Thursday 30 August 2018

@மணி

[03/07, 8:15 am] TNPTF MANI: கேள்வித்தாளின் பின்புறம்
வரையப்பட்ட ஓவியத்தில்
பூர்த்தியாகி இருந்தது
அவன்
தேர்வு முடித்த
மிச்ச நேரம்

-பழ.புகழேந்தி
[03/07, 9:34 pm] TNPTF MANI: ஒரு புலி நம்மளை திங்காம சாந்தமா பார்த்தா என்ன அர்த்தம்?

‘நமக்கு பின்னாடி பொண்டாட்டி முறத்தோட நிக்கிறானு அர்த்தம்’

-சுஜாதா
[03/07, 9:58 pm] TNPTF MANI: ஒரு துவக்கம்
ஏனித்தனை சிரமமாக இருக்கிறது
நேரம் எடுத்துக் கொள்கிறது
தடுமாறுகிறது
தயங்கி நடுவில் வீழ்கிறது
முடிவைப் போல் அல்லாமல்...
- போகன் சங்கர்
[04/07, 6:49 am] TNPTF MANI: பெரிதினும் பெரிது
ஒருவரை
சிரிக்க வைப்பது

சிரிக்காத பெண்ணும்
செழிக்காத மண்ணும்
லட்சணமற்றவை
எப்போதுமே

சிரமப்பட்டாவது
சிரிக்க வேண்டும்
நரி சிரிக்காது

நிலைப்படியில்
கண்ணைப்பார் சிரி
முடியாத பட்சத்தில்
நாட்டைப் பார்
வந்துவிடும் சிரிப்பு

-யுகபாரதி
[04/07, 11:31 am] TNPTF MANI: சொரணை இருக்கிறதா நமக்கு?
-யுவகிருஷ்ணா

முன்பொரு காலம் இருந்தது.

 

நல்ல வெயிலில் நடந்துக் கொண்டிருக்கும் நடைபயணிகள், யார் வீட்டின் முன்பு நின்று தாகத்துக்கு தண்ணீர் கேட்டாலும், செம்பு நிறைய மகிழ்ச்சியோடு கொடுப்பார்கள். டீக்கடைகளில் தொடங்கி சினிமா தியேட்டர்கள் வரை இலவசமாக தண்ணீர் கிடைக்கும். தனியொரு மனிதனின் தாகத்துக்கு யாரிடம் தண்ணீர் கேட்டாலும் கிடைக்கும்.

வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு முதல் விருந்தோம்பலே சில்லென்ற தண்ணீர்தான். அதன் பிறகுதான் சவுகரிய விசாரிப்பு எல்லாம்.

மனிதர்களுக்கு மட்டுமல்ல. விலங்குகள் இளைப்பாறவும் ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகளை கட்டி, தண்ணீர் நிரப்பி வைத்த காலமும் இருந்தது.

தாகத்துக்கு தண்ணீர் கொடுப்பது பெரும் புண்ணியமாக கருதப்பட்ட தலைமுறைகளின் தொடர்ச்சி நாம்.

ஆனால் –

இன்று?

யார் வீட்டுக்காவது போனால், “தண்ணீ குடிக்கறீங்களா?” என்று சம்மதம் கேட்டுவிட்டுதான் கொடுக்கிறார்கள். யாரைச் சொல்லியும் குற்றமில்லை. எல்லோரும் குடிநீரை காசு கொடுத்துதானே வாங்குகிறோம்?

இன்றைய தேதியில் நமக்குத் தெரிந்து எங்குமே தண்ணீர் இலவசமில்லை. தாகமெடுத்தால், காசு கொடுத்து பாக்கெட் வாட்டர் அல்லது வாட்டர் பாட்டில் வாங்கிக் குடித்துக் கொள்ள வேண்டியதுதான்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மெட்ரோ வாட்டர் போன்ற அரசு அமைப்புகள் மக்களுக்கு குடிநீர் வழங்கும் பணிகளை செய்துவருகின்றன. இதற்காக சொற்ப அளவிலான குடிநீர் வரியையும் நாம் செலுத்தி வருகிறோம். லாரி மூலமாகவோ அல்லது குழாய்கள் மூலமாகவோ சப்ளை செய்யப்படும் இந்த குடிநீரை அப்படியே பயன்படுத்த முடிவதில்லை. காய்ச்சிக் குடிக்கலாம். அல்லது RO முறையில் சுத்திகரித்து குடிக்க வேண்டும். அதற்காக ஒரு இயந்திரத்தை காசு செலவு செய்து வாங்க வேண்டும்.

