்துவமானது.
அனைத்து சமயத்தாரையும் சகோதரர்களாக பார்த்தது.இன்றைய தாழ்த்தப்பட்டோரின் உரிமைக்காக எழுப்பிய முதல் குரல் அயோத்திதாசர் என்பதை அவரின் பிறந்தநாளில் நினைவு கூர்வோம்.

-மணிகண்டபிரபு

Tuesday 19 May 2020

தமிழ்நாட்டு சீரியல் செழித்து வளர செய்ய வேண்டியவை*மணி



"தமிழன் என்றோர் இனமுண்டு;அவனுக்கு சீரியல் பார்க்கும் குணமுண்டு..தமிழகத்தில் சீரியல் பார்க்காதவர்களின் எண்ணிக்கை கொரோனாவுக்கு மாஸ்க் போடாதவர்களை போல் விரல்விட்டு எண்ணிவிடலாம்.இந்த லாக்டவுன் ஆண்களையும் சீரியல் பார்க்க வச்சிடுச்சு.ஒவ்வொரு சீரியலும் ஒரு ரகம்.ஆனால் காட்சியமைப்பின் பேட்டன் எல்லாம் ஒரே ரகம்

எல்லா சீரியலையும் பார்க்கும்போது தமிழ் சீரியலுக்கு இன்னும் கொஞ்சம் பட்டி டிங்கரிங் சேர்த்தால் பட்டாசு கெளப்பும் என்பதற்கான வழிமுறையை பத்தி யோசித்தபோது சிக்கிய சிறு பொறிகள்

ஒரு குடும்பத்தில் அஞ்சு பெண் பிள்ளைகள்,அல்லது அனைத்தும் பெண் பிள்ளைகளாக இருந்தால் தான் சீரியல் வளர்ப்பது என்பது மெட்டி ஒலி கால மெத்தட்.ஒரு குடும்பம் ஒரு மகன் என காலத்துக்கேத்த ரூட்டை மாத்தனும்.

#வேலை

பெண்கள் ஆபிஸ்க்கு போறதுன்னாலே கன்ஷ்ரக்சன் பிசினஸ் தானா.வேற வேலையே நாட்டுல இல்லையா.அப்புறம் அதுல தொழில் போட்டினு பழைய சோத்துல ஈ மொய்க்கிற விசயத்தை சேர்க்காம, ஒரு வாத்தியாரு,ஒரு ரிசப்னனிஸ்ட், க்ளார்க் வேலை என வெரைட்டிய காட்டுனா பார்க்கிறதுக்கே கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். மூனு ஆண்கள் இருக்கும் குடும்பத்தில் எப்பவும் இரண்டாவது மருமகதான் மோசமானவளா.. இது நியாயமரே.. ஏதோ ஆனந்தம் படத்தில் ரம்பா அப்பிடி நடிச்சிட்டாங்கன்னு எல்லா சீரியலிலும் இரண்டாவது மருமகளை அப்பிடித்தான் காட்டனுமா.அது என்ன இரண்டாயிரம் ரூபாய்க்கு சேஞ்ச் வாங்குவதுபோல் அவ்வளவு கஷ்டமா..மாத்துங்கப்பு.

#செஞ்சுரி அடித்த சீன்கள்

லொகேசன் கிடைக்காம காரில் போய் சீரியல் எடுப்பது புரியுது.அந்த
நேரத்தில் எப்.எம்மில் வரும் எதாவது பாடலில் வரும் நுட்பங்களை சொல்லலாம்.சினிமாவை பத்தி தெரியாத சங்கதிகளை வசனத்தில் கொண்டு வரலாம்.பொதுவான விஷயங்களை பேசலாம்.குட்டிக் கதைகளை கதைக்கலாம்.

90 களில் கேட்ட ஜோக்குகளை சொல்லாமல் புதுசா டைமிங் ஜோக்குகளை சொல்லலாம்.
எப்போதுமே பழி வாங்க கூடிய அண்ணி,மாமியார்,நாத்தனார்..
இவங்க எப்போதும் ப்ரண்ட்லியான கதாபாத்திரமாய் இருக்கவே மாட்டாங்களா.எப்போதுமே எடுத்து அடிச்சிருவேன் பாத்துக்க மோடியிலேயே இருக்காங்க

சோடா புட்டி கண்ணாடி போட்டாலே முட்டாளாத்தான் காட்டுவீங்களா.
ஹீரோ/ஹீரோயின் அப்பா எப்பவும் பேப்பர் பார்த்துட்டு வீட்டுலயேதான் இருக்காரு..அப்புறம் சாப்பாட்டு என்னதான் பண்ணுவாங்க.இதை மாத்தி வீட்டிலேயே எதாவது தொழில் செய்வது போல் காட்டலாம்.

#இசையில்

இசையில் எனக்கு பிடிக்காததே இடிச்சத்தம் என்கிற மாதிரி.. திரும்பினால்,நடந்தால்,முறைத்தால், கண்ணாடி கழட்டினால்..இடி மின்னல்.அப்பப்பா..மாத்துங்கப்பா பின்னணி இசையை..ஒவ்வொரு சீனையுமே க்ளைமேக்ஸ் காட்சி போல் நினைத்து இசையமைக்க வேண்டாமே.

எமோசனல் சீன்களில்
இடிசத்தத்துக்கு பதிலா வேற இயற்கை சத்தத்தை யூஸ் பன்னுங்கப்பா.காது ஙொய்யினு கேட்குதில்ல."வில்லியும் ஹீரோயின் நேருக்கு நேர் வரும்போது அக்னி நட்சத்திரம் இசையேவா உஸ்ஸ்.
"அப்பிடியே காதலன் ல ரகுவரனை காட்டும் ஒரு தீம் மியூசிக்,சத்ரியன் ல விஜய்காந்த் வரும்போது வரும் மியூசிக்கையும் மாத்திடுங்க.முடியல..
நகைச்சுவை சீன்களின் போது வரும் இசை உண்மையில் வர்ற சிரிப்பை கூட நிறித்திடுது ப்ரோ.

#மேக்கப்

அளவுக்கு மிஞ்சினால் மேக்கப்பும் அசிங்கம்.பாத்திரம் விளக்கிற பொண்ணுக்கு எதுக்குங்க கோல்டன் ஃபேசியல் வித் ஐ ப்ரோ ப்ளக்கிங்.

கண்ணுக்கு மை அழகுனு ஒரு காலத்தில வைரமுத்தே சொல்லியிருக்காரு.ஆனால் நீங்களே அந்த சீரியல பாருங்க.
கண்ணுல மை பூச சொன்னால் கட்ட வண்டி மை எடுத்து இழுக்குனது மாதிரி என்னம்மா நீங்க இப்பிடி பண்றீங்களேம்மா.

வீட்டில் வெங்காயம் உரிக்கிற பெண்ணுக்கு இண்ட்ரோ கொடுக்கும் போது விவாகா,சாமுத்ரிகா சேலை மாதிரி ஹைரேஞ்சு பொடவை தான் கட்டனும்னு இல்ல, சாதாரண சின்னாளபட்டி, சென்னிமலை புடவையே போதும் பாஸ்.

ஆபிசுக்கு போறதுனாலே கார்லதான் போகனுமா?பைக்,ஷேர் ஆட்டோவில் போனால் இன்னும் கொஞ்சம் இயல்பாய் இருக்குமே.

#கதை

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்-வாழ்ந்து கெட்ட குடும்பம்,

பொன்மனச் செம்மல்- மூன்று மகன் மூன்று மருமகள்,

வா அருகில் வா-முதல் மனைவி இறந்து பேயாய் வருவது

மூன்றாம் பிறை-மனநலம் குன்றிய பெண்

ஆனந்தம்-அண்ணன் தம்பி கதை

அம்மன்- சாதாரண ஏழைப்பெண்ணை காப்பாற்ற கடவுளே கால் டாக்சியில் வருவது மாதிரி.ஏங்க ஆத்தா என்ன அப்பத்தாவா கூப்பிட்டதும் வர.

