Saturday 31 December 2022

janakiraman


January 

"ஜனவ" என்றால் லத்தின் மொழியில் கதவு என்ற பொருள். ஆண்டின் கதவாக இந்த மாதம் அமைந்திருக்கிறது. 

ரோம புராதன நம்பிக்கைகளின் படி, ஜனஸ் எனும் தேவதை அனைத்து வித துவக்கங்களுக்கும், மாற்றங்களுக்கும் காரணமாய் இருக்கிறார். அந்த தேவதையின் பெயரில் ஜனஸ் - ஜனவரி என்று இந்த மாதம் அழைக்கப்படுகிறது. 

இதில் சுவாரசியமான விஷயம், நமது இந்திய மரபிலும், ஸம்ஸ்க்ருதத்திலும் "ஜனனம்" எனும் வார்த்தை இருக்கிறது. ஜனனம் என்றால் பிறப்பு, துவக்கம் என்றே பொருள். அதே ஜனனம் - தொடக்கத்துக்கான கிரேக்க கடவுள் ஜனஸ் எனும் வார்த்தையை வேராக கொண்டிருப்பது சிறப்பு.

-படித்தது

யாத்திரி


சுவாரஸ்யங்கள் தீர்வதில்லை,
அவற்றைப் பகிர்வதற்கான 
ஆர்வங்களே தீர்கின்றன.

-யாத்திரி

ஷான்

மௌனத்தை விடவும்
சிறந்த பதிலைத்
தேடும் முயற்சியில்
நான் இருக்கையில்தான்
என் மௌனத்தை
பதிலாக எண்ணிக் கொண்டு
அடுத்த கேள்வியைக் கேட்கிறீர்கள்.

– ஷான்

சோ


"அரசியல் ஒரு சாக்கடை, அதில் எதுவேண்டுமானாலும் கலக்கலாம்" 

-சோ

Friday 30 December 2022

ரூமி


உன் கண்களை 
வாசிக்க தெரியாதவனுக்கு,
உனது உள்ளத்தைச் 
செவிமடுக்க முடியாது...!! 

-ரூமி

janakiraman


யானை வாழ்க்கை 

நாம ஒரு நாளைக்கு சுமார் மூன்று கிலோ உணவை சாப்பிடுகிறோம், ஆறு லிட்டர் தண்ணீர் குடிக்கிறோம். அவை நாம உயிர் வாழத் தேவையான சக்தியை அளிக்கிறது. ஆனால் நாம சாப்பிடுவதால் சுற்றுச்சூழலுக்கு எந்த பயனுமிருப்பதில்லை. 

ஆனால், ஒரு யானை சாப்பிடுவதால் ஒரு காடே உருவாகிறது. ஒரு யானை, ஒரு நாளைக்கு சராசரியாக 200 - 250 கிலோ உணவு சாப்பிடும். ஏறக்குறைய அதனோட உடல் எடையில இருந்து 5 சதவிகித உணவை ஒரு நாளைக்குச் சாப்பிடும். ஒரு நாளைக்கு ஒரு யானை 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். 

இந்த 250 கிலோ உணவில் 10 சதவிகிதம் (25 கிலோ) பல வித செடி, கொடி, மரங்களின் விதைகள் இருக்கும். யானைகள் மென்று துப்பியது, கழிவின் மூலம் வெளியேறியது, மரத்தை உலுக்குவதன் மூலம் கீழே உதிர்ந்தது என 10 கிலோ விதைகளும் குச்சிகளும் திரும்ப மண்க்குள் விதைக்கப்படுகிறது. இதன் மூலம், சராசரியா ஒரு யானை ஒரு நாளைக்கு 300 - 500 விதைகளை விதைக்கிறது” 

500 விதைகளில் குறைந்தது 100 விதைகளாவது முளைத்துவிடும். இது மிகவும் குறைந்தபட்ச எண்ணிக்கைதான். அப்படியென்றால், ஒரு யானை ஒரு மாதத்திற்கு 3000 மரங்களை நடுகிறது. வருடத்திற்கு 36 ஆயிரத்து ஐநூறு மரங்கள். 

ஒரு யானை 50 வருடங்கள் உயிர்வாழ்ந்தால், தன் வாழ்நாளில் 18 லட்சத்து 25 ஆயிரம் மரங்கள் வளரக் காரணமாகிறது. 

ஒரு யானையால் ஒரு நாளைக்கு 190 கிலோமீட்டர் நடக்க முடியும். சராசரியா ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து மணி நேரத்தில் 30 கிலோமீட்டர் தூரம் யானைகள் நடக்கும். மனிதர்களைவிட 2 மடங்கு வேகத்தில் யானைகள் ஓடும். ஒரு நாளில் இரண்டு மணி நேரம் மட்டும் தூங்கி, ஐந்து மணி நேரம் நடத்து மிச்சமிருக்கும் நேரமெல்லாம் யானைகள் சாப்பிட்டுக்கொண்டே இருக்கும். 

இப்படிப்பட்ட வாழ்க்கையை யானைகள் வாழ்வதால் தான் அதன் மூலம் காடுகளும் அதைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கான பறவைகள், சிறு விலங்குகள், பூச்சிகள் உயிர் வாழ்கின்றன. இதனால், யானை ஓர் மூலாதார உயிரி (keystone species)யாக போற்றப்படுகிறது. 

நமது வாழ்க்கையையும் ஒரு யானை போல மாற்றிக்கொள்ள முடியும். நமது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து நம்பிக்கையையும், ஆறுதலையும் மற்றவர்களுக்கு விதையைப் போல அளிக்கும் போது நாமும் யானையாகிறோம். நாம் செல்லும் பாதையெங்கும் கதிரியக்கம் போல உற்சாகத்தை பரப்பி மற்றவரையும் ஊக்கப்படுத்தலாம். 

யானை எந்தக் காலத்திலும் தான் ஒரு மிகப்பெரிய அரிய பணியை செய்கிறோம் என்றோ, காட்டையே உருவாக்குகிறோம் என்றோ எந்த வித சுய-கர்வமும், பெருமையும் கொள்வதே இல்லை. அது தனது வாழ்வின் இயக்கமாக, எளிமையாக தனது வாழ்வின் வழியே இயற்கையை புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. அதே போல நாமும், நமது சுதர்மமாக நம்பிக்கையை பரப்பி, நம்மிடமிருப்பது பகிர்ந்து பெருமையோ, கர்வமோ, தனி அங்கீகாரமோ கோராமல் வாழமுடியும். அது போன்ற வாழ்க்கை "யானை வாழ்க்கை". 

-janakiraman

2022ல் வாசித்த புத்தகங்கள்


2022ல் வாசித்த புத்தகங்கள்

*காந்தியின் நிழலில்-எஸ்.ரா
*சிறிய உண்மைகள்-எஸ்.ரா
*நேற்றின் நினைவுகள்-எஸ்.ரா
*தன்னைக்கடத்தல்-ஜெமோ
*எழுகதிர்-ஜெமோ
*ஜமீன்களின் கதை-கே.என் சிவராமன்
*இப்போது உயிரோடிக்கிறேன்-இமையம்
*8தடயக் குறிப்புகள்-பாவெல் சக்தி
*விலாஸம்-திருச்செந்தாழை
*இந்தபிரபஞ்சமும் பேபல் நூலகம்தான்-ஆசை
*ஆர் எஸ் எஸ் இந்தியாவுக்கு ஓர் அச்சுறுத்தல்-ஏ ஜி.நூரானி
*சாதி வர்க்கம் விடுதலை-பி.சம்பத்
*இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை- மருதன்
*மழைக்கண்-செந்தில் ஜெகன்நாதன்
*கனகதுர்கா-பாஸ்கர் சக்தி
*மர்ம காரியம்-போகன் சங்கர்
*தலைப்பில்லாதவை-யுவன் சந்திரசேகர்
*சர்வதேச திரைப்படங்கள்-சுரேஷ் கண்ணன்
*நூலேணி-நாகா
*கவிதையின் அந்தரங்கள்-க.வை பழனிசாமி
*தமிழ் மண்ணே வணக்கம்-ஞானவேல்
*மேய்ப்பவர்கள்-பவா செல்லதுரை
*அந்நியமாதல்-எஸ் வி.ஆர்
*இலக்கியம், மார்க்சியம், தலித்தியம்
*தத்துவத்தின் வரலாறு-ஆலன் உட்ஸ்

*என் வாழ்வில் புத்தகங்கள்-பாவண்ணன்
*அந்த நாட்களில் மழை அதிகம்- அஜயன் பாலா
*நேர்பட பேசு
*நட்ட கல்லை தெய்வமென்று-கரு. ஆறுமுகத்தமிழன்
*காந்தியை சுமப்பவர்கள்-சுனில் கிருஷ்ணன்
*நாம் ஏன் அடிமை ஆனோம்
*யானைகளும் அரசர்களும்
*இலக்கியத்தில் மேலாண்மை
*சமுக நீதிக்கான அறப்போர்-பி.எஸ். கிருஷ்ணன்
*கடவுளுக்கு வேலை செய்பவர்-அ.மு
*உருமாற்றம்-காஃப்கா
*மார்க்சியம் பயில்வோம்-முத்துமோகன்
*உங்கள் குழந்தை யாருடையது-ஜெயராணி
*கல்விக்கூடத்திலிருந்து விடுபடும் சமுதாயம்-இவான் இல்லிச்
*வாழ்விற்கு உதவும் அறிவு-ஜே.கே
*கற்க கற்பிக்க-வசீலி சுகம்லீன்ஸ்கி
*ராஜராஜன் சிம்மாசனம்-நிவந்திகா
*இடைவேளை-சுப.வீ
*நிராயுதபாணியின் ஆயுதங்கள்-ஜெயந்தன்
*தெய்வங்கள் முளைக்கும் நிலம்- அ.கா.பெருமாள்
*அசோகமித்திரன் குறுநாவல்கள்
*நிகழ்முகம்-வெண்ணிலா
*ராஜேந்திர சோழன் சிறுகதைகள்
*பி.ராமமூர்த்தி வாழ்க்கைப் பயணம்
*நூறு பேர்-மைக்கேல் ஹெச் ஹார்ட்

*மஞ்சள் நிற பைத்தியங்கள்-செந்தில்குமார்
*பாதை சரியாக இருந்தால்-ஓஷோ
*கல்லும் கனியாகும்-ஓஷோ
*பூ மழை தூவி-ஓஷோ
*ஓம்சாந்தி சாந்தி சாந்தி-ஓஷோ
*அன்பெனும் தோட்டத்திலே-ஓஷோ
*தாவோ ஒரு தங்கக்கதவு-ஓஷோ
*சொல்லி முடியாதவை-ஜெயமோகன்
*நிலவளம் -நட்ஹாம்சன்
*புத்த ஜாதக கதை- வேங்கடசாமி
*வேங்கடசாமி ஆய்வு கட்டுரைகள்
*ஓடும் நதியின் ஓசை-மறுவாசிப்பு
*இலக்கியத்தில் மேலாண்மை-இறையன்பு
*உமா மகேஸ்வரி கதைகள்
*நாம் ஏன் அடிமை ஆனோம்-இறையன்பு
*கோ.கேசவன் மூன்று தொகுப்புகள்
*ஆர்.எஸ்.எஸ்-ஏ.ஜி நூரானி
*சொல்லி முடியாதவை-ஜெமோ
*ஓடும் நதியின் ஓசை-இறையன்பு
*நிலவளம்-நட் ஹம்சன்
*புத்த ஜாதக கதைகள்-மயிலை சீனி வேங்கடசாமி நாட்டார்
*ஆய்வுக்கட்டுரைகள்-மயிலை சீனி
*ஒரே ஒரு நாள்-வண்ணநிலவன்
*அருவ ஜீவிகள்- அ.பாக்கியம்
*பெரியாரியம் சமுதாயம்-வீரமணி

*நிலமும் பொழுதும்-நிர்மல்
*குன்றா வளம்
*காணாமல் போன தேசங்கள்
*என்ன ஒளிந்திருக்கிறது அங்கே?
*தோன்றிதென் சிந்தனைக்கே
*மண்ணுக்கேற்ற மார்க்சியம்-அருணன்
*மும்மூர்த்திகள்-சரவண கார்த்திகேயன்
*நாட்டு விலங்குகள்-கோவை சதாசிவம்

#பல்வேறு பரபரப்புகளுக்கிடையே வாசித்தவை.இது போல நூலகத்தில் எடுக்கும் 32 அட்டைகளுக்கான புத்தகக்கள் இல்லை. இன்னும் வாசிக்காத புத்தகங்கள் அடுத்த ஆண்டில் வாசிக்க வேண்டுமென்பதே இலட்சியம்

தோழமையுடன் மணிகண்ட பிரபு

லதாமகன்


எதையோ இழந்ததிலிருந்து நம்மை மீட்டெடுக்க எதையோ நாம் வரித்துக்கொள்கிறோம். பின்பு அதுவும் ஒரு யட்சியாகி நம்மை ஆட்கொள்கிறது. அங்கிருந்து வெளியேறுதல் இயலாத ஒரு காலத்தை அடைந்தபின் அதிலிருந்து மீட்டெடுக்க இன்னொரு மயக்கி தேவைப்படுகிறது.

 வாழ்வென்பது மயக்கிகளிலிருந்து மயக்கிகளால் மயக்கிகளை நோக்கி நகரும் பெரும் இயக்கம்

-லதாமகன்

சுந்தர ராமசாமி


விளையாட்டுகளில் தோல்வி என்பது தோல்வியுமல்ல; வெற்றி என்பது வெற்றியுமல்ல: விளையாட்டே ஒரு வெற்றி! தீவிரமாக, ஆத்மார்த்தமாகத் தன்னை மறந்து விளையாட வேண்டும்

-சுந்தர ராமசாமி

Thursday 29 December 2022

janakiraman


பறவையின் பாடங்கள்  

நாரைகள், பெருந்தாரா எனப்படும் ஒருவகை வாத்துகள் வருடத்தின் குறிப்பிட்ட ஒவ்வொரு பருவத்திலும் தொடர்ந்து 5,000 கிலோ மீட்டர்கள் வரை பறந்து வலசை போகின்றன. நாரைகள், இப்படிப் பறந்து செல்லும் போது, மணிக்கு சராசரியாக 65 கிலோமீட்டர்கள் வேகத்தில் பறக்கும், காற்று சாதகமாக அமைந்தால், மணிக்கு 110 கிலோமீட்டர்கள் கூட பறக்கும். 30,000 அடிக்கும் மேல், காற்றில் ஆக்ஸிஜன் அளவு குறைவாகவும், - 50 டிகிரி குளிரிலும் இருக்கும் இமயமலை மலைகளின் மேல் கூட அன்சர் இன்டிகஸ் எனும் நாரைகள் பறந்து செல்லும் சக்தியுடையவை. 

இப்படி வலைசை போதல், அவைகள் உயிர்வாழ மிக முக்கியமானது. பருவகாலத்துக்கு ஏற்ப, வேறிடத்துக்கு புலம் பெயர்ந்தால் தான் அவைகளால் முட்டையிட்டு, குஞ்சு பொறிக்கமுடியும். மனிதர்களின் வாழ்விலும், ஒரே இடத்தில் தேங்கி நின்றுவிடாமல், சூழலுக்கு தகுந்தார்போல, நாம் எங்கு வளர முடியுமோ அங்கு செல்லுதல் தகவமைத்து உயிர்வாழ்வதற்கு அவசியமாகிறது. 