அரசு, குடிமக்களுக்கு கொடுத்துக் கோண்டிருக்கும் இந்த அடிப்படை உரிமைகூட தனியாருக்கு தாரை வார்க்கப் படுகிறது என்பதுதான் லேட்டஸ்ட் பகீர்.

ஆம்.

கோவை மாநகருக்கு குடிநீர் வழங்கும் உரிமையை தாங்கள் பெற்றிருப்பதாக பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த சூயஸ் என்கிற நிறுவனம், கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி பெருமையோடு அறிவித்திருக்கிறது.

சுமார் பதினாறு லட்சம் மக்களுக்கு அடுத்த இருபத்தாறு ஆண்டுகளுக்கு வழங்கக்கூடிய ஒப்பந்தத்தை 400 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் 3,150 கோடி ரூபாய்) பணத்துக்கு பெற்றிருப்பதாக அந்த நிறுவனம் பெருமையோடு சொல்கிறது.

குடிநீர் சப்ளையை தனியாருக்கு தாரை வார்ப்பது இது இந்தியாவில் முதன்முறை அல்ல. ஏற்கனவே டெல்லி, பெங்களூர், கொல்கத்தா போன்ற மாநகரங்களிலும் இதே போன்ற ஒப்பந்தத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

ஏற்கனவே, நாம் நெடுஞ்சாலைகளை இழந்துவிட்டோம். இந்தச் சாலைகளில் பயணிக்க சுங்கம் செலுத்துவதை போல, இனி கோவைவாசிகள் குடிநீருக்கும் தனியார் நிறுவனம் வரையறுக்கும் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் முதற்கட்டம்தான் கோவை. அடுத்தடுத்து சென்னை, சேலம், மதுரை, திருச்சி போன்ற மாநகரங்களின் குடிநீர் சப்ளையையும் தனியார் நிறுவனங்கள் கைப்பற்றி, கொள்ளை லாபம் சம்பாதிக்க திட்டமிடப்பட்டு வருவதாக சொல்கிறார்கள்.

தண்ணீர் என்பது மக்களின் அடிப்படை உரிமை. பாதுகாக்கப்பட்ட குடிநீரை தன் குடிமக்களுக்கு வழங்க வேண்டியது அரசின் கடமை.

ஆனால் –

உலக வங்கியோ, தண்ணீரை தனியார் மயமாக்கச் சொல்லி வற்புறுத்தி வருகிறது. உலக வங்கியின் தலைவராக இருந்த ஜேம்ஸ் வோல்பென்ஸான் என்பவர், “இலவசமாகவோ, குறைந்த காசுக்கோ தண்ணீரை வழங்குவது என்பது பூமியின் வளங்களை சுரண்டுவதற்கு காரணமாகிறது. அதுபோல தண்ணீரை கொடுக்கும்போது, மக்கள் அதன் மதிப்பை அறியாமல் வீணாக்குகிறார்கள்” என்று சொன்னார்.

என்னவோ, இயற்கை வளங்களை அரசுகள் அப்படியே பாதுகாக்க விரும்புவதாகவும், மக்கள்தான் வளங்களை சுரண்டுகிறார்கள் என்பதைப் போன்றும் அவர் உதிர்த்த இந்த முத்துகள், அப்போதே உலகம் முழுக்க கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது.

பொலிவியா நாட்டின் நான்காவது பெரிய நகரமான கோசம்பம்பாவில் இதுபோல தண்ணீர் வழங்கும் உரிமை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டபோது மக்கள் திரண்டு பெரியளவில் 1999-2000 ஆண்டுகளில் போராட்டம் நடத்தினார்கள். தண்ணீர் மற்றும் வாழ்வியல் பாதுகாப்பு அமைப்பு என்கிற இயக்கத்தை நிறுவி, பல்லாயிரக் கணக்கானோர் அரசுக்கு எதிராக வீதிகளில் திரண்டார்கள்.

அந்த திட்டத்தில் முதலீடு செய்திருந்த அந்நிய நிறுவனங்கள், பொலிவியா அரசின் துணை கொண்டு போராட்டங்களை முடக்க கடுமையாக முயற்சித்தனர். சுமார் 90 நாட்கள் தொடர்ச்சியாக நடந்த போராட்டங்களை ஒடுக்க அரச வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சில மரணங்களும் ஏற்பட்டன.