அக்னிநட்சத்திரம்-இரு மனைவி கதை

அதுஒரு கனாக்காலம்-வேலைக்கார பெண் ஹவுஸ் ஓனர் பையனை கரெக்ட் செய்வது

இந்த கதையெல்லாம் எடுக்காம இருந்தால் புதிய இந்தியாவே பிறந்த மாதிரி மகிழ்ச்சியடைவோம்.

 

#திரைக்கதை

காணாமல் போன குழந்தையை கண்டுபிடிக்க பத்து எபிசோட்

அவர் வில்லனை அடையாளம் காட்ட அஞ்சு எபிசோடுனு வைக்காம முடிந்தவரை குறைந்த எபிசோடில் டெம்போ ஏத்தலாம்.

கேரளா,ஆந்திராவில் கடத்தி வைக்கிறதெல்லாம் நம்பியார் காட்டு பங்களாவில் கடத்தி வச்ச காலம் அதை மாற்றலாம்.

கதையில் சுதி கொறஞ்சா உடனே ஊட்டிக்கு போகனுமா? ஏற்காடு, கொல்லிமலை,வால்பாறையெல்லம் இருக்கே.

இனி இவருக்கு பதிலா இவர்தான் கணவர் னு மாத்தாதீங்க. கஷ்டமாயிருக்கு.

ஹீரோ/ஹீரோயின் கால்சீட் இல்லைனா காமெடியனை வைத்து காமெடிங்கிற பேர்ல கத்திச்சண்டை போடாம சிரிப்பு வருவது மாதிரி சீனை கிரியேட் பன்னலாம். டைகர் கார்டன் தங்கதுரை சொன்ன ஜோக்குகளை தவிர்க்க பாருங்க.

#வசனம்

*ஆகா..ஷ்,சந்தோ..ஷ், ரமே..ஷ் னு
இவ்வளவு சுதி சுத்தமா கூப்பிடுவது உங்களுக்கே காதுல பூ சுத்தற மாதிரி இல்ல.நார்மலா கூப்பிட்டாலே போதும் 

*பணக்கார வில்லினாலே.. நாக்குல கொப்புளம் வந்தது போல் பேசினால்தான் ஸ்டைலிஷ் னு நினைப்பதை மாற்றனும்.

*மனைவியை ஒவ்வொரு முறையும் பேர் சொல்லி கூப்பிடுவது ஏதோ கோர்ட்ல அமீனா கூப்பிடுவது போல இருக்கு.நார்மல் லைப் போல் டேய், இவளே,பட்டபேர்,பெட் நேம்வச்சு கூப்பிடலாம்.

*வசனம் பேசச் சொன்னால் யோசிக்க கூடாது.ஆடியன்ஸை எதிர்பார்ப்பு ஏற்படுத்தறேன் சொல்லிட்டு கடுப்பேத்த கூடாது.

*பிசினஸ் பிசினஸ் னு நாட்டுல தொழிலதிபர்கள் தொல்லை தாங்க முடியாதவாறு அதையே சொல்லி ஆணி அடிக்காம தொழில்,வேலை, னு வேற வார்த்தை யூஸ் பன்னலாம்

*முடிந்தவரை சிவில் என்ஜினியராய் காட்டாமல் மெக்கானிக்கல்,EEE, ECE,டிப்ளமோ என வேறுவித படிப்பு இருக்கு என்பதை காட்டலாம்..

இதையெல்லாம் சேஞ்ச் பன்னால்
இந்தி சீரியலுக்கே சேலஞ்ச் செய்யலாம்

#வெப் சீரியஸ் காலம்

இதையெல்லாம் யார் உங்களை பார்க்க சொன்னானு மனைவியோட மேக்கப் கிட்டை பார்த்த கணவனை கேட்பது போல் கேட்காம காலத்திற்கு ஏற்றவாறு சீரியலை சேஞ்ச் பன்னனும். இனி வரும் காலம் அமெசான் ப்ரைம், வெப் சீரியஸ் என வந்துவிட்டது. மக்கள் எல்லாம் புதுமையான விஷயங்களை பார்க்க பழகிட்டாங்க.இவர்களை நம் பக்கம் இழுக்க நுட்பமான வகையில் மெனக்கெடனும். 

மெகா சீரியல் என்பது திருப்பாதிரிபுலியூர் பாசஞ்சர் வண்டி மாதிரி,எப்போது வேண்டுமானாலும் இறங்கி ஏறலாம். கதை கால் இன்ஞ்தான் நகரும் என்பார் சுஜாதா.
அதுபோல் இல்லாமல் சுவாரஸ்யமாய் எடுத்தால் எல்லோரும் பார்ப்பாங்க.அடுத்து என்ன வரும் என்ற எதிர்பார்ப்பே ஒரு காட்சியை பார்க்க தூண்டுகோலாக இருக்கும்.அந்த நுட்பத்தை சரியாக பயன்படுத்தினால் இன்னும் சீரியல்
உச்சம் தொடும் என்பதில் சந்தேகம் இல்லை.

-மணிகண்டபிரபு

பூஜ்யக் குறைபாடு(zero defect

பூஜ்யக் குறைபாடு(zero defect)

தொழிற்சாலையில் உற்பத்தியாகும் பொருட்களில் ஒன்றுகூட சேதாரமில்லாமல் பார்த்துக் கொள்வது தொழிற்சாலை மேலாண்மையில் பெரிய இலக்கு.பொதுவாக ஆயிரம் பொருட்களுக்கு ஒன்று குறைந்தால் ஏற்றுக்கொள்கிறார்கள்.இதுவே பூஜ்யக் குறைபாடு

#info

Kavaludaari

Kavaludaari- கன்னடம்
*மணி

புனித்ராஜ்குமார் தயாரிப்பில் வெளிந்த ஒரு புலன் விசாரணை படம்.இணையத்தில் வெளிவந்து தற்போது பேசப்படுகிற படம்.இதுக்கு முன் வந்த மாயாபஜார் 2016ல் போல் வித்தியாசமாய் இருக்கும்னு பார்க்க ஆரம்பித்தால் அதை விட கொஞ்சம் கம்மிதான்.

#கதை

முதல் காட்சியில் ஒரு கொலை நடக்கிறது.ஒரு கார் கிளம்பி போகிறது.ரத்தக்கறையுடன் ஒருவர் கார் ஓட்டி செல்கிறார்.40 வருசம் கழித்து ஒரு கட்டுமானப் பணி துவங்க தோண்டிய குழியில் ஒரு குடும்பத்தின் மண்டை ஓடு கிடைக்கிறது.அதைப் பார்க்கும் அப்பகுதி ட்ராபிக் போலிஸ் இதில் ஆர்வம் வந்து விசாரிக்கிறார்.

அதே இடத்தில் ஒரு பத்திரிக்கையாளரும் இக்கொலையை விசாரிக்க உதவுகிறார்.முன்பு இக்கொலையை விசாரித்த போலிசின் உதவியை நாடுகிறார்கள்.அவரும் உதவ சில பல சஸ்பென்சுக்கு பிறகு யார் கொலையாளி என்பது கதை.

விறுவிறுப்பான இக்கதைக்கு சிலபல மைனஸ் திரைக்கதை இருப்பது நெருடல்

#டின்ஜ்

*ஒரு அறிவாளி ட்ராபிக் போலிஸ் விசாரிப்பது வித்தியாசமா இருக்கு.
ஆனால் கொஞ்சம் முன்னாடி வந்திருந்தா போலிசை வில்லன் சுடாம காப்பாத்தியிருக்கலாம்

*24ம் புலிகேசி மன்னனை அப்படியே வரைந்தால் டொங்கல் போல்.இருக்கும்னு சொல்வாரே அது போல் ஒரு வில்லன்.பெரிய மைனசே அவர்தான்.ஏதோ 14ம் வாய்ப்பாட்டை திக்கி திக்கி ஒப்பிப்பதுபோல் ஃப்ளாஷ்பேக்கில் டையலாக் டெலிவரி

*அந்த வேலைக்காரன் தான் பத்திரிக்கையாளர் என்பது வித்தியாசமான ட்விஸ்ட்

*இசையும் ஒளிப்பதிவும் நன்று

*ரிட்டையர்ட் ஆன போலிஸ் எல்லாமே எப்ப பாரு குடிச்சிட்டேதான் இருப்பாங்களா..மாத்துங்க கொஞ்சம்

*அந்த நடிகை கேரக்டர் படத்துக்கு தேவையில்லாத ஆணி

ஒரு தடவை பார்க்கலாம்

-மணிகண்ட பிரபு

பா.ராஜாராம்

போய் சேர்ந்ததும்
லெட்டர் போடுங்க"
என்கிற குரலை
இங்கதான் வச்சேன்.
யாராவது
பார்த்தீங்களா சார்?