இப்பறவைகள் கூட்டம் கூட்டமாக பறந்து செல்லும் குணமுடையவை. அவற்றின் பறக்கும் பழக்கத்திலிருந்து நம் வாழ்க்கைக்குத் தேவையான மிக முக்கியமான படிப்பினைகளை அறிந்துகொள்ள முடியும்.

1. ஒவ்வொரு பறவையும் அதன் சிறகுகளை மடக்கி பறக்கும் போது, அது  பின்தொடரும் பறவைகளை உயர்த்துகிறது. எல்லாப் பறவைகளும் ஒரு "V" வடிவத்தில் பறப்பதன் மூலம், ஒரு பறவை தனியாக பறப்பதை விட 71% அதிக பறக்கும் சக்தியை பெறுகிறது. 

இதன் மூலம் ஒரு செயலில் நாம் மட்டும் தனியாக ஈடுபடுவதை விட, அணியாக சேர்ந்து செயல்படும் போது நமது நோக்கத்தை எளிதில் அடையமுடியும் என கற்கலாம்.

2. ஒரு பறவை அதன் கூட்டத்தில் இருந்து வெளியே சென்றுவிடும் போதெல்லாம், அது தனியாக பறப்பதில் இருக்கும் சிரமத்தையும் ஆபத்தையும் காற்றின் இழுவை மற்றும் எதிர்ப்பின் மூலம் உணர்கிறது, உடனடியாக மற்ற பறவைகளின் "தூக்கும் சக்தியை" பயன்படுத்திக் கொள்ள விரைவாக மீண்டும் தமது பறவைக் கூட்டத்தில் இணைந்துவிடுவதை காணமுடியும். 

எளிய வாத்துக்கு இருக்கும் அளவுக்காவது நமக்கு அறிவு இருக்குமானால், நாம் எங்கு செல்ல விரும்புகிறோமோ, அதே நோக்கத்தில் இருப்பவர்களுடன் இணைந்து இருப்போம் மற்றும் அவர்களின் உதவியை ஏற்றுக்கொள்வதற்கும் மற்றவர்களுக்கும் நம்முடையதை வழங்குவதற்கும் தயாராக இருப்போம்.

3. பறவைக் கூட்டத்தில் தலைவர் பறவை, தொண்டர் பறவை என்று எதுவும் இருப்பதில்லை. முதலில் பறக்கும் வாத்து சோர்வடையும் போது, அது பின்வாங்கி, பின்னால் சென்றுவிடும். முன்னிலையில் பறக்க, மற்றொரு பறவை தானாக வந்து, கூட்டத்தை வழிநடத்தும். இந்த சுழற்சியின் மூலம் எல்லா பறவைகளும் தமக்கான பொறுப்பை தமக்குள் பகிர்ந்துகொள்கின்றன. 

நாமும் கடினமான பணிகளில் அணியாக ஈடுபடும் போது, ஒருவரிடமே எல்லாப் பொறுப்புகளையும் சுமத்திவிடாமல், வழிநடத்தும் பொறுப்பை சுழற்சிமுறையில் எடுத்துக்கொள்ளும் போது அனைவரின் தலைமைத்துவ திறனும் உயரும். பணியும் சிறக்கும்

4. பறவைக் கூட்டத்தில் முன்னால் காற்றைக் கிழித்து செல்லும் பறவைகளை, உற்சாகப்படுத்த.  அதன்  வேகத்தை ஊக்குவிக்க, பின்னால் இருக்கும் பறவைகள் தொடர்ந்து ஓசை  எழுப்புவதை பார்த்திருப்போம். 

அணியாக செயல்படும் போது, அணி உறுப்பினர்கள், அணிக்கு பங்களிப்பவர்களை தொடர்ந்து பாராட்டி, உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தவேண்டும். அதன் மூலம் அணியாக செயல்படுவது மகிழ்வாகவும், சிறப்பாகவும் அமையும். 

5. பறவைக் கூட்டத்தில் எதாவது ஒரு பறவை நோய்வாய்ப்பட்டாலோ அல்லது காயப்பட்டாலோ அந்த பறவையுடன் வேறு இரண்டு பறவைகள் கூட்டத்தை விட்டு வெளியேறி, நோயுற்ற பறவைக்கு உதவி செய்து பாதுகாக்கின்றன. அது மீண்டும் பறக்கும் வரை அல்லது இறக்கும் வரை அவை அதனுடன் இருக்கும். பின்னர் அந்த இரண்டு பறவைகள்  வேறு பறவைக் கூட்டத்துடன் சேரும் அல்லது, தனது பழைய கூட்டத்தை வேகமாக பறந்து இணையும். 

பறவைகளைப் போன்ற  உணர்வு நமக்கும் இருந்தால், நம்மில் சிலர் கடினமான நேரத்தால் அவதியுறும் போது,  நாம் அவர்களுக்கு துணையாய் நிற்போம். நமது பணி தற்காலிகமாக தடைப்பட்டாலும் உதவி தேவைப்படுபவருக்காக நமது ஆதரவை அளிப்பது மொத்த அணியையே வலுப்படுத்தும்.

பறவையைக் கண்டு விமானத்தை படைத்தது பெரிய சாதனை இல்லை. பறவையின் இயல்பிலிருந்து கற்று, மனிதத்தை மேம்படுத்துவது தான் பெருஞ்சாதனை.

-janakiraman

படித்தது


எப்போதாவது ஒரு முறையேனும் நமக்கு பயன் உணர்வு கலக்காத செயல்களை நாம் செய்கிறோம். அதற்கு தனி மேன்மை உண்டு.

"சட்டத்தை மீறவும்,வதைகளை அனுபவிக்கவும் முற்படுவது எதற்காக என்ற கேள்விக்கு 'ஆத்மதிருப்திக்காக' என்றார் காந்தி 

-படித்தது

Tuesday 27 December 2022

janakiraman


அறமும் - வாலறிவும்

திருக்குறளின் முதல் அதிகாரத்தின் இரண்டாவது குறளான “கற்றதனால் ஆய பயனென் கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்” என்னை கவ்விக்கொண்டது. இந்தக் குறள், கற்றலின் பயன் பற்றிக் கூறுகிறது. ஆனால் இது கல்வி என்ற அதிகாரத்திலோ, அறிவுடைமை என்ற அதிகாரத்திலோ, அறிவு தொடர்பான கேள்வி, கல்லாமை போன்ற அதிகாரங்களிலோ இடம்பெறாமல், முதல் அதிகாரத்திலேயே இடம்பெற்றது ஏனென்ற கேள்வி ஏற்படுகிறது. அறத்துப்பாலில் கற்றல் ஏன் வருகிறது என்றும் யோசிக்க ஆரம்பித்தேன். இந்தக் குறளை படித்த பிறகு, அந்த நாள் முழுக்க இதே குறள் தான் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. 

இந்தக்குறளில் வரும் “வாலறிவன்” என்ற வார்த்தைக்கு மிக ஆழமான பொருள் இருப்பதாக பலர் சொல்லியிருக்கிறார்கள்.  திருக்குறளுக்கு விளக்கமளித்த அறிஞர்கள், வாலறிவு என்பதை, தூய அறிவு, உண்மையறிவு, இறையறிவு என்றெல்லாம் விளக்கமளித்திருக்கிறார்கள். ஆனால் அவற்றைத் தாண்டி வேறெதோ ஒன்று இந்த சொல்லில் இருக்கிறது.

பொதுவாக அறிவு மூன்று வகைகளில் அமையும். ஒன்று, அறிவியல் கண்டுபிடிப்புகளால் நாம் அறியும் "தொழில்நுட்ப அறிவு", இரண்டு, தலைமுறை தலைமுறையாக நமக்கு நமது முன்னோர்களின் மூலம் கடத்தப்பட்டு வரும் "வாழ்க்கையறிவு/இயற்கையறிவு" . மூன்றாவது நாம் சொந்தமாக படித்தும், அனுபவித்தும் அறிந்துகொள்ளும் "சுய அறிவு". 

அறிவு என்பது தொடர்ந்து தொகுக்கப்பட்டு, வளர்ந்து செல்லக்கூடிய இயல்புடையது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் நமக்குள், நாமிருக்கும் சுற்றுச்சூழலில் இருந்து புதிய புதிய செய்திகள், தகவல்கள் கொட்டிக்கொண்டே இருக்கின்றன. அவற்றை சரியாக ஒழுங்குபடுத்தும் போது அறிவாக மாறுகிறது. அதே சமயம், மனிதருக்கு அறிவு ஒரு சுமை. அறிவு விரிவடைய விரிவடைய நமது உணர்வுகள் மரத்துப்போகின்றன. அனைத்தையும் நமது அறிவு கொண்டு அளவிட, மதிப்பிட, ஒப்புமைப்படுத்த ஆரம்பித்துவிடுகிறோம். 

தகவல்களை சேகரிப்பது அறிவைத் தருவது போலவே, தகவல்களை நீக்கிக்கொண்டே செல்வது ஞானத்தை தருகிறது. ஞானம் என்பது நமக்குள் இருக்கும் அறிவை நீக்கிக்கொண்டே வருவதால் கிடைப்பது. “அறு + அம்”  என்பதே அறம் என்ற சொல்லாக மாறுகிறது. அறு என்றால், நீக்குதல், வெட்டுதல், பிரித்தல் என்று பொருள். மனிதவாழ்வில் நாம் முக்கியம் எனக்கருதுபவற்றை அறுத்து நீக்கிய பிறகு எஞ்சியிருப்பதே அறமாகிறது. அதுவே ஞானத்தை நோக்கிய குறைந்தபட்ச வாழ்க்கை நெறி.

அதே போல, வால் என்பதற்கு எஞ்சியிருப்பது என்ற ஒரு பொருள் உள்ளது. விலங்குகளின் வால், எஞ்சியிருக்கும் உறுப்பு. அனைத்தையும் நீக்கிய பிறகு எஞ்சியிருப்பதே வாலாகிறது. ஆதி சங்கரர், இறைவன் எவரென வரையறுக்கும் போது “நேதி நேதி” என்று கூறுகிறார். நேதி நேதி என்றால், “இதுவல்ல-இதுவல்ல” என்பதாகும். நாம் சட்டை அணிந்திருக்கிறோம், ஆனால் நாம் அந்த சட்டையல்ல என்றும் உணர்கிறோம் அல்லவா? அதைப் போலவே அடுத்தடுத்து நான் என்பது இதுவல்ல  இதுவல்ல என கழித்துக்கொண்டே வரவேண்டும். நமக்கு உடல் இருக்கிறது, ஆனால் நாம் உடல் அல்ல. நமக்கு மனம், புத்தி இருக்கின்றன, ஆனால் அவைகளும் நாம் அல்ல. மனத்தில் கிளம்பும் எண்ணங்கள் இருக்கின்றன. யோசித்துப் பார்த்தால் அந்த எண்ணங்களும் நாம் அல்ல. அடுத்து, நமக்குத் தோன்றும் எதையும் நாம் பார்க்கிறோம், கேட்கிறோம், உணர்கிறோம். அவைகளும் நாம் அல்ல என்று நீக்கி விட்டால், இறுதியில் எஞ்சி இருப்பது என ஒன்றிருக்கும்.  அதுவே இறைமை. வாலறிவு என்பதும் அதையே குறிக்கிறது. 

நமக்குள் குப்பையாக குவிந்திருக்கும் அனைத்து தகவல்களையும் தொடர்ந்து நீக்கிக்கொண்டே வந்து கடைசியில் எஞ்சியிருப்பதே வாலறிவு. அதுவே அனைவருக்கும் பொதுவான ஓர் பரம் பொருள். 

இந்தக்குறளில் கையாளப்படும் இன்னொரு சொல் “தொழுதல்”. தொழுதல் என்றால் வணங்குதல் என்ற அர்த்தம் இல்லை. "தொழு" என்பதற்கு "இணைந்த", "சேர்ந்திருக்கும்" என்று அர்த்தம். வீட்டோடு இணைந்த பகுதியை "தொழுவம்" எனக் கூறுவோம்.

இப்போது குறளின் விளக்கத்தை, நாம் இப்படி புரிந்துகொள்ளலாம். "கற்றதனால் ஆய பயனென் கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்” - நாம் கற்ற அனைத்தையும் விட்டொழித்துக்கொண்டே வந்து, இறுதி உண்மையாக எஞ்சி நிற்கும் பகுக்கமுடியாத, தூய அறிவோடு இணைந்திருக்க முடியவில்லை என்றால், கற்றதனால் ஆகச் சிறந்த பயன் தான் என்ன?

அறிவதை அழிப்பதே கற்றலின் நோக்கம் என்றும் எடுத்துக் கொள்ளலாம். அதுவே அறம்.  

இனிய நற்காலை 🌸

Monday 26 December 2022

janakiraman


வலியிலிருந்து வலிமைக்கு… 

இங்கிலாந்து ஒரு தீவு. அதனைச் சுற்றியிருக்கும் மொத்த கடற்பரப்பின் நீளம் சுமார் 2885 கி.மீ. 2018ம் வருடம், ரோஸ் எட்க்லே (Ross Edgley) என்பவர் இங்கிலாந்தை சுற்றியிருக்கும் மொத்த கடற்பரப்பையும் நீந்திக் கடப்பது என்று முடிவெடுத்தார். அது சாதாரண விஷயம் இல்லை. இது வரை அதனை யாரும் செய்ததுமில்லை. அவர் இந்த மிகக் கடினமான முடிவை எடுத்த போது, உலகின் பல விளையாட்டுத்துறை நிபுணர்கள், ரோஸ் எட்க்ளேவின் உடல்வாகு நீச்சலுக்கு உகந்தது இல்லை. அவரது தலை பெரிதாக இருக்கு, உடலில் கொழுப்பு சத்தின் விகிதம் அதிகமாக உள்ளது. அவரால் இந்த சவாலை ஜெயிக்கமுடியாது என்று கூறினார்கள். 

ஆனால், ரோஸ், தனது மனம் சொல்வதைக் கேட்டார்.  இந்த மொத்த தூரத்தையும் 157 நாட்கள், தினமும் சுமார் 8 முதல் 10 மணி நேரம் நீந்தி, 37 முறை ஜெல்லி மீன்களின் கடிகளால் பாதிக்கப்பட்டு, 25 லட்சம் நீச்சல் ஸ்ட்ரோக்குகளுடன் கடலுக்குள்ளேயே ஒரு படகில் அவ்வப்போது ஓய்வெடுத்து, நீந்திக் கடந்திருக்கிறார். இந்த நீச்சல் பயணம், வலி நிறைந்த ஒன்று தான். உடலும், மனமும் எந்தத் தருணத்திலும் சோர்வடைந்து விடும். ஆனால், வலியை ஏற்றுக்கொள்ளும் போது தான் வலிமை பிறக்கிறது. 

கென்யாவில் "களஞ்ஜின்" என்ற ஒரு ஆதிவாசியினம் வசிக்கிறது. உலகின் அதி சிறந்த ஓட்டப்பந்தய வீரர்கள் இந்த ஆதிவாசியினத்தில் இருந்து தான் வந்திருக்கின்றனர். இது வரை வரலாற்றில் மொத்தம் 17 அமெரிக்கர்கள் மட்டுமே மராத்தான் ஓட்டத்தை இரண்டு மணி நேரம் பத்து நிமிடத்துக்குள் ஓடிக்கடந்திருக்கிறார்கள். ஆனால், 2011ம் வருடம் அக்டோபர் மாதம் மட்டுமே 32 களஞ்ஜின் இன வீரர்கள், மாரத்தான் ஓட்டத்தை இரண்டு மணி நேரம் பத்து நிமிடத்துக்குள் ஓடியிருக்கிறார்கள்.