கடைசியாக பொலிவிய மக்களின் வீரம் செறிந்த போராட்டங்களின் காரணமாக அரசு, ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம், உலகவங்கி என்று அனைவரும் மக்கள் முன்பாக மண்டியிட வேண்டி வந்தது. பொலிவிய மக்களின் தண்ணீருக்கான இந்த போர், 2010ஆம் ஆண்டு ‘Even the Rain’ என்கிற பெயரில் ஸ்பானிஷ் மொழியில் திரைப்படமாகவே வந்தது.

இன்று குடிநீர், தனியாரின் கட்டுப்பாட்டுக்கு போகிறது என்றால், நாளை விவசாய பயன்பாடுகளுக்கான தண்ணீரையும் அவர்கள் கட்டுப்படுத்த முனைவார்கள். ஒவ்வொரு அணையையும் ஏதோ ஓர் அந்நிய நிறுவனம் பல்லாயிரம் கோடிகளை கொட்டி வாங்கும். லட்சக்கணக்கான கோடிகளை அறுவடை செய்யும். இது நவீன காலனி ஆதிக்கத்துக்கு அடிகோலும். நம் குழந்தைகளும், பேரன் பேத்திகளும் தண்ணீரை வாங்கி பயன்படுத்த பர்சனல் லோன் போடவேண்டிய அவலமும் வரலாம்.

பொலிவிய மக்களுக்கு இருந்த சொரணை, நமக்கும் இருக்கிறதா?
[04/07, 3:28 pm] TNPTF MANI: எல்லா தோழிகளுக்கும் கொஞ்சம்
அம்மா சாயல் இருக்கிறது

- ராஜுமுருகன்
[04/07, 5:47 pm] TNPTF MANI: அழகான நேரம். அதை நீ தான் கொடுத்தாய்.
அழியாத சோகம். அதையும் நீ தான் கொடுத்தாய்

-நா.முத்துக்குமார்
[04/07, 5:52 pm] TNPTF MANI: அந்த மாபெரும் வெற்றிடத்தில்
முன்னும் இல்லை, பின்னும் இல்லை
பறவையின் பாதை
கிழக்கையும் மேற்கையும்
அழித்துவிடுகிறது.’
    
                               - ஜென் 
[04/07, 8:24 pm] TNPTF MANI: இரவில் வந்தது மழை.
யாரும் அதன் அழைப்பை
ஏற்கவில்லை.
சன்னல்களும் கதவுகளும் சாத்திக்கிடந்தன.
துக்கம் அதிகமாகி மாரடித்துப் புலம்பியது அது.
இருட்டின் ஒரு துளியைக்கூட
கரைக்கமுடியவில்லை அதனால்.
இரவெல்லாம் சபித்தபடியும்
முணுமுணுத்தபடியும் இருந்தது.
காலையில் வாசலில்
தேங்கியிருந்த மழையின் கண்ணீரில் நின்றபோது
முறுக்கிகொண்ட சிறுமிபோல்
கால்களைக் கிள்ளியது
அதன் குளிர்ந்த கோபம்.

-அழகிய பெரியவன்
[04/07, 8:27 pm] TNPTF MANI: எத்தனை நாள்
எவ்வளவு நேரம்
எப்படியெல்லாம்
ஆனாலும்
பார்க்க வருவாய்
நம்
முதல் சந்திப்பாகவே

-திருமேனி
[04/07, 8:39 pm] TNPTF MANI: நிறைவு

“என்னுடைய நூற்றைம்பது காட்டுகிற
அதே நேரத்தை காட்டினாலும்
உன்னுடையது
ஏழாயிரத்து எழுநூறு.

காரில் போவதற்கு
மூவாயிரத்துக்கு நீயும்
காலில் போவதற்கு அறுபதுக்கு
நானும்
காலணிகள் வாங்கினோம்
எனக்கான கடைகளில் நீ
நுழைவதில்லை
உன் கிரெடிட் கார்டு நுழையும்
கடைகளில்
நான் நுழைய முடிவதில்லை.

இருந்தும்கூட மெத்தையிலிருந்து
அதிகாலை குதித்து
கோரைப்பாயில் உறங்கும் என்னை
தட்டியெழுப்பி சொல்கிறாய்
தூக்கம் வரவில்லையென்று..!”