-பா.ராஜாராம்

சுந்தர ராமசாமி

டிப்போவின் முன் ஆறு. முன்னும் பின்னும் குறுகி,நடுவில்
விரிந்து,முதலையின் உடல்போல் ஓடும்.மந்தமான,கபடமான அசைவு,ஆழமில்லை.ஆனால் ஆழத்திற்குரிய கம்பீரத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. விழுந்தால் இறந்தோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்படி. உலகின் அழகான தூண்டுதல்களில் இதுவும் ஒன்று


-சுந்தர ராமசாமி

Monday 18 May 2020

கற்றதும் பெற்றதும்-93*மணி



கலைஞர் எனும்
-வாஸந்தி

இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து படித்தபோது 1977முதல் 1990 வரை நடந்த விசயங்களை இப்புத்தகத்தில் படிக்க நேர்ந்தது.நான் அறியாத பல விஷயங்களை தெளிவாய் அறிய முடிந்தது.அதிலிருந்து  சுருக்கமாக..

இலங்கை தமிழர் விவகாரத்தில் எம்.ஜி.ஆர்-கலைஞர் இருதரப்பினரும் போட்டி போட்டுக்கொண்டு இவ்விஷயங்களை கையில் எடுத்தனர்.

1977 ல் ஆகஸ்ட் மாத இறுதியில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான நடந்த வன்முறையை அடுத்து 24 ஆகஸ்டில் பேரணி கூட்டி சென்னையில் அடைப்பு அறிவித்தது.
பத்தாயிரம் பேர்க்கு மேல் சென்னையில் பேரணி கூட்டினார் கலைஞர்.

1981ல் யாழ்பாண நூலகம் தீக்கிரையானது அதிர்ச்சியளித்தது. எம்.ஜி.ஆரும்,கலைஞரும் தனித்தனியே பிரதமரை சந்தித்து தமிழர்களை பாதுகாக்க தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றியது. இம்முறை எம்ஜிஆர் செப் 12ல் முழு அடைப்பு அறிவித்தார்

தனபதி எனும் தமிழ்நாட்டு சுற்றுலாப்பயணி இலங்கையில் இறந்தார்.அவருக்கு கலைஞர் ரூ3000 அறிவித்தார்.அப்போது திமுகவினர் இலங்கை ஹை கமிசன் கட்டிடத்தை தாக்கியதால் கைதுசெய்தனர்.பின் கலைஞரும் ஆர்ப்பாட்டத்தில் இறங்க இறுதியில் எம்ஜிஆர் அக்குடும்பத்துக்கு 25000 தந்தார்.
கலைஞரின் பணத்தை அக்குடும்பத்தினர் திருப்பி அளித்தனர்.

1983ல் இனப்படுகொலை கண்டித்து அன்பழகனும்,கலைஞரும் ராஜினாமா செய்தனர்.இலங்கை அரசின் சட்டதிருத்தத்தை தீயிட்டனர்.
1984 மே4ல் டெசோ மாநாடு மதுரையில் கூட்டினார்

பிரபாகரனுக்கும் கலைஞருக்கும் நேரிடை தொடர்பு இல்லை. எம்ஜிஆர் தான் எல்.டி.டிக்கு ஆதரவு தெரிவித்ததுடன் பிரபாகரனிடம் கலைஞரிடம் எந்த உதவியும் பெறக்கூடாது என சொல்லியிருந்ததால் கலைஞர் உதவ முன்வந்தபோது கூட பிரபாகரன் ஏற்கவில்லை.கலைஞரும் இலங்கை தமிழ் மக்களின் உணர்வுகளை மேடை தோறும் பேசி வந்தார்.

கலைஞரின் நண்பரான டெலோ தலைவர் சிறீ சபாரத்தின்த்தை கொல்லக்கூடாது என பேபி சுப்பிரமணியத்திடம் சொல்லியும் சபா துன்புறுத்தப்பட்டு 1986ல்கொல்லப்பட்டது கலைஞருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.அவ்வளவு சொல்லியும் கொன்றது கோபத்தை ஏற்படுத்தியது. 

அதே ஆண்டு(1986)ல் கே.எஸ் ராதாகிருஷ்ணன் திருமணத்தில் பிரபாகரனும்,பேபி சுப்ரமணியமும் வந்திருந்தனர்.வாழ்த்துரையில் சூசகமாக இதனை கண்டித்தார்.

ராஜீவ் இலங்கை தமிழர்களிடம் ஒப்பந்தமிட எம்.ஜி.ஆரிடம் கேட்டார். ஆனால் பிரபாகரன் எம்.ஜி.ஆரின் பேச்சுக்கு இணங்காததால் டிஜிபி மோகன்தாஸிடம் சொல்லி ஆயுதங்களை பறிமுதல் செய்தார். இதனை கருணாநிதி கண்டித்தார்.
இருப்பினும் இந்த ஒப்பந்தம் எம்.ஜி.ஆர் இல்லாமல் கையெழுத்தானது.அவர் 1987ல் இறந்துவிட்டதால் ஒரு சகோதரனை இழந்ததாக பிரபாகரன் சொன்னார்.

 1989ல் விபி சிங் பிரதமரானது அமைதிப்படையை திரும்ப பெற்றார்.
1989ல் முதல்வரானதும் போராளிகளின் நடவடிக்கையை கண்டும் காணாது இருந்தார்.1990 பட்டப் பகலில் சென்னையில் கே.பத்மனாபா மற்றும் 12 கூட்டாளிகளை புலிகள் கொன்று விட்டு வேதாரண்யம் மார்க்கமாய் தப்பிச்சென்றனர்.

இதற்கு திமுகதான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.இதை கலைஞர் வன்மையாய் கண்டித்தார்.புலிகள் மீண்டும் துரோகம் செய்துவிட்டதாய் நினைத்தார்.இதனை முன்வைத்து சட்டம் ஒழுங்கு.நடவடிக்கை எடுக்க காரணமாய் இருந்தது.பின் ராஜீவை கொன்றதும் அவரை பதைபதைக்க வைத்தது.புலிகள் இந்த அளவுக்கு செல்வார்கள் என நம்பவில்லை என்றார்.எதிர்கட்சியினர் திமுகவும் உடந்தை என அவதூறு சொன்னதால் அப்போதைய  தேர்தலில் ஒற்றை இலக்கத்தில்தான் வெற்றியடைந்தனர்.பின்னர் ஜெயின் கமிஷனில் திமுகவுக்கும் இப்படுகொலைக்கும் சம்பந்தமில்லை என உறுதிப்படுத்தியது.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Wednesday 13 May 2020

போனஸ் (பெங்காலி)*மணி



தம்பிக்கு எந்த ஊரு,பிச்சைக்காரன், நானும் ஒரு தொழிலாளி, உனக்கும் எனக்கும் பட பாணியிலான கதை.ஆனால் இன்றைய பெருமுதலாளிகளின் மனதை மாற்றும் எளிய பொறிதான் கதை.குமுதம் அரசு பதில்களில் தான் இப்படம் குறித்து படித்தேன்.2மணி நேரத்தில் இயல்பாய் கதை சொல்லி படம்.