ஒரு களஞ்ஜின் வீரர் ஒலிம்பிக் மாரத்தான் ஓட்டத்துக்கு இரண்டு நாள் முன்பு, சிறுநீரகத் தொற்று ஏற்பட்டு அவதிபட்டார். அவர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ளக்கூடாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர். ஆனால் அவர், பிடிவாதமாக மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்டு, கடுமையான வலியுடன் ஓடி, முதல் பரிசையும் வென்றார். வாழ்க்கை முழுவதும் வலியை ஏற்றுக்கொண்டு அதன்மூலம் மூலமாக வலியை வெல்வதை கலாச்சாரமாகவே களஞ்ஜின் இனத்தினர் பின்பற்றி வருகின்றனர். 

ஜப்பானின் "தெந்தாய்" புத்த பிரிவில் ஒருவர் குருவாக வேண்டுமென்றால், அவர் "கெய்ஹோஜியோ" எனும் சடங்கை மேற்கொள்ளவேண்டும். கடப்பதற்கு கடினமான, "ஹயி மலை"யை 7 ஆண்டுகளில், 1000 நாட்கள் குறிப்பிட்ட முறையில் சுற்றி வந்தால் அவர் அந்த சடங்கை நிறைவு செய்தவராக கருதப்படுவார். 

அந்த மலைப்பாதை மிகக் கடுமையானது.  கடந்த 150 ஆண்டுகளில் வெறும் 46 பேர் மட்டுமே வெற்றிகரமாக இந்த மலைப்பாதை பயணத்தை முடித்திருக்கின்றனர். சடங்கினை தொடங்கிய முதல் 100 நாட்களுக்குள் நாம் விருப்பப்பட்டால் இந்த சடங்கில் இருந்து பின்வாங்கி விடலாம். ஆனால் 100வது நாளுக்குப் பிறகு ஒன்று நாம் மிச்சம் 900 நாட்களையும் கடக்கவேண்டும் அல்லது, நமது உயிரை மாய்த்துக்கொள்ளவேண்டும் என்ற மரபு பின்பற்றப்படுகிறது. பயணத்தின் போது போதுமான உணவு கிடைக்காது. பேசி பழக நண்பர்களோ, குடும்பமோ இருக்காது. பாதை எளிதானதாகவும் இருப்பதில்லை. ஆனாலும் வலியைக் கடக்கும் போது தான் மெய்ஞான வலிமை ஏற்படும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

நம் வாழ்விலும், எந்த தருணங்களெல்லாம் வலி நிறைந்தவையாக, மனதை துவண்டுவிடச் செய்தவையாக இருந்தனவோ அவையே நம்மை பின்நாளில் வலிமையடைய செய்திருக்கும். "வலிமை" என்ற சொல்லுக்குள் "வலி" இருக்கிறது. ஆகவே, "வலி" இல்லாமல் "வலிமை" இல்லை. 

-janakiraman

சேரவஞ்சி


பூரண குணமடைதல் 
என்பது 
உடல் தேறிவிட்டது 
என்று 
மனம் நம்பும்போது நிகழ்வது.

-பிரபாகரன் சேரவஞ்சி

நேசமித்ரன்


உறக்கத்தில் சாகிறவனுக்கு
என்ன பெரிய துக்கம் 
இருக்க முடியும்?
சொல்லிக் கொள்ளாமல்
போகிறோம் என்பதை தவிர...!!

-நேசமித்ரன்

Sunday 25 December 2022

யாத்திரி


பேச ஒன்றுமில்லை என்றானபின், தொடரவும் முடியாமல் முடிக்கவும் தெரியாமல் எதிரெதிர் முனைகளில் நீளும் மௌனத்தின் அடர்த்தி மூச்சுமுட்டும்

-யாத்திரி

ஜெயமோகன்


எவ்வளவு சொன்னாலும் சொல்லாமல் விடப்பட்டது தான் அகம்

-ஜெயமோகன்

பேயும் தெய்வமும்-janakiraman


பேயும் தெய்வமும்

“பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்”

இது மகாகவி பாரதியின் மிக முக்கிய கவிதைகளின் ஒன்று. இந்தக் கவிதையில் மனதை "பேய்" என்கிறார். தமிழில் “பே” எனும் ஒற்றை எழுத்துக்கு, அச்சுருத்தக்கூடியது, அருவெறுப்பானது என்ற அர்த்தமுள்ளது. அச்சுருத்தக்கூடிய ஒன்றை, பேய் என அழைக்கிறோம். 

இன்னொறு பரிமாணத்தில் பேயின் குணங்களாக பொது சமூகம் தொடர்ந்து சிலவற்றை கூறி வருகிறது. எதிலும் திருப்தியடையாத, ஒன்றிலிருந்து வேறொன்றிக்கு தாவக்கூடிய, நமது தெளிவை அழித்து நோய்மையில் தள்ளக்கூடிய, காரணமே இல்லாமல் பேராசை, வெறுப்பு, கோபம், விரக்தி ஆகியற்றை கொண்டிருப்பவைகளை, பேய் என்கிறோம். நமது மனமும் அறிவு சொல்வதைக் கேட்காமல் அதன் போக்கில், கட்டுபாடில்லாமல் இயங்கும் போது அது பேயாகிறது. 

இந்த கவிதையில் "உழலுதல்" எனும் வார்த்தையும் முக்கியம். உழலுதல் என்றால், அலைதல்; சுற்றித்திரிதல்; நிலைகெடுதல் என்று அர்த்தம். எந்த முன்னேற்றமும் இல்லாமல் பேராசை, கோபம், வெறுப்பு, விரக்தி ஆகியவற்றை சுமந்துகொண்டு சும்மா சுற்றித்திரியும் சிறுமை கொண்ட மனம் நம்முடையது என்கிறார் பாரதி. 

மனப்பேய் பற்றி கண்ணதாசன் கூறும் போது, "காரணம் இல்லாமல் கற்பனைகளை வளர்த்துக் கொண்டு கலங்குகிறது. நடந்துபோன காலங்களுக்காக அழுகிறது. நடக்கப்போகும் எதிர்காலத்தைக் கண்டு அஞ்சுகிறது. அடுத்தவர்களுக்கு ஆறுதல் சொல்ல முனைந்து நிற்கிறது. அந்த ஆறுதல் தனக்கே தேவைப்படும்போது சக்தியற்றுப் போய் விடுகிறது" என்கிறார். 

பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரு செல்போன் வாங்கியிருப்போம். பதினைந்தாயிரத்தில் இன்னும் நல்ல மாடல் இருந்தா, அதை வாங்கலாமோ என மனம் அலைபாயும். அது கிடைத்ததும், அடுத்து 25,000, ஒரு லட்சம் என்று நமது செல்போன் ஆசையின் அளவு அதிகமாகிக்கொண்டே செல்லும். இதே போலத் தான், வீடு, சொத்து, தங்கம், வாகனங்கள், ஆடை என அனைத்திலும் ஒரு நிறைவு இல்லாமல் அடுத்தடுத்து என எப்போதும் மற்றவரிடம் இருப்பதைப் பார்த்து பேராசை கொண்டு, வாழும் நாட்களை நிம்மதி இல்லாமல் செய்துவிடுகிறது பேய் மனம். 

ஜப்பானிய ஜென் மார்கம் இதனை, "Wandering Mind" என்று குறிப்பிடுகிறது. சீடன் ஒருவன் குருவிடம், ஒரு கொடியைக் காண்பித்து, "குருவே, அங்கு காற்று அசைகிறதா, அல்லது கொடி அசைகிறதா?" என்று கேட்கிறான். குரு, "இரண்டுமில்லை, உனது மனம் தான் அசைகிறது" என்கிறார். மனம் தான் அனைத்தையும் கற்பனை செய்துகொள்கிறது, பார்க்கின்றவற்றை பற்றி, எந்த தீர்ப்பும் எழுதாமல், வெறுமனே பார்வையாளராக இருக்கும் அசைவற்ற மனமே, விழிப்புணர்வின் விதையாய் இருக்கும்.  

இந்த உழலுதலை நிறுத்த அறிவு செயல்பட வேண்டும். அதையே தான் பாரதியும் “நினது தலைவன் யானே காண்”. என்கிறார். அந்தத் தலைவன், நமக்குள் இருக்கும் ஆன்மா அல்லது அறிவாக இருக்கலாம். பேய் மனது தனது இயல்பு இல்லை என அதனை தன்னிலிருந்து வேறுபடுத்தி, அதனை கட்டுப்படுத்தும் அறிவே "நான்" என்று அறிவது மிக முக்கியம்.

"பேயாய் உழலும் சிறு மனமே" என்று கூறிய அதே பாரதி தான், "தெய்வம் நீ என்று உணர்" என்றும் கூறுகிறார். நாம் பேயா, தெய்வமா எனத் தீர்மானிப்பது நம்மிடமே இருக்கிறது.

-janakiraman

“பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்”

இது மகாகவி பாரதியின் மிக முக்கிய கவிதைகளின் ஒன்று. இந்தக் கவிதையில் மனதை "பேய்" என்கிறார். தமிழில் “பே” எனும் ஒற்றை எழுத்துக்கு, அச்சுருத்தக்கூடியது, அருவெறுப்பானது என்ற அர்த்தமுள்ளது. அச்சுருத்தக்கூடிய ஒன்றை, பேய் என அழைக்கிறோம். 

இன்னொறு பரிமாணத்தில் பேயின் குணங்களாக பொது சமூகம் தொடர்ந்து சிலவற்றை கூறி வருகிறது. எதிலும் திருப்தியடையாத, ஒன்றிலிருந்து வேறொன்றிக்கு தாவக்கூடிய, நமது தெளிவை அழித்து நோய்மையில் தள்ளக்கூடிய, காரணமே இல்லாமல் பேராசை, வெறுப்பு, கோபம், விரக்தி ஆகியற்றை கொண்டிருப்பவைகளை, பேய் என்கிறோம். நமது மனமும் அறிவு சொல்வதைக் கேட்காமல் அதன் போக்கில், கட்டுபாடில்லாமல் இயங்கும் போது அது பேயாகிறது. 

இந்த கவிதையில் "உழலுதல்" எனும் வார்த்தையும் முக்கியம். உழலுதல் என்றால், அலைதல்; சுற்றித்திரிதல்; நிலைகெடுதல் என்று அர்த்தம். எந்த முன்னேற்றமும் இல்லாமல் பேராசை, கோபம், வெறுப்பு, விரக்தி ஆகியவற்றை சுமந்துகொண்டு சும்மா சுற்றித்திரியும் சிறுமை கொண்ட மனம் நம்முடையது என்கிறார் பாரதி. 

மனப்பேய் பற்றி கண்ணதாசன் கூறும் போது, "காரணம் இல்லாமல் கற்பனைகளை வளர்த்துக் கொண்டு கலங்குகிறது. நடந்துபோன காலங்களுக்காக அழுகிறது. நடக்கப்போகும் எதிர்காலத்தைக் கண்டு அஞ்சுகிறது. அடுத்தவர்களுக்கு ஆறுதல் சொல்ல முனைந்து நிற்கிறது. அந்த ஆறுதல் தனக்கே தேவைப்படும்போது சக்தியற்றுப் போய் விடுகிறது" என்கிறார். 

பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரு செல்போன் வாங்கியிருப்போம். பதினைந்தாயிரத்தில் இன்னும் நல்ல மாடல் இருந்தா, அதை வாங்கலாமோ என மனம் அலைபாயும். அது கிடைத்ததும், அடுத்து 25,000, ஒரு லட்சம் என்று நமது செல்போன் ஆசையின் அளவு அதிகமாகிக்கொண்டே செல்லும். இதே போலத் தான், வீடு, சொத்து, தங்கம், வாகனங்கள், ஆடை என அனைத்திலும் ஒரு நிறைவு இல்லாமல் அடுத்தடுத்து என எப்போதும் மற்றவரிடம் இருப்பதைப் பார்த்து பேராசை கொண்டு, வாழும் நாட்களை நிம்மதி இல்லாமல் செய்துவிடுகிறது பேய் மனம். 

ஜப்பானிய ஜென் மார்கம் இதனை, "Wandering Mind" என்று குறிப்பிடுகிறது. சீடன் ஒருவன் குருவிடம், ஒரு கொடியைக் காண்பித்து, "குருவே, அங்கு காற்று அசைகிறதா, அல்லது கொடி அசைகிறதா?" என்று கேட்கிறான். குரு, "இரண்டுமில்லை, உனது மனம் தான் அசைகிறது" என்கிறார். மனம் தான் அனைத்தையும் கற்பனை செய்துகொள்கிறது, பார்க்கின்றவற்றை பற்றி, எந்த தீர்ப்பும் எழுதாமல், வெறுமனே பார்வையாளராக இருக்கும் அசைவற்ற மனமே, விழிப்புணர்வின் விதையாய் இருக்கும்.  

இந்த உழலுதலை நிறுத்த அறிவு செயல்பட வேண்டும். அதையே தான் பாரதியும் “நினது தலைவன் யானே காண்”. என்கிறார். அந்தத் தலைவன், நமக்குள் இருக்கும் ஆன்மா அல்லது அறிவாக இருக்கலாம். பேய் மனது தனது இயல்பு இல்லை என அதனை தன்னிலிருந்து வேறுபடுத்தி, அதனை கட்டுப்படுத்தும் அறிவே "நான்" என்று அறிவது மிக முக்கியம்.

"பேயாய் உழலும் சிறு மனமே" என்று கூறிய அதே பாரதி தான், "தெய்வம் நீ என்று உணர்" என்றும் கூறுகிறார். நாம் பேயா, தெய்வமா எனத் தீர்மானிப்பது நம்மிடமே இருக்கிறது.

-janakiraman

பிச்சைக்காரன்


இயேசு நாதர் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது யாரோ தன்னை தொடுவதை உணர்ந்து திரும்பி பார்த்தார். ஒரு பெண். பயங்கர நோயாளி. அவர் அங்கியின் நுனியை தொடுவதை பார்த்தார்.
என்னம்மா செய்கிறாய் என்றார்... எனக்கு பயங்கர துன்பங்கள்..உங்களை தொடுவதால் , என் நோய் தீரும் என நம்புகிறேன் என்றாள் அவள்.
இயேசு மனம் மகிழ்ந்து , சரி உன்னை குணமாக்கி விட்டேன் என சொல்லி அவள் குணம் அடைந்து இருந்தால் அது மொண்ணையிசம்..
பரமபிதா உன்னை குணமாக்கி விட்டார் என சொல்லி இருந்தாலும் அது மொண்ணையிசம்தான்..
இயேசு என்ன சொன்னார் என்பது ஆழமானது...
உன் விசுவாசம் உன்னை ரட்சித்தது என்றார்..

இதுவா  அதுவா என குழம்பாமல்  ஏதோ ஒன்றை  விசுவாசியுங்கள்   மனதுக்கு உண்மையாக  இருங்கள்..   கடவுளே  இல்லை என நம்பினால்  அந்த நம்பிக்கைக்கு உண்மையாக  இருங்கள்..இலக்கியம்   தொழில்    உங்களது  காதலி   காதலன் என ஏதோ ஒன்றில்  முழு விசுவாசம்  வையுங்கள்

இயேசுவை   நம்புபவர்  வேறு  தெய்வங்களை  நம்புவோர்   கடவுள் இல்லை  என  நம்புவோர்     நம்பிக்கைகள்  ஏதுமற்ற தேடலாளர்கள்   அனைவர்க்கும்   நல்வாழ்த்துகள்

-பிச்சைக்காரன்

ஷூவாங் ட்சு


உங்களைப் பற்றி எதையும் சொல்லாதீர்கள். மறைவாகவே இருங்கள்.

