Wednesday 24 November 2021

பழமொழி

பிறந்தால் நாயாகப் பிற!
இளையவனாக மட்டும் பிறக்காதே!

கழுதையாகப் பிற!'ஆனால்,
மூத்தவனாக மட்டும் பிறக்காதே

-பழமொழி

மால்கம் எக்ஸ்

உனக்கென்று ஒரு தனித்தன்மையை உருவாக்கிக்கொள். மற்றவர்களிடம் இருந்து சிறிய அளவிலாவது மாறுபடு.நீ செய்யும் ஒவ்வொரு காரியமும் மற்றவர்களை ஆச்சரியப்பட வைக்கவேண்டும். அதிர்ச்சியில் வாயடைக்கப்படவேண்டும். மற்றவர்கள் செய்யாமல் விட்டது எது என்பதை கண்டறிந்து செய்துவிடவேண்டும்.

 மால்கம் எக்ஸ்

Saturday 20 November 2021

தங்கம் மூர்த்தி

தேர்வுகளின் கடைசிநாள் கொண்டாட்டத்தில் சட்டைகளில் இங்க் அடித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது சந்துகளில்
பீர் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

-தங்கம் மூர்த்தி

Friday 19 November 2021

வெங்கட் தாயுமானவன்

வாழ்வின் தூற்றலில்
காற்றின் திசையில் பயணித்த
உமியாக நான்..
மூட்டைக்குள் அடைபட்ட 
நெல்லாக நீ !!

-வெங்கட் தாயுமானவன்

Thursday 18 November 2021

ஜென்

நீ  நல்ல நல்ல புத்தகங்களை வாசிப்பேயானால், ஒவ்வொரு கடைசி பக்கங்களிலும் கரைக்கு வந்து விட்டோமே என்ற ஏமாற்றம் இருக்கும்.

-ஜென்

இளங்கோ கிருஷ்ணன்

உதிர்ந்த இலையில்
தன் மரணத்தை
பார்த்துக்கொண்டிருக்கிறது
மரம்

குனிந்து
அந்த மரத்தைப்
பார்த்துக்கொண்டிருக்கிறது
வானம்

-இளங்கோ கிருஷ்ணன்

பேயோன்

மழைக்குப் பிந்தைய வெயில்
உக்கிரமாக இருக்கிறது
விட்ட இடத்திலிருந்து தொடர்வது போல
விட்டதைப் பிடிக்க முயல்வது போல
மறந்துவிடாதே என்று எச்சரிப்பது போல.

-பேயோன்

Tuesday 16 November 2021

பேயோன்

போதாமல் சேர்த்த சர்க்கரை
காபி தீர்ந்த பின்
மிச்சமிருக்கிறது

-பேயோன்

பெருந்தேவி

அறியாமையின் பெருவெளி
சிறகடிக்கத் தூண்டியது.
அவநம்பிக்கையின் ஒரு கல்
பறத்தலை ஊர்தலாக்கியது

-பெருந்தேவி

Friday 12 November 2021

பியொதர் தஸ்தயேவ்ஸ்கி

ஒரு  மனிதனின் வீழ்ச்சியையும் , அவன் படுகிற அவமானத்தையும் கண்டு மகிழ்வுற எப்போதுமே   மனிதர்கள்  ஆசை கொள்கிறார்கள்

-பியொதர் தஸ்தயேவ்ஸ்கி

Thursday 11 November 2021

யுகபாரதி

போகும்போது
கூப்பிடக் கூடாதென்று
தயங்கி நிற்கிறாய்

கூப்பிட நினைத்து
மூச்சிரைக்க
ஓடி வருவாயோவெனத்
திரும்பிப் பார்க்கிறது
என் காதல்

-யுகபாரதி

கார்ல் மார்க்ஸ்

ஒரு மாமனிதனுடைய தனிப்பட்ட குணங்களால் வரலாறு கட்டமைக்கப்படுகிறது என்பதற்காக மாமனிதன் என்று அழைக்கப்படுவதில்லை. அவனுடைய குணங்கள் அன்றையச் சமூகத் தேவைகளுக்குப் பாடுபட அவனுக்கு உதவிசெய்கின்றன என்பதற்காகவே அவ்வாறு அழைக்கப்படுகிறான்.

-கார்ல் மார்க்ஸ்

ஜார்ஜ் சந்தாயனா

எந்த சமூகம் சரித்திரத்தின் இறந்தகால அட்டூழியங்களையும்,அதன் காரணங்களையும் மறந்து விடுகிறதோ,அது எதிர்காலத்தில் மீண்டும் அதே இறந்த காலத்தை எதிர் கொள்ள நேரிடும்

-ஜார்ஜ் சந்தாயனா

Monday 8 November 2021

யுகபாரதி

நின்று பார்ப்பதற்குள்
கடந்துவிடுகிறது காலம்
நீ கடந்து போவதற்குள்
நின்றுவிடக்கூடாதா
இந்தக் கடிகாரம்

-யுகபாரதி

Sunday 7 November 2021

மெடிக்கல்

மெடிக்கல் தொழில்- லாபமா, நஷ்டமா?



ஒரு மெடிக்கல் கடை முதலாளி மதிய உணவு அருந்துவதற்காக வீட்டுக்கு கிளம்பினார். அப்பொழுது அவருடைய பத்து வயது பையனை கடையில் உட்கார வைத்துவிட்டு மருந்து ,மாத்திரை எல்லாவற்றிலும் விலைகள் இருக்கிறது. அவற்றை பார்த்து யாரும் கேட்டார்கள் என்றால் விற்று காசு வாங்கி வைத்து இரு, என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.

சுமார் இரண்டு மணி நேரம் கழித்து திரும்பி வரும்போது பையன் சந்தோசமாக ஒரு மருந்து பாட்டிலை விற்றேன், 18 ரூபாய்க்கு என்று எழுதி வைத்திருந்தான்.

உடனே கடைக்காரர் கோபத்தில் அவனை அடித்து விட்டார் .அடப்பாவி ,எண்பத்தி ஒரு ரூபாய் மருந்து ,தலை கீழாக பார்த்து 18 ரூபாய்க்கு விற்றிருக்கிறாய் என்றவுடன் பையன் அழ ஆரம்பித்துவிட்டான்.

5 நிமிடம் கழித்து அவனை ஆறுதல் படுத்தினார். சரி, சரி விடு .அதிலும் பத்து ரூபாய் லாபம் இருக்கிறது என்று தட்டிக் கொடுத்தார் .பையன் சமாதானமானன்.

சார் என்ன கேட்டிங்க?

-படித்தது

Saturday 6 November 2021

கல்யாண்ஜி

கைப்பிள்ளையுடன் பேசிக்கொண்டே
கோலம் போடுகிறாள் அந்தப்பெண்.
நிபந்தனையற்ற அன்பில்
நேர்த்தியாகிக் கொண்டிருக்கிறது வாசல்.

குற்றம் பார்க்கின்
சுற்றம் இல்லை.
கோலம் பார்க்கின்
துக்கம் இல்லை

-கல்யாண்ஜி

Monday 1 November 2021

பஹ்லுல்

உடல் அடிபடுவதை விட அதிக உபாதை கொடுக்கக் கூடியது பெயர் அடிபடுவது.உடலின் வலியை விட அதிக இம்சை தருவது மனத்தின் அடி

-பஹ்லுல்