1979-ல் சரண்சிங் தலைமையிலான மத்திய அரசானது இடதுசாரி தலைவர்களிடம் ஆதரவு கேட்டபோது, அமைச்சர் பதவி ஏதும் கேட்டுப் பெறாமல் அவசரநிலை (எமர்சென்சி) காலத்தில் பணிநீக்கம் செய்யப்ட்ட இரயில்வே ஊழியர்களை பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும், எல்லா தண்டனைகளையும் இரத்து செய்ய வேண்டும், ஊழியர்களுக்குப் போனசு வழங்கப்பட வேண்டும் ஆகிய நிபந்தனைகளோடு ஆதரவு வழங்கியது. இதன் தொடர்ச்சியாகவே மாநில அரசின் ஊழியர்களுக்கும் போனஸ் என்ற வாசல் திறக்கப்பட்டது.போனஸ் என்பது மிகை ஊதியமல்ல, மதிப்பூதியம்.

#கதை

பரம்பரை பணக்காரர்கள் அதாவது மூணு தலைமுறையாய் ஒரு பெரு நிறுவனத்தை நடத்திவரும் குடும்பம். பேரன் தலைமை பொறுப்பு ஏற்க வேண்டிய தருணம்.ஆனால் மிக தாராளமாய் நவீன பொருளாதாரம் படித்தவராய் பணத்தின் மதிப்பு தெரியாமல் இருக்கிறார்.

அப்போது போன்ஸ் கொடுப்பதற்கான கூட்டம் நடக்கிறது. அதில் எதற்கு போனஸ் கொடுக்க வேண்டுமென வாதித்து தாத்தாவுடனான மோதலில் பேரன் ஒருமாதம் மும்பையில் சாதாரண மனிதனாய் வாழ சம்மதித்து அங்கிருக்கும் சேரியில் குடியேறுகிறார்.

அங்கு சந்திக்கும் இடர்கள், சூ கடையில் தன் கட்டுப்பாட்டில் உள்ள காலணியை சக தொழிலாளி திருடிவிட்டு போனதால் ஏற்படும் அவமானம், மாத முடிவில் ஏற்படும் மனமாற்றம் என படம் நீள்கிறது

#டின்ஜ்ஜூ

*பெங்கால் என்பதால் தாத்தா கம்யூனிச சித்தாந்தம் பேசி தொழிலாளர்களுக்கு ஆதரவு அளிக்கிறார்.

*ஷோனு சூட் சாயலில் இருக்கும் ஹீரோ இயல்பாய் பொருந்துகிறார்.
எதிர்பாராது கிடைக்கும் காதலியின் ஊக்குவிப்பு பாதியில் சென்றிடலாம் எனும்போது தடுக்கிறது.

*ஒன் மந்த் சேலன்ஜ் இதற்கு முன் பல படங்கள் வந்தாலும் இது முதலாளியின் மனதில் ஏற்படும் மாற்றம் ரசிக்க வைக்கிறது.

*இசை,ஒளிப்பதிவு படத்திற்கேற்ற தன்மையை கொடுக்கிறது.

*ஒரு பிச்சைக்காரனுக்கு கூட பிச்சையிடாதவன்..ஒரு சேரி முழுக்க சொந்தங்களை பெற்றுத் தருகிறது.

படம் மெதுவாதான் போகும். ஒன்றிரண்டு பாட்டு உண்டு.ஒரு இனிய அனுபவத்தை ரசிக்க பார்க்கலாம்

-மணிகண்ட பிரபு

.

Tuesday 12 May 2020

மனுஷ்ய புத்திரன்.

கைவிடுவது

பணி நீங்கிச் சென்றவள்
சம்பளப் பாக்கிக்காக
தனது பழைய அலுவலக வரவேற்பரையில்
தயங்கித் தயங்கி நிற்கிறாள்.

தான் சகலமுமாய்
ஆட்கொண்டிருந்த அந்த  இடத்தில்
இன்று ஏதேனும் ஒரு நாற்காலியில்
உட்காரலாமா என தடுமாறினாள்.

அவளது பழைய சகாக்கள்
இயன்றவரை அவளுக்கு
கருணைகாட்டவே விரும்பினர்.
ஆனால் ஏதோ ஒரு சங்கடம்
அங்கே பனியாகப் படர்ந்தது.

அவளுக்கு ஒரு க்ளாஸ் தண்ணீர்
தேவையாக இருந்தது.
யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை.
தண்ணீர் இருக்குமிடம்
அவளுக்குத் தெரியும்.
பத்தடி தூரம்
அப்போது நூறு மைலாகிவிட்டது.

பிறகு அவள் அங்கிருந்தவனிடம்,
“நான் கொஞ்சம் கழிவறையை
உபயோகித்துக்கொள்ளலாமா..?”
என்றாள் கூச்சத்துடன்.
அவன் திசை காட்டினான்.
அவ்வளவு பரிச்சயமான இடத்தில்
அவள் திக்கற்று நடந்து சென்றாள்.

மனிதர்கள் ஒருவரைக் கைவிடுவதைக் காட்டிலும்
இதயமற்றதாக இருக்கிறது
ஒரு இடம் ஒருவரைக் கைவிடுவது.

 -மனுஷ்ய புத்திரன்.

Monday 11 May 2020

Kapata Nataka Paatradhari.. (Kannada)*மணி



பீட்சா,பட்டனத்தில் பெட்டி மாதிரி ஒரு அமானுஷ்ய கதை.இயல்பான ஒரு ஒன்லைன் கதை.பொதுவா பேய்னாலே பழிவாங்கும்.பங்களா, அரண்மனை என இதில் வித்தியாசமாக ஆட்டோவில்.

கதை:

வேலைவெட்டி இல்லாத இளைஞன் ஹீரோ பாலுநாகேந்திரா.வீட்டில் திட்டு வாங்கும் பையன்.கண்டதும் காதல் என வழக்கமாக செல்கிறது. பையனுக்காக அப்பா சேர்த்து வச்ச காசில் ஆட்டோ வாங்கி தருகிறார்.
அந்த ஆட்டோவில் பயணிக்கும் அனைவரும் ஆட்டோவில் உள்ள பேயால்  அடிவாங்கி,பயமுறித்தி பாதிலயே இறங்கி போய்டுறாங்க.
ஆனால் காதலி வந்தால் மட்டும் பேய் ஒன்னும் செய்வதில்லை.சரி பெண்ணென்றால் பேயும் இரங்கும் போல.

அப்பதான் இவன் வண்டியில் வந்த 3 பேர் காணாமல் போய்டுறாங்க. அவங்களை காணோம்னு ரவுடி கம்ளைன்டு கொடுக்க இவனை கூப்பிட்டு விசாரிக்கிறாங்க. இவனும் ஆட்டோவில் ஒரு பேய் இருக்கு..இந்த 3 பேரும் அப்பிடித்தான் திரும்பி வருவதற்குள் மாயமாகிட்டாங்கனு விஜய் சேதுபதி மாதிரி கதை சொல்ல போலிஸ் நம்பி விட்டிடுது.

உண்மையில் அந்த காதலி தான் மூனு பேரையும் ப்ளான் பன்னி ஆட்டோவில் வைத்து கொலை செய்திருக்கும்.காரணம் அவளின் தோழியை வன்புணர்வு செய்து கொன்றதால் அதற்கு பழிதீர்க்க கொல்கிறாள்.எல்லாம் முடிந்து ஆட்டோவில் வழக்கம்போல் செல்லும்போது அவள் தோழி உயிரோடு இருப்பதை பார்க்கிறான். குழப்பமாகிறான்.போலிஸ் ஸ்டேசன் போனால் அவள் காதலி இறந்ததாக அவள் புகைப்படம் போலிசிடம் இருப்பதை பார்த்து பயந்து போயிடுறான்.அப்புறம் என்ன ஆச்சு, ஏன் காதலி கொலை செய்தாள் என்பது நெகிழும்படியான ஒரு ட்விஸ்ட்

#டின்ஜ்

*குழப்பமான கதைக்கு தெளிவான திரைக்கதை பலம்.இசையும் ஒளிப்பதிவும் நன்று.

*படம் 1-45 மணி நேரம்.முதல் 45 நிமிசத்தை வழவழானு போகுது. அதை கொஞ்சம் சுவாரஸ்யபடுத்தி இருக்கலாம்.