உண்மையை உண்மையாகத் தேடுபவர்கள் தாங்களாகவே உங்களைத் தேடி வந்துவிடுவார்கள்.

-ஷூவாங் ட்சு

Saturday 24 December 2022

லதாமகன்


நாளை என்ற கனவின் தொடுவானத்திற்கு எல்லையே கிடையாது. இனி எல்லாம் நலமாகும் என எளிய கற்பனைதான் எத்தனை ஆசுவாசமாக இருக்கிறது. நாளை நம் வெற்றிகளை நாம் எதிரிகளிடமும் துரோகிகளிடமும் பகிர்ந்து அவர்களை மிரளச் செய்யப்போகிறோம் என்ற கற்பனையைப்போல உத்வேகம் கொடுக்கும் ஒன்றில்லை.

-லதாமகன்

கூடல்தாரிக்


வானத்தைத்தொடும்
எண்ணம் எதுவும் இல்லை
கூடு திரும்புதலே
இந்தப்பறவைக்கு
போதுமானது

-கூடல் தாரிக்

Friday 23 December 2022

Speed Vs Endurance – வேகமும் தொடர்திறனும்உலகில் அதி வேகமாக ஓடக்கூடிய மனிதர் உசேன் போல்ட். அவர் 100 மீட்டர் ஓட்டத்தை வெறும் 9.57 வினாடிகளில் கடந்து சாதனை புரிந்திருக்கிறார். அதே போல நிலத்தில் அதிவேகமாக ஓடக்கூடிய விலங்கு சிறுத்தைப்புலி. சராசரியாக மணிக்கு சுமார் 120 கி.மீ. வேகத்தில் ஓடக்கூடியது. இது போல வேகம், விரைவு சார்ந்த சாதனைகள் நம்மில் பலருக்கு நினைவில் இருக்கும். ஆனால் வேகம் மட்டுமே வியக்கவேண்டிய விஷயம் இல்லை. வேகத்தை விட, என்டூரன்ஸ் எனப்படும் "தொடர்ந்து, நிலையாக செயல்படும் திறனும் அற்புதமானது". நம்மில் பலபேர், “லியுப் கிப்சோக்” என்ற பெயரைக் கேள்விபட்டிருக்க மாட்டோம். கென்யாவைச் சேர்ந்த இந்த ஓட்டப்பந்தய வீரர், மாராத்தான் ஓட்டத்தில் உலக சாதனை புரிந்தவர். ஒலிம்பிக்கில் 42.2 கி.மீ. தூரத்தை 2 மணி நேரம், 1 நிமிடத்தில் கடந்து சாதித்து இருக்கிறார். 100 மீட்டர் ஓட்டத்தை வெறும் 9.5 வினாடியில் கடந்த உசேன் போல்ட், இதே மாரத்தான் ஓட்டத்தை அதே வேகத்தில் ஓடியிருந்தால் போல்ட், சுமார் ஒரு மணி நேரம் பத்து நிமிடத்தில் 42 கி.மீ. தூரத்தைக் கடந்திருக்க முடியும். ஆனால் போல்ட்டால் அதனை செய்யவே முடியாது. அதி வேகத்துக்கு பழக்கப்பட்டவரால் தொடர்ந்து ஒரு கி.மீ.க்கு கூட அதே வேகத்தில் ஓடமுடியாது.அதே போலத்தான் சிறுத்தைப் புலியின் வேகமும். சிறுத்தையால் மணிக்கு சுமார் 120 கி.மீ வேகத்தில் ஓட முடியும் என்றாலும் அதனால் அந்த வேகத்தை அதிகபட்சம் 500 மீட்டர்கள் வரை தான் ஓடமுடியும். பிறகு மூச்சிறைத்து, சோர்வுற்று வேகம் மிகவும் குறைந்துவிடும். "க்ரேஹவுண்ட்" எனும் நாய் இனம் இருக்கிறது. இந்த நாயினம் மணிக்கு 50 கி.மீ வேகத்தில் ஓடக் கூடியது. தொடர்ந்து 12,000 மீட்டர்கள் (12 கி.மீ) அதே 50 கி.மீ வேகத்துக்கு குறையாமல் க்ரேஹவுண்ட் ஓடும் திறன் படைத்தது. சிறுத்தைக்கும் க்ரேஹவுண்டுக்கும் 10 கி.மீ. ஓட்டப்பந்தயம் வைத்தால், சிறுத்தையை மிக எளிதாக க்ரேஹவுண்ட் ஜெயித்துவிடும். இது தான் “என்டூரன்ஸின் சக்தி".நமது செயல்களிலும், வாழ்விலும் வேகம் கவர்ச்சியாகத் தெரிந்தாலும், உண்மையில், நிலைத்த பயனை தருபவை என்டூரன்ஸ் எனப்படும் "தொடர்திறன்" தான். ஒரு நாள் முழுக்க நாம் கோபப்படாமல், அனைவருடன் பேரன்புடன் இருக்க முடியும். ஆனால் வருடக்கணக்கில் கோபப்படாமல் இருப்பதற்குத் தான் பெரிய பக்குவம் தேவைப்படுகிறது. அதே போலத்தான் உண்மையாய் இருத்தல், சகிப்புத்தன்மையுடன் இருத்தல், உணவுக்கட்டுப்பாட்டுடன் இருப்பது என அனைத்து நற்குணங்களைம் சில நாட்களுக்கு மட்டும் பின்பற்றுவதால் எந்த பயனுமில்லை. அவற்றை நாம் தொடர்திறனாய், நம் வாழ்க்கை முழுவதும் மாற்றிக்கொள்வது தான் பெருஞ்சாதனை. ஆமை – முயல் கதை போலத் தான் நமது வாழ்வும். கொஞ்சம் கொஞ்சமாக, மெதுவாக, நாம் கற்றுக்கொள்வதால் வாழ்க்கையில் எதையும் இழந்து விடமாட்டோம். என்டூரன்சுடன் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் நாம் சிகரத்தின் உச்சியை எட்டியிருப்போம். -janakiraman

லதாமகன்


எல்லா மத்தியவர்க்க அப்பாக்களுக்கென்று ஒரு பொது முகம் இருந்தது. பிள்ளைகளிடம் கண்டிப்பாக இருக்கும் முகம். காலமாற்றத்தினால் சிறிது மாறினாலும், தன் கவலைகள் தெரியாமல் பிள்ளைகள் வளரவேண்டுமென்றும் தன் பிரச்சினைகள் தன் பிள்ளைகளுக்கு எதிர்காலத்தில் வந்துவிடக்கூடாதென்றும் ஏங்கும் ஒரு முகம் இன்னும் இருக்கிறது. பிள்ளைகளுடனான ஒவ்வொரு கணத்தையும் கொண்டாடும் முகம். அன்பை வெளிப்படுத்தத் தெரியாத ஒரு குழப்பமான முகம். வேண்டியதை வீட்டில் தருவித்துத் தருவேன் இன்னொருவரிடம் எது வேண்டியும் ஒரு நொடி கூட பிள்ளைகள் நின்றுவிடக்கூடாது என்றேங்கும் முகம். 

அப்பாக்கள் பிள்ளைகளை அறியும் அளவிற்கு பிள்ளைகள் அப்பாவை அறிவதில்லை. அவர் சுக துக்கங்கள். அவர் விருப்பு வெறுப்புகள். விருப்ப உணவு. விருப்ப இசை, விருப்பமான இடம் விருப்பமான சொல். அவரின் இளமைப்பருவம். அவரின் நோய்கள். அவரின் கனவுகள். தூங்கியபிறகு பிள்ளைகளின் அறையில் தயங்கித்தயங்கி நுழைந்து நெற்றியில் வைத்த முத்தம். வேர்கள் கிளைக்கு நீரைக்கடத்தினாலும், இலைகள் வேருக்கு எதையாவது கடத்துமா என்ன?

பெரும்பாலான பிள்ளைகள், தன் தந்தையை அவர்தம் இறப்பில்தான் அறிகிறார்கள். அவர் இல்லாமல் ஒரு இடத்தில் நின்று ஒரு உரையாடலை நிகழ்த்தும்போது, ஒரு தேவைக்கு அலையும்போது ஒரு அங்கீகாரத்தை எதிர்பார்க்கும்போது அப்பாவின் பிம்பம் ஒரு கனவைப்போல மேலெழுகிறது. தந்தையைப்பற்றிய புனைவுகள் அந்த இடத்திலிருந்து ஆரம்பிக்கின்றன. கொஞ்சம் நஞ்சம் அறிந்திருந்த தவறுகள் மனதில் ஆழத்தில் புதைக்கப்பட்டுகின்றன. தன் பிள்ளைகளை தன் பிம்பத்தில் பொருத்திப்பார்த்து அப்பாவுக்கு அன்பு செலுத்தத் தோன்றுகிறது. ஒரு நாள் அல்லது ஒரு நாள் விழுதுகள் வேரைத்தாங்கித்தானே மரம் வாழ வேண்டியிருக்கிறது?

-லதாமகன்

இராஜ்குமார்


எல்லா கோப்பைகளிலும்
தேநீரைத்தான் ஊற்றுகிறேன்
ஆனால்,
பருகுவதென்னவோ
ஞாபகங்களைத் தான்.

-ச. இராஜ்குமார்

Thursday 22 December 2022

ஈசாப்


இரண்டு தவவைகள் ஒரு குளத்தில் வசித்து வந்தன.
கோடையில் குளங்கள் காய்ந்தன.எனவே, அவை போகும் வழியில் ஆழமான கிணறு ஒன்றை பார்த்தன.
உடனே ஒரு தவளை இந்த கிணற்றில் குதித்து இதை நம் இருப்பிடமாக ஆக்கிக் கொள்வோம் என்று சொன்னது. உடனே அந்த இன்னொரு தவளை மிகுந்த எச்சரிக்கையோடு பதில் சொன்னது

ஒருவேளை இந்த தண்ணீரும் வறண்டு போனால் இவ்வளவு ஆபத்திலிருந்து நாம் எவ்வாறு மீள முடியும். எனவே விளைவுகளையும் எண்ணிப் பார்த்து தான் செயல்பட வேண்டும் என்றது 

-ஈசாப்

Wednesday 21 December 2022

உமா மகேஸ்வரி


ஒரு மாபெரும் வெற்றிடம் எந்தத் தடயத்தையும் விட்டு வைக்காமல் எல்லாவற்றையும் அழித்தது மெதுவாக, நிதானமாக, நிரந்தரமாக.

-உமா மகேஸ்வரி

Tuesday 20 December 2022

படித்தது

கறந்த பால் இரண்டு மணிநேரம் கெடாமல் இருக்கும்... காய்ச்சினால் மேலும் பலமணி நேரம் இருக்கும்... தயிராக்கினால் மேலும் இரண்டுநாள் கெடாமல் இருக்கும்... வெண்ணையாக்கினால்
ஒரு வாரம் இருக்கும்... 
நெய் பலமாதம் கெடாமல்
இருக்கும்...
நீயும் சூடுபட சூடுபட மெருகேறுவாய் 

  -படித்தது

மனுஷ்


ஒரு தண்டனைக் காலத்தின் முதல் தினத்தில் 

எல்லா தண்டிக்கப்பட்டவர்களையும் போலவே 

நானும் சுவர்களில் பெரிதாக எழுதி வைத்தேன் “எல்லாம் விரைவில் பழகிப் போய்விடும்

 மேலும் முதல் தினம்போல 

இரண்டாம் தினம் அவ்வளவு பயமாக இருக்காது”

-மனுஷ்

திருச்செந்தாழை


பின் திரும்பியே வராத பிள்ளையின் அம்மாவிற்கு அவ்வப்போது காணநேரிடும் பைத்தியக்காரர்களின் பிளாட்பார மரணங்கள் பின்னிரவு நெடுங்காய்ச்சலை பரிசளிக்கின்றன.

 -பா.திருச்செந்தாழை

ஜானகிராமன் நாபலூர்


Habitfulness & Mindfulness 

நாம் ஒரு கப் தேநீர் அருந்துகிறோம், ஆனால் ஒரு கோப்பை தேநீரின் ஒவ்வொரு துளியையும் நாம் முழு நினைவுடன் அருந்துவதில்லை. குடித்துக்கொண்டிருக்கும் போது, மனது வேறெதையோ சிந்தித்துக் கொண்டிருக்கும். இதைப் போல பல லேலைகளில், நமது மனது அந்த வேலையில் லயிப்பதில்லை. வேலை பாட்டுக்கு ஒரு பழக்கத்தில் நடக்கும். மனது, வேறெதையோ யோசித்துக் கொண்டிருக்கும்.

முதன்முறை வண்டி ஓட்டப் பழகும் போது நமது கவனம் முழுக்க சாலையிலும் வண்டியின் ஹேண்டில் பார்/ஸ்டீரிங் வீலிலும் இருக்கும். அதனை கவன ஆற்றல் என்போம். ஆனால் வண்டி ஓட்ட நன்கு பழகிவிட்டப் பிறகு நமது கைகள், வண்டியை ஓட்டினாலும் நமது மனம் வேறெங்கோ ஓடிக்கொண்டிருக்கும். 

இதே போல ஒரு புதிய திறமையை கற்றுக்கொள்ளும் போது இருக்கும் கவன ஆற்றல் (Mindfulness), அதனைக் கற்ற பிறகு, பழக்கம் ஏற்பட்டு விடுவதால் கவனிக்கும் தன்மை குறைய அல்லது மறைய ஆரம்பிக்கிறது. நமக்கிருந்த கவன ஆற்றலானது, பழக்க ஆற்றலாக (Habitfulness) மாறிவிடுகிறது.

நாம் திரும்பத்திரும்ப செய்யும் ஒரு செயல், பழக்கமாக மாறிவிடுகிறது. அந்த பழக்கம், ஒரு ப்ரோக்ராம் செய்யப்பட்ட  தானியங்கித் தன்மையுடன் செயலை செய்யவதால், அந்த செயலின் மீதான கவனத்தை மனம் இழந்து வேறெங்கோ மாற்றிக் கொள்கிறது.

ஒரு கோப்பை டீயை, குழந்தையொன்று முதன்முறையாக குடிக்கும் போது ஒவ்வொறு துளியையும் கவனிக்கும். அதன் சூடு, சுவை, மணம், அடர்த்தி ஆகியவற்றை உணரும். அது நாக்கில் பட்டு, மெதுவாய் கரைந்து வயிற்றுக்குள் செல்வதை உணரும். டீ உடலில் கரைந்ததும் உடலெங்கும் ஒருவித புத்துணர்ச்சி நமது செல்களில் மலர்வதை உணர்ந்து பூரிக்கும். இது போலத் தான் நாமும், டீயை  முதன்முதலில் குடிக்கும் போது ரசித்திருப்போம். பிறகு டீ குடித்தல் பழகி போனதும் அது ஒரு சடங்கு போல மாறிவிடுகிறது. இப்போதும் அதே கவனத்துடன், அதே குறுகுறுப்புடன் நம்மால் ஒவ்வொறு துளி டீயையும் குடிக்க முடியுமென்றால் நாம் பழக்க ஆற்றலை கவன ஆற்றலாக மாற்றிவிட்டோம் என பெருமை கொள்ளலாம். நமது ஒவ்வொரு செயலிலும், கவன ஆற்றலைக் கொண்டு வந்தால் அதுவே "விழிப்புணர்வு".