                        - ஜெயபாஸ்கரன்.
[05/07, 6:55 am] TNPTF MANI: "வசீகரமான ஏதாவது ஒன்று மனிதனுக்குத் தேவைப்படுகிறது. அன்புகாட்டவும் அன்புகாட்டப்படவும்"
- வைக்கம் முகம்மது பஷீர்
[06/07, 6:37 am] TNPTF MANI: காதலன் ஒருவன் காதலியைப் பார்க்க நள்ளிரவில் பக்கத்து ஊருக்குச் செல்வான்.
நாய் குலைக்கும்.
கல்லை எடுக்கக் குனிவான்.
கல் எடுக்க வராமல் தரையில் பதிந்து இருக்கும்.
அவன் சொல்வான் :
"இந்த ஊரில் நாய்களை அவிழ்த்து விட்டு விட்டு கற்களைக் கட்டிப் போட்டிருக்கிறார்களே!"
#கலீல்ஜிப்ரான்
[06/07, 6:52 am] TNPTF MANI: மரணப் படுக்கையில்
வீழ்ந்துகிடக்கும் ஒருவனின்
தொண்டைக்குழியில்
சிக்கிக்கொண்ட கடைசிசொல்
அவனின் துயரமல்ல
அதுசொல்லின் துயரம்
-தர்மராஜ் பெரியசாமி
[06/07, 8:18 am] TNPTF MANI: சந்தை
-நகுலன்

செத்த வீட்டில்
துக்கம் விசாரிக்கச்
சென்று திரும்பியவர்
சொன்னார்
“செத்த வீடாகத்
தெரியவில்லை
ஒரே சந்தை இரைச்சல்.”
[06/07, 5:15 pm] TNPTF MANI: எல்லா உயிரினங்களுக்கும் வெறுமை பற்றிய கருத்து உண்டு
எனினும் பூக்கள் பூப்பதைக் கைவிடுவதில்லை.
ஒரு குவளை நீரிடம் கேளுங்கள்; அது ஏன் மழையின் மேல்
பரிதாபப்படுகிறது என்று.
ஒரு வெறி பிடித்த வீட்டு நாயிடம் கேளுங்கள், கட்டியிருக்கும்
கயிற்றை அது ஏன் பொறுத்துக் கொள்கிறதென்று.

-டெரன்ஸ் ஹேய்ஸ்
[07/07, 6:26 am] TNPTF MANI: சொல் காயப்படுத்தி வீழ்த்துகிறது ஒருவனை.
சொல் பறிக்கிறது மற்றொருவனின் அரசாங்கத்தை.
சொல்லை உய்த்துணரும் ஒருவன் எவனோ
அவனுக்கே அனைத்தும் இனிதாக முடிகிறது.

- கபீர்
[07/07, 6:39 am] TNPTF MANI: எழுது
எவர் முகமும் பாராமல்
உன் மனம் பார்த்து,
உன் தாகம் தீர்க்க
நதியிலிருந்து நீரைக்
கையால் அள்ளுவது போல்
கண்டுபிடி
உன் மனமொழியை

-பசுவய்யா
[07/07, 6:43 am] TNPTF MANI: நடு சாலையில்
அடிபட்டுக் கிடக்கிறது
நாயொன்று.

இரயில் பாதையில்
மரித்துக் கிடக்கிறது
யானையொன்று.

மின்சாரக் கம்பியில்
தொங்கிக் கிடக்கிறது
காகம் ஒன்று.

செல்போன் கோபுரங்களில்
தொலைந்து போகிறது
குருவிக் கூட்டமொன்று.

உங்கள் அறிவியல்
கண்டு பிடிப்புகளில்
ஒவ்வொரு நொடியும்
உருக்குலைந்து போகிறது
ஏதோ ஒரு உயிரினமொன்று.

-படித்தது
[07/07, 1:20 pm] TNPTF MANI: இணையத்தில் ஒரு சேவை உங்களுக்கு இலவசமாகக் கிடைக்கிறது என்றால், நீங்கள் அதற்கு பயனாளரோ அல்லது வாடிக்கையாளரோ இல்லை; அதற்காகக் கொடுக்கும் விலையே நீங்கள்தான்"

-படித்தது
[07/07, 11:00 pm] TNPTF MANI: நீ வந்தபோது
என்னிடம் கேள்வியில்லை
நீ சென்றபோது
கேள்விகள் மட்டுமே இருந்தது

மெளனத்தின்
இட வல அர்த்த சிலுவைகள்
ஆணிகள் தைத்தன

சாரமற்ற உயிர்தெழலென்பது
பிழைத்தலே அன்றி
வாழ்தலல்ல

-ப்ராங்க்ளின் குமார்
[08/07, 7:28 am] TNPTF MANI: இருக்கிறேன்
சத்தியத்தைப் போல
இல்லாமலும் இருப்பேன்
ஆழ்ந்த சத்தியத்தை போல
-தேன்மொழி தாஸ்
[08/07, 7:43 am] TNPTF MANI: அதோ அந்த புல்
உட்காந்த இடத்திலேயே வளர்கிறது...