*கடைசியில் அடுத்தடுத்து எதிர்பாராத ட்விஸ்ட் விரிவது நன்று.

*பாகவதர் படம் மாதிரி அடிக்கடி பாட்டு வருவது உறுத்தல்.ஹீரோ சொல்வதையெல்லாம் போலிஸ் எப்படி நம்புறாங்கனு தெரியல.
இறந்துபோன அந்த 3 பேரை என்ன செய்தார்களென தெரியல.

*கடைசியா நான் ஈ மாதிரி ஹீரோவுக்கு ஆட்டோ துணையா இருக்கு.

சில பல குறைகள் இருந்தாலும் படம் பார்க்கலாம்.ஒரு த்ரில் அனுபவம்.

-மணிகண்ட பிரபு

Sunday 10 May 2020

EVARU

Evaru (telugu)
*மணி

கொஞ்ச நாளாகவே இணையத்தில் இந்த படம் குறித்து பாசிட்டிவ் ரிவ்யூ வந்துகொண்டிருந்தது.அப்படித்தான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்தால் ஒரு நல்ல த்ரில்லர் படமாக இருந்தது.2 மணி நேரத்துக்கும் குறைவான ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர்.

சில த்ரில்லர் படங்கள் கபடியில் ரெய்ட் வருவது போல் அவ்வப்போது சஸ்பென்ஸ் உடச்சிருவாங்க.சில படங்கள் பீட்சா மாதிரி கடைசியில்தான் த்ரில் உடைப்பாங்க ஓட்டுப்பெட்டி மாதிரி.எவரு படம் இரண்டாம் வகை.

#கதை

தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக அசோக் என்பவனை சுட்டுக்கொன்றதால் ரத்தக் காயங்களுடன் கைதாகிறார் ரெஜினா.தொழிலதிபரின் மனைவி என்பதால் வழக்கு நடைபெற்று வருகிறது.அப்போது அவரை சந்திக்க போலீசான ஹீரோ ஹோட்டல் அறைக்கு வருகிறார்.

ரெஜினா மறைக்கும் பொய்களை அடுக்கடுக்காக சொல்கிறார். இதற்கிடையே குன்னூரில் காணாமல் போன ஒருவரை கண்டுபிடிக்கும் கேஸையும் இவர் தான் கண்டுபிடிக்கிறார்.ரெஜினா சொல்லும் ஒவ்வொரு ப்ளாஷ்பேக் காட்சியிலும் கொலைக்கான புதுப்புது தகவல் கிடைக்கிறது.

ஒவ்வொரு முடிச்சாக அவிழ்ந்து இனி மறைக்க எதுவுமில்லை. ஆதாரமும் எதுவுமில்லை என நினைக்கும்போது வித்தியாசமான ட்விஸ்ட் அட்டகாசமாய் விரிகிறது.அது வணக்கம் போடும் வரை தொடர்கிறது.

*குழப்பமில்லாமல் திரைக்கதை அமைத்த விதம் அருமை

*தமிழ்நாட்டு காவல் நிலையத்தில் தெலுங்கில பேசுறாங்க.கொஞ்சம் நம்மையே கிள்ளிபார்த்துட்டோம்.

*இரு கேஸ்களும் ஒரு புள்ளியில் வரும்போது அடுத்து என்ன  என நினைக்கத் தோன்றுகிறது.

*பாட்டு,காமெடி இல்லாதது பலம். ஒன்றிரண்டு முத்தக்காட்சி வருகிறது.

*ஏமாளி,அழுமூஞ்சி,லூசுபோல் கதாநாயகிகளை காட்டும் நாளில் வித்தியாசமான ஹீரோயினாக காட்டியதற்கு நன்றி.

நல்ல த்ரில்லர் மூவி.பார்க்கலாம்

-மணிகண்ட பிரபு

3-5-20

அவர்களாக விரும்பி, 
உச்சியில் வைத்துக் கொண்டாடி, 
சில்லாக உடைத்துவிட்டுச் சென்றுவிடுவார்கள்.. 

சமயத்தில் நீங்களும் ஓர் உயிருள்ளக் காட்சிப்பொருளே..

-படித்தது


நாள்கணக்காக அவர் படித்ததாக குறிப்பிடப்படுவது சாமர்செட் மாமின் Of Human Bondage, மோதிரத்தை விற்று வாங்கியதா தஸ்தாவெஸ்க்கி The brothers karamazov 

(எம்.ஐ.டி. ஹாஸ்டலில் இருக்கும்போது வகுப்பிற்கு கட் அடித்து படித்ததாக கூறுவார்)

#சுஜாதா
#HBDSujatha


எத்தனை பெரிய வானம்
எண்ணிப்பார் உன்னையும் நீயே
இத்தரை கொய்யாப்பிஞ்சு
நீ அதில் சிற்றெறும்பே

-பாரதிதாசன்



கால மாறுதலுக்கேற்ப வேஷம் மாறவில்லை என்றால்,நன்று போகும் பத்திரிக்கைகளும் நின்றுபோகும்

-சுஜாதா

வாழ்க்கை சுருக்கமானது. இன்று வாழ்வோம்.நாளை வீட்டுக்காரர் வாடகை கேட்டு வந்திவிடுவார்

-சுஜாதா

2-5-20

ஊடலில் பிடிவாதம் கூடாது.ஊடல் ஊறுகாயை போல் இருக்க வேண்டும்.அவ்வப்போது தொட்டுக் கொள்ளலாம்.உணவு போல் உட்கொண்டால் வெறுப்புதான் மீதமாகும்.

-சங்கப்பாடலில்


‘அன்றைய அற்புதக் காட்சியாய்
சாலையின் நடுவே முளைத்து நின்றது ஒரு புல்!’
-தேவதேவன்


: யார் குரலையும்
கேட்க விரும்பாததுபோல்
கூச்சலாக பெய்கிறது மழை

-பேயோன்
[

: நேற்று என்ன செய்தேன்?
ஒன்றும் இல்லை
இன்று என்ன செய்கிறேன்?
ஒன்றும் இல்லை
நாளை என்ன செய்யப் போகிறேன்?
அதுதான் தெரியவில்லை
எதிர்காலம் பெரிய புதிர்

-பேயோன்

அஞ்சலி

பிறந்திருக்கவே கூடாதவன்
தாமதமாக செத்துப்போனதற்கு
வருத்தங்கள்

-பேயோன்


தேடாதே
தேடினால் காணாமற் போவாய்
வழிகள் மாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன. 

-புவியரசு

Saturday 9 May 2020

அன்னையர் தின வாழ்த்துகள்

why mother is god
*மணி

# கேட்காமலே டி.வி ரிமோட் கொடுத்துவிடுவதால்

#எல்லாரும் டிவி பார்க்கும் போது
அம்மாக்கள் மட்டுமே டிவியில் உள்ள
அழுக்கை பார்த்து துடைப்பதால்

#சும்மா இருக்கும் போதும் ஏதாவது வேலை செய்துகொண்டிருப்பதால்

#பழைய சோறும் பழைய மொபைலுமே போதுமென்பதால்

#துன்பத்தில் எல்லாம் ஆறுதல் சொல்லி அரவணைப்பதால்

#மாசக்கடைசியில் பணம் தருவதால் 

#பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் நம்மைப் பற்றி பெருமையாக கூறுவதால்

 #பரிட்சையில் பார்த்து எழுதுனு வெள்ளந்தியாக சொல்வதால்

#பகலில் தூங்கும்போது சாப்பிட்டு தூங்கு என கனிவுடன் பேசுவதால்

# நடைபழகிய நாள் முதல் வெளியே கிளம்பும்போது சொல்லும்வார்த்தை 
" ஓரமாப் போ"

# சாலையை கடக்கும் போது தன் குழந்தையின் கையை இறுக பற்றி செல்வது..

#பத்து ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் மாதக்கணக்கில் வைத்துக்கொள்வது