-படித்தது

Monday 19 December 2022

பிடிக்காதவர்களை கவனமாகத் தவிர்க்கப் பழகிவிட்டோம், பிரியமானவர்களைக் காயப்படுத்துதலுக்கு மட்டும் விமோசனமே கிடையாது போல!-யாத்திரி

ஹாய் மதன்


தலைமுடிக்கும் தாடிக்கும் இடையே பதினைந்து வருட வித்தியாசம் இருப்பினும், தலைமுடிக்கு முன்பே தாடி நரைப்பது ஏன்? 

முடியைக் கருமையாக வைத்திருப்பது இரண்டு பிக்மென்ட்டுகள். கறுப்பு மற்றும் மஞ்சள் (அல்லது க்ரே மற்றும் சிவப்பு). இவை வற்ற ஆரம்பித்தவுடன் நரை துவங்குகிறது. 

விஞ்ஞானப்படி,முதலில் காதோரமாக நரைக்கும். அடுத்து, தலையின் மற்ற பகுதிகள். பிறகே தாடி, உடல்முடி எல்லாம்! 

தலைமுடி போல தாடி அடர்த்தியாக இல்லாததால், சீக்கிரம் நரைத்தது போல் தோன்றும். இது பிரமையே! அல்லது, சம்பந்தப்பட்டவர் தலைக்கு மட்டும் டைதடவிக் கொண்டிருக்கலாம்!

-ஹாய் மதன்

லதாமகன்


நினைவுகள் அதன் தொடமுடியாத தூரத்தின் காரணமாகவே போதையூட்டுகின்றன. அந்த தூரத்திற்கு யாரும் திரும்பிப்போய்விடமுடியாது என நம்பும்படி அதன் கனவுகள் நம்மை கிளர்ச்சியூட்டி ஈர்த்துக்கொண்டிருக்கின்றன.

-லதாமகன்

நிகழ்காலத்தை இறந்த காலம் ஆக்கி,அதை எதிர்காலத்தின் மீது சுமத்துவதே ஆசை-ஜே.கிருஷ்ணமூர்த்தி

Saturday 17 December 2022

சுதந்திரத்தின் விலை- janakiraman



ஆய்வாளர்கள் ஒரு சோதனையை செய்து பார்த்தார்கள். ஒரு கண்ணாடிக் குடுவை நிறைய தானிங்கள் நிரப்பி அதன் மேல் ஒரு எலி வைத்தார்கள். அந்த எலிக்கு மிகவும் மகிழ்ச்சி. எங்கேயும் அலையாமல், இருந்த இடத்திலேயே தானியம் கிடைத்த தால் உற்சாகமாக அவற்றை உண்ண ஆரம்பித்தது. சில நாட்களாக எங்கேயும் செல்லாமல் அந்தக் குடுவையில் இருந்த தானியங்களை உண்டு மகிழ்ச்சியாக இருந்தது. 

கொஞ்சம் கொஞ்சமாக தானியங்கள் குறைந்து ஒரு கட்டத்தில் அந்த குடுவையில் அடிப்பாகத்துக்கு வந்த பிறகு தான் எலிக்கு தான் குடுவைக்குள் சிக்கிக்கொண்டோம், அதிலிருந்து வெளியேற முடியாது என்பது புரிந்தது. இப்போது, அந்த எலி, தனது உணவுக்கு வெளியில் இருந்து யாராவது அளித்தால் தான் உண்டு உயிர் வாழ முடியும். அதே போல, அப்படியே தானியம் கிடைத்தாலும், தனக்கு விருப்பமான தானியம் தான் கிடைக்கும் என்பதும் உறுதியில்லை. ஆரம்பத்திலிருந்த மகிழ்ச்சி எலிக்கு இப்போது பறிபோனது.

இந்த சோதனையிலிருந்து நமக்குக் கிடைக்கும் படிப்பினைகள்:

1.தற்காலிக மகிழ்ச்சி சில சமயங்களில் நீண்டகால சிக்கலையோ ஒரு சிறையையோ நமக்கு ஏற்படுத்திவிடக்கூடும்.

2. நமக்கு பொருட்கள் எளிதாகவும், உழைக்காமலும் கிடைத்தால் நாம் சீக்கிரத்தில் மற்றவரை சார்ந்திருக்க ஆரம்பித்துவிடுவோம்.

3. எலி, ஓடியாடி, தானியத்தை கண்டுபிடித்து சாப்பிடக்கூடிய மிருகம். அது தானியம் தன் காலடியில் கிடைத்த தும் வேறிடங்களில் தானியத்தை தேடுவதை நிறுத்திவிட்டது. அதே போல, நமக்கு இருக்கும் திறமைகளை பயன்படுத்தத் தவறினால், நாம் நமது திறமையை விட அதிக மதிப்பு மிக்க சுதந்திரம் மற்றும் தேர்வுசெய்யும் உரிமை ஆகியவற்றை இழக்க நேரிடும்

4. சுதந்திரம் என்பது நமக்கு எளிதாக கிடைக்காத ஒன்று என்றாலும் அதனை மிக எளிதாக நாம் இழக்கக்கூடும்.

வாழ்வில் எதுவும் எளிதாக கிடைப்பதில்லை. அப்படி எளிதாக கிடைக்கும் எதுவும் நமது மதிப்பைக் கூட்டுவதில்லை. ஜப்பானிய பழமொழி ஒன்று, “இந்த உலகில் மிகவும் விலையுயர்ந்த பொருள் என்பது, எது நமக்கு இலவசமாக கிடைக்கிறதோ அது” எனக் கூறுகிறது.  


-janakiraman

கரன் கார்க்கி


சில பார்வைகளின் மொழி சில நொடிகளில் சம்பந்தப்பட்ட உள்ளத்துக்குக் கடத்தப்பட்டுவிடும் மாயங்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் எப்படியோ நிகழ்ந்துவிடுகிறது.
மலர்த்தோட்டமோ கல்லறைத் தோட்டமோ மலர்கள் எங்கும் பூக்கத்தான் செய்கின்றன.

-கரன் கார்க்கி

அழகுராஜன்


தான் மேகமாய் 
மிதந்ததை,
பெரும் மழையாய் பொழிந்ததை,
காட்டாற்று வெள்ளமாய் கடந்ததை,
நதியாய் நகர்ந்ததை,
மீண்டும்
கடலானதை,
கடைசிவரை யாரிடமும்
சொல்லவில்லை
அந்த 
மழைத்துளி.

-த. அழகுராஜன்

Friday 16 December 2022

Ikigai – வாழ்வின் மதிப்பு.ஜானகிராமன் நாபலுர்


Ikigai – வாழ்வின் மதிப்பு.

கலஹரி பாலைவனப் பகுதியில் புஷ்மென் எனும் ஆதிவாசியினம் வசிக்கிறது. அவர்கள், மனிதர்களுக்கு இரண்டு வித பசி இருக்கிறது என்பார்கள். ஒன்று, சிறு பசி – அது வயிற்றுத் தேவைக்கானது. நேரத்துக்கு உணவு உட்கொள்வதன் மூலம் அந்த பசி தீர்ந்து போகிறது. மற்றொன்று பெரும்பசி. அது எல்லா பசிகளையும் விட மிகப்பெரிது. நமது "வாழ்வின் காரணத்தை அறிதல்" என்பதே அந்த பசி. ஒரு மனிதரின் வாழ்வை கொடுமையானதாகவும் கசப்பானதாகவும் மாற்றக்கூடிய ஒன்று, அவர், தான் ஏன் வாழ்கிறோம் என்று அறியாமல் இருப்பது என புஷ்மென் பழங்குடியினர் கருதுகின்றனர். 

இதே  தத்துவத்தை ஜப்பான் நாட்டில் ஒகினாவா தீவைச் சேர்ந்த மக்களும் முக்கியமாக கருதுகின்றனர். ஒகினாவா தீவில், சராசரியாக நான்கில் ஒருவர் 90 வயதுக்கு மேல் வாழ்கிறார். உலகில் மிக அதிக வாழ்நாள் ஆயுட்காலம் இருக்கும் மக்கள் அந்தத் தீவில் தான் உள்ளனர். அதற்கு அவர்களின் உணவு முறை, உடற்பயிற்சி போன்றவை காரணமாக இருந்தாலும், மற்றொரு முக்கியக் காரணம், “இகிகாய்” என்று அவர்கள் கூறுகின்றனர். 

ஜப்பானிய மொழியில் “இகி” என்றால் வாழ்க்கை, “காய்” என்றால் மதிப்பு என்று அர்த்தம். வாழ்வின் மதிப்பு. ஒவ்வொரு நாளும் காலையில் கண் விழிக்கும் போது, அன்றைய நாளினை வாழ்வதற்கு எது தூண்டுகிறதோ அதுவே ஒருவரின் இகிகாய். 

ஒகினாவாத் தீவில் வசிப்பவர்கள் தமக்கான இகிகாயை இயல்பாகவே கண்டுகொள்கின்றனர். அது ஒரு மோட்டாரை ரிபேர் செய்வதாக இருக்கலாம், டீ தயாரிப்பதாக இருக்கலாம், இசைக்கலைஞராகவோ, விவசாயம் செய்வதாகவோ, நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிவதாகவோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். தமது வாழ்க்கைக்கான மதிப்பை அறிந்தபிறகு, அந்த விஷயத்தில் தொடர்ந்து தம்மை ஈடுபடுத்திக்கொள்வதன் மூலம் பணி ஓய்வு என்பதே அவர்களுக்கு இருப்பதில்லை. தொடர்ந்து தாம் சார்ந்த பணியில் புதிதாக கற்றுக்கொண்டே இருக்கின்றனர். அந்த உந்து சக்தி அவர்களின் வாழ்நாளையும் நீடிக்கச் செய்து, ஆரோக்கியமாக இருக்க வைக்கிறது. 

நாமும் கூட, நமக்குப் பிடித்த வேலையை செய்யும் போது நமது உடலும் மனமும் புத்துணர்வுடன் இருந்திருப்பதை உணர்ந்திருப்போம். வேலையை ரசித்து செய்யும் போது சோர்வே தெரியாது.

நமக்கான இகிகாய் நான்கு வகைகளில் எதாவது ஒன்றாக இருக்கும். 1.எது உங்களுக்கு பிடித்திருக்கிறதோ; அது 2. எதில் நீங்கள் நிபுணத்துவம் பெற்றிருக்கிறீர்களோ; அது 3. எது இந்த சமூகத்துக்குத் தேவையாய் இருக்கிறதோ; அது 4. எதைச் செய்தால் உங்களால் பொருள் ஈட்டமுடியுமோ; அது. 

இவை நான்குமே ஒரே விஷயமாக அமைந்துவிட்டால் அவர் பேரருள் பெற்றவர் எனலாம். எப்படி இளையராஜா, இசையைக் கண்டறிந்தது போல. அது அவரது இகிகாயாக நான்கு அம்சங்களும் இயல்பிலேயே சேர்ந்து அமைந்துவிட்டது.
 
இனிய நற்காலை 🌸

#100_MM (100 Days of Morning Motivation: Day 71)

தமிழ் யாத்திரி

மறந்துவிட்ட ஒன்றை நினைவுபடுத்துவது.. 
வலி. 
மறக்கமுடியாத ஒன்றை ஞாபகப்படுத்துவது.. 
சுகம்.

-தமிழ் யாத்திரி

படித்தது


இணைவது என்னவோ மனமுவந்து தான் நிகழ்கிறது.. பிரிவதில் மட்டும் ஒருவர் எடுக்கும் முடிவை., மற்றொருவர் வேறு வழியின்றி ஏற்றுக்கொள்வதாகிறது.

-படித்தது

அப்பாஸ்


வெளியே 
ஒரே புழுக்கமாய் இருக்கிறது என் மீது எதையும் ஏற்றாதே உனது வார்த்தைகளும் போரடிக்கிறது 
நகருக்கு வெளியே கூட்டிப்போ
என்னை 
சுவரில் சாய்த்து வைத்த சைக்கிள் சொல்லிற்று இப்போது அதை அழைத்து வெளியே போய்க் கொண்டிருக்கிறேன்

-அப்பாஸ்

Thursday 15 December 2022

ஹாய் மதன்


உலகின் நம்பர் ஒன் ஃபோபியா - மேடையில் பேசுவது! அதைப் போக்க முடியும். ஆரம்பத்தில் நண்பர்களை உட்கார வைத்துப் பேசுங்கள். பிறகு, நான்கு அந்நியர்களையும் அவர்களோடு சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு, வகுப்பறை அளவு கும்பல்
முன்பு நின்று பேசுங்கள்.

 மைக்பிடிப்பதற்கு முன், குறிப்புகளை
வரிசைப்படுத்திக் கொண்டு எளிமையான, கொச்சையான தமிழில் சுருக்கமாகப் பேச ஆரம்பியுங்கள். கடைசியாக, மனைவிமுன் நின்று ஒருமுறை எப்படியாவது உரையாற்றுங்கள். தைரியம் வந்துவிடும்!

-ஹாய் மதன்

வேர்களைத் தேடி-janakiraman


Sankofa – வேர்களைத் தேடி…

ஆப்ரிக்க கண்டத்தைச் சேர்ந்த கானாவில் வசித்துவரும் அகான் பழங்குடியினர்  "சங்கோஃபா" என்ற வார்த்தையை பயன்படுத்துவார்கள். அது ஒரு முக்கியமான தத்துவம். இந்த வார்த்தை மூன்று சொற்களால் ஆனது. SAN (திரும்ப), KO (செல்), FA (பார்க்கவும், தேடவும் மற்றும் எடுக்கவும்). அதாவது "திரும்பச் சென்று தேடி எடுக்கவும்" என்று பொருள். 

அகான் பழங்குடியினர் வணங்கும் ஒரு புராணப் பறவையின் பெயர் சங்கோஃபா. அந்தப் பறவையின் கால்கள் முன்னோக்கி நடக்க, அதன் தலை பின்பக்கமாக, திரும்பி ஒரு பொன்முட்டையை தன் வாயில் கவ்விக்கொண்டிருக்கும். வாழ்வியல் தத்துவத்தைக் குறிக்கும் ஒரு அழகான மெட்டாஃபராக இதனைப் பார்க்கலாம். 

ஒருவர் எதிர்காலத்தை நோக்கி முன்னேறவேண்டும் என்றால் அவர் தனது கடந்த காலத்தை உற்று நோக்கி அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். கடந்த காலம் என்பது வெறும் இறந்த காலமல்ல. அது அனுபவ ஞானத்தின் ஊற்று, அதுவே பொன்முட்டை என்று அகான் பழங்குடியினர் நம்புகின்றனர். 

கடந்த காலத்தின் நல்லவைகளை, சிறந்தவைகளை வைத்து எதிர்காலத்தை திட்டமிடவேண்டும் என்று கூறுவர். நாம் எங்கிருந்து வந்தோம் என்று அறிவதே, நாம் எங்கு செல்லப்போகிறோம் என்பதை தீர்மானிக்கிறது.

சங்கோஃபா - நமது கால்கள் எதிர்காலத்தை நோக்கி நடை போட, கடந்த காலத்தின் கண்களால் கிடைக்கும் பார்வை, பாதைக்கு வெளிச்சமாய் இருக்கும்.  