-யுவன்
[08/07, 8:08 am] TNPTF MANI: ஒரு தீக்குச்சி போல
தீர்ந்துவிடுகிறது
உன்னிடம் பேசுவதற்காக
நான் சேமித்த சொற்கள்

போன பிறகும்
மணம் வீசிக்கொண்டிருக்கும்
ஊதுவத்தியைப் போன்றதுன்
வார்த்தைகள்

-யுகபாரதி
[08/07, 8:15 am] TNPTF MANI: பெண்கள் குறித்த ஆண்கள் பார்வை

நீ எங்கள் கண்ணாக இருந்தாய்
நாம் உன் கண்ணீராக இருந்தோம்
நீ எங்கள் ஆடையாக இருந்தாய்
நாம் உன் நிர்வாணமாக இருந்தோம்
நீ எங்கள் முகவரியாய் இருந்தாய்
நாம் உன் முகத்திரையாய் இருந்தோம்.
நீ கர்ப்பக் கிரகமாய் இருந்தாய்
நாமோ உன்னைக் கழிவறை ஆக்கினோம்
எங்கள் வெற்றிக்குப் பின்னால் நீயிருந்தாய்
உன் தோல்விகளுக்குப் பின்னால் நாமிருந்தோம்”

- ‘ஒப்புதல் வாக்குமூலம்
அப்துல் ரகுமான்
[08/07, 8:33 am] TNPTF MANI: அமைதியின் நீட்சியில் மனம் பிரபஞ்சம்போல விரிந்து கொண்டே போகிறது.இது போன்ற தருணங்களில் பெருமூச்சு விடுவதுதான் சிறிது நிவாரணம் தருகிறது
-சுந்தர ராமசாமி
[08/07, 9:18 am] TNPTF MANI: வனவாசம்’ புதிய முன்னுரை

காந்தி அடிகளின் சுயசரிதத்தைப் படித்தபின்பு, இதனை எழுதியதால், உண்மையை நிர்வாணமாகக் கூறுவதில் அதிக ஆசை எழுந்தது.

உலகம் என்ன குளிக்கும் அறையா, இஷ்டம்போல் ஆடையின்றிக் குளிக்க? ஆற்றில் குளிக்கும்போது ஒரு கோவணமாவது கட்டிக் கொள்ளத்தானே வேண்டியிருக்கிறது! அவமானத்துக்கு பயந்து வெட்கப்பட்டு, சில உண்மைகளை மறைத்தே தீரவேண்டியதாகிவிட்டது.

என்னோடு பழகியவர்கள் எனக்குப் பின்னால் அதனை வெளியிட்டால், அது எனக்குச் செய்யும் உதவியாகவே இருக்கும்.

எழுதுகிறவனைப் பொறுத்தல்ல, எழுதப்படும் செய்திகளைப் பொறுத்து இது ஒரு சுவையான நூல்தான். இது வெளிவந்த நேரத்தில் தொலைபேசி மூலமாக இதைத் தேடியவர்கள் பலர். வெளிநாடுகளில் இருந்து இதை அடைவதற்குப் பெரும் முயற்சிகளை மேற்கொண்டவர்கள் பலர். அவர்களில் சிலருக்கு நானே அனுப்பியிருக்கிறேன்.

ஒரு பெருமிதம் எனக்குண்டு. என் தலைமுறையில் வாழும் எந்த மனிதனுக்கும், தலைவனுக்கும், கவிஞனுக்கும் இத்தகைய சுயசரிதம் அமையாதென்பதே அது. இப்படி ஒன்று அமையவேண்டும் என்றால், யாரும் நீண்டகாலம் முட்டாளாக இருக்க வேண்டும். அது எல்லோருக்கும் கைவரக்கூடிய கலை அல்ல!

மீசை முளைக்காத பருவத்தில் பிறந்த கிராமத்தை விட்டுப் பறந்து, காற்றிலே அலைமோதி, கடைசியில் தனித்து விழுந்துவிட்ட காகிதம் ஒன்று அந்த நாள் ஞாபகத்தை அச்சிலேற்றிவிட்டது.

‘எப்படி வாழவேண்டும்?’ என்பதற்கு இது நூலல்ல; ‘எப்படி வாழக்கூடாது!’ என்பதற்கு இதுவே வழிகாட்டி.