#பேருந்து சரியான சில்லறை சேகரித்து வைத்திருப்பது

#பிய்ந்து போன பட்டனுக்கு பின்னூசி தருவதால்

#தோசை நம்ம தட்டுக்கே வந்தா அம்மா சமைக்கிறாங்கனு அர்த்தம்,
தோசை இருக்கிற இடத்துக்கு தட்டை தூக்கிட்டு நாம போனா மனைவி சமைங்கிறாங்கனு அர்த்தம்

# விஷேச வீட்டுக்குப் போனா மைசூர் பாகை கர்ஷீப்பில் எடுத்து வந்து கொடுப்பதால்

# பழைய சாதத்தையெல்லாம் அவங்க சாப்பிட்டு, சூடாக நமக்கு செய்து கொடுப்பதால்

# பீரோவில் ஒரே ஒரு ரேக்கில் மட்டும் துணி வைத்திருப்பதால்

# அதி காலையில் வெளியே கிளம்பும்போது வரக்காப்பி யுடன் வந்து நிற்கும் தெய்வம்

#  மீதமிருக்கும் அசைவ உணவை எப்போதும் கடைசியில் சாப்பிடுவது

# அடுப்படியே அலுவலகமாக்கி, சோர்வில்லாம் தாமே வேலை செய்யும் ஒப்பற்ற மேனேஜர்

# கம்மி மார்க் எடுத்தா புரோக்ரஸ் கார்டில் கையெழுத்து போட்டுத்தருவது

எல்லாம் எனக்குள் இருந்தாலும்
என்னை தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோவில்
அவளே என்றும் என் தெய்வம்.!

-அன்னையர் தின வாழ்த்துகள்

-மணிகண்ட பிரபு

Tuesday 5 May 2020

கற்றதும் பெற்றதும்-92*மணி



“நல்ல குறிக்கோளை அடைவதற்காக தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தின் மனிதனுக்கான வரலாறாக மாறுகிறது”… மார்க்ஸ்

#மாவீரன் வாட்டாக்குடி இரணியன்
-ச சுபாஷ் சந்திரபோஸ்

இரணியனைத் தெரியுமா? ஓ முரளி நடிச்ச படம்னு எளிதாய் சொல்வோம். ஆனால் அதைவிட பன்மடங்கு ஆற்றல் மிக்க ஆளுமையாய் பொது உடைமை போராளியாய் விளங்கினார் என்பது அவரின் வரலாற்றை படிக்கும்போதுதான் தெரிகிறது.

#பிறப்பு

வெங்கடாசலம் எனும்
வாட்டாக்குடி இரணியன் தஞ்சை மாவட்டம்,பட்டுக்கோட்டை வட்டம்,வாட்டாக்குடி கிராமத்தில் இராமலிங்கத்தேவர்-தையல் அம்மாளுக்கு 1920, நவம்பர் 15 அன்று பிறந்தவர்.உயர்வு தாழ்வு கருதாது அனைவரும் ஒன்றாய் பழகியர்.முதலில் ஒரு பெண்.பின் இவரை தொடர்ந்து ஆறு குழந்தைகள் பிறந்தனர் .இளமையிலேயே மிகுந்த கோபமும் நியாயமும் உள்ளவராய் வாழ்ந்தார்.இவரின் சுபாவத்தை மாற்ற தமக்கையின் ஊரான சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தனர்.அங்கே கூலி வேலை செய்து வாழ்ந்து வந்தார்.

#சிங்கப்பூரில் போராளியாக

அஞ்சி அஞ்சி வாழ்ந்த தொழிலாளர்களுக்கு மத்தியில் மிகுந்த  துணிச்சல் மிக்கவராக விளங்கினார் வெங்கடாசலம்.ரஷ்ய புரட்சி தொடர்பான புத்தகங்களை அங்குதான் படித்தார்.புட்டு விற்கும் வேலை பார்த்தார்.இரண்டாம் உலகப்போரில் ராஷ் பிஹாரி போஸின் இந்திய தேசிய லீக்கில் ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்ட்கள் பயிற்சி பெற்றனர்.ஜப்பான் இந்தியா, கிழக்காசியாவை வெற்றி பெற்று விட மறுத்தால் கொரில்லா போர் முறையில் இந்தியாவை விடுவிக்க பயிற்சி பெற்றனர்.இங்குதான் தன் பெயரை இரணியன் என மாற்றிக்கொண்டார்.நேதாஜியின் படையில் 1943ல் இணைகிறார். கல்கத்தா வரை முன்னேறிய ஐ.என்.ஏ டெல்லியை பிடிக்க முடியவில்லை.ஜப்பான் சரணடைந்தது.நிலை குலைந்தனர் அனைவரும்..செய்வதறியாது திகைத்தனர்

#சிங்கப்பூர் தொழிற்சங்கத் தலைவராக

வெற்றி பெற்ற ஆங்கில அரசு சிங்கப்பூர் தொழிலாளர்களை கொடுமைப்படுத்தியது.துறைமுக தொழிலாளர் சங்கத்தின் தலைவரானார்.பட்டுராசு காரியதரிசி ஆனார்.12000 தொழிலாளர்களுக்கு விடிவெள்ளியாகவும், ஆங்கிலேயர்க்கு சிம்ம சொப்பனமாகவும் திகழ்ந்தார். நான்கு ரவுடிகளை வேட்டையாடினார்.இவரின் பணியால் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. ஆனாலும் தன் வீட்டிற்கு ஒரு பணமும் அனுப்பவில்லை. தனக்கென எதுவும் சேர்த்துக்கொள்ளாதவராக ஒரு நாள் ஊர் ஞாபகம் மேலிடவே அனைத்து பொறுப்புகளிலிருந்து விலகி இந்தியா வர தீர்மானித்தார்.

#பொதுவுடைமைவாதியாக

1948 ம் ஆண்டு இந்தியாவிற்குத் திரும்பினார்.இங்கு வந்ததும் அப்பகுதி இடது சாரி தோழ்ர்களிடம் பழகி கம்யூனிஸ்டானார்.அங்குள்ள பண்ணையாரிடம் விடுத்த கோரிக்கையை நிறைவேற்றினார். அப்பகுதி மக்களுக்கு நல்லது செய்தது பல இடங்களில் பரவியது. அப்போதுதான் ராயர் பண்ணைக்கு வருமாறு ரகுநாதன் அழைத்துச் சென்றார்.அங்கு நடைபெறும் சாதிய கொடுமைகள் கோபத்தை வரவழைத்தது.

திருக்கவாலில் அடிப்பது,மூங்கில் குழாயில் சாணியை கரைத்து ஊற்றுவது, தம் பெண்டாட்டியின் மூத்திரத்தை குடிக்க வைப்பது என சில பண்ணை முதலாளிகள் துன்புறுத்தினர். குத்தகைதாரர்கள் 1 பங்கும், பண்ணைக்கு 3 பங்கும் கொடுக்க வேண்டும்.

இடையில் அவர் இருந்த வீட்டை இடித்து,துன்புறுத்தினார்கள். தாலி கட்டியவுடன் காட்டுக்குள் தலைமறைவாகிவிட்டார்.அந்நாளில் இவரை பிடிக்க  முடியாமல் திணறினர்.இருப்பினும் விவசாயிகளுக்கு தொழிலாளர்களுக்கு ஆதரவாக பல போராட்டம்செய்தார்.உணவு தானியம் எடுத்து ஏழைகளுக்கு உதவினார்.அங்குள்ள சில பண்ணையார்கள் இவரை ஒழித்துக்கட்ட முயன்றனர்.

#கைது செய்ய ஆணை

கம்யூனிஸ்ட் கட்சி சுதந்திர தினத்தை கொண்டாட தடை விதித்தது. கூலியை உயர்த்து,சாகுபடியாளரை நசுக்காதே,கம்யூனிஸ்ட் கட்சி தடையை ரத்து செய் போன்றவற்றிற்காக போராடினார். இதையறிந்த அரசாங்க அவரை கைது செய்ய ஆணை பிறப்பித்தது. அது முதல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். பல முறை காவலர்களால் பிடிக்க முடியாமல் இறுதியில்.1950 மே 5ம் நாள் அதிகாலையில் போலிஸார் சுட்டதும் புரட்சி ஓங்குக! பாட்டாளி மக்கள் ஒன்று சேரட்டும் செங்கொடி வாழ்..க! என சொல்லி மண்ணில் விழுந்தார்.