-janakiraman

உமா மகேஸ்வரி


சிகரமென்பது, கற்பனையின் கூவலைப் போல ஒரு மிக உயர்ந்த புள்ளியன்று. அது எல்லாவற்றிலும் மேலான, அனைத்தையும் தாழ்த்துகிற உன்னத நிலையுமல்ல,அது சமதளம்.உயர்வு தாழ்வு, ஆனந்தம், சந்தோசம் அத்தனையும் கொட்டி நிரப்பப்பட்ட சமன்நிலையின் நிதான வெறுமை. கீழிருக்கும் போது மேலேயும், மேல் நிற்கையில் கீழேயும், தாவ முனைகிற தவிர்க்கவியலாத் தத்தளிப்பு

-உமா மகேஸ்வரி

தேநீர் தினம்


தேநீர் என்பது பெளத்தர்களால் சீனாவில் 'தா'எனும் பெளத்த மடத்தில் தான் கண்டறியப்பட்டது.அதனால் தான் தேநீரை Tea என்கிறோம். இந்த 'தா'என்பதை 'ச்சா' (cha) என்றும், இது மராத்தியில் 'சா' என்றும் ஹிந்தியில் 'சாய்' என்றும் அழைக்கப்படுகிறது

-படித்தது
#WorldTeaDay 
#InternationalTeaDay

ஓஷோ


இரயில்வே நேர்முகத் தேர்வுக்கு ஆஞ்செலோ செல்கிறார். அப்போது ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் நூறு மைல் தூரத்தில் வருகின்றன.என்ன செய்வீர்கள்?

*சிவப்புக் கொடியை ஆட்டுவேன்
அதிகாரி:அப்போது சிவப்புக் கொடி இல்லை
*சுவிட்ச் அயர்ன் கொண்டு இரயில் தடம் மாற்றுவேன்

அதிகாரி:அதுவும் இல்லை

அப்படியெனில் என் மனைவி மரியாவை அழைத்துச் செல்வேன்

அதிகாரி:அவர் என்ன செய்வார்

*உலகில் மிகப்பெரிய விபத்து நடக்கப்போகிறது.அதை பார்க்க அழைத்துச் செல்வேன்.

வாழ்க்கையின் மகிழ்ச்சியைப் போலவே வருத்தங்களையும், துயரங்களையும் அனுபவிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

-ஓஷோ

கைக்குட்டை வந்தது எப்படி ? -மகுடேசுவரன்


கைக்குட்டை வந்தது எப்படி ? 
OO

கை என்ற சொல்லுக்கு நாம் எல்லாரும் உடனே கருதுகின்ற பொருள் – நம் உடலின் உறுப்பு. தோள்பட்டையில் தொடங்கி முழங்கை, மணிக்கட்டு, உள்ளங்கை, விரல்கள் என முடியும் இன்றியமையாத உடல் உறுப்பினைத்தான் பொருளாகக் கொள்கிறோம்.

கை என்பதற்குப் பல பொருள்கள் வழங்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று சிறுமை. அளவில் தாழ்ந்த சிறுநிலை. பேச்சு வழக்கிலும் எழுத்திலும் கை என்ற சொல் அடிக்கடி பயன்படும். அங்கே சிறுமை, சிறிது, சிற்றளவு எனப் பொருள்கொண்டால் அச்சொற்களின் மிகச்சிறந்த பொருள் கிடைக்கும்.

“இங்கே எங்கே வந்தீங்க ?” என்று யாரையேனும் “சும்மா ஒரு கைவேலையாக வந்தேன்” என்பார்கள். கையால் செய்யக்கூடிய வேலையாக என்று பொருள்கொள்ளக்கூடாது. சிறிய வேலையாக வந்ததைத்தான் அவ்வாறு கூறுகிறார்.

சிறிய காரணங்களுக்காக, சிறு நலன்களைப் பெறுவதற்காக ஒருவர் செயல்பட்டால் அவரைக்  ‘கைக்கூலி’ என்போம். சிறுமையான கூலி பெற்றுச் செய்கிறவர்.

ஒருவரின் சிறுபணிகளுக்கான ஆள் என்றால் அவரைக் ‘கையாள்’ என்போம். உதவிச் சிறுபணிகள் செய்பவர் அவர்.

சிறுதடியைக் கைத்தடி என்பதும் அவ்வாறே. சிறிய புத்தகம் அல்லது சிறிய குறிப்பேடு ’கையேடு’ எனப்படும். சிறுமையாய்த் தரப்படுவது, ஊட்டுவது கையூட்டு. கைவிளக்கு என்றால் சிறுவிளக்கு. கைத்தொழில் என்றால் சிறுதொழில்.  

யானையைப் பார்த்தால் எப்படி இருக்கிறது ? சின்ன மலைபோல் இருக்கிறது. அதனால்தான் யானைக்குக்  ‘கைம்மலை’ என்று இன்னொரு பெயரும் உண்டு.

ஒருவரிடமிருந்து சிறுதொகையைப் பெற்றால் அது ‘கைம்மாற்று’ ஆகிறது. “அவசரத்துக்கு ஆயிரம் கைம்மாத்தா வாங்கினேன்” என்பார்கள். அந்தக் கையிலிருந்து இந்தக் கைக்கு மாற்றுவது இல்லை. சிறிய மாற்றாகப் பெற்ற தொகை. கைம்மாற்றுத் தொகை சிறிதாகத்தான் இருக்கும்.

கையில் வைத்திருக்கும் சிறுதுணியைக் கைக்குட்டை என்போம். கையில் வைத்திருப்பதாலா அப்பெயர் பெற்றது ? குட்டை என்பது குறுகிய அளவு. துண்டுத் துணிக்குப் பெயரானது. துண்டுத் துணியளவிலும் சிறியது என்பதால் கைக்குட்டை.

கை என்பதற்குச் சிறியது, சிறுமையானது என்று பொருள் கொண்டால் பல சொற்களுக்கு மிகச்சிறப்பான விளக்கம் கிடைக்கும்.

- கவிஞர் மகுடேசுவரன்

Wednesday 14 December 2022

கன்ஃபூசியஸ்


எல்லோரும் உங்களை வெறுத்தால் என்ன செய்வது?
எல்லோரும் வெறுப்பது நல்லதல்ல.

எல்லோரும் விரும்பினால்?
அதுவும் நல்லதல்ல.

நல்லவர்கள் நேசிக்க வேண்டும்.கெட்டவர்கள் வெறுக்க வேண்டும், அதுவே சரியான வாழ்க்கை முறை

-கன்ஃபூசியஸ்

ஓஷோ


இயேசுநாதர் ஒரு முறை சீடரிடம், 'நான் உன்னை எடை போட முடியாது'என்று கூறினார்

நீங்கள் ஒரு மனிதனை எடை போட ஆரம்பித்தால் அந்த மனிதனை அழிக்க ஆரம்பிக்கிறீர்கள்.ஒருவரை எடை போட நீங்கள் யார்?
ஒவ்வொரு தனிநபரும் ஒப்பற்றவர் தான்.

-ஓஷோ

ஜீவி


சிறிய ஏணியில் ஏறி
பெரிய பாம்பினில் இறங்கி
கட்டம் கட்டமாய்
நடக்கிறது
வாழ்வெனும் பரமபதம்
ஆடிப்பார்க்கும் ஆசைமட்டும்
விடுவதில்லை எவர்க்கும்

-ஜீவி

நர்சிம்


உன் பயணத்தில் இடர்பட்ட முதல் கல் நான். என் நெடும்பயணத்தில் நான் இளைப்பாறிய முதல் மரம் நீ.

-நர்சிம்

Tuesday 13 December 2022

யாத்திரி


இங்கு தான் கடைசியாக சந்தித்தோம் 
இங்கை கடக்கும் போதெல்லாம் கடைசியாக சந்தித்ததை சந்திக்கின்றோம்.

-யாத்திரி

வெய்யில்


பார்சல் பரோட்டாவுக்கு 
கூடுதலாக இன்னொரு
பாக்கெட் சால்னா வேண்டும்
என போராடி 
கொண்டிருக்கிறார்
ஒரு நடைபாதை வாசி

அவரது அழுக்கு உடை
அவருக்கு கிடைக்க 
வேண்டிய நியாயத்தை
தள்ளிப்போட வைக்கிறது.

-வெய்யில்

கேட்டது


நேற்று என்பது சரித்திரம்
நாளை என்பது விசித்திரம்
(Yesterday is history. Tomorrow is mystery)
ஆனால் இன்று என்பது ஒரு பரிசு.அதனால்தான் அதை ப்ரசெண்ட் (present) என்கிறோம். இன்றை கொண்டாடுவதே வாழ்க்கை

-

Monday 12 December 2022

சத்யஜித் ரே


"A film is made on two tables - the writing table and the editing table" 

-சத்யஜித் ரே

ஹிட்லர்


எழுத்தால் கவரப்படுகிறவர்கள் வெகு சொற்பம். பேச்சால் ஈர்க்கப்படுகிறவர்களே அதிகம் என்பதை நான் உணர்வேன். வரலாற்றில் காணப்பெறும் மாபெரும் இயக்கங்களெல்லாம் பெரிய பேச்சாளர்களால் உண்டு பண்ணப் பட்டனவேயன்றிப் பெரிய எழுத்தாளர்களால் அல்ல

-ஹிட்லர் (மெயின் காம்ப்)

Sunday 11 December 2022

பிச்சமூர்த்தி


இந்த மாதிரி வேலை செய்ய பழக்கமிருக்கா?

வயிறு இருக்குல்ல.எதுவும் பழகிப்போகும் என்றான் மெதுவாக..

-ந.பிச்சமூர்த்தி சிறுகதையில்

அது ஏனோ தெரியவில்லை... தேவையான நேரத்தில் தொலைந்து போனவர்களை,பிறகு மனது தேடுவதே இல்லை....!!~ ஜனனி ~

கதை


ஒட்டகம் ஒன்று காட்டில் கடுமையாக தவம் செய்து தன்னுடைய கழுத்தை நீண்டதாக இருக்க வேண்டும் என்ற வரம் பெற்றது. ஆனால் சோம்பல் மிகுந்த அது நீண்ட கழுத்தின் உதவியால் இருந்த இடத்தில் நின்றபடியே உணவு உண்டது.

ஒரு சமயம் பெரு மழை பெய்தபோது..குகையொன்றில் தலை நீட்டியபடி இருந்தது. பசியில் இருந்த
நரி ஒட்டகத்தின் கழுத்தினை தின்ன ஆரம்பித்தது.ஒட்டகம் கழுத்தை சுருக்கமுடியாமல் இறந்தது.

தெய்வமே வரம் தந்தாலும் சோம்பேறியானவன் அதை நல்ல விதத்தில் பயன்படுத்தாமல் அழித்து விடுவான் என்பது பாண்டவர்களுக்கு அம்பு படுக்கையில் பீஷ்மர் சொன்ன உபதேசக் கதை இது

லதாமகன்


யாரும் யாரையும் எந்த அளவுக்கு நேசிக்க முடியுமோ அந்த அளவுக்கு நேசிக்கிறோம்.. இதில் அளவு என்பதன் அர்த்தம் மட்டும் ஒருவரை இன்னொருவர் எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறார் என்பதில் உள்ளது.

-லதாமகன்

உபுண்டு - நாம் என்பதாலேயே நான்.




ஆப்ரிக்க தேசத்தின் பழங்குடியின கிராமத்திற்கு ஓர் ஆய்வுக்காக சென்றிருந்த ஒரு மானுடவியலாளர், அங்கு இருந்த சிறுவர்களுக்காக ஒரு விளையாட்டை திட்டமிட்டார். 

ஒரு மரத்தடியில், கூடை நிறைய சாக்லெட்களை வைத்துவிட்டு, அந்த மரத்திலிருந்து 100 அடிகள் தள்ளி குழந்தைகளை நிற்க வைத்தார். அந்த குழந்தைகளிடம், “நீங்கள் அனைவரும் அந்த மரத்தை நோக்கி ஓட வேண்டும். யார் முதலில் அந்த மரத்தை அடைகிறார்களோ அவர்கள் மொத்த சாக்லெட்களையும் எடுத்துக் கொள்ளலாம்” என்று கூறினார்.

அந்த சிறுவர்கள் ஓடுவதற்கு பதிலாக, அனைவரும், ஒன்றாக இணைந்து, தமது கைகளை பிடித்துக்கொண்டு, நடந்து சென்று ஒரே நேரத்தில் அந்த மரத்தை அடைந்தார்கள். கூடையில் இருந்த சாக்லெட்களை அனைவரும் தமக்குள் சமமாக பங்கிட்டு உண்டு மகிழ்ந்தனர்.

ஆய்வாளருக்கு ஆச்சரியம், “ஏன் நீங்க போட்டியிடாமல், இப்படி அனைவரும் இணைந்து வந்தீர்கள்?” என்று கேட்டபோது, அந்த குழந்தைகள், “உபுண்டு” என்றனர். பழங்குடியின மொழியில், உபுண்டு என்றால், “மற்றவர் வருத்தப்படும் போது ஒருவர் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்” என்ற அர்த்தத்தை தரும். 

“நாம் என்பதாலேயே நான்”. இதுவே உபுண்டு. சமகால போட்டி சமூகத்துக்கு மிகவும் தேவையான பண்பு இது. போட்டிகளில் வெல்வதன் மூலம் ஒருவருக்கு கிடைக்கும் மகிழ்ச்சியை விட, இருப்பதை பகிர்ந்து அடையும் மகிழ்ச்சியிலேயே மனிதம் தழைக்கிறது. 

-ஜானகிராமன் நாபலூர்

Saturday 10 December 2022

லதாமகன்


சற்று முன் இறந்தவனின் 
சட்டைப் பையில் செல்போன் 
ஒலித்துக் கொண்டேயிருக்கிறது கையில் எடுத்த 
காவலர் ”
சார் யாரோ 
அம்முன்னு கால் பண்றாங்க” 
என்கிறார் 
ஒரு நொடி இறந்தவனின் கண்கள் திறந்து 
மூடுகின்றன.

 - வே. பாபு 

உறவுகள் அலைபேசி எண்களாக மாறிவிட்ட காலத்தில் வாழ்கிறோம். அந்த எண்கள் கூட நினைவில் நிற்பதில்லை. ஒரு அவசர  நேரத்தில் அலைபேசி அணைந்துவிட்டால்,  உடனடியாக அழைத்துப்பேச சில எண்கள் கூட நினைவில் இல்லை.  முகங்கள் மொத்தமாக  நினைவிலிருந்து மறைந்து எண்களின் வழியாக உறவுகளை கண்டறியப்போகும் நாட்கள் தூரத்தில் இல்லை. நண்பர்கள் சந்திக்கும்போது, உறவுகள் சந்திக்கும்போது சில நிமிட பேச்சுக்குப்பின் பேசவும் எதுவும் இருப்பதில்லை. பல காலம் பேசமுடியாத உறவுகளைச் சந்திக்கும்போது கூட சில நிமிடங்களுக்குப்பின் அலைபேசிகளை ஒப்பிட்டுத்தான் எதாவது பேசவேண்டியிருக்கிறது.

 எல்லாரது அலைபேசியிலும், தொடர்பு அற்றுப்போன சில எண்கள் அழிக்க மனமில்லாமல் வைத்திருக்கிறோம். பிரிவிற்குப்பிறகு  நம்மை அழைத்துப்பேசவிரும்பாத நாம் அழைத்துப்பேசவிரும்பாத சில எண்கள்.  எந்த நாளிலாவது நாம் அழைத்துப்பேசவேண்டிய தேவை வரக்கூடும் என நாம் அஞ்சும் அல்லது விரும்பும் சில எண்கள். திடிரென ஒரு நாள் கனவிலிருந்து விழித்து, நம்மை அழைத்து இதுவரை நடந்ததெல்லாம் வெறும் கனவு என நம்மிடம் சொல் சொல்லப்போகும் சில எண்கள். ஒரு வேளை, நாமும் ஒரு மரண விபத்தைச் சந்திக்கக்கூடும்.