– கண்ணதாசன்,
[08/07, 9:45 am] TNPTF MANI: இடது கை விரல் நகமும்
வலது கை விரல் நகமும்
ஒரே அளவுதான் வளருகிறதா

தீர்மானிக்கப்படுகிறது வளர்ச்சி எப்பவும்
நகவெட்டிகளால்

-படித்தது
[08/07, 3:49 pm] TNPTF MANI: ஒரு மௌனத்தின் இரு கரைகளில் நிற்கிறோம்; பழைய உரையாடல்களில் கல்லெறிந்து பார்த்துக்கொண்டே!!

-படித்தது
[08/07, 10:09 pm] TNPTF MANI: என் கவலைகளுக்காக நீங்கள் வருந்த வேண்டாம், வாழ்க்கை பாரபட்சமற்றது வருந்த உங்களுக்கும் கவலைகளைத் தரும்

-படித்தது
[09/07, 7:46 am] TNPTF MANI: வாசிப்பு ஏன் ஆறுதல் தருகிறது?
-அபிலாஷ்

    டி.வி பார்ப்பது, பேஸ்புக்கை புரட்டுவது, அரட்டை அடிப்பதை விட மிக அதிகமான கவனமும் மன உழைப்பும், உணர்வுகளின் குவிப்பும் வாசிப்புக்கு தேவைப்படுகிறது. அதாவது வாசிப்பு ஒரு ஓய்வு செயல் அல்ல, அது மூளையையும் உணர்வுகளையும் அதிகமாய் தூண்டும் ஒரு வேலை. ஆனால் வாசிப்பின் ஒரு முக்கிய தன்மை வேறு பொழுதுபோக்குகளுக்கு இல்லை. அது தனிமை.

தனிமை என்றால் பௌதிகமான தனிமை அல்ல. அகத்தனிமை. வேறு பொழுதுபோக்குகளின் போது ஒன்று மனிதர்களோ, குரல்களோ, பிம்பங்களோ நம்மை சூழ்ந்து கொள்கிறார்கள். வாசிப்பு மட்டுமே யாருமில்லாத பிரதேசத்துக்கு நம்மை அழைத்துப் போகிறது. எல்லாரையும் விட்டு எல்லாவற்றையும் விட்டு கொஞ்ச நேரம் தனித்திருக்க மனம் ஏங்குகிறது. புத்தகம் மட்டுமே எனக்கு அதற்கு உதவுகிறது.
நமக்கு எந்தளவு மனிதர்களோடு இருப்பது அவசியமோ அந்தளவு மனிதர்கள் இல்லாது இருப்பது தேவை. நமக்கு பேசிக் கொண்டே இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

ஆனால் பேச்சு ஒரு கட்டத்தில் அலுப்படைய வைக்கிறது. களைத்து ஒதுங்க நினைக்கிறோம். அப்போது தனிமை அவசியமாகிறது. ஆனால் தனிமை என்பதும் நாம் நம்முடன் நிகழ்த்தும் ஒரு பேச்சு தானே. அந்த பேச்சின் சொற்கள் நமக்குள் மலையாக குவியும் போது நாம் தனிமையில் இருந்து வெளியே வருகிறோம். யாரிடமாவது உரையாட தவிக்கிறோம். மிகவும் உக்கிரமாய் தீவிரமாய் தீக்கங்குகளைப் போல் சொற்களை சமூகத்துக்கு கொண்டு வருகிறோம்.
வாசிப்பது ஒரு விதத்தில் மொழியில் இருந்து தப்பிப்பதற்கான உத்தி தான். வெளியே பேசும் மொழியில் இருந்து தப்பித்து உள்மொழிக்கு செல்வது. ஆனால் மனிதர்கள் முழுக்க மொழியில் இருந்து தப்பிக்கவே இயலாது.

சாருவின் நாவல் ஒன்றில் கதைசொல்லி ஒரு களேபரமான கொண்டாட்டத்தில் இருப்பான். அவனைச் சுற்றி நண்பர்கள் கேளிக்கையில் ஈடுபட்டிருப்பார்கள். கதைசொல்லி சட்டென அவர்களுடன் தான் இல்லை என உணர்வான். அந்த கூட்டத்தின் நடுவே தான் மிகவும் தனியாய் இருப்பதாய் சொல்வான். அவனுக்கு அந்த தனிமை தான் வசதிப்படும். அவனால் கூட்டத்திற்கு வெளியிலும் செல்ல முடியாது. உள்ளுக்குள்ளும் சிறைப்பட முடியாது. மனிதனின் ஆகப்பெரும் அவஸ்தையே இது தான்.