"ஒரு தலைவன்(கார்ல்மார்க்ஸ்) பிறந்தநாளில் ஒரு தொண்டனின் உயிர் பிரிவதைவிடப் பெரும் பேறு எதுவுமே இருக்க முடியாது என கூறினார்.

#ஒரு புரட்சி நடக்கணும்னா தீய சக்திகள் மட்டும்தான் அழியும் என்பதில்லை.நல்லவர் இரத்தமும் திரிக்கும் எண்ணெய் போல இருந்தாக வேண்டும்.

*மாளிகையில் உட்கார்ந்து மக்களுக்காக சிந்திப்பதை விட வறுமையில் வாடிய மார்க்சின் கருத்துகள் மக்களிடம் சென்று சேரும்

*நிலவு கொடுக்கிற வெளிச்சத்த, நட்சத்திரம் கொடுக்க முடியுமா?

*ஒரு புள்ளைய பெத்தா சோறும் தண்ணியும் சேரும்.ஆறு புள்ளைய பெத்தா அடியும் ஒதயும் தான் மிச்சம்.

*பாம்புனா படையும் நடுங்கும். துப்பாக்கினா தொடையும் நடுங்கும்.

#கற்றதும் பெற்றதும்

உழுபவனுக்கு நிலம் சொந்தமென போராடவில்லை.பாட்டாளிகள் சுரண்டாமல் மனிதனாய் மதிக்க வேண்டுமென இரணியன் போராடினார்.ஐ.என்.ஏ வில் தியாகியாவும் இவர்களுக்கு நான் துரோகியாகவும் தெரிகிறேன் என ஒருமுறை மனம் நொந்து சொல்லுவார்.மறுஜென்ம நம்பிக்க்கையில்லை எனினும் பலியானவர்கள் ஒருதாய் வயிற்றில் பிறந்து அடிமைப்படும் மக்களுக்காக போராட வேண்டுமென்கிறார். இறந்த உடலை ஊரார் பார்த்ததும் மரங்ககை போல் கண்ணீர் மல்க நின்றனர். பொதுவுடைமை சித்தாந்தத்திற்கு இலக்கியமாய் திகழ்ந்தவரை நினைவு கூர்வோம்.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Friday 1 May 2020

விவாகரத்துக்கே விவாகரத்து கொடுக்கலாம்!*மணி




எந்த ஒரு விஷயத்தையும் எவிடன்ஸ் இல்லாமல் செய்வது எப்படி?

நண்பர்களின் திருமணமாய் இருந்தாலும் சரி,கெடா வெட்டு,கெட் டூ கெதராய் இருந்தாலும் சரி முதல் சாய்ஸ் சரக்கு தான்.எப்பவும் குடிக்கிறவங்களை விட எப்பவாவது குடிக்கிறவங்களும் நம்ம சமூகத்தில இருந்துட்டுதான் இருக்காங்க.அவர்களும் குடிமகன்கள் தான்.அவுங்களுக்காவும் சில டிப்ஸ் குடுத்துதான் ஆக வேண்டியிருக்கு.

சரக்கடித்து வாழ்வாரே வாழ்வர், பீர் அடிப்போர் எல்லாம் மாட்டிக்கொள்வார் னு காலம் காலமா இருக்கிற விதியை மாத்தனும்.சுதியை ஏத்தனும்.

*கெடா வெட்டு,கெட்டு டூ கெதர் னு வந்துட்டா நமக்கு ஏத்த நண்பர்களை கூட வச்சிக்கனும்.அதாவது பீர் அடிப்பவர்களை..
இது எல்.ஐ.சி பாலிசியை விட சேஃப்டியான பாலிசி

*ஹார்ஸ் பவர் இருக்கா,புல்லட் இருக்கானு பேசிட்டு இருக்கும் போது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ மாதிரி பேசாம அமைதியா இருக்கனும். ஆர்வக்கோளாறுல ஆக்டிவா இருக்கா,என்பீஃல்டு இருக்கானு கேட்டா பீர் அடிக்கும் குரூப்பிலிருந்து கொல வெறியோடு ரிமூவ் செய்யப்படுவீர்கள்

*அடுத்த ஆப்ரேசன் என்னன்னா பாட்டில் ஓபன் செய்வது.பாராக இருந்தா ஓபனர் இருக்கும்.ஆனா வாய்க்கா மேட்டுல,தென்னந் தோப்பாக இருந்தால் சிக்கல்தான்.பல்லால கடிச்சு நாங்களும் ரெளடிதானு மேச் பன்னனும்.ராஜ் கிரணை மனசுல நினைச்சு நல்லி எலும்பை கடவாயில் கடிப்பது மாதிரி மூடி வேற பாட்டில் வேறயா கடிச்சு எடுக்கனும்.கடிக்க தெரியலைனா ஓபன் செய்து வச்சிருப்பவன் பாட்டிலை எடுத்து வாய் வச்சிரனும்.இந்த ராஜதந்திரம் எல்லா நேரத்துலயும் வொர்க் அவுட் ஆகாது யுவர் ஆனர்.சீக்கிரம் பாட்டில் திறக்க கத்துக்கணும் பிரதர்.

*பீர்க்கு டம்ளர் கேட்டால் அவ்வளவுதான்..பார்'க்கு போய் சீட்டு கிடைக்காதவன் மாதிரி அப்பாவியா நம்மை பார்க்க வச்சிருவாங்க..
அப்புறம் அதகள என்டர்டெய்ன்மென்ட் தான்.சரக்கு தீரும் வரை நம்மை வச்சு செய்வாங்க..ஆகவே பொறுமை முக்கியம் அமைச்சரே

*டிவியை பார்த்துட்டே சாப்பாட்டை தட்டில் வைத்திருப்பவர் மாதிரி இருக்க கூடாது. சரக்கை சீக்கிரமும் அடிக்க கூடாது, வச்சிட்டேயும் இருக்க கூடாது.மீடியமான ரன் ரேட்டுல அடிச்சிட்டே இருக்கனும்.அப்பதான் போட்டியிலும்,பார்ட்டியிலும் ஜெயிக்க முடியும் பங்கு"!

*நல்ல சூப்பர் ஸ்ட்ராங்கா இருந்தால், ஒன்று முடித்து அடுத்த பீர்க்கு போகும்போது வயித்துக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டை தொண்டையில் கிச்சு கிச்சு மூட்டும்.அதுக்கு பேரு வாந்தி.சட்டுனு சுதாரிச்சு நாலு முறை எச்சில விழுங்கி, கொண்டு போன கொய்யா காயையோ,வாழைப்பழத்தை விழுங்கி மேனேஜ் செய்யலாம்.உடம்போ,தலையோ ஒரு குலுக்கு குலுக்கும்.அதை மத்தவங்க பாத்திராமா பவ்யமா பாத்துக்கனும்.

*வல்லவனுக்கு வல்லவன் பேக் ஐடியிலும் உண்டு என்ற பழமொழி மாதிரி,அடிச்சிட்டு அனாவசியமா பேசாம ஆமாஞ்சாமி போட்டுறனும்.இல்லனா எமோசனல் ஆகி சரக்கும் பாடியும் செட் ஆகாம போயிடும்.அப்புறம் ரணம் ரணமா ஆயிடும்.