முற்றிலும் நினைவுதப்பி உடல் உயிரைப்பிரியப்போகும் கடைசி நிமிடத்தில், பல நாள் தயக்கத்தில் அழைக்காமல் விட்ட அந்த எண்ணின் நபருக்கு, நம் நிலை தெரிவிக்கப்பட்டு, அவர்கள் கூடுதனை உடைத்து வெளிவந்து நம்மை அழைக்கக்கூடும், மரணத்திற்கு முன் ஒரு முறை   நாம் அழைக்கப்பட்டுவிட வேண்டும் என விரும்பும் ஒரு அலைபேசி எண் எல்லார் அலைபேசியிலும் ஒன்றாவது இருக்கிறதுதானே?

-லதாமகன்

பஷீர்


மனித உடல் மிக மோசமான ஒரு கோட்டை அல்லவா? வெளியே தெரியாம, அதுக்குள்ள இருக்கிற ஆன்மாவைப் பற்றி யாவருக்கும் எதுவும் தெரியாது. ஆனா, கண்களை நான் ஆன்மாவின் ஜன்னல்னு நம்புறேன்.உங்க கண்கள் ல எனக்குத் தெரியறது அழகிய ஒரு ஆன்மாதான்.அதை நான் என் உயிருக்கு மேலாக விரும்புகிறேன்

-பஷீர்

செல்வராஜ் ஜகதீசன்


நிச்சலன முகமோடு 
நின்று அசைபோடும் 
யாதொரு மந்தையை விட்டும் எளிதில் பிரிந்து செல்லாத 
கட்டி இழுத்து வரும்போதும் கம்பீரமாய் நடந்துவரும் 
ஏனிந்த கழுத்தறுப்பு என்று எதிர்கேள்வி கேட்காத 
கிடை ஆடுகள் 
அத்தனை 
ருசியானவையும் கூட.

 -செல்வராஜ் ஜகதீசன்

Friday 9 December 2022

Thich nhat hanh


ஒரு சிறு கோப்பையில் இருக்கும் நீருக்குள் கைப்பிடியளவு உப்பை அள்ளிப்போட்டால் அந்த நீரைப் பருக முடியாது. ஆனால், அதே அளவு உப்பை நதிக்குள் போட்டாலும் நதி நீரை நாம் அள்ளிப்பருகலாம், அதில் சமைக்கலாம் , துணி துவைக்கலாம். நதி மகத்தானது. எதையும் வாங்கி அரவணைத்து அதை மாற்றக்கூடிய திறன் அதனிடம் உள்ளது.

 எப்பொழுது நம்முடைய இதயம் ஒரு கோப்பையைப் போல் சிறியதாக மாறுதோ அப்பொழுது நம்முடைய புரிதல், கருணை எல்லாமுமே ஒரு கட்டுக்குள் சிறியதாகத்தான் இருக்கும். தவிர, அது நம்மை துயரத்தில் ஆழ்த்தும். நாம் எதையும் யாரையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் அல்லது அவர்களைச் சகித்துக்கொள்ளும் திறன் இருக்காது. தவிர, மற்றவர்களை மாறச்சொல்லி வற்புறுத்துவோம்.

 ஆனால், எப்பொழுது நம்முடைய இதயம் நதியைப் போல் விரிவடையதோ அப்போது இதே விசயங்கள் நம்மை துயரத்தில் ஆழ்த்தாது.  நாம் நிறைய புரிதல் உள்ளவர்களாகவும் கருணையுள்ளவர்களாகவும் எல்லோரையும் அரவணைத்து செல்பவர்களாகவும் இருப்போம். மற்றவர்கள் எப்படியோ அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்வோம். 

Thich nhat hanh

படித்தது


ஒரு சொல்லின் மேன்மை அச்சொல்லை பிறசொல் விஞ்சி நிற்காத தன்மையேயாகும்

-படித்தது

Thursday 8 December 2022

சில ஓட்டல்களின் பெயர்களுக்குப் பின்னால் 'INN' என்ற வார்த்தை வருகிறதே (Hotel Holiday Inn), அதற்கு என்ன அர்த்தம்?



இரண்டு ‘N’ போட்டாலும், அது 'IN' தான். அதாவது, உள்ளே (வசிக்குமிடம்). குறிப்பாக, லண்டனில் வழக்கறிஞர்கள் மட்டுமே தங்கிய லாட்ஜுகளை INN’ என்று அழைத்தார்கள். பதினான்காம்
நூற்றாண்டுக்குப் பிறகு, ஓட்டல்கள் அந்தப் பெயரை எடுத்துக்கொண்டு விட்டன

-மதன்

ரூமி


பிழையற்ற நண்பனை 
நீ தேடினால், 
உனக்கென்று 
ஒரு நண்பனும் 
வாய்த்து இருக்க மாட்டான்.  

-ரூமி

தேவிபாரதி


கோபத்தைத் தாளிடப்பட்ட அறைக்குள்ளும், 
அன்பைப் பொது இடங்களிலும் வெளிப்படுத்தத் தெரிந்துகொள்.

-தேவிபாரதி

Wednesday 7 December 2022

லதாமகன்


தனிமை துரோகங்களை மட்டுமே நினைவூட்டுகிறது, நம்மைவிட்டுப்போனவர்களை. நம் கனவுகளைச் சிதைத்தவர்களை, நம் தழும்புகளை நமக்குக் கொடுத்தவர்களை, நம் புண்களைக் கீறிவிட்டு அதன் குருதிவழியும் கோலத்தில் தன் ஓவியங்களைக் கண்டெடுத்துச் சென்றவர்களை. களைத்த நாளில் திறந்து நுழையும் கதவு, வெறுமை சூழ் அறை அதன் வெம்மையை நம்மீது பாய்ச்சுவதன் மூலம் நம் வலிகளை மேலெடுக்கிறது. ஒரு வலியை உருவாக்குவதைவிட, அதன் நினைவூட்டுவதுதான் பெரும் துயரம் இல்லையா?

-லதாமகன்

Tuesday 6 December 2022

ஆண்டன் பெனி


கூரை ஒழுகலுக்கு ஒன்றை அம்மாவும்
மழைத் தண்ணீர்க்கு மற்றொன்றை அக்காவும் 
எடுத்துக்கொள்ள... 
பாத்திரங்களை நிறைக்கிறது 
சமையல் இயலாத நாளில்
ஒரு நல்ல மழை.

-ஆண்டன் பெனி

janakiraman nabalur


மதுரையில் செயல்படும் பிரபல இந்திய - ஜப்பானிய கூட்டு நிறுவனம். அந்த நிறுவனத்தின் தலைவர் ஒரு முறை கூட்டத்தில், தர மேலாண்மை குறித்த அவரது அனுபவ நிகழ்வைப் பகிர்ந்து கொண்டார். 

அவரது நிறுவனத்தில் ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கான ஸ்பிரிங், வால்வு போன்றவற்றை தயாரித்து ஏற்றுமதி செய்வார்கள். ஜப்பானிய நிறுவனம் மிக உயரிய தரத்தில் பொருட்களை எதிர்பார்த்ததால் பொருட்களை கவனத்துடன் செய்து அனுப்பினார்கள். நிறைய இழப்பு ஏற்பட்டது. அதனால் அந்த ஜப்பானிய நிறுவனத்துக்கு, ஒரு ஸ்பிரிங்குக்கு ஐம்பது பைசாவை ஏற்றித்தருமாறு இவர்கள் கோரிக்கை வைத்தனர். அந்த ஜப்பானிய நிறுவனம், நேரில் மதுரை வந்து, தொழிற்சாலையை பார்வையிட்டு பிறகு முடிவெடுப்பதாக கூறினார்கள். 

ஜப்பானியர்கள் தொழிற்சாலையை பார்வையிட வந்தபோது, இவர் தமது தொழிற்சாலையில் தரமான தயாரிப்புக்காக என்னவெல்லாம் முறைகளை ஏற்படுத்தியிருக்கிறோம் என்பதை விளக்கினார். அவரது தொழிற்சாலையில் தனியாக ஒரு தர பரிசோதனை மற்றும் கண்காணிப்புக்கு பெரிய டிபார்ட்மெண்ட்டையே ஏற்படுத்தியிருந்தார். சுமார் இருபது தொழிலாளருக்கு ஒரு தரக்கட்டுப்பாட்டு அதிகாரியை நியமித்து, உற்பத்தியாகும் ஒவ்வொறு பொருளையும் கண்காணித்தனர். சிறு குறை இருந்தாலும் அதனை ஒதுக்கி கழிவாக தள்ளினர். இப்படி அனைத்து வழிமுறைகளையும் பார்த்த பிறகு ஜப்பானியர், இவரிடம் "நியாயமாக உங்களுக்கு இனிமேல் ஒரு பொருளுக்கான விலையில் இருபது பைசா குறைக்கத் தான் வேண்டும்" என்று சொன்னதும் இவருக்கு அதிர்ச்சி. 

"தரக்கட்டுப்பாட்டுக்கு தனித் துறையும் நிறைய கண்காணிப்பாளர்களையும் வைத்திருக்கிறீர்கள் என்றால், உங்கள் உற்பத்தியில் நிறைய குறைபாடுடைய பொருட்கள் உள்ளன என்று அர்த்தம். உற்பத்தி செய்யும் தொழிலாளியே தரத்துடன் உற்பத்தி செய்ய ஆரம்பித்தால் இத்தனை கண்காணிப்பாளர்கள் தேவையில்லை. மூலப்பொருள் மற்றும் உற்பத்தி செலவும் உங்களுக்கு கணிசமாக குறையும். வேஸ்டேஜ் ஆனப் பொருட்களை நிர்வகிப்பதும் அதனை அப்புறப்படுத்துவதும் உங்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்துகிறது. ஆகையால், நீங்கள் ஏற்படுத்தும் தேவையற்ற இழப்புக்காக நாங்கள் ஏன் பொருளின் விலையை உயர்த்த வேண்டும்?" எனக் கேட்டனராம். அந்த உரையாடல் நமது நிறுவனத்தின் தலைவருக்கு புதிய சிந்தனையை தந்தது. 

பிறகு ஒவ்வொறு தொழிலாளிக்கும் தரமான உற்பத்தி குறித்து தொடர்ந்து பயிற்சி அளித்து, தொழிற்சாலைக்குள் சிறு சிறு தர-வட்டங்களை உருவாக்கி, அடுத்த சில மாதங்களில் உற்பத்தி செலவை கணிசமாக குறைத்தனர் என்று குறிப்பிட்டார். 

தரமான சேவை அல்லது தரமான உற்பத்தி என்பது வெளியிலிருந்து தரப்படும் மேற்பார்வையாலோ, கண்காணிப்பாலோ வருவதில்லை. அதில் ஈடுபடுபவர் உள்ளார்ந்த தெளிவைப் பெற்று, உற்பத்தியும் தரமும் வேறு வேறு அல்ல என்ற உணர்வை தமக்குள் பெறுவதால் மட்டுமே ஏற்படும். 

-படித்தது

இளந்தென்றல் திரவியம்


வேட்டையில் தப்பிய 
எல்லா மான்களுமே 
புலியை வென்றதாய் தான் 
அர்த்தம் கொள்ளும்!!!

-இளந்தென்றல் திரவியம்

லதாமகன்


தேர்வுகள் நம் சூழலை நிர்ணயிக்கின்றன. சூழல்கள் நம் தேர்வுகளையும், மனிதர்கள் நம் சூழலை உருவாக்குகிறார்கள். நம் சூழலுக்கேற்ற மனிதர்கள் மட்டுமே நமக்கு அமைகிறார்கள்.

-லதாமகன்

இதயத்தில் மட்டும் புற்றுநோய் வராது என்று கூறப்படுவது உண்மையா?



மனித உடலுக்குள் இருக்கும் செல்களில் உள்ள டி.என்.ஏ. தொடர்ந்து மாறுதல்கள் (Mutation)அடைந்த பிறகே, அது கான்சர் செல் ஆக மாறுகிறது. அதற்கு முதலில், செல் சரி பாதியாகப் பிளவு (Divide)அடைந்து பல்கிப் பெருக வேண்டும். பொதுவாக,
இதயத்திலுள்ள செல்கள் பல்கிப் பெருகுவதில்லை. அவற்றுக்கு ரத்தத்தை பம்ப் பண்ணவே முழு நேரமும் தேவைப்படுவதால், divide ஆக நேரம் கிடையாது! ஆகவேதான், இதயத்தில் புற்றுநோய் வருவதில்லை.

-மதன்

Monday 5 December 2022

பாவ்லோ கொய்லோ


தோரணை எவ்வளவு எளிமையானதாகவும்,
சலனமற்றதாகவும் இருக்கிறதோ அது அவ்வளவு அழகானதாக இருக்கிறது.

பனி அழகாக இருப்பதற்கு காரணம் அது ஒரே ஒரு நிறத்தை மட்டுமே கொண்டுள்ளது தான்.

கடல் அழகாக இருப்பதற்கு காரணம் அதன் மேற்புறம் முற்றிலும் தட்டையாக இருப்பது போல தோன்றுவது தான்.

ஆனால் பனி,கடல் ஆகிய இரண்டுமே ஆழமானவை.
அவை தம்முடைய சொந்தப் பண்புகளை நன்றாக அறிந்துள்ளன



-பாவ்லோ கொய்லோ

இறையன்பு


மற்றவருடைய நேரத்தை வீணடிக்கும் அதிகாரம்  படைத்தவரே மேலதிகாரி

-இறையன்பு

மனுஷ்யபுத்திரன்


“காரணம் சொல்லாமல் தற்கொலை செய்து கொண்டவன், இந்த உலகத்தையே குற்றவாளியாக்கிப் போகிறான்

-மனுஷ்யபுத்திரன்

லதாமகன்


என்னைப் புரிந்து கொள்ளாமல்
இருந்திருந்தால் கூட
போயிருக்கும்

உறுத்தலெல்லாம்

உன் தவறான புரிதலை
விளக்க விரும்பாத
என் நம்பிக்கையின் மீதுதான்

-லதாமகன்

மனுஷ்யபுத்திரன்


நீங்கள் எனக்கு அன்போ, அக்கறையோ  காட்டுவதென்றால் எனக்கு மிகச்சிறிய அன்பை, அக்கறையை மட்டும் காட்டுங்கள்..

நீங்கள் ஒரு பெரிய அன்பைக் காட்டி, நான் அதற்குப் பழகிவிட்டால்,
பின் பாலைவனமான என் இயல்பு வாழ்க்கைக்கு என்னை நீங்கள் திருப்பி அனுப்பும்போது என்னால் திரும்ப முடியாது..

-மனுஷ்யபுத்திரன்

இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி ஏன் ஈபிள் கோபுரத்தை (Eiffel Tower) அழிக்கவில்லை?



1944 ல் நடந்த இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரது நாஜிப்படையினரால் , பிரான்சின் தலைநகர் பாரிஸ் கைப்பற்றப்பட்டது. உள்ளே நுழைந்த ஹிட்லர், பிரான்சின் கவர்னரிடம் , ஈஃபிள் டவரை இடித்து விடக் கட்டளையிட்டார்.. ஆனால் அது நிறைவேற்றப் படவில்லை.. சரி மேலே சென்று பார்க்கலாம் என்று ஆசைப்பட்டார். ஆனால் இதைத் தெரிந்து கொண்டு, மேலே செல்ல உதவும், லிஃப்ட் கேபிள் களை அறுத்து விட்டிருந்தனர்.