அடிக்கடி பேஸ்புக்கில் இருந்து டி-ஆக்டிவேட் செய்து துறவறம் போகிற நண்பர்களை எனக்குத் தெரியும். பாதி வழியில் எப்படியும் திரும்ப வந்து விடுவார்கள். ஆனாலும் ஏன் அப்படிப் போகிறார்கள்? இரைச்சல் தாங்க முடியாமல் தான். உலகில் மிக அதிகமான ஜனநெருக்கடி உள்ள இடம் பேஸ்புக் தான். பேஸ்புக்கை சீரியசாய் எடுத்துக் கொண்டு அதில் மூழ்கும் போது சட்டென வெறுப்பு ஏற்படுகிறது. இதில் வரும் கொண்டாட்டங்கள், அன்புப் பெருக்கு, கோபம் எல்லாம் பொய் எனத் தோன்றுகிறது. ஆனால் இதை தவிர்க்கவோ தள்ளி நிற்கவோ முடியாது. நிஜ உலகில் அதற்கு ஒரு இடம் உள்ளது.

பேஸ்புக்கில் நீங்கள் அமைதியாய் இருக்க ஒரு ஊசிமுனை இடம் கூட கிடையாது. இங்கு இருந்தால் நீங்கள் எதையாவது செய்து கொண்டு, பார்த்துக் கொண்டு, பேசிக் கொண்டு இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் சொற்கள் நம் கழுத்து வரை நிரம்பி நின்று மூச்சு முட்ட செய்கின்றன. டி-ஆக்டிவேட் செய்கிறோம். பேஸ்புக்கை தம் தேவைக்காய் பயன்படுத்துகிறவர்கள் மட்டுமே நிரந்தரமாய் அதில் இருக்கிறார்கள்.

வாசிப்பின் மிக முக்கியமான பயன் அது நமக்கு தனிமையின் அத்தியாவசியத்தை கற்பிக்கிறது என்பதே. பேஸ்புக் நம்மை “தனியாய் போய் விடாதே” என அச்சுறுத்திக் கொண்டே இருக்க, புத்தகங்கள் தனித்திரு என காதில் சொல்கின்றன. இரண்டுக்கும் நடுவே மகிழ்ச்சி இருக்கிறது.
[09/07, 7:46 am] TNPTF MANI: ஏதாவது ஒரு சின்ன கெட்ட பழக்கம் இருப்பது நல்லது. பெரிய கெட்ட பழக்கம் வராமல் இருக்கும்
-ஜெமோ
[10/07, 6:45 am] TNPTF MANI: என்னதான் மனதைக் கட்டவிழ்த்துவிட்டு உட்கார்ந்தாலும் லேசான நிர்பந்தத்தின் நிழல் விழுந்து கொண்டுதானிருக்கிறது
-பாதசாரி
[10/07, 6:50 am] TNPTF MANI: ஒரு வயதான தம்பதி ஓட்டலுக்குள் நுழைந்தனர்;

கணவனுக்கு வயது 85க்கு மேலும்,மனைவிக்கு 80க்கு மேலும் இருக்கலாம்.
ஒரு மேசையின் முன் அமர்ந்தனர்.
பணியாளிடம் இரண்டு இட்லி,ஒரு வடையுடன் இன்னொரு தட்டும் கொண்டு வரச் சொன்னார்கள்.

இட்லி வடையும் காலித்தட்டும் வந்தன.
கணவன் ஒரு இட்லியையும்,வடையில் பாதியையும் காலித்தட்டில் வைத்து, சாம்பார், சட்னியிலும் பாதி ஊற்றி,மனைவி முன் வைத்து விட்டுச் சாப்பிடத்தொடங்கினான்.

அவன் சாப்பிடுவதைப் பார்த்தவாறே மனைவி அமர்ந்திருந்தாள்,அவ்வப்போது தண்ணீரைக் குடித்தவாறு.
ஓட்டலில் இருந்த மற்றவர்கள்,இவர்கள் வசதியற்றவர்கள்,எனவே கொஞ்சமாக வாங்கிப் பகிர்ந்துகொள்கின்றனர் என எண்ணினர்.

ஒரு இளைஞன் அவர்களிடம் வந்து,இன்னொரு தட்டு இட்லி வடை தான் வாங்கித்தருவதாகக் கூற அவர்கள் மறுத்து விட்டனர் ,தாங்கள் எப்போதுமே பகிர்வதே பழக்கம் எனக் கூறி.
கணவன் சாப்பிட்டு முடித்தான்.