*சரக்கடித்து முடித்தவுடன் கொஞ்சம் கட்டெறும்பு கன்னத்தில் ஊறுவது போல இருக்கும்.எல்லாம் யூரின் போற வரைக்கும் தான்.தள்ளாடம ஸ்டெடியா நெஞ்சை நிமித்திக்கிட்டு,மீசையை முறுக்கிட்டு ரத்தின வேல் பாண்டியன் மாதிரி போய் ஒரு சேர்ல உட்கார்ந்து, ஏவிஎம் சரவணன் சார் மாதிரி கையை கட்டி போஸ் கொடுக்கனும்.எந்த ஒரு காட்சியையும் அஞ்சு நிமிசத்துக்கு மேல பார்க்க கூடாது.பரபரப்பா எல்லா இடத்தையும் பாத்துக்கிட்டே இருக்கனும்

*பந்திக்கு போனால் எல்லாமே அளவா சாப்பிட்டு,லைட்டா எல்லாரையும் பார்த்து சிரிக்கனும்.(வாயைத் திறக்காம).நம்ம இலைனு நினைச்சு பக்கத்து இலையில சோத்தை பிணையாம கையை கன்ட்ரோல் செய்யனும்.சர்வரையெல்லாம் அதிருப்தி எம்.எல்.ஏ போல் பார்க்காம, எதிர்கட்சி எம்.எல்.ஏ வை பார்ப்பது போல் சிரித்த மாதிரி பார்க்கனும்.

*சல்மான் கானுக்கு ஜாமின் கிடச்ச மாதிரி,அவ்வளவு ஈஸியில்ல வீட்டுக்கு போவது.பத்துப் பொய்யை மனசுல சொல்லிப்பார்த்து அதுல எது பெஸ்ட் பொய்யோ அதை ரைமிங்கா டைமிங்கா போனில் மனைவியிடம் லேட் ஆனதுக்கு காரணம் சொல்லனும்

*நம்புற மாதிரி கிரீன் சிக்னல் கிடைத்தவுடன்,அப்படியே டாப் கியரில் இன்னும் ஒன்றிரண்டு விஷயத்தை கோர்த்து சொல்லனும்.சரிமா கிளம்பிட்டேன்;சீக்கிரம் வந்துடுறேன் சொல்லி போன் ஐ வச்சிடனும்

*கண்ணுல சரளை மண்ணு கொட்டுன மாதிரி கலங்கியிருக்கிற கண்ணோட டோனை சரிசெய்யனும்.டவுன் பஸ் ட்ரைவர் ஸ்டேரிங்கை துடைக்கிற மாதிரி முகத்தை கர்சீப்பால் துடைக்கனும்.

*பீடா வைப்போட்டு வாயில் மென்னுகிட்டே வீட்டுக்கு கிளம்பனும்.அப்புறம் வீதி முக்கில் வாய் கொப்பளித்து ஒரு டீ குடிச்சிக்கிட்டே நேராக,சைடாக கண்ணாடியில் பார்த்து நமக்கு நாமே மார்க் போட்டுக்கனும்

*எலிமினேட் ஆகுற மாதிரி தெரிஞ்சா சென்டர் பிரஸ்,டிக் டாக்,ஹால்ஸ் மிட்டாய்,தேங்காய் எண்ணெயில் வாய் கொப்பளித்து நிலைமையை மேனேஜ் செய்யனும்.விக்ஸ் வாங்கி தேய்ச்சிக்கனும்

*வீட்டுக்குள் நுழையும் போது செருப்பை பவ்யமா விடனும்.அதட்டல் இல்லாம அமைதியா பேசனும்.நைசா பாத்ரூமுக்கில் போய் கோல்கேட் பேஸ்ட்,பிரஷ் எடுத்து பல்லு விளக்கிடனும்.இதுதான் நாகாஸ்திரம்.இதுதான் என்டு கார்டு.இதுக்கும் மேல சொர்க்கம் தான்.

*கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு வீட்டுக்குள் நுழையனும்.

முதலில் நம் முகம் பார்த்து சந்தேகம் வரலைனா தப்பிச்சிட்டோம் அர்த்தம்.உடனே ஜீன்ஸ் படத்தில வரும் பேச்சியப்பன் நாசர் என்சைக்ளோபீடியா எடுத்து படிப்பது மாதிரி, புக் எடுத்து படிக்க ஆரம்பிச்சுடனும்.

*உலக அளவில் நம்ம நாட்லதான் விவாகரத்து எண்ணிக்கை அதிகரிச்சு வருவதாக தகவல் வருகிறது.உலக அரங்கில் நம் நாட்டுக்கு எவ்வளவு அவமானம்.ஆண்களாக நாம் என்ன செய்யப் போகிறோம்.இது போன்ற முன் எச்சரிக்கையாக செயல்படும் ஆண்களால் தான் நம்பிக்கை ஏற்படுகிறது.பல குடும்பங்கள் விவாகரத்து ஆகாமல் இருக்க செய்யும் அந்த ஆண்களுக்கு ஒரு சபாஷ் சொல்லாமே"!

-மணிகண்டபிரபு

1-5-2020

[ இழக்க அதிகமில்லாதவனுக்கு அதிக பயமி்ல்லை; இழக்க அதிகமுள்ளவனுக்கு பயத்தைத் தவிர வேறேதும் அதிகமில்லை 

-ராஜேஷ்வர்



[கடினமாய் உழைத்தவர்கள் முன்னேறவில்லை,
கவனமாய் உழைத்தவர்களே முன்னேறியுள்ளனர்.!!

-மணி

-உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்


 எல்லாத் தகவல்களை
அழித்த பின்னர்
முன் திரையில்
கொள்ளை
அழகுகாட்டிச்
சிரிக்கிற
குழந்தையின் புகைப்படத்தை
என்னசெய்வதென்று
விழிக்கிறான் 
செல்பேசியைக் களவாடியவன்

-ஆத்மார்த்தி

: #படம் வரையும் மரபு

அக்காலத்தில் நாவலை தொடராக எழுதிப் பிரபலமாக்கியது சார்லஸ் டிக்கன்ஸ்தான்.அவர்தான் தன் கதைகளுக்கு ஏற்ப சித்திரம் வரைந்து பிரசுரித்தால் வாசகரிடம் வரவேற்பு கிடைக்குமென எண்ணி Samuel luke fields என்பவரை அணுகினார். அன்றுமுதல் அவர் கதை சித்திரத்துடன் வெளிவந்தது.இது இன்றுவரை தொடர்கிறது

#info

"மனித வாழ்க்கையின்
மிகப்பெரிய ஆச்சர்யம்
அன்புக்கு உரியவர்களை
எந்த இடத்தில்
எப்படி சந்திக்கப் போகிறோம் என்பதும்
எங்கே
எப்போது
எதற்காகப் பிரியப் போகிறோம் என்பதும்
முன்கூட்டியே
தெரியாமல் இருப்பதுதான்""

-நா.பார்த்தசாரதி


இந்த நாட்டில் யார் அதிகமாகக் கடன் வாங்கிறார்களோ,
அவர்களுக்குத் தான் மதிப்பு அதிகம்

-சாவி


குருவியின் கண் மட்டுமே தெரிந்த
அர்ச்சுனனுக்குத் தெரியவில்லை
அதன் உயிர்
*

நான் பிடித்த முயலுக்கு
மூன்றே கால்
அய்க்கூ!
*

தீக்குச்சியை உரசிய
அதே கணத்தில்
வானத்தில் மின்னல்!
*

மாதுளையை உதிர்த்தபோது
பார்த்தே பார்த்துவிட்டேன்
ஒரு கணம்… கடவுளை!
*

ஊருக்குப் போகிறேன்
வானம்
பார்க்க வேண்டும்
*
தவளை கத்துகிறது
தண்ணீர்…
ண்ணீர்…
ணீர்…
*
கசியுமா கண்ணீர்
நெற்றிக் கண்ணில்…
*
யாருமற்ற குளத்தின் படிக்கட்டு
மெல்ல இறங்கிக்கொண்டிருக்கிறது
வெளிச்சம்
*
கடந்து செல்லும்
ஒவ்வொரு தெருவிலும்
ஒவ்வொரு சூரியன்
*

*~லிங்குசாமி
[01/05, 6:16 pm] மணிகண்ட பிரபு: பத்திரப்படுத்துபவனாக அவன்
எதிர்நோக்கியிருக்கிறேன் நான்
அவனிடமிருந்து
பாக்கிச் சில்லறைக்கான
சில பதில்களையாவது

-கடற்கரய்



முற்காலம் என்றால் 
போருக்கு போய் 
செத்திருக்கலாம்,
தற்காலத்தில் எல்லாமே
சாகவிடாத யுத்தங்கள்

-படித்தது