கிட்டத்தட்ட 1665 படிகள் மேலே ஏறி.. ஜெர்மனியின் ஸ்வஸ்திக் கொடியை பறக்க விட கட்டளையிட்டார்.. மிகவும் கஷ்டப்பட்டு ஏறி..கொடியைப் பறக்க விட, அவ்வளவு உயரத்தில் அசுரத்தனமான காற்று, கொடியை அடித்து கொண்டு போய் விட்டது..மறுபடி ஒரு சிறிய கொடி பறக்க விடப்பட்டது. ஆனால் அதை கீழே இருந்து பார்க்க இயலாத தாகிப் போனது.. ஜஸ்ட் ஒரு க்ளிக்.. முன்பு நின்று ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொண்டு, அதோடு விட்டு விட்டார்.

-படித்தது

பெருமாள்முருகன்


"பேசற வாயும் திங்கற வாயும் ஒன்னுதான். ஆனாலும் எல்லாத்தயும் பேசீர முடியுமா? இல்ல, எல்லாத்தையும் தின்னர முடியுமா?

-பெருமாள்முருகன்
(பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை நாவலில்)

Sunday 4 December 2022

சிறுகதை குறித்து


சிறுகதை குறித்து

 "It appears evident, then, that there is a distinct limit, as regards length, to all works of literary art- the limit of a single sitting-..."
 என்கிறார் அவர்.

 அதாவது சிறுகதை என்பது ஓர் அமர்வில் வாசிக்கத் தகுந்ததாய் இருக்க வேண்டும். இதனடிப்படையில் பொதுவாய் இத்தனை சொற்கள் என்று சொல்லி விட முடியாது. ஏனெனில் ஓர் அமர்வில் எவ்வளவு படிப்பது என்பது வாசகருக்கு வாசகர் மாறுபடும்; படைப்புக்குப் படைப்பும் வேறுபடும். காலகட்டத்திற்கேற்பவும் இது மாறுபடும். 

இந்தத் தலைமுறை வாசிக்கப் பொறுமையற்ற ஒன்று. A generation of premature ejaculation in reading!

-எட்கர் ஆலன் போ

janakiraman nabakur

காந்தாராவில் ஒரு காட்சி இப்பவும் நினைவில் நிற்கிறது.

சிவாவுடைய அப்பா பூதக்கோளா ஆட்டத்தில் பஞ்சுருளியாக ஆடும் போது, அந்த ஜமீன் வாரிசு, "முன்னாடி எங்க தாத்தா இந்த ஜனங்களுக்கு சும்மா கொடுத்த இந்த நிலத்தை எங்களுக்கு திருப்பித் தரனும்" என்று கேட்பான். பஞ்சுருளியாக இருப்பவர், "அந்த நிலத்தை நிச்சயம் தந்துடலாம்.  ஆனா, உங்க தாத்தா இந்த நிலத்துக்கு பதிலா என் கிட்ட நிம்மதியை வாங்கிக்கொண்டார். நீ அந்த நிம்மதியை திருப்பித் தந்துட்டா, நானும் இந்த நிலத்தை எல்லாம் உனக்குத் திருப்பித் தந்துவிடுகிறேன்" என்பார்.

சில பரிமாற்றங்களில் உணர்வு கலந்திருக்கும். அந்த உணர்வுக்கு மெடீரியலிஸ்டிக்காக எந்த வகையிலும் பணத்தாலோ பொருளாலோ ஈடு செய்யவே முடியாது. பெற்றோர்கள், தமது குழந்தையை வளர்ப்பதற்கு என்ன விலையை வைத்துவிட முடியும்? நண்பனுக்காக அவசரக்காலத்தில் ஓடி வந்து நின்று தோள் கொடுத்த நண்பனின் சேவையை எப்படி ஈடு செய்ய முடியும். 

ஒருவகையில், உணர்வுப் பரிமாற்றம் தான் மொத்த மனித உலகையும் இயக்குகிறது.

-படித்தது

உலக வரைபடத்தில் அமெரிக்கா முதலில் இருப்பது ஏன்?




உலக வரைபடத்தில் எந்த நாடு முதலில் இருக்கிறது என்பதை விட எந்த நாடு மையத்தில் இருக்கிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும். காரணம் பூமி உருண்டையை பிளந்து செவ்வகமாக்கும்போது எதை மையமாக வைத்து பிளக்கிறார்கள் என்பதே முக்கியம். இப்போதிருக்கும் உலக வரைபடத்தை பார்த்தால் கிரீஸ் நாடு மையத்தில் இருக்கும். காரணம் முதன்முதலில் உலக மேப்பை உருவாக்கியவர் கிரேக்க நாட்டைச் சேர்ந்த அனாக்ஸிமந்தர். அவர் தன்னுடைய நாட்டை மையத்தில் வைத்து உலக வரைபடத்தை உருவாக்கியதால் அமெரிக்கா அவருக்கு இடதுபுறத்தில் வந்தது. உங்களுக்கு முதலில் இருப்பதாக தோன்றியிருக்கிறது.

Saturday 3 December 2022

மனுஷ்யபுத்திரன்


தேவைப்பட்டால் பேசுவார்கள்
இல்லாவிட்டால்
பேசாமல் போவார்கள்.

நீங்கள் ஒரு தேநீரை அருந்துவது
உங்கள் விருப்பமே தவிர
அது தேநீரின் விருப்பம் அல்ல.

-மனுஷ்யபுத்திரன்

Friday 2 December 2022

பிரடெரிக் ஏங்கல்ஸ்


முதலாளியிடம் அடிமையாக, கடைநிலை ஊழியனாக இருப்பவனும் அடிமைப்படுத்த ஒரு ஜீவன் இருக்கிறது. அது அவன் மனைவி

-பிரடெரிக் ஏங்கல்ஸ்

சுப.வீ


தேவைக்குப் பொருள் வாங்குவதற்கும்..ஆசைக்குப் பொருள் வாங்குவதற்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது.ஏனென்றால் தேவைகளை நிரப்ப முடியும்.ஆசைகளை நிரப்ப முடியாது

-சுப.வீ

எல்லா போனுக்கும் பொதுவான சார்ஜர் உருவாக்குவது சாத்தியாமா?



அலைபேசிகளில் மாடல்களை பொருத்தும், கம்பெனிகளை பொருத்தும், அதன் பேட்டரிகள் வேறு வேறு அளவில் வேறு வேறு ஓல்ட்டேஜ்களும் இருக்கும்.

3.6VOLTS

3.7VOLTS

3.8VOLTS

4.32VOLTS

மற்றும் 4.35 VOLTS என்று வேறுவேறாக இருக்கும்.

எடுத்துக்காட்டாக 4.32 வோல்டேஜ் இருக்கும் பேட்டரி கொண்ட அலைபேசியை 3.7 வோல்டேஜ் கொண்ட சார்ஜரை பயன்படுத்தினால் சார்ஜ் மெதுவாக ஏறிவிடும். ஆனால் வேகமாக இறங்கிவிடும்.

4.32 வோல்டேஜ் பேட்டரியை விட 3.7 வோல்ட் சார்ஜர் 15 மடங்கு மின்னழுத்தம் குறைவானது.

அதுவே 3.7 வோல்ட்டேஜ் இருக்கும் பேட்டரியை பயன்படுத்தும் அலைபேசியை 4.35 வோல்டேஜ் இருக்கும் சார்ஜரை பின் சரியாக பொருந்துகிறது என்று பொருத்தினோமானால் வேகமாக சார்ஜ் ஏறும். நமக்கும் சந்தோசமாக இருக்கும்.ஆனால் பேட்டரி வேகமாக கெட்டுப் போய்விடும். அல்லது பொங்கிவிடும்.

3.7 வோல்ட் பேட்டரியை விட 4.35 வோல்டேஜ் சார்ஜர் 17 மடங்கு மின்னழுத்தம் அதிகமானது.எனவே இரண்டுமே தவறான பொருத்தமற்ற தேர்வுகள்.

நிறைய இடங்களில் அலைபேசி சார்ஜ் போடும்போது வெடித்து விடுகிறது என்பது இதனால் தான். இந்த விவரங்கள் பலருக்கு தெரிவதில்லை. நேரடியாக கம்பெனியை குற்றம் கூறி விடுவோம்.

எனவே மிகச்சரியாக அந்த அலைபேசி எண் மாடலை கூறி வாங்குவது தான் சரி.

எல்லா அலைபேசிகளிலும் ஒரே மாதிரியான வோல்டேஜ் இருக்கும் பேட்டரிகளை பயன்படுத்தினால் ,அனைத்து அலைபேசிகளுக்கும் ஒரே மாதிரியான சார்ஜர் களை உண்டாக்க இயலும்.

மேற்காட்டியவாறு வேறு வேறு வோல்டேஜ்கள் இருக்கும் பேட்டரிகளை பயன்படுத்தினால் ஒரே மாதிரியான சார்ஜர்களை பயன்படுத்த இயலாது.உற்பத்தி செய்யவும் இயலாதுஇயலாது

-படித்தது

முருகேசன்


பொது இடத்துல 
USE ME ன்னு 
குரங்கு பொம்மை 
குப்பை தொட்டியை 
புடிச்சுட்டு நிக்கும்....

ஆனா குப்பை போடுற 
எந்த குரங்கும் 
அதை கண்டுக்காது.

-முருகேசன் கந்தசாமி

One Mile Miracle -janakiraman


One Mile Miracle 

இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக மருத்துவர்கள், அறிவியல் அறிஞர்கள், மனித உடலின் ஓட்டத்திறனை ஆராய்ந்து மனித உடலுக்கு ஓடுவதில் ஒரு எல்லை உள்ளது. மனித உடலின் அமைப்புப் படி ஒரு மைல் தொலைவினை 4 நிமிடங்களுக்குள் ஓடுவது என்பது இயலாதது என்று கூறிவந்தனர். அதனை பெரும்பான்மை சமூகமும் ஏற்றுக்கொண்டது. ஆனால் நரம்பியல் நிபுணரும், ஓட்டப்பந்தய வீரருமான, ரோஜர் பேனிஸ்டர் மனிதனால் ஒரு மைல் தொலைவினை 4 நிமிடங்களுக்குள் கடக்கமுடியும் என்று நம்பினார். 

1954ம் வருடம் மே 6ம் தேதி, ஒரு மைல் ஓட்டத்தை 3.59 நிமிடங்களில் ஓடிக்கடந்தார். அதற்கடுத்து, 46 நாட்களில் ஆஸ்திரேலிய ஓட்டப்பந்தய வீரர், ஜான் லேன்டி என்பவர் ரோஜர் பேனிஸ்டருடைய சாதனையை முறியடித்தார். அதே வருடத்தில் இன்னும் சிலர் 4 நிமிடங்களுக்குள் ஓடிக்காட்டினர். 

அடுத்த பத்து ஆண்டுகளில் பலர், நான்கு நிமிடத்துக்குள் ஒரு மைல் தொலைவினை கடந்தனர். தற்போது பல ஆயிரம் ஓட்டப்பந்தய வீரர்கள் இந்த சாதனையை புரிந்து அதனை சாதாரணமான விஷயமாக மாற்றிவிட்டனர். தற்போது, மொராக்கோ நாட்டு வீரர், ஹக்கிம் குரோஷி ஒரு மைல் தொலைவினை 3.43 நிமிடங்களில் ஓடிக்கடந்தது உலகச் சாதனையாக இருக்கிறது. 

200 வருடங்களுக்கும் மேல் மனிதனால் சாதிக்கவே முடியாது என்று கூறிய ஒரு செயலை தனிநபர் ஒருவர், "ஏன் முடியாது?" என்று கேள்வி கேட்டார். அதனை தகர்த்தும் காட்டினார். அவர் தகர்த்ததும், உடனடியாக பல பேர் அதனை செய்யமுடிந்தது. 

இது மனவியல் தொடர்பான தடை தானே தவிர, உடல் தொடர்பானது அல்ல. ஒருவேளை பேனிஸ்டர் அன்று அந்த சாதனையை செய்திருக்கவில்லை என்றால் இன்று வரை மனித குலம் முழுக்க, ஒரு மைல் தூரத்தினை 4 நிமிடங்களுக்குள் மனிதனால் ஓடிக் கடக்கமுடியாது என்று நினைத்திருக்கக் கூடும்.

காலங்காலமாக இருந்த மனத்தடையை ஒருவர் உடைத்ததும், மற்றவராலும் அதே செயலை செய்யமுடிகிறது. மனித மனம், பெருஞ்செயல்கள் புரியக்கூடியவை என்பதை பேனிஸ்டர் உணர்த்தியிருக்கிறார். 

ஜெயிக்கவே முடியவில்லை என்றாலும், "யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது" தான்.

-படித்தது

Thursday 1 December 2022

இறையன்பு


தங்களைப் பிடிக்கத்தான் வருகிறார்களோ என்று எண்ணிக் காகங்கள் எப்போதும் பறக்கின்றன; பிடித்துக்கறி சமைப்பவர்கள் கால்களைச் சுற்றியே கோழிகள் வலம் வருகின்றன. நம்பிக்கெடுவதும் நம்பிக்கையின்மையால் வாழ்வதும் எப்போதும் தொடர்கின்றன.

-இறையன்பு

தஸ்தயேவ்ஸ்கி


இந்த உலகில் உண்மையைப் பேசுவதை விட கடினமானது எதுவுமில்லை.
முகஸ்துதியை விட எளிதானது எதுவுமில்லை.

-தஸ்தயேவ்ஸ்கி

தமிழ்


உறவுகளில்/நட்புகளில்  போலித்தனத்தை நாம் உணரும் போது உறவுகள் முறிவதில்லை. 
உணர்ந்ததை நம்மால் மறைக்க முடியாத கட்டத்தில் தான் உறவுகள் முறிகின்றன.

-தமிழ்

டானிசு


கேள்வி கேட்கப் பயப்படுகிறவர்கள்
எதையுமே தெரிந்து கொள்ள முடியாது.

-டானிசு

நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் என்பதில் நொடி என்றால் என்ன ?




நோய் என்பது தெரியும். உடலுக்கோ மனத்திற்கோ ஏற்படும் நலக்குறைவு. ஒருவர் நோயுறுவதற்கு புறச்சூழலும் காரணமாகலாம். அவருள் நிகழ்வனவும் காரணமாகலாம். நோயில்லாமல் வாழ்வதுதான் பெரும்பேறு. தருமரிடம் வினவப்பட்ட வினா ஒன்று : உலகில் ஒருவர் அடைதற்கரிய செல்வம் எது ? அவருடைய உடல்நலம் (ஆரோக்கியம்) என்பது அன்னார் விடை.  

நொடி என்பது தாழ்வுறுதல். அதுநாள்வரை வாழ்ந்த நிலையிலிருந்து வீழ்ச்சி. நொடித்துப் போதல் என்று சொல்வார்கள். நோய் என்பது உடல்நலக்குறைவு. நொடி என்பது திகழ்நலக்குறைவு. பொருளியல் நோக்கு மட்டுமில்லை. நன்னிலை வீழ்ச்சிகள் யாவும் நொடித்துப் போதலே. 

உடலாலும் தேய்வின்றி, உள்ள பிற நிலையாலும் தாழ்வின்றி வாழ்தலே நோய்நொடியின்றி வாழ்தல்.

-மகுடேசுவரன்