கை கழுவப்போனான்.
இளைஞன் மீண்டும் வந்து மனைவியிடம் கேட்டான்”ஏன் நீங்கள் சாப்பிடவேயில்ல?”

அவள் கூறினாள்”பல் செட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்!!”
[10/07, 3:54 pm] TNPTF MANI: அந்தபுரத்துக் காதல் கதை

ஒருநாளில் பலமுறை
அவனுக்கு காதல்
வரும்!- என்போன்றவள் மீது!

அவனுக்கு காதல்வரும்
தருணங்களில், அவன் கை
வசப்படுவாள் - எங்களுள் ஒருத்தி!

அந்த நாள் அந்த நோடி
அவனது காதலுக்கு
கைவசப்பட்டவள் - நான்!

பிறந்ததில் இருந்தே
பெட்டிக்குள் அடைக்காத்ததுபோல்
வளர்ந்தவள்- நான்!

இருப்பிடம்விட்டு வந்ததும்
இல்லை, சென்றவர்களின்
அனுபவம் கேட்டதும் இல்லை!

வெட்கமும் பயமுமாயிருந்த
என்னை சட்டென
தொட்டது, அவன்விரல்!

அடுத்த நோடியில் தொலைந்தது
வெட்கம். அனலாய்
கொதித்தது- என்தேகம்!

அவன்விரல் என்மீதிருந்த
நேரமெல்லாம் உடலில்
பரவியது காதல் தீ !

அந்தவேட்கையில் பற்றி,
நானே எ¡¢வதை
போலொரு உணர்வு!

என்னைபோல் எ¡¢யும்
காதலோ, உணர்ச்சியோ,
துளியுமில்லை அவனிடம்!

அவனுக்கு நான் எத்தனாவது
காதலியோ?. ஒருவேளை
இருந்திருக்கலாம் முதல்காதலியுடன்!

அவன்பு¡¢வது காதலோ,
கடமையோ எனக்கு அவனே
முதல்காதலன் கடைசிவரை!

அலட்சியமாய் சுவாசித்தான்
என்னை, - சுவாசிக்கப்பட்டு
சுவாசித்தேன் அவன்காதலை!

அவன்விரல்கள் எப்போதும்
என்மீதே இருந்தது.
அவனிதழ்கள் அவ்வப்போது!

இதழ்பட்ட நேரங்களில்,என்
அச்சம் மடம் நானமெல்லாம்,
பொறுக்காமல் புகையானது!

இப்படி காதலில் முழ்கிப்பின்
மீண்டபோது மொத்தமாய்
கரைந்திருந்தது என்தேகம்!

அதுவரை அணையாமலிருந்த
காதலை,ஏனோ தொ¢யவில்லை
சட்டென்று அணைத்துவிட்டான்!

அனைத்தது மட்டுமில்லை
அதன்பின் அலட்சியமாய்
விட்டுவிட்டு விடைபெற்றான்!

மாடத்தில் தோழிகளுடன்
மகிழ்ச்சியாய் பொழுதை
கழித்திருந்த என்னை!

அவன் சில நொடி காதலுக்கு
இரையாக்கி பின் என்னை
குப்பையாக்கி சென்றுவிட்டான்!

அதுவரை புனிதமாயிருந்த
காதல், மாறியது
வலியாய் ரணமாய்!

அவனை போன்றோ¡¢ன்
சைக்கிணங்கி அழிவதற்காகவே
படைக்கப்பட்டது எங்கள் இனம்!

அவன் மீண்டும் வருவான்
வேறொருவளை தோடுவான்,
பின்னென்னருகே வீசிடுவான்!

எங்கள்தேகம் அழித்து
வளர்த்த காதலின் புனிதத்தை
என்றாவதொரு நாள், உணர்வான்!

காதல் பு¡¢ந்து
கைவிட்டவன் அந்த காதலாலே
ஒரு நாள் அழிவான்!

அந்த நாள் அவன்தேகமும்
அனலாய் கொதிக்கும்,
எ¡¢யும், புகையும்!

அப்போது அவன் சொல்வான்,
"நான் அவளை
காதலிருத்திருக்க கூடாது" - என்று

இப்படிக்கு,
சற்றுமுன் அடித்து,
அணைத்து, வீசப்பட்ட
ஒரு சிகரெட் !!!!!!!!

- கெ.கார்த்திக் சுப்புராஜ்